தன்னைப் புகழ்ந்தாலே தாம்முன்னே யாகுவராம்
என்னைப் புகழ்ந்தீரே *ஏமுறவே – சொன்னவண்ணம்
எண்ணித் தமிழ்நூலின் ஏர்க்காலில் நான்பிடித்த
வண்ணம் இதுவே வனம் !
எல்லைக் கவிக்கடலே இப்பார் திலகமெனச்
சொல்லால் எனக்குரைத்த செந்தமிழீர் – முல்லையென
முத்தன்ன பட்டுடுத்தி மெல்லச் சிரிப்பெழுதி
வித்தென்று நன்றுரைத்தீர் மேவி !
அருமை அருமையென்று ஆணிப்பொன் னாக்கிப்
பெருமைகொள வைத்தீர் புவியில் - பொருதிவிழக்
கும்பிட்டுக் குட்டிக் கொடுமை அவைக்கழைக்;கும்
தம்பட்டம் ஈர்க்கா(து) தமிழ் !
பிறைநூறு காண்பதுபோல் பெய்வார் கவிக்குத்
தரைநூறு கண்டேன் தமிழே – அறைவாராய்
தம்புகலில் நின்று தறிக்கும் படியுலகக்
கம்புகளும் எற்கில்லைக் காண்!
வல்ல தமிழுலகே வார்ப்;புக் கவியழகே
சொல்லும் சரிதமெனச் சேருலகே – நல்லையென
கொட்டும் கவிக்கின்பம் கீடாகா தென்றவரே
எட்டும் இதுவென் இருப்பு !
பூடென்பார் நாரென்பார் பொய்தீர் ஒழுக்கத்துக்
காடென்பார் சொல்லும் கருத்தென்பார் – தேடலென
ஆடி அவர்க்கு அரங்குப் பிழைகாட்டிக்
கூடி அறுப்பாரும் கொள் !
யாசகம் கேட்டு இமயத்தில்; ஏறிவிட
வாசகம் வேண்டாமே வாக்குகண்டாய் - நாசமென
கூத்துரைப்பார் சொல்லும் குருக்குத்தி யானவர்க்கு
யாத்துப் பயனில்லை யாப்பு !
நற்றமிழில் பாடி நயக்கும் படியுலகம்
சொற்றமிழிற் பாடச் சிலம்புதரும் - கற்;றவர்க்கு
முத்தமிழிற் பாடி முழங்கிவரும் வெண்பாவின்
நற்தமிட்;கே ஈர்க்கும் நரம்பு !
அவ்வை உரைத்ததமிழ்; ஆர்த்த நிறைமொழிகள்
செவ்விதழில் மேவிச் சிறப்பெடுக்கும் - கொவ்வையிதழ்
பண்கொண்டு பாடி பரிணமிக்;கும் போதுதமிழ்
கண்கொண்டு பார்க்;கும் கனம் !
வாழ்க்கை அரசியல் மண்ணின் வதைஇயல்
சீழ்க்கை அடித்துச் சிதறுகையில் - வேட்கையாய்
என்வெண்பா கண்டேன் இதுவுங்கள் பாதமி;ட்டுப்
பொன்வெண்பா வைத்தேன் புவி !
உங்கள் விருப்பென்ன ஓர்வரியில் விள்ளுகையில்
தங்கம் எனக்குஇடும் இத்தாலே – பொங்குதமிழ்
வைத்தான் இவனென்று வண்ணமுகம் பார்த்துங்கள்
கைத்தூண் கொடுக்கும் கரும்பு !
* ஏமுறல் - இன்பம் அடைதல்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.