
புதிய விடியல் பூக்கட்டும் இன்று
பழைய கவலைகள் மறையட்டும் நன்று
இனிய மாற்றங்கள் நிகழட்டும் ஒன்று
இளைய பாரதம் உயருமே அன்று
நம்பிக்கை விதைகள் மண்ணில் தூவுவோம்
நாளைய கனவை நெஞ்சில் ஏந்துவோம்
கடின உழைப்பை என்றும் போற்றுவோம்
வெற்றிச் சிகரம் விரைந்து ஏறுவோம்
அன்பு மழையில் அகிலம் நனையட்டும்
பண்பு மலர்கள் எங்கும் மலரட்டும்
வறுமை இருள்கள் ஓடி மறையட்டும்
வளமை பெருகி நாடும் ஒளிரட்டும்
இயற்கை அன்னை எழிலாய் வாழ்கவே
இனிய உறவுகள் என்றும் சூழ்கவே
அறிவியல் வளர்ச்சி ஆக்கம் தருகவே
அமைதி வழியில் உலகம் செல்கவே
இருபத்தி ஆறு இனிய காலம்
இதயம் பாடும் மகிழ்ச்சி ராகம்
தடைகள் தகர்க்கும் உறுதி வேண்டும்
தரணி புகழும் வெற்றி காண்போம்..
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









