முனைவர்.சி.சங்கீதாநூல்: நீயே முளைப்பாய்!இராசபாளையம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் எனக்குப் பல இலக்கிய ஆளுமைகளை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த வகையில் நீயே முளைப்பாய் என்ற நூலினுடைய ஆசிரியரும் பட்டிமன்றப் பேச்சாளரும் கவிஞருமாகிய கரிசல்காரி, கவிதா ஜவஹர் எனக்கு அறிமுகம். அதுமட்டுமல்லாமல் நாங்கள் இருவரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வழியாக எங்களுடைய முதல் கவிதை நூலை ஒரே நாளில்  வெளியிட்டோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  நீயே முளைப்பாய் என்ற கவிதைத் தொகுதியில் பெரும்பான்மையான கவிதைகள் மழை பற்றியதாகவே இருக்கின்றன. குறிப்பாக மழை காதலினுடைய குறியீடாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசியல் சார்ந்த ஒரு குறியீடாகவும் அதிகாரத்தினுடைய குறியீடாகவும் ஆசிரியர் பயன்படுத்திருக்கிறார்.

ஏறத்தாழ பதினைந்து கவிதைகள் மழை பற்றிய கவிதைகளாகவே இருக்கின்றன. அந்த வகையில் ஆசிரியருக்கு மழை மீது கொண்டிருந்த அலாதிப் பிரியம் வெளிப்பட்டிருக்கிறது எனலாம். தன்னுடைய முதல் கவிதையே மழை பற்றிய கவிதை தான். அந்த கவிதை,

‘நீ என்னை சந்திக்க
இயலாமல் போனதற்கு
மழை ஒரு தடையெனச்
சொல்வாயாயின்
அவசரமில்லை
அடுத்ததொரு ஜென்மத்தில்
உன்னை சந்திக்கிறேன்
அதுவரை மழை போதும் எனக்கு’

இந்தக் கவிதையில் ஒரு தலைவனோ அல்லது தலைவியோ தன்னுடைய அன்பையே மழைக்காகத், துச்சமென தூக்கி எறியக் கூடிய ஒரு செய்தியைப் பார்க்க முடிகிறது. ஆனால் இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. நான் உன்னை இந்த ஜென்மத்தில் சந்திக்கவில்லை என்றாலும் அடுத்த ஜென்மத்திலாவது உன்னைச் சந்திக்கிறேன் என்ற வரிகள். எனவே இந்தக் காதல் என்பது பல ஜென்மங்களைக் கடந்து நிகழக் கூடிய ஒரு உணர்வு என்பதைப் பதிவு செய்திருக்கிறார் (பக்கம்.2).
அதிகாரம் என்பது உழைப்பையும் மனிதத்தையும் ஆக்கிரமிக்கும் என்பதையும் அடங்க வைக்கும் என்பதையும் அதிகாரம் எல்லா இடங்களிலும் கோலேச்சும் என்பதை ஒரு கவிதையில் பதிவு செய்திருக்கிறார்.

அந்தக் கவிதை,

‘அதிகாரவர்க்கத்தின்
மழை
அடித்துப் பெய்யும் போது
ஏழை பூமியால்
என்னதான்
செய்துவிடமுடியும்?’

