1. விவசாயம்
விவசாயம் வீழ்ந்து போச்சு
எங்க பொழுப்பும் காய்ந்து போச்சு
ஐநா சபை நீயும் கூட்டி
அய்யனாரே காப்பாத்து
விவசாயம் வீழ்ந்து போச்சு
எங்க குடும்பம் சாய்ந்து போச்சு
ஐநா சபை நீயும் கூட்டி
அய்யனாரே காப்பாத்து
கரிசல் காட்டு நிலமும் கூட
வெடிச்சே போச்சி
சோலகொள்ளை பொம்ம இப்போ
ஒடைஞ்சே போச்சி
விவசாயி விடியலத்தான்
தேடி தேடி ஒடிவந்தான்
அது கிடைக்காம
படையலுக்கு உசுர விட்டான்
தண்ணியத்தான் தேடி தேடி
ஓடி வந்தோம் நாங்க
அது கெடைக்காம விவசாயம்
காஞ்சி போச்சி தாங்க
வெளிநாட்டுகாரன் தண்ணிய விக்க
பார்த்து நின்னோம் நாம
அரசாங்கம் கண்டுக்கல
நம் நாட்டின் முதுகெலும்பா தாங்க
அடுக்கடுக்கா வீழ்ந்து போச்சு எங்க உசிருதாங்க
விவசாயம் காப்பாத்த கையகொடுக்கனும் நீங்க
இளைஞா நீ எங்களையும் திரும்பிபார்க்க வேணும்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில
பேசமறுப்பதேனோ
இயற்க்கை வளம் நாம காக்க
போராட வேணும்
நெடுவாசல் மக்கள் குறை கேட்க வேனும் நீங்க
ஊடகத்தில எங்கள பாத்து ரசித்தெல்லாம் போதும்
கடனனுக்காக நாங்க உசிர விட்டதெல்லாம் போதும்
ஒவ்வொரு வேளை சாப்பாட்டுல
எங்க உழைப்ப ருசிக்கிறிங்க.
விவசாயம் வீழ்ந்து போச்சு
எங்க குடும்பம் சாய்ந்து போச்சு
ஐநா சபை நீயும் கூட்டி
அய்யனாரே காப்பாத்து
2. தமிழரின் தலைநிமிர்வு
ஈரநெஞ்சங்கள் சிதறிய
சின்னங்கள் தமிழர்
குவியலாய் மடிந்த கதை
குருதியின் ஈரம்காயாமல்
ஈழவிடுதலை கண்களில்..
விடுதலை நோக்கிய வாழ்வில்
விதவையை கண்ட என் தமிழ்
கூண்டில் அடைக்கப்பட்டு
சித்தரவதை கண்டு
சுதந்திரம் தேடிய விழிகள் அழுது நின்றன..
பெண்களை வல்லுறவு செய்த
ஓநாய்கள் சிறுமிகளையும்
சிதைத்த சில நேரங்கள்
தமிழினம் தாங்கிய மரணங்கள்
தலைவன் மண்ணில் வீழ்ந்த
தருணங்கள்..
நான் மறவேன்
விடியலும் விடுதலையும்
தமிழர் உணர்வாய்
ஒவ்வொரு பொழுதும் விடிந்து விட
எம் தமிழரின் தலைநிமிர்வு
வீரம் கொண்ட நெஞ்சம்
வெடிக்கும் எரிமலை..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.