- முனைவர் ஆ. சந்திரன், உதவிப்பேராசிரியர் , தமிழ்த் துறை,  தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) , திருப்பத்தூர்,  வேலூர் -முத்தொள்ளாயிரம் என்ற பெயர் பற்றித் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரிகள் மூலம் அறியமுடிகின்றது. “அங்கதப் பாட்டவற் றளவோ டொக்கும்” (தொ.செ.152) என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதிய பேராசிரியர் ‘கைக்கிளைச்செய்யுள் முத்தொள்ளாயிரத்துட் போல” என்று முத்தொள்ளாயிரம் என்ற சொல்லைப் முதன்முதலில் பயன்படுத்தியுள்ளார். அவரைத் தொடா்ந்து நச்சினார்க்கினியா் ‘நெடுவெண் பாட்டே குறுவெண்பாட்டே........” (தொ.செ.104) என்ற நூற்பாவின் உரையில், “கைக்கிளைத் தென்னன்....” மற்றும் “மங்குன் மனக்கடை…...” என்ற முத்தொள்ளாயிரத்தின் இருபாடல்களை உதாரணமாகத் தந்துள்ளார். இவ்வாறு உரையாசிரியா்களால் இப்படி ஒரு நூல் இருந்தமையை அறியமுடிந்தாலும், புறத்திரட்டின் மூலமாகத்தான் இந்நூலில் இருந்து 109 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. சேர, சோழ, பாண்டியா்களைப் பாட்டுடைத் தலைவா்களாகக் கொண்டு ஒவ்வொருவருக்கும் 900 பாடல்கள் வீதம் மொத்தம் 2700 பாடல்கள் பாடப்பட்டதால் இந்நூலுக்கு முத்தொள்ளாயிரம் என்று பெயா் ஏற்பட்டுள்ளது.  முத்தொள்ளாயிரம் பற்றிய தமிழ் இலக்கிய வரலாறு மற்றும் சில முத்தொள்ளாயிர தெளிவுரைகளில் முத்தொள்ளாயிரம் பாடல்களுக்கு விளக்கம் அளிப்பதுண்டு.

ஆனால், உண்மையில் முத்தொள்ளாயிரம் என்ற நூலில் சேர சோழ புாண்டியருக்குத் தாள முன்னூறு பாடல்கள் வீதம் தொள்ளாயிரம் பாடல்கள் மட்டுமே இருக்கும் என்கிறார் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை. அதற்கு அவர் கீழ்கண்ட விளக்கத்தினைத் தருகின்றார். “இலக்கண விளக்கப் பட்டியல் உரையில் 'பாட்டுடைத் தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருட் சிறப்பினாலே பாடுதல் அவ்வவ் வெண்ணாற் பெயர்பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன' எனக் காணப்படுகிறது. இங்கே எண் செய்யுளென்று வகைப்படுத்தப்பட்ட ஒரு நூலே உணர்த்தப்படுகிறது. இதன் கண் வரும் செய்யுட்களின் பேரெல்லை ஆயிரமாகும். அஃதாவது ஆயிரத்தின் விஞ்சுதல் கூடாது. இத்தனையென்பது நூற்பெயரால் அறியப்படும். முத்தொள்ளாயிரம் என்பதில் தொள்ளாயிரம் என்பது அவ்வெண்ணாதலின் அத்தனை செய்யுட்கள் இருத்தல் வேண்டுமேயன்றி அதனின் மிகுதிப்பட்ட செய்யுட்கள் கொண்டதாக இந்நூலைக் கருதுதல் கூடாது. ஆகவே முத்தொள்ளாயிரத்தில் தொள்ளாயிரஞ் செய்யுட்களே உள்ளன என்பதும் சேர சோழ பாண்டியர்களுள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு செய்யுட்களே இயற்றப் பட்டன வென்பதும் அறியத்தக்கன” (இலக்கிய தீபம்).  அத்துடன் இதன் காலம் கி.பி 9 ஆம் நூற்றாண்டு என்கின்றார்.

