இரவுக் கட்டியை விழிநீரிட்டு இழைத்தாலும்
அடுத்த நாளும் அடரிருட்டோடு கிடக்க
மிச்சத் துளிகளால் குழைத்தப் பின்னும்
விடாது தொடர்ந்த கருமையை
துடைத்தழிக்க எதுவுமில்லாத
வெறுமையை நிரப்பும்
ஞாபக குவியலை
கிளறித் தேடியதில்
கிழியாத சதையிலிருந்து
ஒழுகிய பிசுப்பிசுப்பை
பரப்பரவென தேய்த்துக் கொண்டதில்
சிவந்துத் தேயும் வெளுப்பின்
பாதம் பற்றிக் கதறினாலும்
கருத்தப் போர்வையின்
வண்ண திட்டுக்களில்
கருவிழி பிழிசலை தொட்டுத் தடவும்
தூரிகையொடிக்க மனமற்றே நான்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.