எழுதிய ஆக்கத் திறமை உணர்ந்து
தன் கருத்திடுதல் பெரும் ஊக்குவிப்பு.
வியப்பு, மகிழ்வு, விசனம், ஆச்சரியமாய்
கருத்திடும் வரிகளை உள் வாங்குதல் கலை.
தன்னுணர்வைத் துணிந்து வெளிப்படையாய்
விமரிசனமாய் வடித்தல் இலகு செயலன்று.
புகழ்ந்து வரைவோர் நவரசம் பொங்க
ஆகா ஓகோவென அருமையாய் வடிக்கிறார்.
குறைகளைச் சுட்டுதல் ஒரு குணக்கேடென்று
நிறைகளை எழுதி நிழலுக்குள் மறைகிறார்.
ஆக்கபூர்வ கருத்தே விமரிசனமாகும். புகழ்ச்சியும்
வாழ்த்தலும் பொறுப்புடைய விமரிசனம் ஆகாது!
கருத்தூட்டம் கொடுத்து கருத்தூட்டம் பெறுதல்
விருப்பான, பொறுப்பான பரஸ்பரம் புரிந்துணர்வு.
கருத்திற் கொள்வோர் எத்தனை பேர்!
இங்கும் பெரும் சுயநலமே! சுயநலமே!
உண்மையின் பிழிவாக உள்ளதை எழுத
என்றும் மனம் போராடும் பாரமாகும்.
நெற்றிக் கண்;ணை திறந்தாலும் சற்றே
மன்னியுங்கள்! கூறவேண்டியதைக் கூறுகிறேன்.
9-3-2011.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.