இத்தொகுப்பில் களவழி நாற்பது, திருக்குறள், பரிபாடல், பழமொழி, சிந்தாமணி, சூளாமணி, பதிற்றுப்பத்து, குண்டலகேசி, வளையாபதி, சிறுபஞ்ச மூலம், பெருந்தேவனார் பாரதம், நாரதசரிதை, இராமாவதாரம், சாந்திபுராணம், இரும்பல்காஞ்சி, ஆசிரியமாலை, முத்தொள்ளாயிரம் முதலியவற்றின் பாடல்கள்  பல இடம்பெற்றுள்ளன. அவற்றுடன், இந்நூலின் மூலம் நமக்கு இன்று கிடைக்காமல் போன பல தொன்மையான நூல்கள் பற்றியும் அறிந்துகொள்ள முடிகின்றது. ஓலைச்சுவடியில் இருந்த பாடல்களின் தொகுப்பைப் பதிப்பித்துள்ள பேராசிரியா் வையாபுரிப்பிள்ளை அவா்களின் அத்தொகுப்பில் முத்தொள்ளாயிரம் பாடல்கள் மொத்தம் 109 இடம்பெற்றுள்ளன.

முத்தொள்ளாயிரம் பாடல்களின் பகுப்பு முறை
புறத்திரட்டு நூலில் உள்ள பாடல்கள் திருக்குறளைப் போல் அறத்துப்பால்,  பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பெரும்பிரிவுகளாப் பகுக்கப்பட்டுள்ளன. முப்பாலில் ஒன்றான காமத்துப்பாலில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பாடல்களும் முத்தொள்ளாயிரப் (கைக்கிளை) பாடல்களாகும்.

இனி இந்நூலின் பகுப்பு முறையைப் பற்றிக் காண்போம். முத்தொள்ளாயிரத்திலுள்ள 109 பாடல்களில் 65 (1506-1570) பாடல்கள் கைக்கிளைப் பாடல்களாக உள்ளன. பிற பாடல்கள் அனைத்தும் பொருட்பாலைச் சார்ந்தவையாகும். இப்பாடல்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை கடவுள் வாழ்த்துப் பாடல் (1) ஒன்று, நாடு பற்றி 3 பாடல்கள் (829, 830, 831), நகா் பற்றி 3 பாடல்கள் (863, 863, 864), பகைப்புலம் பழித்தல் பற்றி 5 பாடல்கள் (1278-1282), திறை பற்றி 4 பாடல்கள் (1285-1288), எயில் கோடல் பற்றி ஒரு பாடல் (1331), குதிரை மறம் பற்றி ஒரு பாடல் (1380) யானை மறம் பற்றி 10 பாடல்கள் (1388-1397), களம் பற்றி 4 பாடல்கள்  (1430-1433), வெற்றி பற்றி இரு பாடல்கள்  (1456,1457), புகழ் பற்றி 10 பாடல்கள் (1464-1473) என்பனவாகும்.

இந்நூலின் ஆசிரியா் யார் என்று தெரியவில்லை. ஆனால், “மன்னிய நாண்மீன்...”, “மடங்காமயிலூர்தி….” மற்றும் “செங்கணெடியான் மேல்.... ” என்ற பாடல்களிலிருந்து இவா் சைவ சமயத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் என்பதை மட்டும் அறியமுடிகின்றது.

புறத்திரட்டில் சோ்க்கப்படாத முத்தொள்ளாயிரப் பாடல் ஒன்று இளம்பூரணர் உரையில் உள்ளது. அப்பாடல் வருமாறு.

“ஏற்றூர்தி யானுமிகல் வெம்போர் வானவனும்
ஆற்றலு மாள்வினையு மொத்தொன்றி னொவ்வாறே
கூற்றக் கணிச்சியான் கண்மூன் றிரண்டேயாம்
ஆற்றல்சால் வானவன் கண்”
இப்பாடல் ‘புகழ்’ என்ற தொகுப்பில் சோ்க்கத்தக்கது.

