பல்கணியில் நின்ற சதாசிவம்,சுருட்டின் புகையை ஆசை தீர இழுத்து அனுபவித்தார்.தொண்டை கமறியது.வட்டம்,வட்டமாக புகையை விடுறதில் எல்லாம் இறங்கவில்லை.பக்கத்து வீட்டுக்காரர் வயதான சீனர்.அவருடைய மகன் ,மகள்...என கூட்டுக் குடும்பத்துடன் இருக்கிறார். அவர் வீட்டை விட்டுப் போறது தெரிந்தது.பார்க்கிற்குத் தான் போறார் .இவர், போகிற பிரகலாதன் பார்க்கிற்கு காலையிலே மற்ற சீனர்களும் வந்து … காற்றைக் கையால் வெட்டி,வெட்டி பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பார்கள்
அவருடைய மனைவி ,எப்பவோ இறந்திருக்க வேண்டும்.வயசை சொல்ல முடியாது. எழுபத்தஞ்சு ... . இருக்கலாம். பாரியாருடன் திரிகிற இவர்களைப் பார்த்து நட்பாக சிரிக்கிறவர். இவர்களுக்கு தான் என்னவோ அவர்களுடன் .. சேர்ந்து சரியா ய் பழகத் தெரியவில்லை .
சிறைக்குள் இருக்கிறது போன்றது தானே வெளிநாட்டு. வாழ்க்கை. ஆனால் திறந்த வெளிச்…. சாலை போன்ற வசதி இருக்கிறது. எதிர்படுற போது புன்னகைக்கிறது. இவருடைய சுருட்டுப் புகை சமயத்தில் அவர்களுடைய வீட்டுப் பக்கம் போய் விடும். அதை ஒரு குற்றமாக எடுத்துக் கொள்வதில்லை. சுருட்டுக்கிழம், அனுபவிக்கிறது அற்ப சந்தோசம், அதைப் போய் குழப்புவானேன்…? என பிள்ளைகளும் விட்டு விட்டார்கள்.
பெரியவர் இவர்க்கு யாலுயாய் இருப்பது தான் முக்கியக் காரணம்.பிள்ளைகளும் விளங்கிக் கொள்ள மாட்டார்களா, என்ன !
இவரும், அன்னமும் மகளோட தான் இருக்கிறார்கள்.ஒரே பேத்தி,சித்திரா ..கொஞ்சம் வளர்ந்து விட்டாள். சிலவேளை இவர்களோட பார்க்கிற்கு வருவாள். ரேவதியும், கமலும் சரியான உழைக்கிற மெசின்கள். வேற என்ன சொல்றது?, அவர்களும் கிழவர்களாகினால் தான் பார்க்கின் அருமை தெரியும். இப்ப நண்பிகள், நண்பர் வீட்ட ..என விசிட் பண்ணுகிறார்கள் .பார்க்கிற்கெல்லாம் வருவதில்லை.
சீனரின் பிள்ளைகளும் கூடத் தான் அந்த அழகான பார்க்கிற்கு வருவதில்லை. இந்த நாட்டுக் கலாசாரப்படி நைட் கிளப்புகளிற்குப் போகிறார்களோ?
மொத்தத்தில் அது இளமை ஊஞ்சலாடுkiற பார்க் இல்லை. கிழங்கள் திரியிற ஏகாந்த பார்க். இருந்தாலும் இங்கே பார்க்குகள் எல்லாம் தொடர்பு டையதாகவே இருக்கின்றன.டான் நதி எனச் சொல்கிற அந்த நீரோட்ட வாய்க்காலுக்கு இரண்டு பக்கத்தாலும் போற பாதையால் சைக்கிளில் போறவர்களையும் ,ஓடிக் கொண்டிருப்பவர்களையும் நெடுகக் காணலாம்.
இவர் புகையோடு கொஞ்ச நேரம் லயித்துக் கிடந்தார் .குளிர்ப் புகையும் சேர சினிமாவில் வார வில்லன் போல தன்னை நினைத்து யாருக்கும் கேட்காது என்ற தைரியத்தில்”.ஆகா”..என அட்டகாசமாக சிரித்தார்.பல்கணி கதவை சாத்திப் போட்டு தான் இருந்தார்.
மனிசிக்கு பாம்புக் காது."இந்த மனிசனுக்கு பனி"என புறு புறுத்துக் கொண்டு ,"அங்க,உங்கட அருமை நண்பர் ஊர் சுற்ற வந்திட்டார்" என பல்கணிக் கதவை திறந்து கொண்டு வந்தார்.இவருடைய முகத்தில் உள்ள அசடு எல்லாம் வழிந்தது.
அவர், "சரி,சரி... உந்த அறுந்த சுருட்டை நூத்துப் போட்டு போய்ப் பாரும்"என்ற மனிசியைப் பார்த்தார். “என்ன, அப்படி பார்க்கிறீங்கள் “வெட்கப்பட்டாள்.”இளமை திரும்புறோ?”என்று சிரித்தாள்.சுருக்கங்கள் விழுந்து ,மெலிந்து...இருந்தாலும் அந்த விழிகளில் தெரியும் அன்பு, அவர்க்குத் தெரிகிறது.
கன காலம், தவம் இருந்தது போல பிந்திப் பிறந்த ஒரே மகள் ரேவதி,யாழ்ப்பாணத்தில் அம்மாவோடு மனிசியையும், பிள்ளையையும் விட்டு விட்டு ,கொழும்பில் வேலை,வேலை என ஓடி அலைந்த அலைச்சல், கலவரத்தில் குடல் தெறிக்க ஓடி தப்பிய மங்கலான பயங்கரமான நிகழ்வுகள், நான், மனிசியை சந்தோசமாக வைத்திருக்கவில்லையோ என்ற குற்ற உணர்வு சிந்தையில் ஓடுகிறது.மகள் நல்லாய் இருக்க வேண்டும் என்ற இலக்கில் வேலை செய்ததால் ,மனிசி அவரில் உயிரையே வைத்திருக்கிறாள் என்பது சிதம்பர ரகசியம் இல்லை.
உறவுக்காரர்களில் கமலைத் தெரிவு செய்து திருமணம் நட த்திக் களைத்துப் போனது,வெளிநாட்டில் செட்டிலானவுடனே தாய்யையும் அவரையும் பிடிச்சபிடியாய் நின்று ,வெளியில் எடுத்து தன்னோடேயே வைத்திருக்கிற ரேவதி ….பழங்கதைகள் பேசி என்ன ஆகப் போகிறது? புதுக்கதையைப் பார்ப்போம்.
"இவன் புகைக்க விடுறானில்லை"என உள்ளுக்க திட்டிக் கொண்டு கப்பில் எஞ்சியிருந்த கோப்பியில் நூத்தார்.அவசர அவசரமாக கீழே இறங்கினார்.பரபரக்கிற குணம் அவரை விட்டு இன்னம் கழறவில்லை."என்ன அவசரம்,பார்த்து,பார்த்தப்பா,விழுந்து கிழுந்து போனால் நண்பர் வரமாட்டார் " கோப்பிக் கப்பை எடுக்கிற அன்னம் நக்கல் அடிக்கிறாள்.
இவள் என்னோடு பார்க்கிற்கு வரவில்லை என்பது போல ,மற்றக் கிழ ங்களிற்கும் தம் பத்தினிமார் வராதது பெரும் பிரச்சனையாய் கிடந்து உளாச்சுது.அறுபது வயதாகினாலே அறளை வேற பெயர ஆரம்பித்து விடுகிறது.ஆழ்மனதில் நிறைவேறாது கிடக்கிற குப்பைகளும் எதாவது இடைவெளி கிடைத்தால் நிறைவேறத் துடிக்கின்றன.
