டிசம்பர் மாதத்து
வீட்டு முற்றங்கள்
கனக்கத் துவங்கின
மாலை நான்கிற்கே
கவிகின்ற காரிருள்
எடை தாங்காமல் .. ...
இலைகள் உருவி விடப்பட்ட
மரங்கள் நிர்வாணமாய்த் தெருவோரத்தில்
சின்னஞ்சிறு மின்விளக்கு போர்த்திய
கிறித்துவ மரமும் மான் பொம்மைகளும்
கதகதப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக....
இருளில் மூழ்கிய யாவும்
குபுகுபுவென்று குமிழ் விடுகின்றன
பதற்றத்துடன் இனமறியா அச்சத்தை.....
கை கொடுத்து இழுத்து விட
வந்து விடு வசந்தமே விரைவாக
- சித்ரா - ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ) -