முத்திப் போன வயதில்
பக்கம் வர விடாமல்
பாதைகளுக்கு முள்வேலிகள் போட்டு
தெருக் கூத்து ஆடும்
பாவப்பட்ட இரவு
பேரிசைச்சலுடன் ஓசை எழுப்பி
பாம்பாய் படம் எடுத்து
சூரியனைத் கொத்தித் தின்ன
விசம் கலந்த புன்னகையோடு
உதட்டைப் பிதிக்கி
முகத்தில் அப்பிப் பூசும்
மனிதனின் மாமிசங்கள்தான் நீ.
உன் உள்ளத்தி எரியும் தீயினால்
காலத்தை மறைத்து
பொய்களைச் சோடித்து
வதந்திகளைப் பரப்பி
உண்மையை ஒழித்து மிதித்து
நடந்து பார்க்க வேணுமென
நீ நடித்தால் குருட்டு வெளவால் போல்
பறந்து திரிந்து
எங்கேயோ ஓர் இடத்தில்
மின் கம்பத்தில் கருகிக் கிடப்பாய்
நீ நட்டு வைத்த அறுவடைகள் எல்லாம்
கருகிச் சாம்பலாகி
வாழ் நாள் முழுதும்
சூரியனை கண்டு கொள்ளாமல்
நல்லடக்கம் செய்யப்படும் புதைக்குழிக்குள்
பாவப்பட்ட முழு இரவாய் நீ இருப்பாய்
அதற்கு முன் உன் இருதயத்தை சுத்தம் செய்து கொள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.