"அப்பா, இனியும் நீங்கள் வேலைக்குப் போக வேண்டியதில்லை.அம்மாவை , பார்க்கிற்கு கூட்டிக் கொண்டு போய் டூயட் பாடுங்களப்பா,போரும் முடிந்து விட்டது தானே, கோடையில் ஊருக்கும் போய்யும் வரலாம்."என்று ரேவதி சொல்லிப் பார்த்தாள்."இல்லை பிள்ளை,ஏலாம வரும் வரைக்கும் வேலைக்குப் போகிறேன்.ஐஞ்சு நாள் தானே,சனி ஞாயிறிலே அங்க,இங்க என்று திரியுறோம் தானே"என்றார்."வீட்டிலே நின்றால் தான் பையித்தியம் பிடிக்கும் விடு.போகட்டும்"என்று அன்னம் அவருக்கு சப்போர்ட் பண்ணினாள்.
இவர் ஒன்றை நினைக்க,இறைவன், ஒன்றை நினைத்து விடுகிறான்.தொழிற்சாலையில் ஆட்குறைப்பு செய்த போது, வேலையிருந்து நிற்பதற்கான கடிதத்தை அவருக்குத் தான் முதலில் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
அவருக்கோ,அதிர்ச்சி என்ற அதிர்ச்சி.எதிர் பார்க்கவே இல்லை.அவர் நல்ல வேலையாள்.ஆனால் வயசு என்று ஒன்று தான் இடறுகிறதே.வேற தொழிற்சாலையில் முயன்று பார்க்கலாம் என்று குளிரில் திரிந்த போது, முழங்காலில் ஒரு ‘நோ’எட்டிப் பார்த்தது.முறையாய் …வைத்து நடக்க முடியாது சிறிய கெந்தலுடன் நடக்கிறது ஏற்பட்டு விட்டது.பார்க்கிலே சிவாஜியைப் போல போனால் போகட்டும் நடையை எல்லாம் இனிமேல் நினைத்துப் பார்க்க முடியாது மனத்தைக் குழப்பி விட்டது. பயம்,. எவருக்குமே, பயம் பலவீனம் என்பது பெரும்பாலும் தெரிவதில்லை.இதுவும் கடந்து விடும் என்ற தைரியத்தை விரட்டி விடுகிறது.வாசிப்பின் மூலம் தான் அறிவியல் பார்வையைப் பெற முடியும்.அந்தப் பழக்கம் தான் அவரிடம் இல்லையே.இப்படி இருப்பதாலேயே,சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாதவராக,சொந்த தேசத் திற்கும் போக ஏலாதவராக இருக்கிறார்.
சாகும் வரை இந்த கட்டை வேலைக்குப் போகும் என்ற திமிரில் இருந்ததால், வேலையில் மூழ்கி விடுவதால் எந்த சிந்தனையும் அவர் தலையைப் பிடித்ததில்லை. இப்ப ,வெறுமையே முதலில் தோன்ற,சுழன்றடிக்கும் காற்று வீச...வசந்தமே மாறிப் போச்சுது."போனால் போகட்டும் போடா.."நடக்கிறதுக்கு ஒரு தடியையும் கடையிலே பார்த்து தான் வாங்க வேண்டி வரும் போல இருக்கிறது.நானும் சிவாஜியாய் வந்து விட்டேனே.உள்ளுக்குள் அழுகிறாரா?அவருக்கு முதலே வேலையை விட்டு விட்ட நண்பர் சுரேஸால் எப்படி சமாளிக்க முடிகிறது? என்ற கேள்வி எட்டிப்பார்க்கிறது.ஓராயிரம்...அல்லவா புற்றீசலாக வருகின்றன." இனி, நீ ஒரு கிழவன் ! " ஏதோ வாலிபனாக இருந்த போது, சுகப்பட்டது போல இலங்கை அரசு விட்டா இருந்தது?
வயசானது அவரை ஒன்றும் வருத்தவில்லை.அவர், முதன் முதலில் வேலையில் சேர்ந்த போதே, நண்பர்கள் ஒவ்வொருவருமே விதம் விதமான தோழர்களாக இருந்தார்களே.
அவருடைய மனைவி ,எப்பவோ இறந்திருக்க வேண்டும்.வயசை சொல்ல முடியாது.எழுபத்தஞ்சு ,ஒன்பது..?. இருக்கலாம்.பாரியாருடன் திரிகிற இவர்களைப் பார்த்து நட்பாக சிரிக்கிறவர்.இவர்களுக்கு தான் என்னவோ அவர்களுடன் .. சேர்ந்து சரியாய் .பழகத் தெரியவில்லை .
சிறைக்குள் இருக்கிறது போன்றது தானே வெளிநாட்டு. வாழ்க்கை. ஆனால் திறந்த வெளிச்…. சாலை போன்ற வசதி இருக்கிறது.எதிர்படுற போது புன்னகைக்கிறது.இவருடைய சுருட்டுப் புகை சமயத்தில் அவர்களுடைய வீட்டுப் பக்கம் போய் விடும். அதை ஒரு குற்றமாக எடுத்துக் கொள்வதில்லை. சுருட்டுக்கிழம், அனுபவிக்கிறது அற்ப சந்தோசம்,அதைப் போய் குழப் புவானேன்…? என பிள்ளைகளும் விட்டு விட்டார்கள்.
பெரியவர் இவருக்கு யாலுவாய்யாய் இருப்பது தான் முக்கியக் காரணம்.பிள்ளைகளும் விளங்கிக் கொள்ள மாட்டார்களா,என்ன
இவரும், அன்னமும் மகளோட தான் இருக்கிறார்கள்.ஒரே பேத்தி,சித்திரா ..கொஞ்சம் வளர்ந்து விட்டாள்.சிலவேளை இவர்களோட பார்க்கிற்கு வருவாள்.ரேவதியும்,கமலும் சரியான உழைக்கிற மெசின்கள். வேற என்ன சொல்றது?, அவர்களும் கிழவர்களாகினால் தான் பார்க்கின் அருமை தெரியும்.இப்ப நண்பிகள்,நண்பர் வீட்ட ..என விசிட் பண்ணுகிறார்கள் .பார்க்கிற்கெல்லாம் வருவதில்லை.
சீனரின் பிள்ளைகளும் கூடத் தான் அந்த அழகான பார்க்கிற்க்கு வருவதில்லை. இந்த நாட்டுக் கலாசாரப்படி நைட் கிளப்புகளிற்குப் போகிறார்களோ?
மொத்தத்தில் அது இளமை ஊஞ்சலாடுற பார்க் இல்லை.கிழங்கள் திரியிற ஏகாந்த பார்க். இருந்தாலும் இங்கே பார்க்குகள் எல்லாம் தொடர்பு டையதாகவே இருக்கின்றன.டான் நதி எனச் சொல்கிற அந்த நீரோட்ட வாய்க்காலுக்கு இரண்டு பக்கத்தாலும் போற பாதையால் சைக்கிளில் போறவர்களையும் ,ஓடிக் கொண்டிருப்பவர்களையும் நெடுகக் காணலாம்.
