பொ.வே. சோமசுந்தரனாரின் மேற்கோள் திறன் (பெரும்பாணாற்றுப்படை)   --திருமதி ம.மோ.கீதா,  உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, அ.வ.அ.கல்லூரி(தன்னாட்சி), மன்னம்பந்தல்-609 305. -முன்னுரை:
சங்க இலக்கியம் முழுமைக்கும் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உரை எழுதியுள்ளார்.ஆற்றுப்படை நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையானது இவரது உரையின் மேற்கோள் திறத்தினால் சிறப்பினை அடைந்தது என்றே கூறலாம்.எனவே,இவரின் மேற்கோள் திறத்தினைப் பற்றி இக்கட்டுரையின்மூலம் அறியலாம்.

மேற்கோள்:
மேற்கோள் என்பது சுருக்கமாகவும் சிந்திக்கக் கூடியதாகவும்,கருத்துடன் உறவினையுடையதாகவும் இருக்க வேண்டும். மேற்கோளினை நாம் அளவாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.உரையாசிரியர்கள் தங்களின் புலமையினைக் காட்டுவதற்கு மேற்கோள்கள் உதவிபுரிகின்றன.

”உப்புபோல் இருக்க வேண்டுமே தவிர
அதுவே உணவாகி விடுதல் கூடாது”1

என்பார் இலக்குவனார்.குறியீடுகள்,மேற்கோள்கள் ஆய்வு நிகழ்த்தும் அறிஞர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. அறிஞர்கள் மேற்கோளினை இரண்டு நிலையாகக் குறிப்பிடுகின்றனர்.அவை ஒற்றை மேற்கோள்,இரட்டை மேற்கோள் என இரு வகைப்படும்.

மேற்கோளின் தேவை:
ஒரு நூலிற்கு மேற்கோள் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒன்றிற்கு மேற்பட்ட நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் கூறலாம்.எளிதில் விளக்கந் தர வேண்டிய இடங்களில், எடுத்துக்காட்டுத் தேவைப்படும் இடங்களிலும் மேற்கோள்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர்.மேற்கோளின்மூலம் கருத்துச் சிக்கல் என்பது இல்லாமல் இருக்கின்றது.எல்லா இடங்களுக்கும் மேற்கோள்கள் தேவைப்படுவதில்லை.சில இடங்களுக்கு மட்டுமே மேற்கோள்கள் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகின்றன. மேற்கோளின் பயன்பாடு:
ஒரு நூலிற்கு மேற்கோளின் பயன்பாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக விளங்குகின்றது. உரைகள், பதிப்புகள், ஆய்வுகள் போன்றவற்றிற்குத் தேவைப்படும் இடங்களிலும் தமது கருத்தினை விளக்கவும், அதனை மறுக்கவும்,மேற்கோளின் பயன்பாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.மேற்கோளினைக் குறிப்பிட்ட அளவே பயன்படுத்த வேண்டும். இல்லையேல், அதுவே ஒரு குறையாக அமைந்துவிடும். குறைவாகவும் மேற்கோளினைப் பயன்படுத்தக்கூடாது.

பெரும்பாணாற்றுப்படையில் மேற்கோள் திறன்:
பொ.வே.சோ. பெரும்பாணாற்றுப்படைக்கு உரை எழுதிய நிலையில் ஆங்காங்கே சங்க இலக்கியம்,அற இலக்கியம்,பக்தி இலக்கியம்,காப்பியம்,இலக்கணம் போன்ற நூல்களிலிருந்து மேற்கோளினை எடுத்துக்காட்டியுள்ளார்.

முதுவேனிற் பருவம்:
முதுவேனிற் பருவத்தின் நிலையினை விளக்கிய சோமசுந்தரனார்,”அகலிரு விசும்பில் வேனில்”2 என்ற வரிக்கு எப்பொழுதும் அகன்று விரிதற்குக் காரணமாகப் பரந்து இருத்தலை விழுங்கா நின்ற ஞாயிறு சுடுகின்ற முங்கிய முதுவேனிற் காலம் என்ற வரிக்குச் சோமசுந்தரனார் சிலப்பதிகாரப் பாடலின் வரியினைப் புகுத்திக் காட்டியுள்ளார்.