முத்தொள்ளாயிரத்தை முதன்முதலில் தனி நூலாகப் பதிப்பித்தவா் இரா.இராகவய்யங்கார். இப்பதிப்பு 1905 இல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிப்பில் 109 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பின்வந்த பதிப்பாசிரியா்கள் பலா் இப்பதிப்பையே அடியொற்றி பதிப்பித்துள்ளனா். ஆனால், ரசிகமணி டி.கே.சியின்  பதிப்பில் 99 பாடல்கள் மட்டுமே உள்ளன.

1946 இல் சைவசித்தாந்த நூற்பதிப்பகம் மூலமாக முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பித்த ந.சேதுரகுநாதன் 130 பாடல்களைப் பதிப்பித்துள்ளார். கூடுதலாக அவா் பதிப்பிலுள்ள படல்கள் பற்றி அவா் “இற்றைக்கு ஐந்நூறியாண்டுகட்கு முன்னா் புறத்திரட்டு என்னுந் தொகைநூல் தொகுத்த சான்றோர், அந்நூலின்கண் இடையிடையே மிளிரவைத்துப் போந்த நூற்றெட்டு முத்தொள்ளாயிரச் செய்யுட்களைப் பெற்று, அவற்றைப் பயின்று இன்பந்துய்த்துத் தன்னை மறந்து உவகை எய்தும் பேறும் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற விழுமிய பாடல்களின் விழுமிய சுவையானது தூண்ட இனிமேலும் இத்தகைய பாடல்கள் கிடைக்கும் கொல்லோ என ஆராய்ந்து வெல்வுழிப் பழைய உரைகளினிடையே பயின்று கிடந்தனவாய இருபத்திரண்டு பாடல்கள் இவற்றோடு ஒத்த இயல்பிவாய்க் காணப்பட்டமையின் அவையும் இவற்றோடு சோ்த்து உரையெழுதி வெளியிடப் பெறுவனவாயின” (முன்னுரை ப.6) என்று கூறியுள்ளார்.

130 பாடல்களைக் கொண்டுள்ள அவரது பதிப்பில் உள்ள பாடல்கள் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று, பாண்டியன் பற்றிய பாடல்கள் 60, சோழன் பற்றிய பாடல்கள் 46, சேரன் பற்றிய பாடல்கள் 23 என பகுக்கப்பட்டுள்ளன. அவருக்குப் பின்னர் பலர் முத்தொள்ளாயிரப்பாடல்களை உரையுடன் வெளிட்டுள்ளனர்.  அவர்களில்  ந.சுப்பு ரெட்டியார், ஞா.மாணிக்கவாசகன், கபிலர், சிதம்பரநாத முதலியார் போன்றோர் இராகவையங்கார் பதிப்பை ஒட்டியே உரை எழுதிவெளியிட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாகப் பலரது உரைகள் வெளியாகியுள்ளன. அவற்றில் இன்று விற்பனையில் உள்ள  முனைவா் செ. உலகநாதன் தெளிவுரை, முத்தொள்ளாயிரம் மூலமும் முனைவா் கதிர்முருகு தெளிவுரை ஆகியன முறையே 109, 130 என்ற எண்ணிக்கையில் உள்ளன. இந்த  உரைகளில் புறத்திரட்டில் இல்லாத பாடல்கள் சில சோ்க்கப்பட்டும், புறத்திரட்டில் உள்ள பாடல்கள் சில நீக்கப்பட்டும் உள்ளன.  அவை எவை என்பதனை அறிய இந்நூல்களில் உள்ள பாடல்களை 1938 ஆண்டு பேராசிரியா் எஸ்.வையாபுரிப்பிள்ளையால் தொகுக்கப்பட்டு  சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள “புறத்திரட்டு” என்னும் நூலில் உள்ள முத்தொள்ளாயிரத்தின் 109 பாடல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது  அப்பாடல்களின் வரிசை முறைகூட மாறி அமைந்துள்ளதை அறியமுடிகின்றது.