இவர் புகையோடு கொஞ்ச நேரம் லயித்துக் கிடந்தார் .குளிர்ப் புகையும் சேர சினிமாவில் வார வில்லன் போல தன்னை நினைத்து யாருக்கும் கேட்காது என்ற தைரியத்தில்”.ஆகா”..என அட்டகாசமாக சிரித்தார்.பல்கணி கதவை சாத்திப் போட்டு தான் இருந்தார்.
மனிசிக்கு பாம்புக் காது."இந்த மனிசனுக்கு பனி"என புரு புருத்துக் கொண்டு ,"அங்க,உங்கட அருமை நண்பர் ஊர் சுற்ற வந்திட்டார்" என பல்கணிக் கதவை திறந்து கொண்டு வந்தார்.இவருடைய முகத்தில் உள்ள அசடு எல்லாம் வழிந்தது.
அவர், "சரி,சரி... உந்த அறுந்த சுருட்டை நூத்துப் போட்டு போய்ப் பாரும்"என்ற மனிசியைப் பார்த்தார். “என்ன, அப்படி பார்க்கிறீங்கள் “வெட்கப்பட்டாள்.”இளமை திரும்புறோ?”என்று சிரித்தாள்.சுருக்கங்கள் விழுந்து ,மெலிந்து...இருந்தாலும் அந்த விழிகளில் தெரியும் அன்பு, அவர்க்குத் தெரிகிறது.
கன காலம், தவம் இருந்தது போல பிந்திப் பிறந்த ஒரே மகள் ரேவதி,யாழ்ப்பாணத்தில் அம்மாவோடு மனிசியையும், பிள்ளையையும் விட்டு விட்டு ,கொழும்பில் வேலை,வேலை என ஓடி அலைந்த அலைச்சல், கலவரத்தில் குடல் தெறிக்க ஓடி தப்பிய மங்கலான பயங்கரமான நிகழ்வுகள், நான், மனிசியை சந்தோசமாக வைத்திருக்கவில்லையோ என்ற குற்ற உணர்வு சிந்தையில் ஓடுகிறது.மகள் நல்லாய் இருக்க வேண்டும் என்ற இலக்கில் வேலை செய்ததால் ,மனிசி அவரில் உயிரையே வைத்திருக்கிறாள் என்பது சிதம்பர ரகசியம் இல்லை.
உறவுக்காரர்களில் கமலைத் தெரிவு செய்து திருமணம் நட த்திக் களைத்துப் போனது,வெளிநாட்டில் செட்டிலானவுடனே தாய்யையும் அவரையும் பிடிச்சபிடியாய் நின்று ,வெளியில் எடுத்து தன்னோடேயே வைத்திருக்கிற ரேவதி ….பழங்கதைகள் பேசி என்ன ஆகப் போகிறது? புதுக்கதையைப் பார்ப்போம்.
"இவன் புகைக்க விடுறானில்லை"என உள்ளுக்க திட்டிக் கொண்டு கப்பில் எஞ்சியிருந்த கோப்பியில் நூத்தார்.அவசர அவசரமாக கீழே இறங்கினார்.பரபரக்கிற குணம் அவரை விட்டு இன்னம் கழறவில்லை."என்ன அவசரம்,பார்த்து,பார்த்தப்பா,விழுந்து கிழுந்து போனால் நண்பர் வரமாட்டார் " கோப்பிக் கப்பை எடுக்கிற அன்னம் நக்கல் அடிக்கிறாள்.
இவள் என்னோடு பார்க்கிற்கு வரவில்லை என்பது போல ,மற்றக் கிழ ங்களிற்கும் தம் பத்தினிமார் வராதது பெரும் பிரச்சனையாய் கிடந்து உளாச்சுது.அறுபது வயதாகினாலே அறளை வேற பெயர ஆரம்பித்து விடுகிறது.ஆழ்மனதில் நிறைவேறாது கிடக்கிற குப்பைகளும் எதாவது இடைவெளி கிடைத்தால் நிறைவேறத் துடிக்கின்றன.
"அப்பா, இனியும் நீங்கள் வேலைக்குப் போக வேண்டியதில்லை.அம்மாவை , பார்க்கிற்கு கூட்டிக் கொண்டு போய் டூயட் பாடுங்களப்பா,போரும் முடிந்து விட்டது தானே, கோடையில் ஊருக்கும் போய்யும் வரலாம்."என்று ரேவதி சொல்லிப் பார்த்தாள்."இல்லை பிள்ளை,ஏலாம வரும் வரைக்கும் வேலைக்குப் போகிறேன்.ஐஞ்சு நாள் தானே,சனி ஞாயிறிலே அங்க,இங்க என்று திரியுறோம் தானே"என்றார்."வீட்டிலே நின்றால் தான் பையித்தியம் பிடிக்கும் விடு.போகட்டும்"என்று அன்னம் அவருக்கு சப்போர்ட் பண்ணினாள்.
இவர் ஒன்றை நினைக்க,இறைவன், ஒன்றை நினைத்து விடுகிறான்.தொழிற்சாலையில் ஆட்குறைப்பு செய்த போது,வேலையிருந்து நிற்பதற்கான கடிதத்தை அவருக்குத் தான் முதலில் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
அவருக்கோ,அதிர்ச்சி என்ற அதிர்ச்சி.எதிர் பார்க்கவே இல்லை.அவர் நல்ல வேலையாள்.ஆனால் வயசு என்று ஒன்று தான் இடறுகிறதே.வேற தொழிற்சாலையில் முயன்று பார்க்கலாம் என்று குளிரில் திரிந்த போது, முழங்காலில் ஒரு ‘நோ’எட்டிப் பார்த்தது.முறையாய் …வைத்து நடக்க முடியாது சிறிய கெந்தலுடன் நடக்கிறது ஏற்பட்டு விட்டது.பார்க்கிலே சிவாஜியைப் போல போனால் போகட்டும் நடையை எல்லாம் இனிமேல் நினைத்துப் பார்க்க முடியாது மனத்தைக் குழப்பி விட்டது. பயம்,. எவருக்குமே, பயம் பலவீனம் என்பது பெரும்பாலும் தெரிவதில்லை.இதுவும் கடந்து விடும் என்ற தைரியத்தை விரட்டி விடுகிறது.வாசிப்பின் மூலம் தான் அறிவியல் பார்வையைப் பெற முடியும்.அந்தப் பழக்கம் தான் அவரிடம் இல்லையே.இப்படி இருப்பதாலேயே,சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாதவராக,சொந்த தேசத் திற்கும் போக ஏலாதவராக இருக்கிறார்.
சாகும் வரை இந்த கட்டை வேலைக்குப் போகும் என்ற திமிரில் இருந்ததால், வேலையில் மூழ்கி விடுவதால் எந்த சிந்தனையும் அவர் தலையைப் பிடித்ததில்லை. இப்ப ,வெறுமையே முதலில் தோன்ற,சுழன்றடிக்கும் காற்று வீச...வசந்தமே மாறிப் போச்சுது."போனால் போகட்டும் போடா.."நடக்கிறதுக்கு ஒரு தடியையும் கடையிலே பார்த்து தான் வாங்க வேண்டி வரும் போல இருக்கிறது.நானும் சிவாஜியாய் வந்து விட்டேனே.உள்ளுக்குள் அழுகிறாரா?அவருக்கு முதலே வேலையை விட்டு விட்ட நண்பர் சுரேஸால் எப்படி சமாளிக்க முடிகிறது? என்ற கேள்வி எட்டிப்பார்க்கிறது.ஓராயிரம்...அல்லவா புற்றீசலாக வருகின்றன." இனி, நீ ஒரு கிழவன் ! " ஏதோ வாலிபனாக இருந்த போது, சுகப்பட்டது போல இலங்கை அரசு விட்டா இருந்தது?.
