எழுத்தோடுகிறது.
வாருங்கோ... வாருங்கோ.....
வாங்கிட்டுப் போங்கோ..
மலிவு... மலிவு....
நுவரெலியா.. உருளைக் கிழங்கு....
தம்புள்ள.. கிழங்கும் இருக்கு..
சந்தை வரிசையில்
ஆளுக்கு ஒவ்வொரு விலை
வணிகத்தில் வன்முறை நிகழ்வது
படமாக்கப்படுகிறது.
பெரு மூச்சுக்கு அவிழ்ந்து நகர்கிறது
காட்சி.
காட்சி ஒன்றுக்குள்
வில்லன் இல்லாமல் ஒளிப்பதிவு நிகழ்கிறது.
வில்லனுக்கு 'மேக்கப்' போட்டு முடியவில்லை.
அடுத்த கட்டம்
நான் கதாநாயகனாக நடிக்கப் போகிறேன்.
நசித்துப் பார்க்காத தக்காளிப் பழங்களையும்
கிலுக்கிப் பார்க்காத தேங்காய்களையும்
தொட்டும்
விரித்தும்
புரட்டியும் பார்க்காத
வியாபாரி யாரிருப்பார்.?
சமூகத்தின் இடைவெளியில்
காய்கறி விற்கும்
ஒற்றை மனிதனாய்
தூரத்தே காண்கிறேன்
ஒருவரை.
இன்னும் ஓரிரு நாட்களுக்குள்
ஊரடங்கு தளர்த்தும் போது
நானும் ஒரு வில்லனுமாக
ஆரோக்கிய சந்தையில் சண்டைக் கட்டம்
படமாக்கப்படும்.
படத்தின் பெயர்
வணிக வன்முறை.
படப்பிடிப்பு கொரோனா.
எதைச் சொல்ல வருகிறேன்
என்பது புரிந்திருக்கும் அல்லவா
ரசிகர்களே.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.