முனைவா் செ. உலகநாதன் தெளிவுரை
முனைவா் செ. உலகநாதன் அவா்கள் முத்தொள்ளாயிரம் பாடல்களை உரையுடன் வெளியிட்டுள்ளார். இந்நூல் முல்லை நிலையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 2000 - ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. 2006 -இல் இதன் மறுபதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் புறத்திரட்டை அடியொற்றி வெளியிடப்பட்டுள்ளதா? அல்லது வேறு ஏதாவது நூலை அடியெற்றி எழுதப்பட்டுள்ளதா? என்பது பற்றிய எந்த ஒரு குறிப்பும் இந்நூலில் இடம்பெறவில்லை. ஆனால் இந்தத் தெளிவுரையில் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவா்கள் தொகுத்து வெளியிட்டுள்ள புறத்திரட்டில்  இடம்பெற்றுள்ள முத்தொள்ளாயிரம் பாடல்கள் அனைத்தும்  இடம்பெற்றுள்ளன.  அத்துடன், அந்நூலில் உள்ள பாடல்கள் சேரன் சோழன் பாண்டியன் என்று மூவேந்தா்களின் வரிசையிலும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

முத்தொள்ளாயிரம் மூலமும் முனைவா் கதிர்முருகு தெளிவுரையும்
இவ்வுரை 2007 ஆண்டு, சாரதா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவா்கள் தொகுத்து வெளியிட்டுள்ள புறத்திரட்டில்  இடம்பெற்றுள்ள முத்தொள்ளாயிரம் பாடல்களில்,

“இருங்களி றொன்று மடப்பிடி சாரல்
இலங்கருவி நீராற் றெளிக்கும் நலங்கிளா் வேல்
துன்னரும் போர்க்கோதை தொடாஅன் செருக்கின
மன்னா் மதிலாய வென்று” (புற.திர.1397)

என்ற பாடல் கதிர்முருகு தெளிவுரைகளில்  இடம்பெறவில்லை. அதற்குபதிலாக வேறுபாடல்கள் பல இடம் பெற்றுள்ளன. இப்பாடல்கள் எந்த நூலில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது என்ற விவரமும் அந்த தெளிவுரையில் தரப்படவில்லை.

புறத்திரட்டு - டாக்டா் செ. உலகநாதன் உரை - முனைவா் கதிர்முருகு உரைகள் ஒப்புமை
முனைவா் செ. உலகநாதன் எழுதியுள்ள தெளிவுரை, முனைவா் க.கதிர்முருகு எழுதியுள்ள தெளிவுரை ஆகியவற்றில் உள்ள முத்தொள்ளாயிரம் பாடல்களைப் பேரசிரியா் எஸ். வையாபுரிபிள்ளை அவா்கள் வெளியிட்டுள்ள புறத்திரட்டில் இடம்பெற்றுள்ள முத்தொள்ளாயிரம் பாடல்களுடன் ஒப்பிட அவை பின்வருமாறு அமைந்துள்ளன.