வயசானது அவரை ஒன்றும் வருத்தவில்லை.அவர், முதன் முதலில் வேலையில் சேர்ந்த போதே, நண்பர்கள் ஒவ்வொருவருமே விதம் விதமான தோழர்களாக இருந்தார்களே.
ஒருத்தன் கழுகு,ஒருத்தன் தாமரை,இன்னொருவன் முல்லை,அல்லி,நந்து...என ஒரிரண்டு இயக்கங்களா?அதைப் போல ஒன்றாகத் தான் கிழ பிராயமும்... தெரிகிறது.சகோதரர்களை கொலையும் இவர்கள் கூட செய்வார்களா ? திகைப்பு . ஒரு புறம். சித்திரவதையும் புரிந்தல்லவா விஜயனைக் கொன்றார்கள். அவர் இயக்கத்தில் சேரவில்லை தவிர,அவனை குருஜியாக நினைத்திருந்தவர்.
இவ்வளவு காலத்திற்குப் பிறகாவது , சுமந்திரன் கதைக்கிறாரே. கழுகே மெளனமாக இருக்க, யாரோறொருவர் , “புனிதம்” பேசுகிறார். முதலில், போர்க் குற்றங்கள் வெளிய வர வேண்டியது அவசியம் தான். சிலநேரம், மனமும் இப்படி தீப் பிடிச்சுக் குமுறுது.
எப்படியோ,அவருக்கு பார்க்கில் சிவாஜி நடை நடக்க முடியாததும் குறை தான் .
.நிஜங்கள் புத்தர் நடக்கிற பாதையாய் விரிந்து போகின்றன. பொன்னர் புத்தகத்தில் வாசிச்சதைக் கதைத்ததும் அவர் நினைப்பில் வருகிறது.
“ ஜேசு பிரான் "பாவம் செய்யாதவன் எவன் ஒருவனோ, அவன்,குற்றமிழைத்த, இந்தப் பெண்ணின் மீது கல்லை எறியலாம்"என்கிறார்.புத்தரும்,"மரணம் நிகழாத வீட்டிலிருந்து ஒரு பிடி அரிசி கொண்டு வா,இறந்து போன இந்தப் பெண்ணை உயி ர்ப்பிக்கிறேன் "என்கிறார்,. இருவரின் பேச்சிலும் ஒருமை இருக்கிறது அதை சொல்ல எனக்குத் தெரியவில்லை .. இருவருமே ஒன்றைத் தான் வெவ்வேறு ஸ்டைல்களில் சொல்கிறார்கள். பொழுது போகா விட்டால் இப்படியான ஆராய்ச்சிகளில் எல்லாம் மணிக் கணக்கில் இறங்கி விடுவார்கள்.
“ யேசு,எந்தப் பெரியக் குற்றமும், தனி மனிதனுடைய குற்றமில்லை, அதில், சமூகக் குற்றமும் இழை ஓடுகிறது என்கிறார்..காந்திஜியும், இதை வைத்தே "...இவனையும் கூட நான் மன்னிப்பேன்"என்கிறார். அதனால், விமர்சனங்களையும் வாங்கிக் கட்டிக் கொண்டார் .தொடர்ந்தும்."மரண தண்டனை விதிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை.இந்தியா , அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்"எனவும் கேட்டுக் கொண்டார்.
சாதாரண மனிதனால் எதைத் தான் புரிந்து கொள்ள முடிகிறது?, பார் ! அதனாலேயே ,காந்திஜிக்கும் கூட மரண தண்டனையை அளித்து விட்டிருக்கிறான். புத்தரோ, நடக்க முடியாததில் வீணே சிந்தையைச் செலுத்தாதீர்கள் என்கிறார். அவர் ஞானி !”. மொத்தத்தில், இந்த ஆள் தனக்கும் விளங்காமல் எங்களையும் குழப்புற பேர்வழி. “ இவர், என்னையும் சாதா... மனிதனாக நினைக்கவில்லை என்றது, அற்ப சந்தோசம் தான் ! இருந்தாலும் ,இவர் யார் எனக்கு சொல்வதற்கு, “என் மனதில் நினைக்கிறபடியே நடப்பேன்” என கெந்தல் ஓட்டத்தில் இறங்குகிறார்.
கிராமப் பாடசாலையிருந்தே அவருடன் ஒன்றாய் படித்தவன் சுரேஸ்.ஊர் நட்பு இங்கேயும் தொடர்கிறது. அவரையும்,ருக்குமணியையும் அவருடைய மகன் குகன் ஸ்பொன்சரில் எடுத்து விட்டிருந்தான்.மகனுடன் தான் இருக்கிறார். குகனுக்கு வளர்ந்த மகன் கணேஸ் வேறு இருக்கிறான். பள்ளிக்குப் போய் வாரன்.
இப்பவெல்லாம் காலையிலே,பிரகலாதன் பார்க்கிலே ஒரு நடை நடக்கா விட்டால்... அவர்களிற்கு அந்த நாள் போன மாதிரியே இருப்பதில்லை.தம்பதி சகிதமாகத் தான் போய்க் கொண்டிருந்தார்கள்.எப்ப,அந்த அடை மழை பிடிச்சதோ,அப்ப பிடிச்சது . சனி. காலை நடையை குழப்பி விட்டது.எனவே ஈரத் தரையாய் இருந்த போதிலும் ,பின்னேரம் போல நாலு மணிக்குப் பிறகு நடக்கப் போனார்கள்.
சுரேஸின் வீடு கிட்டத்தில் தான் இருக்கிறது.தில்லை கொஞ்சம் தள்ளி இருக்கிறான்.தில்லை,முந்தியே வந்து, உழைத்து,மனைவி ,பிள்ளையை எடுத்து...வயசாகி விட்ட கட்டை.பார்க்கிலே ஏற்பட்ட சினேகிதம்.சிறிது மொத்தமான சிவகாமியுடன் வருவார். சிவகாமியின் உருவம் அப்படியே தவிர,இவர்களை விட வயதில் குறைந்தவர்.
பார்க், சிறுவர்கள்,நாய்,பூனை..போன்ற மிருகங்களைக் கருத்தில் கொண்டும் சிறிது ஏற்ற ,இறக்கத்துடனும் அமைக்கப் பட்டிருந்தது. ஈரப் புல் சிவகாமியை சறுக்க வைத்து விட்டது.தொபென இருந்த மாதிரி விழுந்து விட்டாள்.நாரியிலே நோ.பிறகு எழும்பி..வீட்ட போனார்கள் தான். ஆனால் அதற்குப் பிறகு மனைவிமார் வருவதை நிறுத்தி விட்டார்கள்.இவர்கள் தனித் தவில் அடிக்க வேண்டியதாயிற்று.
