1. காதல் அணுக்கவிதைகள்
உன்
பார்வைக்கு அஞ்சி
நீ அருகில் வரும்போது
மறு தெருவுக்கு போகிறேன்.
உன்னை நான் நேரில்
ரசிப்பதை விட கவிதையில்
ரசிப்பதே அழகாய் இருகிறாய்.
ஒவ்வொருவனுக்கும்
அவனவன் காதல் தான்
ஆயுள் பாசக்கயிறு.
இதயம் மட்டும்
வெளியில் இருந்திருந்தால்
நிச்சயம் நீ அழுதிருப்பாய்
என்னை ஏற்றிருப்பாய்.
பெண்ணை பற்றி நான்
கவிதை எழுதியதில்லை
உன்னை பற்றியே கவிதை
எழுதுகிறேன்.
2. உயிரே .! உனக்காய்..! மூன்று வரிகள்....!
இதயத்தில் குடியிருப்பவளே....
மெதுவாக மூச்சு விடுகிறேன் .....
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது....!
கல்லை செதுக்கினேன் உன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!
காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும்....
கவிதை எழுது உலகம் சுத்தமாகும்......
இரண்டையும் செய்பவன் ஞானி.....!
உலக போதையிலேயே கொடூரம்.......
உன் போதை கண் தான் -இன்னும்.......
போதையில் இருந்து மீளவில்லை........!
சிவன் கண் திறந்தார் நக்கீரன் எரிந்தார்
நீ கண் திறந்தாய் நான் எரிந்தேன்
நீ எப்போது என்னை உயிர்ப்பிப்பாய்.......?
நீ வேறு நான் வேறு இல்லை
வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை
உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை
நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால்
வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன்
இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன்
உன்னை மறக்கும் இதயம் வேண்டும்
என்னை மறக்கும் இதயம் வேண்டும்
மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும்
பெண்ணை புரிந்து கொள்ளவது இன்பம்
புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம்
காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்
சின்ன சின்ன சண்டை போட்டு ஒத்திகை
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
பயிற்ற பட்டிருப்பேன் வலியில் இருந்து மீள......!
நீ வானவில் போல் அழகாகவும் இருக்கிறாய்
அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய்
பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.