"இரவு முழுக்க
வீட்டின்
முன்னறையில்
விளக்கெரிய
குறுக்கும்
நெடுக்குமாக
உலாத்திக்
கொண்டிருந்த
அப்பாவின்
கோபம்
குளிர்ந்திருந்தது.....
அதே அறையில்
கிடத்தி
வைக்கப்பட்டிருந்த
அப்பாவின்
உடலும்
குளர்ந்திருக்க
ஓயாமல்
எரிந்து கொண்டே
இருக்கின்றது
அவ்வறையின்
குண்டு பல்பும்
அக்கா
எழுதிச் சென்ற
கடிதமும்......"
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.