வீழ்ந்த இடம், என்னவோ ஏற்கனவே, பிரச்சனையான இடமாக அடையாளமிடப் பட்டிருந்தது.இவர் விழுந்தது ஒரு பத்தோ பதினைந்தாவது ஆளாக இருக்கலாம்.ஏற்றமாக தரையில் நடக்காமல் சமப் பகுதியாலே நடந்து போய் ஒரு சிறிய மச்சுப்படி அமைப்பை வைத்து விட்டால்,அதில் ஏறி அடுத்த சம நிலத்திற்குப் இலகுவாகப் போய் விடலாம். அந்த சரிவான தரையில், முதல் ஆள் விழுந்த போதே, அந்த முறைப்பாட்டை அவ்விட உறுப்பினர் நகரசபைக்குக் கொண்டு சென்றிருந்தார்கள். நகரசபையின் தொழில் நிபுணர் குழு ஒன்றும் கூட வந்து பார்த்து ,படிகள் அமைப்பதற்கான மதிப்பீட்டையும் சமர்பித்திருக்கிறது.
ஆனால் துரதிஸ்டம் , வேலை நடக்கவில்லை.அமைக்க முதலே அப்ப, இருந்த மேயர் தேர்த்தலில் தோற்றுப் போக புதியவர் வந்து விட்டார்.அவர், இதற்கு ஒதுக்கிய பணத்தை அவர் வேறொரு திட்டதிற்கு இலகுவாக நகர்த்தி ,இதை ஓரேயடியாய் கை விட்டு விட்டிருந்தார். இந்த தகவல்களை எல்லாம் பக்கத்து வீட்டு சீனக் கிழவர், வாங் சொல்லி அவர்களிற்குத் தெரிய வந்தன. அரசாங்களின் திரு விளையாடல்கள் தான் எத்தனை விதமானவை .
இவர்களே , அந்த இடத்தில்’மச்சுப்படிகளை’ அமைக்கிறது என தீர்மா னித்தார்கள். தீர்மானம் எடுத்த போது பொன்னர் அவர்களுடன் இருக்கவில்லை.பேருந்தை பிடித்து வாரவர். வந்து சேரவில்லை. வந்த பிறகும் கூட, மனுசன் அதை,இதைப் பேசி குழுப்பிப் போட்டு விடும் என அதைப் பற்றிக் கதைக்காமல் தவிர்த்து விட்டார்கள்.
சதாவும்,சுரேஸும் கிராமப் பாடசாலையில் ஒன்றாய் படித்த காலத்தில், கியூபாப் புரட்சியில் எழுந்த தேசிய அலைகள், இந்தியாவிலும் எழ இந்திரா,தனியார் கம்பனிகளை எல்லாம் தேசியமயமாக்கிக் கொண்டிருந்தார்.வங்கிகள்,எரிபொருள் நிலையங்கள்,பெருந்தோட்டங்கள்...என அரசின் கீழே போய்க் கொண்டிருந்தன. பாரிய மாற்றங்களால் கோபமடைந்த மேற்கத்தைய நாடுகள் இந்திராவின் மேல் குறி வைத்திருந்தன எனவும் சொல்லப்படுகின்றது.
இலங்கையில் இரண்டாவது முறையும் ஆட்சியைப் பிடித்த சிறிமாவின் அரசும் ,பிரித்தானியாவின் பிடியிலிருந்து இலங்கையை முழுமையாக விலக்கிக் கொள்ள இது தான் சரியான தர்ணம் என தீர்மானித்து, நாட்டை “சோசலிச ஜனநாயக மக்கள் குடியரசாக” பிரகடனம் செய்து அரசியமைப்பையையும் மாற்றியது. அதில், தமிழருக்கு பாதுகாப்பாய் இருந்த ஒரு சில சட்ட விதிகள் விடு பட்டுப் போய் விட்டன.
இந்தியாவைப் போலவே இங்கேயும் பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கின,அதோடு வங்கிகள்,எரிபொருள் நிலையங்கள்,பெரும் தனியார் நிறுவனங்கள்...என பலதும் தேசிய மயமாகின. இலங்கையின் பெயரும் சோசலிசம் வேற,கல்வியிலும் சீனக் கல்வி முறையைக் கொண்டு வரச் சொல்லி கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தின,தேசியமயமாக்கல் என்பவற்றால் மேலை நாடுகள் வெறுப்புற்று இலங்கைக்கான கோதுமை மா இறக்குமதியை முற்றாக நிறுத்தி விட்டது. தமக்காதரவான எதிர்க் கட்சியான அரசியல்க் கட்சியுடன் சேர்ந்து சதித்திட்டங்கள் போடத் தொடங்கி விட்டன ஆட்சியை பிடிக்கும்... பிரச்சாரம் சூடு பிடித்தது
இந்தியாவிலும் இதே நிலமைகள் நிறைவேறிய போதிலும்,அது “சோசலிசம்” என்ற வார்த்தையை அதிகம் பாவிக்கவில்லை. எனவே, அங்கே மா தடை இல்லை.எனவே , இந்தியா,கோதுமையில் சிறிதளவை இலங்கைக்கு வழங்கியது. அது போதவே இல்லை. தவிர, வறட்சியாலும் உணவுப் பஞ்ச நிலையில் நாடு உழன்றது. இலங்கை, இயற்கை வளம் கொண்ட விவசாய நாடு.எனவே அது தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் தன்மையையும் கொண்டிருந்தது. எனவே, அங்கே ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டை செயற்கையால் ஏற்பட்ட பஞ்சம் என்றே என்றே சொல்ல வேண்டும்.
வேலை இல்லாப் பிரச்சனைகளால் சிங்களப் பட்டதாரி இளைஞர்கள் ஆட்சியைப் பிடிக்க மேற்கொண்ட முயற்சியை இலங்கை அரசு,இந்தியாவின் உதவியைப் பெற்று அண்மையில் ஒருவாறு அடக்கிய பிறகு , இந்தியாவில் இருந்தது மாதிரியே படித்த இளைஞருக்கான சுய வேலை வாய்ப்புத் திட்டங்களை இங்கேயும் ஏற்படுத்தினார்.
அன்றைய புதிய பாடத்திட்டத்தின் கீழ் இருந்த ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரையிலுள்ள தமிழ்ப்பாடப் புத்தகங்களையும்,சமூகக்கல்விப் புதகத்தையும் எடுத்துப் பார்ப்பீர்களானால் ஓரேயடியாய் நீங்கள் திகைத்து தான் போவீர்கள்.அதில் கீறப்பட்டுள்ள ஒவ்வொரு சித்திரங்களும் உங்களிற்கு மார்க்சிகக் கல்வியை அறிமுகப் படுத்தும். முதலாளியை பருத்த பீப்பாய் போலக்கீறியிருப்பார்..தொழிலாளியை ஒட்டாங்குச்சி போல வரைந்திருப்பார். சுரண்டல், சுரண்டப் படுகிறது .இந்த மாதிரி பாடக் குறிப்புக்கள். உலகக் கடனுதவிகளில் லத்தின் அமெரிக்காவின் கருத்துக்களும்,சுயவங்கிகளின் அவசியம் பற்றிய...என ஒரே சிவப்பு மயம்.
விடுதலைக்காக போராடிய இயக்கங்கள்,சிவப்பு மட்டைப் புத்தகங்களை தேடி அலைந்ததிற்குப் பதிலாக 6ம் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பு வரையிலான தமிழ்,சமூகக்கல்விப் புத்தகங்களையே பயன்படுத்தி பாசறை வகுப்புகளையே நடத்தி இருக்கலாம்.
பெடியள்களிற்கு தமிழர்களின் அரசியல் வரலாறே தெரியாது,இது எங்கே தெரியப் போகிறது ?