1. சேரன் பற்றிய பாடல்கள்

.என்

புறத்திரட்டு

டாக்டா் செ. உலகநாதன் உரை

முனைவா் கதிர்முருகு உரை

1

1508

1

10

2

1518

2

12

3

1541

3

14

4

1517

4

11

5

1547

5

15

6

1557

6

17

7

1553

7

16

8

1564

8

18

9

1567

9

19

10

1568

10

20

11

1570

11

21

12

1532

12

13

13

829

13

3

14

862

14

4

15

1467

15

1

16

1285

16

5

17

1471

17

2

18

1388

18

6

19

1431

19

7

20

1278

20

8

21

1279

21

9

2. சேரன் பற்றிய பாடல்கள்

.என்

புறத்திரட்டு

டாக்டா் செ. உலகநாதன் உரை

முனைவா் கதிர்முருகு உரை

1

1389

1

33

2

1507

2

47

3

1544

3

59

4

1513

4

49

5

1531

5

56

6

1545

6

60

7

1554

7

62

8

1552

8

61

9

1533

9

57

10

1524

10

52

11

1520

11

50

12

1522

12

51

13

1526

13

54

14

1527

14

55

15

1512

15

48

16

1539

16

58

17

1555

17

63

18

1561

18

64

19

1562

19

65

20

1525

20

53

21

831

21

27

22

863

22

28

23

1468

23

24

24

1473

24

44

25

1288

25

29

26

1392

26

34

27

1393

27

35

28

1394

28

36

29

1432

29

38

30

1280

30

39

3. பாண்டியன் பற்றிய பாடல்கள்

.என்

புறத்திரட்டு

டாக்டா் செ. உலகநாதன் உரை

முனைவா் கதிர்முருகு உரை

1

1509

1

117

2

1542

2

101

3

1546

3

103

4

1548

4

104

5

1519

5

123

6

1523

6

125

7

1521

7

124

8

1559

8

110

9

1528

9

92

10

1549

10

105

11

1550

11

106

12

1551

12

107

13

1529

13

93

14

1530

14

94

15

1534

15

95

16

1566

16

114

17

1543

17

102

18

1540

18

100

19

1558

19

109

20

1510

20

118

21

1511

21

119

22

1514

22

120

23

1515

23

121

24

1560

24

111

25

1536

25

97

26

1535

26

96

27

1563

27

112

28

1506

28

116

29

1556

29

108

30

1538

30

99

31

1516

31

122

32

1537

32

98

33

1569

33

115

34

1565

34

113

35

1469

35

73

36

830

36

76

37

864

37

77

38

1464

38

70

39

1465

39

71

40

1466

40

72

41

1472

41

75

42

1287

42

79

43

1380

43

81

44

1470

44

74

45

1286

45

78

46

1331

46

80

47

1390

47

82

48

1391

48

83

49

1395

49

84

50

1396

50

85

51

1430

51

86

52

1433

52

87

53

1281

53

88

54

1282

54

89

55

1456

55

90

56

1457

56

91

57

1397

57

-

முனைவர் கதிர்முருகு வெளியிட்டுள்ள தெளிவுரையில் சேரன் பற்றி இரு பாடல்களும் (22, 23), சோழனைப் பற்றி பதினாறு பாடல்களும் (25, 26, 30, 31, 32, 37, 40, 41, 42, 43, 45, 46, 66, 67, 68, 69), பாண்டியனைப் பற்றி நான்கு பாடல்களும் புறத்திரட்டில் இல்லாதவை. கூடுதலாக இடம் பெற்றுள்ளவை. இப்பாடல்கள் எந்த நூலில் இருந்து தொகுக்கப்பட்டது என்ற குறிப்பு எதுவும் அந்த நூலில் தரப்படாத நிலையில் இவை ந.சேதுராமன்  அவா்களின் பதிப்புரையை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.

மேலும் இந்த இரு தெளிவுரைகளிலும் பாடல்களின் வரிசை முறை முன்பின் என மாறிமாறி அமைந்துள்ளன. அத்துடன்,

“இருங்களி றொன்று மடப்பிடி சாரல்
இலங்கருவி நீராற் றொளிக்கும் நலங்கிளர்வேல்
துன்னரும் போர்க்கோதை தொடாஅன் செருக்கின்
மன்னன் மதிலாய வென்று” (1397)

என்ற பாடல் செ.உலகநாதன் தெளிவுரையிலும், மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்திலும், சென்னை நூலகம்.காம் இணையதளத்திலும் பாண்டியன் பற்றிய பாடலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்பாடலில் பாண்டியன் பற்றிய குறிப்பு இல்லை.
உண்மையில் போர்க்கோதை என்பது சேரனைக் குறிக்கும் சொல்லாகும்.

