ஆய்வு: வெறுப்பூட்டும் கேள்வி: நீ எங்கிருந்து வருகிறாய்?[ 'சிறகு' இணைய இதழில் வெளியான இக்கட்டுரையினை,இதன் பயன் கருதி மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்- ]

சில இனவெறிச்செயல்கள் அதிகத் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தாததாகவும், மறைமுகமானதாகவும் இருப்பதுண்டு. அதைச் செய்பவருக்கும் தன்னால் ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்பது தெரியாது; பாதிக்கப்படுபவருக்கும் தன் மனதை அது வருத்தும் காரணம் தெளிவாகப் புரியாத அளவுக்கு நுட்பமான செயலாக அது அமைந்திருக்கும். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆசிய அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருவது. அது சீனா, கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட கிழக்காசிய வழித்தோன்றல்களாக இருந்தாலும் சரி அல்லது இந்தியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா போன்ற தெற்காசிய நாடுகளின் வழித்தோன்றல்களாக இருந்தாலும் சரி; புலம் பெயர்ந்த தங்களது முன்னோர்கள் எதிர்கொண்ட “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்ற அதே கேள்வியையே அமெரிக்க நாட்டில் பிறந்து அமெரிக்க குடிமக்களாகவே தங்களைக் கருதி வாழ்ந்து வரும் பிற்காலத் தலைமுறையினரும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

அவர்கள் அயல்நாட்டில் இருந்து வந்து குடியேறிய பெற்றோர்களுக்கு அமெரிக்க மண்ணில் பிறந்த “முதல் தலைமுறை அமெரிக்கர்கள்” (The first generation Americans) ஆக இருந்தாலும், முதல் தலைமுறை அமெரிக்கர்களுக்குப் பிறந்த தொடர்ந்து வரும் இரண்டாம், மூன்றாம் தலைமுறை அமெரிக்கர்களாக இருந்தாலும் சரி, விதிவிலக்கின்றி அவர்கள் ‘நீ எங்கிருந்து வருகிறாய்’ என்றக் கேள்வியை எதிர் கொள்வார்கள். அதற்குக் காரணம் வெளிப்படையாகத் தெரியும் அவர்களது ஆசிய இனத்தைக் குறிக்கும் தோற்றம்.

இதனைப் புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் திரு. வ.ந. கிரிதரன் அவர்கள் ‘நீ எங்கிருந்து வருகிறாய்? என்ற தனது கதையிலும் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகப் புலம் பெயர்ந்து வருபவர்கள் இக்கேள்வியை முதலில் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஏனெனில் அதுதான் உண்மையும் என்பதால் அவர்களுக்கு அக்கேள்வி முதலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. காலப்போக்கில் தன்னை அந்நாட்டின் குடியுரிமை பெற்றவராக ஆக்கிக் கொண்டு, அவ்வாறே வாழத் துவங்கியதும், அக்கேள்வியின் அடிப்படை இனபேதம் கொண்டதாக இருக்குமோ என்று சந்தேகிக்கும் நேரங்களும் உண்டு. ‘உன்நாட்டிற்குத் திரும்பிப் போ’ அல்லது ‘நீ எங்களில் ஒருவர் அல்ல’ போன்ற மறைமுகப் பொருள் பொதிந்திருப்பதாகக் கூட கருதும் நிலையும் சில மோசமான சூழ்நிலைகளில் ஏற்படக் கூடும். தனது பணி வாய்ப்பு, அதில் முன்னேற்றம் போன்றவற்றில் தாங்கள் தட்டிக்கழிக்கப்பட நேர்ந்தால் தங்களது புலம் பெயர்ந்த பின்னணி அதற்குக் காரணமாக இருப்பதாகவும் ஐயுறுவதுண்டு.

