”வெற்றிக்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள்”
தத்தமது மனதின் எண்ணிறந்த வன்புணர்வுகள்
படுகொலைகளையெல்லாம்
வசதியாய் புறமொதுக்கிவிட்டு
ஒவ்வொரு வார்த்தையையும் அதற்கான தனிப்பொருளை
சொற்களிடையே தூவிவைத்துக்
கண்ணால் கூடுதல் குறிப்புணர்த்தி
யுரைக்கிறார்கள்.
BIGG BOSS போட்டியில் வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கும் இருவர்.
(தியாகசீலர்களோ, தீர்க்கதரிசிகளோ அல்லர்.)
"வெற்றிக்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள்."
வெறும் பெண்ணின் உடலாக மட்டும் அது இருந்தவரை
பிரச்னையேதுமில்லை ‘ஆரவ்’களுக்கும் ‘சினேகன்களுக்கும்
அவரனைய அனேகருக்கும்…..
அது படிப்படியே பெருகி
அச்சுறுத்தும் அலைகடலாகி
அணையாச் சுடரொன்றை பிடித்திருக்கும்
உடல் மீறிய உடலாய்
அவர்களெதிரில் விசுவரூபமெடுத்தபோது
அங்கீகரிக்கலாகாமல் அவதூறுகளைக்
கிசுகிசுக்கத்தான் முடிகிறது.
"வெற்றிக்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள்."
(*Bigg Boss இல் பங்கேற்ற சுஜா வருணிக்கு)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.