ஆய்வு: காமத்துப்பாலில் கண்களின் அழகியல்  வெளிப்பாடுமனித வாழ்வில் கண்கள் தனியொருவனின் சொத்தாகும். இது இன்பம், துன்பம் சார்ந்த அழகியல்களை உடலியலால் சிலிர்க்கச் செய்கிறது. நல் நிமித்தக் காட்சிகளைக் கண்டு இன்பம் கொள்வதற்கும், துன்பக்காட்சிகளைக்கான விரைந்து செல்வதற்கும் கருவியாகப் பயன்படுகிறது. காட்சிப்படுத்துகிறது; நினைவூட்டுகிறது; என அனைத்துச் செயல்களிலும் உடலியல்பு கொண்டு இயங்குகிறது கண். ஆகையால் என்னவே! ஐம்புலங்களில் ஒன்றான கண்ணைப்பற்றி, ‘கண்விதுப்பிழிதல்’ எனக் கூறி ‘குறிப்பறிதலை’ இரண்டு முறை அதிகாரப்படுத்தியுள்ளார் வள்ளுவர்.

“காமத்துப்பாலில் அறக்கருத்துக்களை தொகைவகைப் படுத்திக் கூறும் அறங்கூறும் ஆசானாகக் காட்சித் தரவில்லை, கலையுணர்வு மிக்க கலைஞனாகத் தோன்றுகிறரர்.” என்று கு. மோகனராசு கூறுகிறர். கண்கள் மனிதனின் உடல் சார்ந்த அழகியல் வெளிப்பாடு. தனியொருவனின் அடையாளம், குடும்பம், சமூகம் என அனைத்துப் பகிர்வுகளையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி இயங்கச் செய்கிறது. வள்ளுவர் காலச் சமூக சூழல்களில் இத்தகைய பின்அமைவு நிகழ்வுகளை உள்வாங்கிக் கொண்டு இனைப்புற வாழ்ந்ததால் குறிப்பறிந்து கண்ணிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். முக்கியத்துவம் கொடுக்கப்ட்ட கண்களின் அழகியல் வெளிப்பாடு தனிநிலையிலே பெரிதும் இன்பங்களையும் இன்னல்களையும் சந்தித்திருக்கிறது. மேலும் களவு கற்பு வாழ்க்கையில் கண்ணின் வெளிப்பாடு எவ்வாறு வெளிப்பட்டுள்ளது. கண்ணை எந்தளவிற்கு ஆண்கள் பெண்கள் பயன்பாட்டுப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர்? குடும்பம், சமூக வாழ்வில் எந்தளவிற்கு கண்ணின் ஈடுபாடு இருந்துள்ளது என்பதைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. கண் பற்றிய குறிப்புகள்
காமத்துப்பாலில் கண்கள் 65 (அறுபத்தைந்து) இடங்களில் தழைத்தோங்கும் காதல் மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் ஆக்கக் கருவிகளாய் துளங்காது தூக்கங் கடிந்து செயல் என்ற வழி செயற்படுகின்றது. ‘கண்’என்ற பெயர் மட்டும் 53 (ஐம்பத்து மூன்று) இடங்களில் கூறப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