“.. .. .. .. .. .. .. .. .. .. .. வானத்து
மின்சோ் மதியனையான் விண்ணுயா் கொல்லியா்
கோன் சேரன் கோதை. . .. . . .  . ..  .. . .” (1467:2-4)

“முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான்” (1279:3)

“. . . . . . . . . . . . . . . . .சேரலார்க் கோக்கோதை” (1567:3)

“. . . . .குடநாடன் வஞ்சிக் கோமான் . . . . .” (1564:1)

என்ற பாடல் அடிகள் மூலம் அதைத் தெளிவாக அறியமுடிகின்றது.
அத்துடன் “கோதை” என்னும் சொல் கொண்ட 1508,    1518, 1541, 1517, 1547, 1557, 1553, 1568, 1570, 1532, 829, 1285, 1471, 1388, 1389, 1278 ஆகிய பாடல்கள் சேரன் பற்றிய பாடல்களாக வகைப்படுத்தியுள்ள நிலையில் அதே தன்மையிலுள்ள புறத்திரட்டு 1397 ஆம் பாடல் ஏன் பாண்டியன் பற்றிய பாடலாக வகைபடுத்தினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.
கோதை என்ற சொல்லை கொண்டுள்ள 1397 ஆம் பாடல் சேரன் பற்றிய பாடலாகக் கொள்வதே சரியாக இருக்கும். ஆக இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்க்க முத்தௌ்ளாயிரத்திலுள்ள பாடல்கள் பின்வருமாறு அமைந்துள்ளதை அறியமுடிகின்றது.


கடவுள் வாழ்த்து பாடல் ஒன்று.

மன்னா்கள்

கைக்கிளைப்பாடல்கள் (65)

புறப்பாடல்கள் (43)

சேரன்

12

11

சோழன்

19

10

பாண்டியன்

34

22

மேற்கண்ட ஒப்பீட்டில் இருந்து முத்தொள்ளாயிரம் பாடல்களின் பதிப்புகளில் பல முரண்பாடுகள் இருப்பதை அறியமுடிகின்றது. எனவே ஒரு முறையான செம்பதிப்பு இப்பாடல்களுக்குத் தேவை என்பது இதன் மூலம் அறியமுடிகின்றது.

பயன்பட்ட நூல்கள்
1. வையாபுரிப்பிள்ளை, பேராசிரியா் எஸ்., புறத்திரட்டு,  1938 (மறுபதிப்பு - 2001), சென்னைப் பல்கலைக்கழகம்.
2. சிதம்பரநாத முதலியார். டி.கே., பொதிகைமலைப் பதிப்பு, 1957 (மூன்றாம் பதிப்பு) திருக்குற்றாலம் - தென்காசி.
3. உலகநாதன், முனைவா் செ., முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும் (தெளிவுரை), முல்லை  நிலையம், 2006 (மறுபதிப்பு), தி.நகா், சென்னை.
4. கதிர் முருகு. முனைவா்., 2007 (முதல்பதிப்பு), முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை.
5. மாணிக்கவாசகன். ஞா., முத்தொள்ளாயிரம் விளக்க உரை, 2016 (மூன்றாம் பதிப்பு), உமா பதிப்பகம், சென்னை.
6. சந்திரன். முனைவர் ஆ., முத்தொள்ளாயிரம் அமைப்பு முறை, செம்மூதாய் பதிப்பகம், 2012 (முதல் பதிப்பு), சென்னை.
7. http://www.noolulagam.com/free_books/other_books/muthollayiram.pdf
8. http://www.chennailibrary.com/mis/muthollayiram.html 
9. https://ta.wikisource.org/wiki/முத்தொள்ளாயிரம்
10. சேதுராமன் முனைவர் சி., முத்தொள்ளாயிரத்தில் மறம், http://puthu.thinnai.com/?p=27009 
11. சிவகாமி. இணைப் பேராசிரியர் ச., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,  http://www.dinamani.com/NewsItems.asp?ID=DN120080517125315&Title=Tamil+Mani&lTitle=R%AArU%A6&Topic=0&dName=No+Title&Dist=0

* முனைவர் ஆ. சந்திரன், உதவிப்பேராசிரியர் , தமிழ்த் துறை,  தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) , திருப்பத்தூர்,  வேலூர் -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R