நடந்து சென்று கொண்டிருந்தோம்
இருவருமே அவரவர் எண்ண ஓட்டத்தின் பாதையில்
வலப்புறம், இடப்புறம் என்று மாறிமாறி
வயிறு சற்று கணத்துப் பசிக்கத் தொடங்கியது.
'நண்பா பசிக்குதுடா" என்றேன்
'உம்" என்றான். உம் வலுவாயில்லாதிருந்தது.
அடிவயிற்றை அவ்வப்போது வருடியபடி நடக்கத் தொடங்கினேன்.
'சற்று பொறு நண்பா" என்றான்
முடியாதென்று வலுவிழந்த குரலைக் காட்டினேன்
பரிதாப்பட்டு 'இந்தா ரெண்டு இழுப்பு இழு
பசி புகையாய்ப் போயிடும்" என்றான்,
வட்ட வட்டமாய்ப் பசி வானத்தை நோக்கி
சென்று கொண்டிருந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.