அமர்த்தன கண் (குறள்.1084),                 
கூற்றமோ கண்ணோ (குறள்.1085)
மண்இவள் கண் (குறள்.1086),              
உண்டார் கண் (குறள்.1090)
இருநோக் கிவள் உண்கண் (குறள்.1091)  
கண் களவு கொள்ளும் (குறள்.1092)
யான் நோக்கம் (குறள்.1094)           
ஒருகண் (குறள்.1095)
காதலார் கண்ணே(குறள்.1099)   
கண்ணொடு கண் (குறள்.1103)
தாமரைக் கண்ணான் (குறள்.1101)   
மையாத்தி நெஞ்சே இவள் கண் (குறள்.1112)
வேல் உண்கண் (குறள்.1113)       
மாணிழை கண் ஒவ்வேம் (குறள்.1114)
மலர் அன்ன கண்ணாள் (குறள்.1119)       
கண்ணாள் குணம் (குறள்.1125)
கண்ணிணுள்ளின் பேகார் (குறள்.1126)
கண் உள்ளார் (குறள்.1127)
யாம் கண்ணிற் காண(குறள்.1140)   
பேதைக்கெண் கண் (குறள்.1136)
மலர்அன்ன கண்ணாள் (குறள்.1142)       
இன்கண் (குறள்.1152)
புன்கண் (குறள்.1152)       
அறிவுடையோர் கண்ணும் (குறள்.1153)
வண்கண்ணார் (குறள்.1156)       
மன்னோஎன் கண் (குறள்.1170)
கண்தாம் கலுழ்வ (குறள்.1171)   
நோக்கிய உண்கண் (குறள்.1172)
நீர்உலர்ந்த உண்கண் (குறள்.1174)   
உய்வில் நோய் என்கண் (குறள்.1174)
காமநோய் செய்த என்கண் (குறள்.1175)   
எமக்கிந்நோய் செய்தகண் (குறள்.1176)
அவர்க்கண்ட கண் (குறள்.1177)   
தமைவில கண் (குறள்.1178)
உற்றன கண் (குறள்.1179)       
அறைபறை கண்ணார் (குறள்.1180)
உவக்காண் (குறள்.1185)       
இவக்காண் (குறள்.1185)
கண்ணினால் காணப் (குறள்.1210)   
கயல்உண் கண் (குறள்.1212)
புண்கண் (குறள்.1222)       
வன்கண் (குறள்.1222)
நாணின கண் (குறள்.1231)   
பனிவாரும் கண் (குறள்.1232)
பெருமழைக் கண் (குறள்.1239)       
கண்ணின் பல்போ(குறள்.1240)
செய்தார் கண் (குறள்.1243)       
கண்ணும் கொணச்சேறி(குறள்.1244)
புற்கென்ற கண்ணும் (குறள்.1261)   
கண்ணாரக் கண்டபின் (குறள்.1265)
கண் அன்ன(குறள்.1276)       
உண்கண் (குறள்.1271)
கண் நிறைந்த(குறள்.1272)   
கண்ணினால் காமநோய் (குறள்.1280)
தமைய கண் (குறள்.1283)   
ஊடற் கண் (குறள்.12184)
கூடற் கண் (குறள்.1284)       
கண்ணின் துனித்தே(குறள்.1290)
பூவன்ன கண்ணார் (குறள்.1305)   
வீழுநர் கண்ணே (குறள்.1311)
கண் நிறை (குறள்.1315).

கண்களின் அழகியல் கூறுகள்
கண்களினால் வெளிப்படும் சில அழகியல் கூறுகளைத் தனியொரு மனிதயினத்திலிருந்து இனங்கான முடிகிறது. அதை வள்ளுவர் தமது குறளிலில் களவு, கற்பு வாழ்க்கையாகக் கைக்கொண்டுள்ளார்.

காதல்
மதிப்பிடல்
பிரிவு, வெருப்பு
மெய்மறத்தல்                                                           
உணர்வு வெளிப்படல்                                     
இன்பம்
உடல் தோற்றம் (நோய்)               
காத்திருத்தல்
கண்களின் அழகியல்                                                        
அழித்தல்
காமம்
நோக்குதல் (கல்வி)
குறிப்பறிதல்
கவர்ச்சி (பெண்,ஆடை )
ஆபரணங்கள்)
சிரிப்பு (குழந்தை)

தனிமனிதன், கண்களைப் பயன்படுத்தும் விதம்

பெண்கள் கண்ணுக்கு மையிடல்

பெண்கள் பொதுவாக குழந்தைகளுக்கு மையிடுவதோடு மட்டுமில்லாமல் தாங்களும் கண்களுக்கு மையிட்டுக் கொள்வர். மையிடுதல் களவுக் கற்பு வாழ்க்கையில் தனியொருவரின், சில குடும்பங்கள் சார்ந்தும், சமூகக் கட்டமைப்பு சார்ந்தும் சிலத் தனித்த அடையாளங்களை ஏற்படுத்திக் கொண்டனர். அது உடல் சார்ந்தும் அமையக் கூடின. வள்ளுவர் காலச் சூழல்களிலே பெண்கள் தங்களுடைய கண்களுக்கு மையிட்டு கொண்டதை, ‘உண்கண்’ (குறள்.1091), ‘கயலுண்கண்’ (குறள்.1212) என புனைந்துரைக்கிறார்.