பேருந்துப் பயணத்தில் மழையை ரசிக்க முடியும். ஆனால் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடிய  பயணத்தில் மட்டும்தான்  மழையை அனுபவிக்க முடியும் என்பதை ஒரு கவிதையில் சொல்லி இருக்கிறார் (பக்கம் 15). இப்படி மழையில் நனைந்து தான் பெற்ற தன் அன்பின்  கவிதைகள் பெரும்பான்மையாக இருக்கின்றன. கோபித்த நினைவுகளை மீட்டும் மழை (பக்கம் 17). மழை என்பது கடவுளின் தழுவல் மற்றும் தேவதைகளின் முத்தம் என்கிறார் (பக்கம் 18).  ஒதுங்கி நிற்பதற்கு இடம் கிடைத்தாலும் பெய்கின்ற பெருமழை மிகவும் அழகானது என்கிறார் (பக்கம் 19). மனிதர்கள் உட்காரும் இடம் மட்டுமல்ல மழை உலகம் முழுக்க வியாபித்து இருக்கிறது என்று தனக்கே உரிய நடையில் ஒரு கவிதையில் சொல்லி இருக்கிறார் (பக்கம் 22).  மழை விழுது நான் வேர் (பக்கம்.27). இந்தக் கவிதையில், மழை என்பது தலைவனாகவும் நான் என்ற சொல் தலைவியாகவும் பார்க்கப்படுகிறது. மழை தனக்காக நின்று தன்னை வழி அனுப்பி விடுகிறது என் கவிதையை என்று மழையின் அன்பைக் கூறிவது அன்பின் மிகுதியைக் காட்டுகிறது (பக்கம். 27). இந்தப் பெருமழை உன்னைப் போகாமல் தடுத்தி நிறுத்தி வைத்திருக்கிறது என்கிறார் (பக்கம்.30).

அழகான ஒரு மாலையை, இருள் நிறைந்த ஒரு பொழுதாக மாற்றக்கூடிய வல்லமை மழையிடம் மட்டுமே இருக்கிறது என்று பதிவு செய்கிறார் (பக்கம்.42). சேரிகளில் மட்டுமே மழை செல்லமாக இருக்கிறது என்பதைப் பதிவு செய்திருக்கிறார் (பக்கம்.45).
மலையைக் குளிக்க வைக்கும் ஆற்றல் பெருமழையைத் தவிர வேறு யாருக்கு இருக்கிறது என்று உரிமையோடு பேசும் கவிதை அழகு (பக்கம்.46). மழையைப் பேய்க்கு உன்மையாகச் சொல்லி இருக்கக்கூடிய ஒரு கவிதை (பக்கம்.49). இந்தப் பேய் மழை எல்லாவற்றையும் தந்துவிட்டது உன்னை தவிர. இந்தக் கவிதையில் உன்னை என்பது வாசகர் ஆணாக இருப்பின் பெண், பெண்ணாய் இருந்தால் ஆண் என்பதாகப் புலப்படும்.

சங்க இலக்கியங்களில் தலைவன் தலைவிக்கு கையுறையாகக் காந்தள் மலரைப் பரிசளிப்பது  பற்றி அறிவோம். ஆனால் இங்கு கவிஞர் தன்னுடைய பேரன்பிற்காக மழையைப் பரிசாகத் தந்திருக்கிறார் (பக்கம்.51). இது பாராட்ட வேண்டிய கவிதை. இறுதியாகப் பிரியத்தை அல்லது அன்பை நினைவுபடுத்தக் கூடிய ஒரு மாபெரும் சக்தியாக இருக்கக்கூடியது இந்தப் பெருமழை தன் கவிதையொன்றில் குறிப்பிடுகிறார் (பக்கம்.71).

இப்படி முழுக்க முழுக்க மழை பற்றிய கவிதைகள் பெருவெள்ளமாய் கிடக்கின்றன. மூகம் சார்ந்து தன் இரண்டாவது கவிதையில் குறிப்பிட்டுள்ளார். கஜா புயல் பற்றியும் சங்க இலக்கியம் கற்ற புலவர்கள் எல்லாம் தற்போது அகம் அதாவது காதலைப் பற்றியும் தங்களுடைய மனதிற்குள்   பேச வேண்டிய விஷயங்களை அருகில் இருப்பவர்களிடம் புறம் பேசுகிறார்கள் என்பதை விவரிக்கிறது மூன்றாவது கவிதை.

அம்மாவைப் பற்றி, ஒரு அம்மாவின் உடைய இறுத்ச் சடங்கில் திரும்பிப் பார்க்காமல் செல் என்னும் சொல் மிகவும் வலி மிகுந்ததாக இருக்கிறது என்பதை சொல்கிறார் (பக்கம்.20).