நீ எங்கிருந்து வருகிறாய்? என்ற கேள்வியை ‘நுண்ணிய இனவெறித் தாக்குதல்’ அல்லது ‘ரேசியல் மைக்ரோ அக்ரெஷன்ஸ்’ (‘racial micro aggressions’) எனக் குறிப்பிடுவர். நுண்ணிய இனவெறித் தாக்குதல் என்ற கருத்தாக்கத்தை முதலில் முன்வைத்தவர் ‘செஸ்டர் எம். பியர்ஸ்’ (Chester M. Pierce) என்ற உளவியல் மருத்துவர். இக்கருத்தாக்கத்தை 1970களில் இவர் குறிப்பிடத் துவங்கினாலும், தற்காலத்தில்தான் இது மிகவும் பரவலான பயன்பாட்டிற்கு வந்ததாகத் தெரிகிறது. “தன்னுடைய நாட்டிலேயே என்றும் அயல்நாட்டவராகப் பொதுமைப்படுத்தி விலக்கிவைக்கப்பட்டு (perpetual foreigner stereotype), பொதுமைப்படுத்தும் நிலைமையை மற்ற ஆசிய அமெரிக்கர்களைப்போலத் தெற்காசிய இனத்தினரான இந்திய அமெரிக்கர்களும் தொடர்ந்து எதிர் கொள்கிறார்கள்.

உளவியல் துறை ஆய்வாளர்கள் நுண்ணிய இனவெறித் தாக்குதலை மேலும் மூன்று வகைகளாக மிகத் தெளிவாக வேறுபடுத்தியும் வகைப்படுத்துகிறார்கள்.

1. ‘நுண்ணிய எதிர்ப்பு’ அல்லது ‘மைக்ரோ அசால்ட்ஸ்’ (Microassaults)என்ற பிரிவில், தங்களை உயர்ந்த பிரிவினர் என்று கருதி வாய்ப்புக்கிடைக்கும் பொழுது அதைச் செயலிலும் காட்டும் நடவடிக்கைகள் அடங்கும். இனவெறிச் செயல்களைச் செய்பவர்களுக்கு தங்களது நோக்கம் தெளிவாகவேத் தெரியும். தெரிந்தே, வேண்டுமென்றே பிற இனத்தவரை இழிவுப்படுத்தும் சொற்களைப் பயன்படுத்தி அழைப்பது, ஆரிய மேன்மையைக் குறிக்கும் சுவஸ்திக்கா சின்னங்களை அணிந்து கொள்வது, அதைப் பச்சை குத்திக் கொள்வது போன்ற நடவடிக்கைகள், பல இன மக்களும் இருக்கும் பொதுவிடத்தில் வேண்டுமென்றே வெள்ளையரிடம் மட்டும் சிறப்புக் கவனம் செலுத்துவது (உணவு விடுதியில் வெள்ளை இன மக்களுக்கு முதலில் உணவுத்தட்டுகளை வைத்துவிட்டு பிறரை மெதுவாகக் கவனிப்பது போன்ற செயல்கள்) ஆகியன ‘நுண்ணிய எதிர்ப்பு’ அல்லது ‘மைக்ரோ அசால்ட்’ வகையில் அடங்கும். மனதாரத் தெரிந்தே செய்யும் நடவடிக்கைகள் இவை.

2. ‘நுண்ணிய அவமதிப்பு’ அல்லது ‘மைக்ரோ இன்சல்ட்ஸ்’ (Microinsults) என்ற வகையில் ஆணவத்தைக் காட்டும், பிறர் உணர்வை மதிக்காத முரட்டுத்தனமான பேச்சுகளும் நடத்தைகளும் அடங்கும். உடன் பணியாற்றும் வேற்றின ஆளிடம் உனக்கு எவ்வாறு இங்கு வேலை கிடைத்தது, அல்லது பதவி உயர்வு கிடைத்தது போன்று, ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ கேட்பது. அவர்கள் அந்த நிலைமையை அடைந்ததற்குக் காரணம் சிறப்புச் சலுகை மட்டுமே என்பது போன்ற எண்ணத்தை அடுத்தவர் மனதில் புகுத்துவது. அலட்சியமாகப் பார்ப்பது, பேச்சில் இடையிட்டு கடுமை தொனிக்க மறுமொழி அளிப்பது, நீ எனக்கு ஒரு பொருட்டல்ல என்பது போன்று பிற இனத்தவரை மதிக்காத அகங்காரச் சொற்களும் செயல்களும் இப்பிரிவில் அடங்கும்.