ஏற்கனவே, கல்வியில் சில பாடசாலைகளில் நெசவும், நெசவுக் கட்டிடமொன்றில் பயிற்சி ரீதியான ஒரு பாடமாக இருந்து கொண்டு தானிருந்தன.யாழ் கிராமப்பாடசாலைகளில் விவசாயமும் ஒரு புதிய பாடமாக சேர்க்கப்பட்டன. பல்கலைக்கழகத்தில் படித்து புதிதாக வெளியேறிய பெண்களிற்கு ஆசிரிய நியமனங்கள் கிடைத்தன. கிராமங்கள் தோறும் இளம் பெண் ஆசிரியைகள் வந்து சேர்ந்தார்கள். அப்படி தில்லையின் கிராமத்திற்கும் ஒரு இளவரசி ஆசிரியை வந்ததாகக் கூறுகிறார்.. சிறிமாவும் ,ஜெயலதிதா போன்ற ஒரு பெண் தானே.எனவே கணிசமான பெண்களிற்கு வேலை வாய்ப்புகள் வழங்கிக் கொண்டிருந்தார் .
நகரப் புறத்தில் கார் திருத்தும் பொறியியல்ப் பயிற்சிப் பாடம்,தச்சுவேலை,வீட்டு மின்சார,நீர்க்குழாய் இணைப்புப் பாடநெறிகள்...இப்படி பல வித தொழில்ப் பாடமொன்று பயிற்சிகளுடன் படிப்பிக்கப்பட்டு வந்தன.கல்விக்கான காலம் கூடிப் போச்சுது,என பத்தாம் வகுப்பையே எடுத்து விட்டார்கள்.அதனால்,ஒரு தவறும் நேர்ந்து விட்டது.
அந்த வகுப்பில் தான் அடிப்படைக் தூய,கேத்திர,நுண்...என கணிதப் பாட நெறிகள் கற்பிக்கப் பட்டு வந்தன. இவற்றை மற்ற வகுப்புகளில் முழுமையாக செருகி விட முடியவில்லை.பல்கலைக்கழகப் படிப்பு நெறியில் படிப்பவர்களிற்கு இந்த அடிப்படைக் கணித அறிவு இருக்க வேண்டும்.இப்ப கணிதப் பிரிவில் படிப்பவர்களைத் தவிர மற்றவர்களிற்கு எல்லாம் இல்லை.அதனால்,பின்னால் பல்கலைகழகப்படிப்பு தவறி,தொழினுட்பக் கல்லூரியிற்கு படிக்கச் சென்றவர்கள் கணிதப் பாடத்தில் தேர்ச்சிப் பெற திணறினார்கள்.
சாதாரண பொதுத் தராதரப் பத்திர கனிஸ்டக் கல்வி (ஜி.சி.ஈ(ஒ/எல்) என இருந்த வகுப்பு ,1972ம் ஆண்டிலிருந்து, தேசிய பொதுத் தராதர பத்திரக் கல்வி (என்.சி.ஜி.ஈ.... பட்ஜ்) வகுப்பாக பெயர் மாறியது. அரசு புதிய கல்வித் திட்டத்தில் தமிழ் பாடப் புத்தகத்தைத் தயாரிக்க, எஸ். பொன்னுத்துரை என்ற பிரபல எழுத்தாளரை நியமித்தது.அவர், தன் நண்பரிடம் இருந்து இரண்டு சிறுகதைகளை எழுத வைத்து எடுத்து அதில் சேர்த்திருக்கிறார்.
7ம் வகுப்பு தமிழ் நூலில்,வ.சு.இராசரத்தினம் என்ற எழுத்தாளரின்('புதுமைப்பித்தரின் சிஸ்யன்'எனத் தம்மை கூறிக் கொள்பவர் ) "வழிகோலிகள் மீன் பிடிக்கிறார்கள்"என்ற சிறுகதை இடம் பெற்றிருக்கிறது. ‘வழிகோலி’ என்பது வழிப்போக்கர்களாகத் தான் இருக்க வேண்டும். அதில் எவருமே மீன் பிடிக்கலாம் என்ற ‘பிடி’ இருக்கிறது யாழ்ப்பாணத்தில், அந்த சமூகத்தை விட வேற யாருக்கும் அனுமதி இல்லை, இறங்க அனுமதிக்காது என்ற எழுதப்படாதச் சட்டம் நிலவுகின்றது.அதை உடைக்கிறது இவரது கதை.
மற்ற கதை சதாசிவத்திற்கு மறந்து விட்டது. முதல் கதையின் தலைப்பு தான் அவருள் மச்சுப்படிகள் வைக்கிற சிந்தனையை ஏற்படுத்தியது . சிறிமா,நாடு முமுதுமிருக்கிற சமூகக் குறைபாடுகளை,அந்தந்த சனசமூக நிலயங்கள்,வாசிகசாலைக் குழுக்கள்,உப அரசாங்கப் பிரிவுகளில் பதிந்து விளையாடுகிற ...விளையாட்டுக் குழுக்கள்,மீன்பிடி,மரம் ஏறல்...என எந்த சங்கங்களும் உப அரசாங்கப்பிரிவில் பதியப் பட்டே இயங்கின,எவரும் குண்டும் குழுயுமான ஒழுங்கை வீதிகளைப் புனரமைப்புச் செய்யலாம்,குளத்தை வெட்டி ஆழமாக்கலாம்,வாய்க்கால்கள் இருக்கிறதா,மணல் மூடி விட்டதா..,தூர்த்து பழையபடி ஓட வைக்கலாம்..,நீளம்,அகலம்,சதுர அடிகள்,குவிப் அடிகள் அளவுகளைக் வெட்ட முதல் ,அல்லது வெட்டிய பிறகு உப அரசாங்க பிரிவுகளிற்கு காட்ட, அறிய வைத்தால் ,இவ்வளவுக்கு இவ்வளவு ...தேனீர்ச் செலவுகளுக்கென என அரசாங்கம் வழங்கி இருக்கிற பட்டியலைப் பார்த்து பணத்தை உடனடியாகவே வழங்கி விடுவார்கள்.
எங்குமே சிரமதான முறைகளில் ஈடுபட ஊக்குவித்துக் கொண்டிருந்தது.. தொழினுட்ப விசயங்களிற்கு நிபுணர்களின் வழிகாட்டல்களும் கிடைக்கும். தில்லையின் கிராமத்தில் விளையாட்டுக் குழுவொன்று அப்படி குளத்தை வெட்டிக் கிடைத்த பணத்தில் அவர்களின் நீண்ட எதிர்ப்பார்ப்பாக கிடந்த நாடக மேடையைக் கட்டியது.
அடுத்த வகுப்பு,.இந்த புதிய பெயருடன் உயர் தரம்.. என்பது நீட்சியாக இருந்தது. அந்த வகுப்பில், வெளிக்களப் பயிற்சி நெறி ஒரு புதிய பாடமாகச் சேர,கற்பித்து வர, தொழில்ப் பாட நெறிகள் அனைத்தும் முற்றுப் பெற்று விட்டிருந்தன.
அதில் மூன்று பாடவேளைகள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு பின்னேர வகுப்புகளில்...பாடசாலைக்கு வெளியே அனுப்பப் பட்டார்கள்.பத்து ,பத்து பேர்களாக ஆசிரியர்கள் மாணவர்களைப் பிரித்து,ஒரு பேப்பரில் வினாக் கொத்துடன் நகரத்தின் ஒவ்வொருப் பகுதிக்கு அனுப்பப்பட்டு வீடுகளில்,வீதீயில் நின்ற மக்களிடமிருந்து கேள்விகளைக் கேட்டு,என்னென்ன சமூகப் பிரச்சனைகளை எதிர் கொள்கிறீர்கள்...என்ற விபரங்கள் திரட்டப் பட்டன. பெரும்பாலும் வீடுகளிற்குத் தான் சென்றார்கள். பல்கலைக்கழக மாணவர் சென்றால் யாழ் மக்கள் அப்படி ஏற்றி வரவேற்பார்களே.அப்படி இந்த மாணவர்களையும் ஆச்சரியத்துடன் வரவேற்றார்கள்.
