உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....
உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....
ஊதியம் வாழப் போதுமானதுமில்லை ....
உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்....!
களைப்பில் உழைப்பின் முதுகு ....
கேள்விக்குறியாய் வளைந்தது ....
சலிப்பும், விரக்தியும் மிகவே.
அடக்கப்பட்டனர், ஒடுக்கபட்டனர் ....
எதிர்த்தெழுந்தார் உழைப்பாளர் இந்நாளில்.
தூங்கியவர் விழித்து கொண்டார்.
திரண்டெழுந்தனர் தம் பலம் திரட்டி....
ஆயிரம் ஆயிரம் தோள்கள்.
நிமிர்ந்தன கைகள் உயர்ந்தன.
வெடித்தது தொழிலாளர் போராட்டம் .....!
உக்கிரமானது தொழிலாளர் உலகப்புரட்சி......
உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....
உழைக்கும் நேரம் எட்டுமணியாக .....
உரிமையைப் போராடி வென்றனர்.....!
போராடி வென்ற தொழிலாளர் தினம் .....
பேச்சளவில் இன்று
சட்டத்திலும் ... சிகப்பு வர்ண கொடிகளிலும் ...
உளத்தால் உழைப்பின் உயர்வினைப்
உழைப்பின் புனிதத்தினை..
உணரும் நாள் என்று உதயமாகும்?
அன்றே உண்மைத் தொழிலாளர்தம்
உழைப்பாளர் தினமாகும்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.