3. ‘நுண்ணிய மறுதலித்தல்’ அல்லது ‘மைக்ரோ இன்வேலிட்டேஷன்ஸ்’ (Microinvalidations) என்ற வகையில், பிற இனத்தவரிடம் அவருக்குள்ள தகுதியை மறுக்கும் நோக்கில் பேசுவது. தங்களுள் ஒருவராக அவரை ஏற்றுக் கொள்ளாதது, தங்களில் ஒருவராக ஒப்புக் கொள்ள மறுத்து அவர்களை விலக்குவது, தங்கள் தகுதிக்கும் தரத்திற்கும் வேற்றினத்தவர் இணையாக முடியாது என்ற நோக்கில் பேசுவது போன்றவை அடங்கும். தங்கள் ஆழ்மனதில் வேற்றினத்தவரைப் பற்றித் தாங்கள் கொண்டுள்ள எண்ணம் இவ்வாறாக வெளிப்படுவது அவர்களுக்கே தெரியாத, புரியாத ஒரு அறியாமை நிலையாகவும் இருக்கும். தங்களில் ஒருவராக வேற்றினத்தவரை ‘எண்ண மறந்த’ மனப்பான்மையில் வெளிப்படும் பக்குவமற்ற கேள்வியே ஆசிய அமெரிக்கர்கள், குறிப்பாக இந்திய அமெரிக்கர்கள் எதிர்கொள்ளும்… அவர்களுக்கு வெறுப்பூட்டும் கேள்வியான, ” நீ எங்கிருந்து வருகிறாய்?” என்ற கேள்வி.

நீ எங்கிருந்து வருகிறாய்? என்ற கேள்வி சுட்டுவது, நீ எங்களில் ஒருவர் அல்ல என்பதை. இதனை எதிர் கொள்ளும் முதல்தலைமுறை அமெரிக்க இந்தியர்கள், “இல்லை, நான் இங்கு நியூயார்க்கில்தான் பிறந்தேன்” என்று (நானும் ஒரு அமெரிக்க குடிமகனே என்பதை உணர்த்தும் பதில்) அமெரிக்காவில் பிறந்ததைக் குறிப்பிட்டுச் சொன்ன பின்னரும் சில சமயம் அடுத்த கேள்வியும் தொடரும். “நான் அதைக் கேட்கவில்லை, உண்மையில் உன் பூர்வீகம் என்ன?”(“Where are you ‘really’ from?” or”I meant, where are you ‘originally’ from?”) என்று அடுத்துத் தொடரும் அக்கேள்வி “அமெரிக்கவாழ் இந்தியர்களிடம் நிரந்தர அயல்நாட்டவர் அடையாளம்” என்பது ஒட்டிக் கொண்டுள்ளதை உணர்த்தும்.

இவ்வகை பொதுமைப்படுத்துதல் மூலம் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தாலும், அமெரிக்கர்கள் என்ற தகுதி தங்களுக்குக் கிடைக்காமல் போவதுடன், அவர்கள் வெள்ளையின அமெரிக்கர்களுடனோ, அல்லது ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களுக்குச் சமமாகவோ மதிக்கப்படாத உண்மை அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு முகத்தில் அறைவது போல தெரியவரும். தான் பிறந்த நாட்டிலேயே தான் என்றும் அயல்நாட்டவர்தானா என்ற வேதனை நிறைந்த கேள்வி மனதில் எழும். தங்கள் கேள்வியின் தீவிரம் அறியாமல், பொதுமைப்படுத்தும் இனபேத செயல்களில் மற்றுமொன்று அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, பிற அமெரிக்கக் குழந்தைகள் போலவே ஆங்கிலம் பேசி வளர்ந்த முதல்தலைமுறை அமெரிக்கர்களிடம் ‘நீ அருமையாக ஆங்கிலம் பேசுகிறாய்’ என்று சொல்வது. பள்ளியில் ஆங்கிலம் இரண்டாம் மொழியாகக் கற்பவர்களுக்கான சிறப்பு வகுப்புகளுக்கு பெயர்களைத் தேர்வு செய்யும் பொழுது, கணினி வழியே மாணவர் பட்டியலில், “இனம் = ஆசிய இனம்” என்ற பிரிவில் உள்ள மாணவர்களையெல்லாம் சிறப்பு ஆங்கில வகுப்புக்கு வரச்சொல்வது. பிறகு அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, உச்சரிப்புத் தேனீ போட்டிகளில் எல்லாம் பரிசுகளை அள்ளிக் குவிக்கும் வகையில் ஆங்கிலக் கல்விப் பயிற்சி கொண்டவர்கள் என, பின்னரே அறிந்து தங்கள் தவற்றை உணர்வது.