இதுவரையில் பள்ளிச் சிறைகளில் இருந்த சதாவும் ,சுரேஸும் அவ்விடத்தில் அயலிருந்த கூடப் படித்த மாணவர்களின் சில வீடுகளிற்கு முதல் தடவையாகச் சென்றது மறக்க முடியாதது.பத்து பேர்கள் தானே, அப்படி செல்வக்குமாரின் வீட்டில் தேனீர்கள் வழங்கி உபசரித்தார்கள்.கனிவுடன் பேசினார்கள்.குடும்ப உறவுகள் மத்தியில் இருக்கிறது போன்ற ஒரு சந்தோசம், கலகலப்பு அங்கே நிலவியது .
தச்சுவேலை படித்த மாணவர்கள், சமூகத்தையும் அறிகிறார்கள்.
சிலவித வீடுகளில் உடைந்த நாற்காலிகள் திருத்தப்படாது,எறியப்படாது ..ஒரு அறையில் போட்டும் வைத்திருந்ததையும் கவனித்தார்கள்.அப்படி பழையக் கார்,பலவித குறைபாடுகளுடன் நீர்க் குழாய் இணைப்புகள்...இப்படி சிலதையும் பார்க்க முடிந்தது.பழையதை எறியிற பழக்கம் மக்களிற்கு அறவே இருக்கவில்லை.ஒரு நேரம் திருத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை.
அயலில் உள்ள மண் ஒழுங்கை வீதிகள் சில குண்டும் குழியுமாக,மழைக்காலங்களில் படுத்துற சிரமங்களைப் பற்றி,சில காணிகளில் மத்தியிலிருந்த சில பரப்பு நிலங்களிலிருந்த பெரிய குளங்கள் மண் நிறைந்து மூடி சிறுத்துக் கொண்டு பாவிக்க முடியாததாகிக் கொண்டு போவதைப் பற்றி எல்லாம் மக்கள் பதிலளித்தார்கள் இவர்களிற்கு இவற்றை சிரமதானம் மூலம் இவர்களே சீராக்கலாம் என்ற விபரம் தெரியவில்லை போல இருக்கிறது.நகரப் புறங்களில் சிரமதானம் மூலம் திரள்றது குறைவு தான்..வினாக்களும் அந்த மாதிரியே கிடந்தன.ஒவ்வொரு பெடியளும் நிரப்பிக் கொண்டார்கள்.சதாவின் குழு, குளத்தை எவ்வளவு நீளம்,அகலம் இருக்கும் எனக் கேட்டு நிலவளவையாளர் போல பருமட்டாக கூட வரைந்தார்கள் ஒருபுறம்.முஸ்பாத்தியாகவும் இருந்தது.பள்ளிக்கூட புத்தகப் பைகளையும் அப்படியே எடுத்து வந்திருந்தார்கள்.அப்படியே பேருந்துகளில் ஏறி வீடு போய்ச் சேர்ந்தார்கள்.
இந்த கால கட்டத்தில் இந்தியா, இரகசியமாக அணுகுண்டு பரிசோதனையை செய்து விட்டிருந்தது.வல்லரசு நாடுகளில் மேற்கத்தைய வரிசை, இன்னொரு நாடு வல்லரசாக எழுவதை அறவே விரும்பவில்லை.சீனா,இந்தியாவுடன் வேலிச் சண்டைகளில் சதா இருந்ததால்...அதுவும் எதிர்த்தது.ஐ.நா.அவையில் நாடுகளிற்கிடையில் வாக்கெடுப்பில் விடப்பட்ட போது,இலங்கை, இந்தியாவிற்கு ஆதரவாக கையை உயர்த்தியது.
இலங்கையின் எதிர்க்கட்சி, ஆட்சியில் இருந்திருந்தால் நிச்சியமாக கையை உயர்த்தி இருக்காது.எனவே,தான் இலங்கை, கச்சதீவைக் கேட்ட போது இந்தியா மனவுவப்புடன் கையளித்தது. அது எந்த காலத்திலும் மீள பெற முயற்சிக்காது.எனவே,இலங்கை தான், அமைதியான முறையில் மீனவர் பிரச்சனையை தீர்க்க முயல வேண்டும். இலங்கைக்கு இந்தியாவிற்கு ஒரு எதிரி நாடா , இராணுவ முகாமை வைத்திருப்பதற்கு ?...,இல்லையே ! ,
கச்சதீவு ,மீன் பிடி தீவு மட்டும் தான்.அதனால், வடபகுதி மாகாணவரசின் கட்டுப்பாட்டில் விடப்பட வேண்டிய தீவு.மத்திய அரசின் கட்டிலே தமிழரின் அனைத்துமே முடங்கிக் கிடக்கின்றன.சில தளர்வுகள்...? , மனசும் பாறையாகி இறுகிப் போய்க் கிடக்கிற அரசை,எப்படி ஈரத்துடன் உருக வைப்பது ? அதன் .கொலைவெறி கொத்து,கொத்தாய் மக்களைக் கொன்றுக் குவிப்பதில் வந்து நிற்கிறது.இனிமேல் நிகழ இருப்பதும் ,இதை விட அதிக சாவுகளுடன் தான் !.இதுவரையில் நடந்தவை எல்லாமே ஏறிக் கொண்டிருக்கிற வரைகோட்டுடனே இருந்தன.அது இறங்குவதற்கான எந்த மாற்றமுமே இறுக்கிய மனதில் ஏற்படவில்லையே.எம் அதிர்காலமும் முடிவே இல்லாத இருளாய்யேக் கிடக்கிறது.
இலங்கை இந்த தமிழருக்கெதிரான இனத்துவேசத்தால்....பல பிரச்சனைகளை சிக்கலாக்கிக் கொண்டே போகிறது. எல்லாக் காலங்களும் மூழ்கிக் கிடந்தாலும் சில நிகழ்வுகள் ஆச்சரியத்தையும் மூட்டுகின்றன.
இலங்கைக்கு சிவப்புச் சாயம் பூசியதால்,ஆட்சியைக் கைப்பற்றிய எதிர்க்கட்சிக்கு, தான் சுத்தம் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. 'குடியரசு' என்ற பெயர் விருப்பமாக இருந்ததால் மாற்ற இறங்கவில்லை.
ஆனால், சோசலிசம் என அடிக்கடிச் சொல்லி,பெயரை நீட்டி முழங்காமல்,"சிறிலங்கா"என்ற பெயரையே பாவிக்கத் தொடங்கி விட்டது.
யாழ்ப்பாணத்தவர்கள் போல சிங்களவர்களும் அரிசி விலை கூடினால்,பாண் விலை கூடினால், எல்லாமே கொந்தளிக்கிற ஆசாமிகள் தான்.சிறிமாவின் ஆட்சி யில், ஜே.வி.பி...மனதில் கொண்டே கொண்டு வரப்பட்ட திட்டங்கள், தமிழ் இளைஞர்களை ஆகர்சிக்க பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவை எல்லாமே முடிவுக்கு வந்தன.
