என் வீட்டில் இடி விழுந்த அறுபதாம் தினத்தன்று...
- பேராசிரியர் கோபன் மகாதேவா -
படுக்கையதன் தலைப்பக்கம் பக்குவமாய் மடிந்தமர்ந்து
அடுத்த என் பணியாக எதைச் செயலாம் என எண்ண...
ஒன்றுமே செய்வதற்குச் சிறு-துகள்போல் வேலை தனும்
என்மனதில் உதிக்காமல் வெண்திரையே தோன்றியது.
வெண்திரையாய்த் தோன்றியது மெல்லமெல்ல மாறியது.
செந்நிறமாய் மாறிய அவ் வெண்திரையின் நடுவினிலே
கண்இரண்டும் நீர் வடிந்தää கீழ்நோக்கும் விழிகளுடன்
அண்மையிலே எமைப் பிரிந்த அன்புருவம் தோன்றியது.
அன்புருவம் தோன்றி வந்து அமைதியுடன் வினவியது:
என்னப்பா செய்யிறியள்? ஏன் அப்பா மெலியிறியள்?
என்உணவு போல்உமக்கு எவரும்இப்போ தர இலையோ?
'தின்பதற்காய் வாழ்வதில்லை' எனும் உமது கோட்பாடோ??
கோட்பாடாய் வாழ்ந்த என்தன் கரும நிலை மாறியதால்
நாட்டமில்லை எதிலையுமே. நன்மைதின்மை மறைந்தாச்சு.
ஆட்டமெலாம் அடங்கிநின்று ஆர்வமெலாம் மடிந்த நிலை.
தேட்டமும் ஒடுங்கி வரத் தெரிந்தது எல்லாம் மறக்கும் நிலை.
தெரிந்ததெல்லாம் தேன் போலத் தித்தித்த காலமதன்
பிரிந்து சென்ற பிரியாளின் பிரியமுகம் எனை நோக்கி
விரிந்த சிறு புன்னகையால் விழிப்புணர்வாம் விளக்கேற்றி:
அரியதையே செய்திடுவீர்ää அன்றெனக்குச் சொன்னதுபோல்...
சொன்னவற்றைச் செய்வதிலே சு10ரர் எனும் சரித்திரத்தீர்!
என்னைஉம் மனத்துள் புதைத்துää எதற்குமே பதறாமல்
அன்றன்று நன்றென்றுஉம் உள்மனத்தார் சொல்வதனை
இன்முகத் தொண்டாய்ச் செய்வீர் என் இதய நாயகரே!
என்று சொல்லி மறைந்த என் இனியாளை என்றும் இனி
என்மனத்துள் அடக்கிவைத்துää இன்றிருந்துää இயற்கைவழி
உன்மத்த உந்துதலால்ää எஞ்சி உள்ள சக்தியுடன்
அன்றுபோல் நிறைவு தரும் அர்ப்பணிப்புத் தேடிடுவேன்!! “
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
உருமாறும் வசவுகள் - கவிதை
- மு.கோபி சரபோஜி, இராமநாதபுரம். -
ப
பத்தாண்டாகியும்
பாலூட்ட வக்கத்தவளென
சபித்தவர்களின் வசவுகள்
மலரா பூக்களாய்
மலர்ந்த மலர்களாய்
உவந்த வார்த்தைகளாய்
உறை நீங்கா வாழ்த்துகளாய்
வருடந்தோறும் உருமாறி
முகம் பார்க்க வந்து விடுகிறது
எந்தவித குற்றவுணர்வுமின்றி
என் திருமண தினத்தில்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கூடங்குளம்!
-சாமிநாதன் -
என் கர்ப்பிணித் தாய்
அணு சாம்பல் தின்கிறாள்
கூடங்குளத்தில் ....!
என் மூளையில் கதிரியக்கம்.
வெட்டி தொங்கவிடப்பட்ட
ஆட்டின் சதை போல துடிக்கிறது
பின் வரும் சந்ததியை நினைத்து.
உலையின் குறி
கடல் வெளியெங்கும்
நீள்கிறது.......!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வெளிநாட்டார் நாடாளுமன்றம்
- வே.ம.அருச்சுணன் - மலேசியா -
இன்றைய நடப்புகள்
நாளைய வரலாறு அல்லவா
மனத்துள் பல்வேறு பிம்பங்கள்
வியப்பில் நிழலாடுகின்றன சில
செவிகளுக்குத் தேனாகவும் பல
குளவிகளாய் காதில் புதுமனைப் புகுவிழாவை
விமரிசையாகவும் நடத்துகின்றன..........!
அருவியாய்த் தவழ்ந்த பூமி
அன்னியரின் படையெடுப்பால்
தடமாறிப் போனதேனோ......?
மூவினமும் சேர்ந்த பெற்ற
சுதந்திரத்தை நடுவீதியில்
தாரைவார்த்தல் முறையா……?
மலாய் மக்களுக்குச் சிறப்புவழி
வானுர்ந்த சொகுசு வாழ்வு
சீனருக்குத் தனிவழி
எதிலும் போதாதென்ற சுயநலப்போக்கு
தமிழருக்கு மட்டும் வாழ்வே மாயம்தானா ?