பிற புலம்பெயர்ந்து வந்த குடும்பத்தினரை நடத்துவது போலவே, முதல்தலைமுறை அமெரிக்க இந்திய மாணவர்கள் நடத்தப்படுவதை மாணவர்களும் நன்கே அறிவார்கள். இவ்வாறு சிறுவயதிலிருந்தே தங்கள் நாட்டிலேயே அயல்நாட்டவர் போன்று நடத்தப்படுவதால், தான் ஏதோ வகையில் அமெரிக்க வெள்ளையர்களுக்கு இணையானவர் இல்லை என்ற எண்ணம் அமெரிக்க இந்தியர்கள் மனதில் எழத் துவங்கும். அவர்களும் அதனை ஈடுகட்ட அமெரிக்க கலாச்சாரத்தில் தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல எனக் காண்பிக்க அமெரிக்க வாழ்க்கை முறையில் அதிக ஈடுபாட்டைக் காட்டத் துவங்குவார்கள். இதனை உளவியல் ஆய்வாளர்கள் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் 1, 2, 3, 4, 5

இது போன்ற அனுபவங்கள் உளவியல் தாக்கங்களை ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடிபெயரும் வெள்ளையின மக்கள் எதிர் கொள்வதில்லை. அவர்களை அமெரிக்கக் குடிமக்கள் என்ற வகையிலேயே நடத்தப்படுவதால், இது உண்மையில் இனபேத அடிப்படை கொண்ட அணுகுமுறை என்பது தெளிவாகும். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு கொடுக்க வேண்டுமென்றால் , ‘பீட்டர் ஜென்னிங்க்ஸ்’ (Peter Jennings, 1938 – 2005) என்ற தொலைக்காட்சி செய்தித் தொகுப்பாளரைக் குறிப்பிடலாம். மறைந்த பீட்டர் ஜென்னிங்க்ஸ் கனடா நாட்டில் பிறந்து வளர்ந்து, அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தவர். அவர் வழக்கமான ஆங்கிலம் பேசும் வெள்ளையர் என்பதால் அவர் எப்பொழுதுமே புலம் பெயர்ந்து குடியேறியவராக நடத்தப்பட்டதில்லை என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். புலம் பெயர்ந்த வெள்ளையின தலைமுறையே இனபேத முறைகளை எதிர்கொள்ளாததை கவனிக்க வேண்டும். ஆனால், கிழக்காசிய, தெற்காசிய வழித்தோன்றல்கள் தொடர்ந்து அவர்கள் நாட்டிலேயே அயல்நாட்டவர் போல இன்றும் நடத்தப்படுவதுண்டு. இதனைச் சமீபத்தில் நியூ ஹாம்ப்ஷையரில் நடந்த ரிபப்ளிக்கன் மாநாடு (No Labels-hosted Problem Solver Convention in New Hampshire) ஒன்றும் காட்டிக் கொடுத்தது.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் பயிலும் மாணவரான “ஜோசப் சோவ்” (Joseph Choe)அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டவர். அரசியல் கூட்டங்களுக்குச் சென்று பேச்சாளர்களிடம் விளக்கம் கேட்பது அவரது வழக்கம். அதிலும், பேச்சாளர் யாரேனும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சொன்னால் அதைச் சுட்டிக்காட்டுவதை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். சென்ற ஆண்டு (2015) அக்டோபரில் நியூ ஹாம்ப்ஷையரில் நடந்த ரிபப்ளிக்கன் மாநாட்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான ‘டானல்ட் ட்ரம்ப்’ உரை நிகழ்த்தினார். கேள்வி நேரம் பகுதியில் ஜோசப் சோவ் (பார்க்க காணொளி: https://youtu.be/rw3uBLOUwfU) ட்ரம்ப்பிடம் தனது கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

