நட்சத்திரங்கள், கோள்கள், மனிதனியக்கும் கருவிகள்
தட்டாமலையாகச் சுற்றும் பேரண்டப் பெருவெளி.
வெட்ட வெளி, ஆகாயம் விதானமென்றும்
வட்டம் சுற்றும் காற்று மண்டலமுமிணைந்தது.
அறிவியலிற்கு எட்டாத மன எல்லைகள்
முறிவற்று விரிக்கும் பால் வெளி பூமியும்
தெறிக்கும் ஒளியீயும் சூரியனும் தவிர
பிறிதொரு எல்லையுண்டோ பேரண்டப் பெருவெளிக்கு!
நிறை விசை, அலை குன்றிய விசை,
மின்காந்த விசை, ஈர்ப்பு விசைகளடங்கிது,
அணு, அணுத்துகள்களால் உருவான கோள்கள்
பிரபஞ்சப் பகுதிகளாகுமாம் அறிவியற் கூற்று.
ஆழம், பாரம் அறியாதது, முடிவு
ஆரம்பம் அறிய முடியாதது ஆகாயம்.
எம் மனமும் அது போல
தெய்வ நம்பிக்கையில் புவியில் சுழருகிறோம்.
அறிவியல் வெற்றியால் மனிதன் நிலவில்
குறியாகக் காலடி வைத்தின்னும் ஆராய்கிறான்.
காற்று மண்டலம் போர்த்திய வெளி
சூலுடை மேகங்களும் பேரண்டப் பெருவெளியாகிறது.
இஸ்லாமியத்தில் பிரபஞ்சத் தகவல்கள் அதிசயம்.
சூரியன் பூமி, நிலா நட்சத்திரங்களே
பிரபஞ்சமா! அறிய முடியாத அதிசயம்.
ஆய்வுகள் தொடரும் ஆழ் வெளியிது
29-5-2017.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.