பெண்கள் கண்ணுக்கு மையிடல் மட்டும் இல்லாமல் இருநோக்கு நிலைகளிலும் செயல் பட்டனர்.
“இருநோக் கிவள் உண்கண் உள்ள தொருநோக்கு
நோய் நோய்கொன் றந்நோய் மருந்து” (குறள்.1091).

ஆடை, ஆபரணங்கள்,  மையிடல் என்று தங்களைக்  களவு நிலையிலும் கற்பு நிலையிலும் கவர்தற் பொருட்டு உடலியல் அழகியலை அழகு படுத்தியுள்ள பெண்கள் களவு, கற்பு நீட்டித்தற் பொருட்டும் நோய், பசலையின் பொருட்டும் கண்களுக்கு மையிட்டனர் என்று நினைக்கத் தோன்றுகிறது.

“கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து  (குறள்.1127)

”எழுதுங்கால் கோல் கானாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட விடத்து” (குறள்.1285).

அவ்வாறு கண்களுக்கு மையிட்ட பெண்கள் எழுதுகின்ற கோல்குச்சிகளை வைத்து தடவி மையிட்டனர்.

கண்களும் மலர்களும்
வடிவம், நிறம் என்னும் இரண்டின் அடிப்படையில் மகளிரின் கண்களுக்கு மலர்களையும், அவற்றின் இதழ்களையும் ஒப்பிடுவது சங்க இலக்கிய மரபு. ஆயிதழ், நிரையிதழ், பயிலிதழ், பல்லிதழ் என இதழ்கள் கண்களுக்கு உமை ஆயின. கண்களுக்கு உவமையாக மலர் எனப் பொதுநிலையில் சுட்டுவதே பெருகிய வழக்கு. கருவிளை, குவளை, செங்கழுநீர், தாமரை, நீலம் நெய்தல் முதலிய மலர்களைக் கண்களுக்கு உவமையாக்கியது சிறப்பு வழக்காகும் என்று வாட்டமுற்ற மகளிரின் கண்களுக்கு கொன்றை,  நறவம்,  பித்திகம், பீர் முதலிய நீர்மலர்களை உவமைகளாக்கப்டுள்ளது. என்று கு.மோகனராசு. (ப.136). கூறுகிறார்.

திருக்குறளில் மலர் எனப் பொது நிலையிலும் குவளை எனச் சிறப்பு நிலையிலும் கண்களுக்கு மலர்களை உவமித்துள்ளார் வள்ளுவர்.
“மலரன்ன கண்ணாள்” (குறள்.1119, 1142)

“காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
முணிரை கண்ணொவ்வேம் என்று” (குறள்.1114)

பெண்களும் கண்களும்
பெண்கள் பார்க்கின்ற பார்வையிலே பிறரை ஈர்க்கும் தன்மையுடையவர்கள். அத்தகைய நிலையில் ஒரு பெண், ஆடவனைப் பார்க்கின்ற பார்வை அவனது உயிரைக் குடித்து விடும் நிலையில் அவளது கண்கள் பார்த்ததாக,

“கண்டார் உயிர உண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக் கமர்த்தனக் கண்”   (குறள்.1084) என்றும்,

உயிரைக் குடிக்கக் கூடிய எமனாக் காட்சி தந்துள்ள அப்பெண்ணின் கண்கள்
“கூற்றுமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கும் மூன்றும் உடைத்து”   (குறள்.1085) என்கிறார்.

அத்தகைய பெண்களின் கண்ணிமைப் புருவங்கள் வளைந்து காணப்படுவதோடு, பார்ப்பதற்கு கொடுமை வாய்ந்ததாகவும் இருந்தன.
“கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
செய்யல மன்இவள் கண்”   (குறள்.1086).

இவ்விரண்டு நிலையில் பேசப்பட்ட பெண்களின் கண்களைக் காணும் நிலையில் உடல், முகம் சார்ந்து தமது புலங்களை சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டுள்ளனர். இது ஒரு வகைப் பெண்களின் உடலியல்பு தோற்ற வெளிப்பாடாகும்.

