உந்தன் கடனுக்காக
அடகுவைக்கப்பட்ட
அநாதைப்பெண்ணவள்
ஆயிரம் கேள்விகள் கேட்பேன்
ஒரு பதிலேனும்
சொல்லிவிடு!
பெத்தவள் பாவத்துக்கு
பாவையவளை
பலியாக்கியது நியாயமா?
சிரிப்பைத்தொலைத்த
மழழைப்பருவம்
ஏக்கம் சுமந்த பள்ளிப்பருவம்
கனவைத்தொலைத்த
கன்னிப்பருவம்
எல்லாப்பருவங்களின்
ஏக்கங்களை மட்டும்
எனக்குச் சீதனமாக்கி
என்னைத் தாரைவார்த்த
நாட்கள்
இன்னும் நெருஞ்சிமுள்ளாய்
குத்துகிறது அம்மா
வந்த தேசத்தின்
வழியறியாத
பேதையாக
பித்துப்பிடித்தவள்
என்ற பட்டத்துடன்
பட்டதாரியான நான்
பதைபதைத்த நாட்கள்
ஆயுளுக்கும் மாறாத
கொடுமையம்மா
எனக்குள் அழுத
நாட்கள்
ஏக்கங்களை புதைத்த
நாட்கள்
விருப்புக்களை வெறுத்த
நாட்கள்
வெறுப்புக்களை சுமந்த
நாட்கள்
வெறுமையை இரசிக்கும்
நாட்கள்
எத்தனையெத்தனை
நாட்கள்
எல்லாவற்றையும்
எனக்குத் தாரைவார்த்த
நீ
தாயாக என்னை
ஏன்
தத்துக்கொடுத்தாய்?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.