என்ன கொடுமை இது
பிரமனும் நம்மை சபித்துவிட்டானா
ஆள்பார்த்து ஒதுக்கிவிட்டானா......?
ஆதியிலே வந்தகுடி
காட்டையும் மேட்டையும் அழித்து
தன்னையும் இலட்சம் இலட்சமாய்
அழித்துக் கொண்ட தமிழனுக்குத் திருவோடு
நிரந்திரமாய் வாழ்வதோ தெருவோடு........!
கள்ளக்குடியினர் இங்கே தொழில் மேதை
அனுமதிச் சீட்டில் அரசின் கம்பீரமுத்திரை
துணிக்கடை,பழக்கடை,மளிகைக்கடை,மதுக்கடை இன்னும்
கணக்கில்லா கடைகளெல்லாம் அன்னியர் மயமாகி
வியாபாரம் தூள்பறக்குது
வெற்றிக் களிப்பு ஓங்காரமிடுகிறது
தட்டிக்கேட்க ஆளில்லை
தமிழனுக்கோ நாதியில்லை.........!
வயிற்றுப்பாட்டுக்குத் தெருவோரமாய்
வெற்றிலைக் கடைவிரிப்புக்கு
பண்டராயா அதிரடி அனுமதி மறுப்பு
கேள்வி கேட்ட குமாருக்குப் பல்லுடைப்பு
ஜாமினில் எடுக்க
கர்பாலுக்கு அவசர அழைப்பு
நாடாளுமன்றத்தில் தீர்மானம்
குலசேகரன் தலைமையில்
பலம் பொருந்தியக் குழுவமைப்பு.....!
வெளிநாட்டார் தர்பார்
விரைவில் முடியட்டும் நாட்டில்
மூவினத்தின் மாண்பு நாடெல்லாம்
மீண்டும் ஜொலிக்கட்டும் ஒன்றுபட்ட
மலேசியர்கள் நாமென்றே கைகோர்த்திடுவோம்
அயல்நாட்டார் நம்மை வாழ்த்தி விடை பெறட்டும்
தன்மானச் சிங்கங்களாய்த் தமிழர்வாழ்வு
மறுபடியும் ஓங்கி வளரட்டும்...........!
வெளிநாட்டார் நாட்டாமைக்கு எதிராக
'நம்பிக்கை வை' பிரதமரின் முதல்
ஓட்டு தவறாமல் விழட்டும் நாட்டில்
தமிழர் வாழ்வு சிறக்கட்டும்......!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அடையாளப் படுத்துவதற்க்காய்
- கலைமகள் ஹிதாயாறிஸ்வி -இலங்கை -
மன ஆறுதலுக்காய் வருகின்ற
இப் பாசிக் குடாவில்
சோகங்களை
நினைத்தபடி
கரையை தொட்டுச் செல்லும் ,அலையாய்
மாறிச் செல்லும் மனம்
நடுக் கடலில் நீந்தும்
பட்குகளாய் -என்
சிந்தனை வலைகளும்
கோடிக் கனவுகளுடன்
எதிர்பார்த்து நிற்கும் !
உள்ளத்து உணர்வுகளோடு
ஒட்டி உறவாடும் நுரைப் பூக்களும்
இதயம் போன்றே
மென்மையான மலர்
மன ஆழத்தின்
வேர்களைப் இழுத்து
அடியின் பகுதிய்னை
நுகர்ந்து பார்க்கும் போதெல்லாம்
எனக்குள் வரும்
துர்நாற்றம் வீசும்
கருவாட்டுகளின் மணம் .!
ஆண் -பெண் அலையாய் போட்டிபோட்டு
பொங்கி எழும்பும்
பொறாமை கறையான்களுக்கு
என் கவி துளிகள்
தாகும் தீர்க்கும் வரையில்
உற்றெடுக்கும் கிணறாய்
அடி மனசும் கசிந்து கொண்டிருக்கும் !
கடற்கரையில் காலை சுற்றியிழுக்கும்
அறுகம்புல்லின் மனக் கவலைகளை
நோண்டி வீச முடியாமல்
அலவாக் கரைகளின் சோலையில்
உறங்கிப் போவேன் !
மயான பூமியாய்
அடையாளப் படுத்தும்
நாய் நரிகளின் ஓசைகள் !
அடி வானில்
உதயமாய் பிரகாசிப்பது தெரியும்
நிலாவாய் (சந்திரனாய்)!
என் -
கற்பனைச்சுடர்களும்
ஒரு நாள்
வரண்ட பொறாமை உள்ளங்களின் நாவுகளுக்கு
ஊற்றெடுக்கும் ஸம்ஷம் நீராய் ..!
அப்போது ...,
தாகமாய் தவிக்கும்
நாவுகளுக்கு
பொறுமையை கற்றுக் கொடுத்து விட்டு
விழித்துக் கொள்வேன்
நான் ,
என் -
கவிதை ஊற்றுக்களின்
அத்தியவசியததினை
அடையாளப் படுத்துவதற்க்காய்
அர்த்தம் காட்டுவதற்காய் ...!!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.