காதலினுடைய உச்சம் இழப்பு. இழப்பு தான் இங்கே உச்சம் என்று சொல்வார்கள். காதலுக்கு இலக்கியங்களில் உவமையாகக் கூறும் பறவைகள்  மகன்றில் பறவைகள். கவிஞர் ஃபீனிக்ஸ் பறவை பற்றிக் கவிதையில் குறிப்பிட்டுள்ளார். தலைவன் புகைக்கிற சிகரெட் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுகிறது நம் காதலின் ஃபீனிக்ஸ் என்று நிறைவேறாத  காதலைக்  கவிதையில் அழகாய் புனைந்திருப்பார் (பக்கம். 58). இக்கவிதை ஒரு மிகச்சிறந்த ஒரு கவிதையாகக் காணப்படுகின்றது.
இத்தொகுப்பில் உள்ள மிக முக்கியமான கவிதை நீயே முளைப்பாய் என்ற கவிதை. ஈழத்துச் சொந்தங்களின் பலிகளையும் குறிப்பாகப் பாலாவின் மரணத்தைப் பதிவு செய்கிறது. பாலாவினுடைய இறப்பு பற்றிய இந்தக் கவிதை மிகுந்த ஒரு வலியைக் கொடுக்கிறது. அசோகச்சக்கரத்தைக் குறியீடாகக் கூறுவது அரசிற்கு கொடுக்கும் சவுக்கடி. அதுமட்டுமல்லாமல் இலக்கியங்களில் இருக்கிற நிறைய ஆளுமைகள் உவமையாகக் கூறப்பட்டிருக்கின்றன. இந்தக்கவிதை நீயே முளைப்பாய் கவிதைத் தொகுப்பின் மணிமகுடம்(பக்கம்.33).

இறுதியாக ஏமாற்றத்தினுடைய  வலியை ஒரு கவிதை விவரிக்கிறது.

‘நீ என் இதயத்தில்
அறைந்த
ஆணியில் தான்
மாட்டி இருக்கிறேன்
உன் நினைவுகளை’

இக்கவிதை அன்பை ஏமாற்றுகிற ஒவ்வொரு மனிதனுக்கும் தன் நெஞ்சிலும் முகத்திலும்  அறைய வேண்டிய ஒரு சிறந்த கவிதையாக இருக்கிறது (பக்கம்.76.). கவிஞர் கரிசல்காரியின் கவிதைகளில் தபுசங்கரைச் சுவாசிக்க முடிகிறது. கவிஞர் தபுசங்கரின் வாசகியோ என்றும் தோணிற்று. எளிமையான நடையில் தன் வாசக வட்டத்தை விவரித்துச் சென்றிருக்கிறார். சிறார்களுக்கே புரியும் வகையில் ஆசிரியர் எளிமையாகக் கவிதைகள் எழுதியிருக்கிறார் என்பதும் கூற வேண்டிய ஒன்று.

‘நீயே முளைப்பாய்’ என்ற கவிதைத் தொகுப்பில் அன்பென்னும்  பெருமழை பொழிந்து கொண்டு இருப்பதால் வாசகர்கள் உள்ளங்களில் இயல்பாக அன்பு முளைத்துவிடும் என்று தான் சொல்ல வேண்டும். அன்பென்னும் பெருமழையில் நனைய வாசிக்க வேண்டிய நூல்….

நூலாசிரியர் : கரிசல்காரி
நூலின் தலைப்பு : நீயே முளைப்பாய்
பதிப்பகம் : தமிழி பதிப்பகம், இராசபாளையம்.
விலை : ரூபாய் 140

*கட்டுரையாளர் - - முனைவர்.சி.சங்கீதா,  உதவிப்பேராசிரியர் (தமிழ்), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), கிருஷ்ணன் கோயில், விருதுநகர் மாவட்டம் - 626126.-

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R