இவ்வுலகம் இனிது
எண்ணம் போல உயர்ந்திருக்கும் வான் இனிது
ஒளிதந்து வாழ்வளிக்கும் கதிர் இனிது
நிலத்திற்கு வளமை சேர்க்கும் மழை இனிது
விதைத்ததை செழுமை படுத்தும் நிலம் இனிது
வியர்வைக்கு இதம் அளிக்கும் காற்று இனிது
உலகத்தார்க்கு உணவளிக்கும்
உழவர்களின் நற்பண்பு இனிது
உழவுக்கு உயிர் ஊட்டும்
உழைப்பிற்கு தோள் கொடுக்கும்
உற்ற கால்நடைகளின் கனிவு இனிது
இயற்கைக்கும் இனிய உழவர்க்கும்
நன்றி மறவாது
நாம் கொண்டாடும் பொங்கல் இனிது
பால்போல வெள்ளை உள்ளம்கொண்ட
மக்களின் குணம் இனிது
யாழ் இனிது குழல் இனிது
பொங்கலோ பொங்கல் என்று
குதுகலமாய் பாடும் மழலைகளின்
குரல் இனிது
ஆம்…… இவ்வுலகம் இனிது
பொங்கல் பொங்கட்டும்
வாழ்வில்
நன்மைகள் தங்கட்டும்…
இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.