“திங்களைப் போற்றுதூஉம் திங்களைப் போற்றுதூஉம்
ஞாயிறு போற்றுதூஉம் ஞாயிறு போற்றுதூஉம்
மாமழை போற்றுதூஉம் மாமழை போற்றுதூஉம்”3

என்னும் இக்காட்சியினை மேலும் அழகூட்ட,

”இளங்கதிர் ஞாயிறு எள்ளுந் தோற்றத்து
விளங்கொலி மேனி விரிசடை யாட்டி
பொன்றிகழ் நெடுவரை யுச்சித் தோன்றித்
தென்திசைப் பெயர்ந்தவித் தீவத் தெய்வதம்”4

என்ற பாடல் வரியினையும் புகுத்தி மிகவும் அழகான இயற்கைக் காட்சியின் சிறப்பினை நமக்குச் சோமசுந்தரனார் மிகவும் எளிமையாக விளக்கிக் காட்டியுள்ளார்.

இலக்கிய மேற்கோள்கள்:
குறுந்தொகை-1, ஐங்குறுநூறு-2, அகநானூறு-1, புறநானூறு-5, கலித்தொகை-1, பரிபாடல்-2, சிறுபாணாற்றுப்படை-3, பொருணராற்றுப்படை-3, மலைபடுகடாம்-8,மதுரைக்காஞ்சி-2, பட்டினப்பாலை-6, பதிற்றுப்பத்து-3, திருக்குறள்-15, நாலடியார்-1, நளவெண்பா-1, பெரியத் திருமொழி-2, சிலப்பதிகாரம்-13,மணிமேகலை-3,வளையாபதி-1,கம்பராமாயணம்-3 எனப் பெரும்பாணாற்றுப்படையில் மேலே குறிப்பிட்ட நூல்களிலிருந்தே மேற்கோள்கள் அதிகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இலக்கண மேற்கோள்கள்:
சோமசுந்தரனார் தம் பெரும்பாணாற்றுப்படையில் இலக்கியமேற்கோள்களைக்காட்டியுள்ளதுபோலவே இலக்கணங்களையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

*தொல்காப்பியம்-மரபியல்-8
*தொல்காப்பியம்-புறத்திணையியல்-3
*தொல்காப்பியம்-உவமையியல்-2
*தொல்காப்பியம்-உயிர் மயங்கியல்-2
*தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்-1
*தொல்காப்பியம்-களவியல்-1
*தொல்காப்பியம்-செய்யுளியல்-1
*புறப்பொருள் வெண்பா மாலை-1

ஆகிய இலக்கண நூல்களைப் பயன்படுத்தித் தம்  பெரும்பாணாற்றுப்படை உரையில் மேற்கோள்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

முடிவுரை:
பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் தாம் எழுதுபவை இலக்கிய உரையாக இருந்தாலும், அந்த உரைக்கு மேற்கோள் காட்டி விளக்கும் அவரின் திறன் மிகவும் சிறப்பு வாய்ந்த்தாக அமைகிறது.இன்றைய காலக்கட்டம் வரை தாம் வரைந்த உரையில், மேற்கோள் திறனில் சிறந்து நிற்பவர், பெருமழைப் புலவரே ஆவார்.

சான்றெண் விளக்கம்
1.சி.இலக்குவனார்,ஆராய்ச்சி நெறிமுறைகள்,ப.171.
2.பொ.வே.சோமசுந்தரனார்(உ.ஆ.),பொருநராற்றுப்படை,ப.157.
3.புலியூர்க்கேசிகன்(உ.ஆ.),சிலப்பதிகாரம்,ப.48.
4.புலியூர்க்கேசிகன்(உ.ஆ.),மணிமேகலை,ப.65.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R