புதிய தலைமுறையை உருவாக்குவோம்
ஓ இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!
புது வருடம் பிறக்கிறது
புது புது சிந்தனைகளோடு
போராட்ட குணங்களோடு
சமூக விஞ்ஞான உணர்வுகளோடு
புது உலகத்தைப் படைத்திடுவோம்
வாருங்கள் இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!
தன்னம்பிக்கையும் குறிக்கோளும்
நமக்கு இருந்தால் - இந்த
தரணியை நாம் வெல்லலாம்.
சமூக அக்கறையோடு போரிடலாம்
சகமக்களின் மதிப்பை நாம்பெறலாம்
ஏழை எளியவர்க்குத் தொண்டு செய்வோம்
பேரின்ப வாழ்க்கையை நாம் தருவோம்
வாருங்கள் இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!
சாதி மதமற்ற சமூகம் செய்வோம்
சமத்துவ வாழ்வை நாம் பெருவோம்
முதலாளித்துவத்தை வேர் அறுப்போம்
ஊழலற்ற சமுகத்தை நாம் உருவாக்குவோம்
விவசாயத்தைக் காத்திடுவோம்
நல்லுலகில் வாழ வழிச்செய்வோம்
வாருங்கள் இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!
தீவிரவாதத்தை வேர் அறுப்போம்
இந்த தேசத்தை நாம் காப்போம்
தமிழின பண்பாட்டை கட்டிக் காப்போம்
தமிழ் விடுதலையடைய நாம் பாடுபடுவோம்
புது சரித்திர சமூகத்தை நாம் படைப்போம்
புத்துலகம் அடைய நாம் விறைவோம்
இரண்டாயிரத்து இருபதை நமதாக்குவோம்;
வாருங்கள் இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.