கீழே அந்த உரையாடல்


ஜோசப் சோவ்: “நீங்கள் கொடுத்த தகவலில் எனக்கு ஒரு கேள்வி உள்ளது, நான் சரியான தகவலைக் குறிப்பிட விரும்புகிறேன், நீங்கள் முன்னர் உங்கள் உரையில் குறிப்பிட்ட பொழுது அமெரிக்கா தென்கொரியா நாட்டிற்கு இராணுவ உதவி செய்கிறது. ஆனால், அதற்குப் பதிலாக தென் கொரியா அமெரிக்காவிற்கு எந்த உதவியும் செய்வதில்லை, தென் கொரியா தனக்குக் கிடைக்கும் அமெரிக்க உதவியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது எனக் கூறியுள்ளீர்கள்….

டானல்ட் ட்ரம்ப்” (இடை மறித்து…) நீங்கள் தென்கொரியாவைச் சேர்ந்தவரா?

(டானல்ட் ட்ரம்ப்பின் ஆணவமாக, அனைவரையும் அவமதித்து உரையாடும் பேசும் பாணியை அறிந்தவர்கள் எவரும் “நீ என்ன தென்கொரியனா?” என்று மொழிபெயர்ப்பதே இங்குச் சரியாக இருக்கும் என அறிவர்)

ஜோசப் சோவ்: (இதை எதிர்பாராது திடுக்கிட்டபின்) இல்லை நான் இங்கு டெக்சாசில் பிறந்து கொலராடோவில் வளர்ந்தவன்… (சிறு சிரிப்பிற்குப் பிறகு…) எது எப்படி இருப்பினும் … நான் சொல்ல வருவது உண்மையில் தென்கொரியா அமெரிக்காவிற்கு 861 மில்லியன் டாலர் பணம் கொடுத்துள்ளது….(என்று தொடர்கிறார்)

தான் அமெரிக்காவில் பிறந்த அமெரிக்கக் குடிமகன் என டெக்சாசில் பிறந்து கொலராடோவில் வளர்ந்தவன் என்று குறிப்பிடும் பொழுது, அவையில் அந்தச் சங்கடமான நிலையில் சிரிப்பொலி எழுகிறது. இதனை அசட்டையாக தோளைக் குலுக்கி, கையைவிரித்து, புறக்கணித்து ஜோசப் சோவ்வை மேலே பேசவிடாமல் (வழக்கம் போல) இடைமறித்த ட்ரம்ப், தென்கொரியா கொடுக்கும் பணம் மிகக் குறைவு, அமெரிக்கா தென்கொரியாவிற்கு அளிக்கும் உதவியுடன் ஒப்பிட்டால் அது ஒன்றுமேயில்லை என்று தொடர்கிறார்.

இதன் பிறகு ஜோசப் சோவ்வின் நண்பர் அவரிடம் “நீ உனது பிறப்புச் சான்றிதழையும் கொடுத்திருக்க வேண்டும்” என்று நையாண்டி செய்ததாகவும் செய்தி கூறுகிறது (ட்ரம்ப் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடமும் அவர் அமெரிக்கர்தான் என்று நிரூபிக்கச் சொல்லி பிறப்புச் சான்றிதழ் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது சுவையான மேலதிகத் தகவல்).

