வருடம் தொடங்கிடும்
புதிய காலையில் வாழ்க்கையில்
நம்பிக்கை தோன்றும்..
அந்த நொடியில் துளிர்த்திடும்
கனவு உயிர்பெற
இறையிடம் நெஞ்சம் கேட்கும்..
விலக முனைந்திடும்
கரிய நினைவுகள் உடனடி
வீழ்ந்திங்கு மாயும்..
அருவி போலொரு இனிய ஓசையை
ஆவலாய் இதயம் கேட்கும்..
கவலை மறந்திட
இனிமை துளிர்த்திட ஆவல்கள்
எல்லை மீறும்
புதிய வருடத்தில் புதிய விதி செய்ய
புதிய தைரியம் தோன்றும்
இனிய காலையில்
இனிய நினைவினில் அலுவல்கள்
தொடர்ந்திடும் நேரம்
பனியை ஏந்திய மலரைப் போலொரு
புதிய வருடமும் தோன்றும்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
*கவிஞர்: - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா (இலங்கை) -