காதல்
காதல் வயப்பட நிலையிலிருக்கும் ஒரு பெண் தன்னைப் பார்க்கும் ஆணை அவன் பார்க்கும்போது அவனைப் பாராமல் அவன் பார்க்காதபோது பின்பு திருட்டுத்தனமாகப் பார்ப்பதும் பெண்களின் இயல்பாகும்.

“கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது”   (குறள்.1092).

இச்செயல்பாடு ஒரு வகையில் பெண்களின் அடக்கமுடமையைக் வெளிக்காட்டுகிறது. தமிழ்ப் பண்பாட்டில் பெண்கள் ஆண்களை நேரடியாக முகம் பார்த்துப் நோக்குவது கிடையாது. மாறாக தலைவன் பார்க்காதபோது நேரடியாக முழுவதுமாகப் பார்த்து மகிழ்வாள். தலைவன் பார்க்கும் சூழலில் அப்பெண் நிலத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருப்பாள். இதனை,

“யான் நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல தகும்”    (குறள்.10)

என்கிறார் வள்ளுவர்.

மறுசாயலில் அப்பெண்கள் கடைக்கண் கொண்டே ஆண்களைப் பார்த்து வந்தனர்.

“……….. …….   ……….      ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.  (குறள்.1095)

காதல் நிலையிலிருக்கும் ஒரு பெண்னை ஆண் பார்க்கும்போது ஏற்றுக் கொள்ளாத எதிரியைப் போல் பார்ப்பதும், புறக்கணிப்பது போலப் புறக்கணிப்பதும் உண்மையான காதலரிடமே இருந்து வந்தன.

“ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள”    (குறள்.1199).

அவ்போது உண்மைக் காதலர்களது கண்கள் ஒன்று கூடி விட்டால்,  காதலை வெளிப்படையாகக் கூறவேண்டியதில்லை. கண்களே அவர்களது காதலை நிர்ணயம் செய்தது. இதனை,
“கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல”   (குறள்.1100). என்கிறார்.

பெண்கள் தண்ணுடைய காதலரை உள்ளத்தில் ஒரு முறை நினைத்து விட்டால் போதும், தனது கண்களிலிருந்து ஒருகாலும் மறக்க மாட்டார்கள். ஆகையால் காதலனை இனம் காணுவதற்கு பெண்கள் தங்களது கண்களையே அதிகம் நம்பியிருந்தனர்.
“கண்ணுள்ளின் போகார் இமைப்பின் படுவரார்
நுண்ணியர் எம்காத லவர்”   (குறள்.1126).

காதலன் தனது கண்களுக்குள் தன்வயப்பட்டு விட்டான் என்றால் அந்நிலையிலே தனது கண்களுக்கு இடும் மையினை வெறுத்து ஒதுக்கினர். மாறாக மையிட்டால் காதலனின் உருவம் தனது கண்களிலிருந்து மறைந்து விடக்கூடும். இதனை,
“ கண்உள்ளார் காத லவராக்க கண்ணும்
எழுதேம் கரப்பார்க்கு அறிந்து”    (குறள்.1127). என்றனர்.

காதல் வயப்பட்ட பெண்கள் இளமகளிர்கள் காதல் கொள்வதை அறிந்து  ஊரில் வாழ்வோர் பலரும் இளமகளிரின் காதுகளில் கேட்கும் படியாகவும், கண்களால் பார்க்கும் முகமாகவும் ஒருவருக்கொருவர் அலர் தூற்றிக் கொண்டனர். இதனை,
“யாம்கண்ணின் காண நகுப அறிவு இல்லார்
யாம்பட்ட தாம்படா வாறு”    (குறள்.1126)
என்கிறார் வள்ளுவர்.

ஊரார் அலர் தூற்றிக் கொண்டாலும் தலைவன் தலைவி கூடுவதற்கு உதவிகளும் செய்தனர்.
“மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர்எமக்கு ஈர்ந்து இவ்ஊர்”     (குறள்.1142).