ஜோசப் சோவ்வின் பெற்றோர்கள் தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள், மேல்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு வந்தவர்கள். படிக்கும் காலத்தில் சந்தித்து, திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே தங்கி தங்கள் வாழ்க்கையைத் தொடர்பவர்கள். ஜோசப் சோவ்வின் தந்தை விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டமும்(PhD in aerospace engineering), தாய் மருந்தாக்கியலில் முனைவர் (PhD in pharmacy) படிப்பும் படித்தவர்கள். முதல்தலைமுறை ஆசிய அமெரிக்கரான ஜோசப் சோவ்விற்கு கிடைத்த அனுபவம் போன்ற நிகழ்வை எதிர்கொள்ளாத, அமெரிக்காவில் வாழும் முதல்தலைமுறை இந்திய அமெரிக்கர்களுள் இருப்பவரும் குறைவு.

தான் பிறந்த நாட்டிலேயே சிறுபான்மையினரை ‘ரேசியல் மைக்ரோ அக்ரெஷன்ஸ்’ க்கு ஆளாக்கி, என்றும் ‘நிரந்தர அயல்நாட்டவராகப்’ (perpetual foreigners)பொதுமைப்படுத்தி அவர்களது குடியுரிமைத் தகுதியை மறுதலிக்கும் ட்ரம்ப் போன்ற அமெரிக்கர்களின் அறியாமையை, அமெரிக்க சிறுபான்மையினர், குறிப்பாக இந்திய அமெரிக்கர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி தேர்தல் களத்தில் எவ்வாறு பதில் சொல்கிறார்கள் என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அரசியல் நடவடிக்கை.

 * ABCD – American-Born Confused Desi – தங்கள் பெற்றோரின் இந்தியக் கலாச்சாரத்தையும், அமெரிக்கக் கலாச்சாரத்தையும் ஒரு சேர கடைப்பிடித்துக் கொண்டிருப்பவர்களைக் குறிப்பது.

Dothead – நெற்றியில் போட்டு வைப்பவர்களைக் குறிப்பிடும் சொல்.

browny – தோலின் நிறத்தைச் சுட்டுவது.

மேலும் பல சொற்களும் உள்ளன, அவை இத்தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளது http://www.rsdb.org/races#indians (குறிப்பு: இச்சொற்களில் சிலவற்றை அமெரிக்க இந்தியர்களே தங்களைக் குறிக்க சொல்வதுமுண்டு, ஆனால் அது அவமதிக்கும் பொருளில் அல்லாமல் கேலி செய்யும் வகையில் அமைந்திருக்கும்)சிறுகதை:‘நீ எங்கிருந்து வருகிறாய்?’- வ.ந. கிரிதரன்;
http://vngiritharan.blogspot.com/2007/08/blog-post_8627.html


ஆய்வுக் கட்டுரைகள்:
(1) “Where are you really from?”: Asian Americans and identity denial.
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16351364

(2) Perpetual foreigner in one’s own land: Potential implications for identity and psychological adjustment. Journal of Social and Clinical Psychology, 30, 133–162.
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3092701/

(3) Status-based rejection sensitivity among asian americans: implications for psychological distress.
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/18705643

(4) Is Kate Winslet more American than Lucy Liu? The impact of construal processes on the implicit ascription of a national identity
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3676889/

(5) Unmasking ‘racial micro aggressions’
http://www.apa.org/monitor/2009/02/microaggression.aspx

செய்திகள்:
1. Donald Trump Asked a Harvard Student The One Question Asian Americans Hate Being Asked – Oct 22, 2015
http://nextshark.com/joe-choe-donald-trump-asian-question/
2. South Korea? Trump’s ‘Where Are You From’ Moment
http://www.npr.org/sections/itsallpolitics/2015/10/15/448718726/south-korea-trumps-where-are-you-from-moment
3. Trump Looks At Asian-American Student And Asks If He’s From South Korea, That’s not a harmless question.
http://www.huffingtonpost.com/entry/donald-trump-south-korea_us_56201e57e4b08d94253e88a9

நன்றி: http://siragu.com/?p=19662

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

  
'பதிவுகள்' - ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
                                                                                                    'பதிவுகள்' - ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here