இன்றென்
அதிகாலையினெழில்
தோட்டத்து மல்லிகையின்
இதழ் விரிப்பினால் சிறிது
கூடிற்றென்பேன்.
காலை தன் இன்னொலிகளுடன்
கலந்து கிடந்தது.
கொட்டிக் கிடந்தது பேரின்பமங்கே.
நன்றி.
இதயத்தோட்டத்தில் இதழ் விரிக்கும்
அதிகாலை மல்லிகையே!
உன் இதழ்கள் விரியட்டும்.
நறுமணத்தை அள்ளி
வீசட்டும்.
சூடாவிடினும் உன்
இதழ் விரிப்பில்தான்
இக்காலைப்பொழுது
எத்துணை எழிலுறுகின்றது.
'காலவெளி' சுமந்துவரும்
நறுமணத்திலோ
கொள்ளை இன்பம.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.