கண்களினால் பெண்களுக்கு எற்படும் துன்பங்கள்
இன்பங்களுக்கு மட்டுமே பலவழிகளில் உதவி செய்த கண்கள் திருமணகாலமான கற்புக் காலத்திற்குப் பின்பு துன்பத்தையும் கண்ணாராக் காட்சிப்படுத்தின. களவு வாழ்க்கையில் நெருக்கமாக என்னுடன் இருந்த காதலன் கற்புக் காலத்திற்குப் பின் என்னை விட்டு பிரியக் கூடுவானோ என்ற எண்ணமும் தொல்குடி பெண்களிடத்தில் ஏற்பட்டன. இதனை,

“இன்கண் உடைத்து அவர் பார்வில் பிரிவுஅஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு”   (குறள்.1152). என்கிறார்.

பிரிந்து சென்று விடுவான் என்று எண்ணி தலைவன் செல்லும் வழி எல்லாம் தலைவியின் மனம் சென்றன. ஆனால், கண்கள் நின்ற நிலையிலே, அக்காட்சிகளை உள்வாங்கிக் கொண்டு அழுகிறது.
“உள்ளம்போன்று உள்வழிச் செலகிற்பின் வெள்ளநீர்
நீத்தல மன்னோ என் கண்”    (குறள்.1170).

இத்தகைய கண்தானே ஒரு காலத்தில் எனக்குத் தலைவனை அறிமுகப்படுத்தியது. இப்போது, காணவேண்டும் என்று ஏன் ஏங்குகிறது.
“கண்தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது”    (குறள்.1171).

என்கிறாள் தலைவி. அதே கண்கள் அவர் நல்லவர் என்று முன்பு அறிமுகப்படுத்தவும் செய்தது.
“தெரிந்து உணரா நோக்கிய உண்கண்” (குறள்.1172).  பின்பு சென்று காதலரை ஏற்றுக் கொண்டது. பின் எதற்கு அழுகிறது இக்கண். அவ்வாறு அழுது சந்தோசமாக வாழமுடியமால், கண்கள் நோய்வாய்ப் பட்டும் விட்டன. இதனால் கண்களில் கண்ணீர் கூட வற்றி விட்டன.

“பெயல் ஆற்றா நீர்உலந்த உண்கண் உயல் ஆற்றா
உய்வு இல்லநோய் என்கண் நிறுத்து”     (குறள்.1174)

என்று உரைக்கிறாள் தலைவி. இதனால் கண்கள் பசலையுற்று காமநோயை எய்திவிட்டது. தூக்கத்தையும் இழந்து துன்பத்தில் துவண்டு வாடுகின்றன.
“படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றாக்
காமநோய் செய்தஎன் கண்”     (குறள்.1175).
அத்தகைய கண்களை தலைவி சபிக்கிறாள்.

மன உணர்வால் கண்களை பழித்தல்
எனக்கு துன்பம் இழைத்த இக்கண்கள் அழுது அழுது நோய்வாய்ப் படட்டும். எனக்கு இனிமையாக இருக்கிறது என்கிறாள். இந்த கண்கள் தான் என்னுடைய காதலனைப் பார்க்க விழைந்தவை. அவருடன் கூடி இருக்குமாறு செய்தவை. அவருக்கு மிகவும் வேண்டிய கண்ணாகவும் கூட இருந்து வந்தன. அதனால் அக்கண்களிலுள்ள நீர் வற்றும் வரை அழுது புலம்பட்டும் என்கிறாள்.

“உழந்துஉழந்து உள்நீர் அறுக விழைந்து இழைந்து
வேண்டி யவள்க்கண்ட கண்”   (குறள்.1177).

அத்தோடு,  பொழுதினையும் பழிக்கிறாள். பகழும்,  இரவும் குடிமயங்குகின்ற மாலைப்பொழுதில் நீயும் ஒளி அற்று விட்டாயோ? என்றுரைக்கிறாள் தலைவி.
“புன்கண்ணை வாறி மருள்மாலை எம்கேள்போல
வன்கண்ண தோநின் துணை”    (குறள்.1122).

