பகலவன் மறைந்து
சில மணி கடந்தும்
அலுவலக வேலையில்
நாளைக்குள் பணியை
நிறைவு செய்யும்
முனைப்பில்
கோப்புகளுக்கிடையே
புதைந்தபடி....
செல்லிடப்பேசி
அழைப்பு மணியில்
அரை மணிக்கு ஒரு முறை
அப்பா எப்ப வருவீங்க?
எனும் பிஞ்சு மொழிக்கும்
விரைவாக வந்து விடுகிறேன்
எனும் பொய்யான பதில்
கூறியவாறே
தொடர்கிறேன் பணியை .....
இரை தேடித் திரியும் பறவை
கூட்டுக்குத் திரும்ப
எத்தனிப்பது போல்
வீட்டிற்குத் திரும்புகிறேன்
நான்........
முகத்தில் ஏக்கத்தோட
டெடிபியரை
அணைத்து உறங்குகிறாள்
மகள் ......
காலங்கள் கடந்த பிறகே
மகிழ்வான பல தருணங்களை
இழந்ததை
உணர்கிறேன்….
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.