1) அவள்
அறையில் கிடக்கும் எல்லாவற்றிலும் உன் உழைப்பு இருக்கிறது
ஆனால்
அங்கு இருக்கும் உன் தனிமையில் என் உழைப்பு இருக்கிறது தெரியுமா என்று உதட்டுக்கு சாயம் பூசினாள்.
இப்படியும் ஒரு ஆள் வேண்டும்.
2) மறக்காமல் கேள்
திருவள்ளுவரை கடல் நடுவே நிற்க வைத்தவனை பார்த்தால் கேள்
"எவ்வளவு காலமாக திருவள்ளுவர் நிற்பார். ஒரு நாற்காலி போட்டிருக்கலாமே " என.
3) எதிர்பார்ப்போம்
என்னிடம் எதையோ எதிர்பார்க்கிறீர்கள் என தெரிகிறது ஆனால்
நீங்கள் நினைக்கும் ஆள் நான் இல்லை.
எதிர்பார்ப்பதே என் மூச்சு.
நானும் உங்களைப் போலத்தான் .
காசா பணமா எதிர்பார்ப்போம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
4) கவிதையை பற்றி
எந்த குறிக்கோளும் இல்லை
எந்த ஆசையும் இல்லை
எந்த கட்டளையும் இல்லை
எந்த அர்த்தமும் இல்லை
என்னவென்றே தெரியாது
எப்படியென்றே தெரியாது
எங்குமே இல்லை
எந்த எதுவும் இல்லை
எந்த இதுவும் இல்லை
எதுவுமே இல்லை
இல்லையை மீறாத இல்லை என்பதை மீறிய ஏதோவொன்று.
இதை சொல்வது நீயும் இல்லை நானும் இல்லை இல்லை தான்.
5) நம்பிக்கையில்லை
நம்பிக்கையற்று போயிருந்தேன்
ஏனெனில்
காட்சிகள் மாயம் போல தோன்றி மறைகின்றன.
மேலும்
போல போல என்பது காலங்கள் கடக்க கடக்க பொய் ஆகி போகின்றன.
தடாலடியாக பொய் உண்மையாகின்றன.
நம்பிக்கையற்று போயிருந்தேன் என்பதும் ஒரு நம்பிக்கை தானே.
அதனால் நம்பிக்கையற்று போயிருந்தேன்
என்பதை சந்தேகத்துடன் அணுகினேன் என்பினும் நம்பிக்கையில்லை.\
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.