கடற்கரை
ஓ! பெண்ணே…
கடலலையாய் நான்
கடற்கரையாய் நீ
தினம் உன்னை
தொட்டுச் செல்லத்தான்
முடிகிறது என்னால்
கூட்டிச் செல்ல
முடியலையே……..!
கடற்கரை தென்றலே
காதலர் வருவதறிந்து
வீசுகிறாயோ தென்றலை
தேகம் சிலிர்சிலிர்க்க
நெஞ்சம் படபடக்க
உடல்கள் நடுநடுங்க
உறவுகள் கைகொடுக்கத்
தென்றலும் தேகம்வருட
இனிதாய் கழிகிறது
மாலையெனும் மகிழ்வு….
கருநீலக் கடலே ஏன்?
வானத்திற்கு உன் நிறத்தைத் தந்தாய்
அது உனக்கு நீரைத் தருவதினாலா?
நித்தம் உன்னைத் தொடுவதினாலா?
நானும் தான் நினைக்கிறேன்
உன்னை அள்ளி பருகவேண்டுமென்று
உவர்க்கிறாயே உரிஞ்ச முடியவில்லை
உவர்ப்பை விட்டுவிடு உஞ்சிவிடுகிறேன்
முழுமையாய் என்னுள் வந்துவிடு…..
காலையில் சூரியனை உமிழ்கிறாய்
மாலையில் சூரியனை விழுங்குகிறாய்
ஏன் இந்த மாற்றம்
சொல்லேன் எனக்கும்தான் கொஞ்சம்!
சூரியனின் சூடு தாங்காமல்
காலையில் உமிழ்கிறாய்
மாலையில் குளிர் தாங்காமல்
விழுங்குகிறாய்
இதுதானே உண்மை சொல்லேன்!
சந்திரனை மாலையில் உமிழ்கிறாய்
காலையில் விழுங்குகிறாய்
இதன் தேவைதான் என்ன?
எனக்கும்தான் சிறிது சொல்லேன்!
என் இதய கீதம்
கயல்விழிக் கண்ணைக் கொண்டு
கட்டினாலே என்னை இன்று
எட்டுத்திக்கில் ஓடும் நதி
இவள் இதயத்தியில் சங்கமிக்குதே!
பாயாத கங்கையாறும்
புரளாத பாலாறும்
இவள் புருவத்தில் பொங்கியெழுதே!
எழுதாத எழுத்தெல்லாம்
சொல்லாத சொல்லெல்லாம்
இவள் கண்களே காட்டிக் கொடுக்குதே!
படிக்காத கவியெல்லாம்
பாரெங்கும் தெரியாத மொழியெல்லாம்
இவள் விழிகள் படைக்குதே!
தித்திக்கும் கவிதைதனை
தினந்தோறும் படைக்கும் இவள்
எத்திக்கில் இருந்து வந்தவளோ!
என் உள்ளத்தின் எதிரி ஆனவளோ
இல்லை
என்னை ஆளப் பிறந்தவளோ!
கூரிய மூக்கைக் கொண்டு
கொடுஞ்சிறை விடுத்தவளே!
என்னை கொண்டு செல்ல வந்தாயோ?
அல்ல…
கொன்றுச் செல்ல வந்தாயோ!
செவ்வாய் இதழைக் கொண்டு
என் இதயத்தைக் கொன்றவளே!
எங்கிருந்தாய் இத்தனை நாளாய்!
என்னைத்தேடி ஏன் வந்தாய்!
இத்தனை நேராய்!
உள்ளம் தவிக்குதடி உன்னால்
எழுதாத கவிதையெல்லாம்
இசைப்பாடுதடி தன்னால்……!
உன் முகமென்ன
பிரம்மனின் தனித்துவமோ…!
முகமெல்லாம் இத்தனைச் சாரல்
நீ முத்துக்குளிக்க
ஏன் இன்னும் விழாமலிருக்கு தூரல் …..!
காதல்
குறிஞ்சி மலர்வது பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை
காதல் மலர்வதோ வாழ்வில் ஒருமுறை
என் நெஞ்சத்தில் காதல்
என் மஞ்சத்தில் நீ
கனவினில் நீயிருக்க
காதல் சொல்ல நானிருக்க
மனது மட்டும் தடுமாறுகிறதே!
மறுத்துவிட்டால் மனம் என்னவாகும்?
மனதுக்கே புரியவில்லை…….
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.