கண்களின் மீது இரக்கங்கொள்ளுதல்
தலைவிக்காக அவளது கண்கள் பிரிந்து சென்ற காதலர் வரும்வரை அவனது வரவை எதிர்நோக்கி தூங்காமல் விழித்திருக்கும். பிரிந்தவர் வந்த பின்பு அவருடன் முழுவதும் சேர்ந்து இருப்பதற்காகவும் விழித்திருக்கிறது.

“வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்”    (குறள்.1179).

திடிரென என்னுடைய மீன்போன்ற மையுண்ட கண்கள் தூங்கத் தொடங்கும் முன் கனவு வரும். கனவில் பிரிந்து சென்ற காதலரைக் காண்பேன். காரணத்தை எடுத்துச் சொல்வேன். “கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின்” (குறள்.1212). வினைமுடித்து வந்த தலைவன் தலைவியை ஆரத்தழுவிக் கொண்டான். அந்த அளவில் அவள் பசலைநோயுற்றாள். அப்போது கண்கள் கண்ணீரில் மிதக்கத் தொடங்கின.

“முயக்கிடைத் தண்வளி போழப் பசப்பு உற்ற
பேதை பெருமழைக் கண்”     (குறள்.1239).

இதனால் கண்கள் பசலை நோய் ஏற்படச் செய்து விட்டன. “கண்ணின் பசப்போ பருவரங் எய்தின்றே” (குறள்.1240). தலைவனுக்காகக் பசலையுற்று நோய்வாய்பட்ட தலைவியின் கண்கள் மனதைப் பார்த்து, தலைவனைக் கான்பதற்கு என் மனம் மட்டும் விரைந்து செல்கிறது. அதே நேரத்தில் என்இரு கண்களும் பார்க்க முடியாமல் தவிக்கின்றன. அதனை எடுத்துச் சென்றால் என்ன என்கிறாள்.

“கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவை என்னைத்
தின்னும் அவர்காணல் உற்று” (குறள்.1244).

என்று தன்னுடைய கண்ணுக்காக இரங்கி இரக்கமும் கொள்கிறாள்.

முடிவாக
ஆண், பெண் வாழ்க்கையில் கண் முதற்கண் கருவியா இருந்தது. கண்களால் காட்சிகளை மட்டும் அழகியல் படுத்த முடியும். அதை செயல் படுத்த வழிவகை செய்ய முடியுமே தவிர நிர்ணயமிக்கமுடியாது. மனதால் மட்டுமே அதனை நிர்ணயிக்க முடியும். கண்களால் ஏற்படும் இன்பங்களை ஏற்றுக்கொண்டு அதன் அழகியலை இன்பமாகப் படைத்த வள்ளுவர்,  கற்புக் காலத்தில் மனித மனவுணர்வுகளால் அக்கண்கள் படும் துன்பத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.

மாறாக சமூகம்,  குடும்பங்களில் கண்களுக்கு கொடுத்துள்ள மதிப்புகள்,  அவை செயல்பட்ட நிலையும் மதிக்கத்தக்கதாக இருந்துள்ளன. கற்புக்காலத்தில் தலைவி படும் உடல்சார்ந்த துன்பங்களில் கண்களைப் பழிப்பதும்,  அவ்வாறு துன்பம் விழைவித்த கண்களுக்கு காமநோய்,  பசலை, கண்ணீர் வற்றி வாடுதல் என்று மனஉணர்வினால் கண்ணைப் பழிப்பது மாறுபட்ட நிலையாகத் தோன்றினாலும் பின்பு அக்கண்ணிற்காக இரக்கம் கொள்ளுதல் நிலையில் வள்ளுவப் பெருந்தகையின் கவிதையாக்கம்,  அழகியலை வெளிக்காட்டுகிறது.

பார்வை நூல்கள்
1.    திருக்குறள் - மூலமும் உரையும்,  க.ப. அறவாணன்.
2.    திருக்குறள் - ஆராய்ச்சிப் பகுப்பு,  கி.வா. ஜகநாதன்.
3.    கு. மோகனராசு – திருக்குறளில் பழைய உரைகள.;
4.    கு. மோகனராசு – காமத்துப்பாலில் ஆய்வுரைகள்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R