கலை வெளிப்பாடுகளான...தமிழ்.சிங்கள பைலாப் பாட்டுகள், வீரகேசரிப் பிரசுரங்கள்,சினிமாத் தயாரிப்புக்க ளும்.... முடிவுரை எழுதின.
சிரிமாவின் ஆட்சி சிங்களப் பட்டதாரிகளை கவராதது போலவே, தமிழ்ப் பட்டதாரிகளிலும், பழைய பிரித்தானியக் கல்வி முறையில் படித்திருந்ததால்...இசைந்து போக முடியாமல் தேவதாஸ்களாகத் தான் திரிய வைத்திருந்தன. இவர்களின் துயரம் ஏற்கனவே இருந்த உரிமைப் பிரச்சனைகளிற்கு எண்ணெய் வார்.த்திருக்க....அதை “பயங்கரவாதம்” எனக் கூறி ஆட்சிக்கு வந்த எதிர்க் கட்சி,மூர்க்கமாக எதிர்த்து ,இனத்துவேசப் போரை முன்னெடுத்தது.
புதிய கல்வித் திட்டம் முழுமைப் பெற முதலே ஆட்சி மாற்றம் வந்து விட்ட தால் எடுக்கப் பட்ட பத்தாம் வகுப்பு ஆண்டையும் உயர் வகுப்பில் ஒரு ஆண்டைக் கூட்டி சமப்படுத்தி விட, பழைய பாடத்திட்டங்களை அமுலுக்கு கொண்டு வந்து விட்டன.
பொற்காலத்தைச் சிறிது வெளிக்காட்டிய சிறிமாவின் ஆட்சி அஸ்தமித்து போனது. சிங்கள இளைஞர்களிற்கு பொற்காலம்.... கண்ணில் தெரியவே இல்லை.
பழைய எஜமானர்களை திருப்திப் படுத்த ஆட்சி முறையைக் கூட அமெரிக்க ஜனாதிபதி முறை போல மாற்ற வேண்டி இருந்தது. நேரிடையாக விமர்சனம் எழுவதை பெரியவர் விரும்புவ ரில்லை என்பதால் “பிரான்சின் ஜனாதிபதி முறையைப் ஒத்த ஆட்சி ஒரு முறையை சிறிலங்காவிலும் கொண்டு வருகிறோம்” என்ற. ஜே.ஆர். , ஏக அதிகாரம் பெற்ற தலைவரானார்.
சீன முறைகள் அனைத்துமே மாற்றி அமைக்கப்பட்டு..பழைய சூனியக்கார கிழவியே ஆட்சியே பீடம் ஏறியது.
சிறிமாவால் தமிழர் மத்தியில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி தகர்க்கபட வேண்டும். 83ம் ஆண்டுக் கலவரத்தில், தொழில் அதிபர்களோடு அவர்கள் குடும்பங்களையும் கொன்றது உச்சக் கட்ட துயரங்கள். அதனால், விக்கி மீடியா பகுதியிலோ,கூகில்ல்லிலோ....என்.சி.ஜி.ஈ.யைப் பற்றித் தேடினால் எந்த விபரங்களுமே வராது. பெற மாட்டீர்கள்.கணனி உலகத்தை கைக்குள்,காலுக்குள் கொன்டு வந்து விட்டது என்பதெல்லாம் வெறுமனே கட்டப்பட்ட ஒரு 'பிம்பமே' தவிர ,இன்னமும் அது கோல்லையே இறக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.
கூகிலுக்கே இப்படி ஒரு கல்வித் திட்டம் இருந்ததே தெரியாது...ஓய்..! பின்லாந்தில்,முதலாளித்துவ நாடு ஒன்றிலும் , ஒன்பதாம் வகுப்பில் தொழில் பாடமொன்றை படிக்கிறது சேர்த்திருக்கிறார்கள்.மற்றைய நாடுகளில் கல்லூரிக்குப் போய் (இங்கே தொழினுட்பக் கல்லூரியையே கல்லூரி என்கிறார்கள்)படிக்கிறதை இதிலேயே சேர்த்து விட்டிருக்கிறார்கள். சமூகக்கல்விப் பாடத்தில் தான் சோசலிசம்.அதை எடுத்து விட்டால்,அல்லது பாடங்களை மாற்றி விட்டால் எல்லா நாடுகளிற்குமே இந்த கல்வித் திட்டம் பொறுத்தமாகவே இருக்கும். அதனால்அங்கே கல்லூரிகள் இல்லையோ,தெரியவில்லை.இல்லை என்றால் …அது திறம்!
நம் நாட்டில் உயர் வகுப்பிலேயே...ஐந்து வருச விரயம்,பிறகு தொழில்க் கல்லூரியில் ஒரு ஐந்து வருச விரயம்,பிறகும் இனப்பேத வாய்ப்புத் தட்டிப் பறிப்புகள்,வேலை இல்லை...இளமைக்காலத்தையேக் கருக்கும் மகாபுத்திசாலித் தனம்,
கொடிக் கட்டிப் பறப்பது சிங்கக் கொடி அல்லவா,பக்கத்தில் எருதுக் கொடியை பறக்க விட மனிதத் தனமே செத்தல்லவா போய்க் கிடக்கிறது.
சதாசிவத்தார், மச்சுப்படத்திற்கான வரைபடத்தைக் கீறி மதிப்பீட்டார்.கிட்டத்தட்ட அறுநூறு ரூபா மட்டிலே மட்டிலே வந்தது. ஆளுக்காள் நூறு ரூபா தருவதாகக் கூறினார்கள்.சீனக் கிழவரிடமும் கதைத்தார்கள்."இது சட்ட விரோதம்.பங்கு பற்ற எல்லாம் முடியாது.ஆனால்,எங்கட ஆட்களிடமிருந்து நூறு ரூபா சேர்த்து தாரோம்"என்றார்.பணம் கைக்கு வந்தன.மரச்சாமான் கடையிலே பலகைகளையும் குற்றியைகளையும் வாங்கி,சதாவின் கராஜ்ஜிலே வைப்பதென முடிவாகியது.தில்லையின் மகன் குகன், தனது பிக்கப் வாகனத்தில் நண்பன் ஜேம்ஸுடன் சேர்ந்து ஏற்றி வந்து பறிப்பதற்குச் சமதித்தான்.கமல் காரை கராஜ்ஜுக்கு வெளியே நிறுத்தினான். "மனுசனுக்கு அரளை பெயர்ந்து விட்டது "என புறு புறுத்துக் கொண்டு நின்ற அன்னமும் பிறகு திட்டுறதை விட்டு விட்டு வேலை செய்பவர்களிற்கு கோப்பி,தேனீர் உடன் சன்விச்சும் செய்து கொண்டு போய்க் கொடுத்தாள்.
பார்க்கிற்கு வந்து பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுகிற நகரத் தொழிலாளர்கள் இருவர் வேறு இருந்தார்கள். ஆனால், அவர்கள் வியாளனும்,வெள்ளியிலும் வருவதில்லை.அந்த நாட்களை வேலையில் இறங்குவதற்குத் தீர்மானித்தார்கள்.சிலவேளை அவர்கள் உடைத்துப் போட்டால்..? எனவே அவர்களுடனும் கதைத்தார்கள்.கிழவர்களைப் பார்க்க பாவமாக இருந்திருக்க வேண்டும்.அவர்களிற்கு அப்படி ஒரு பிரச்சனை இருப்பது தெரியும்.எனவே,"நாங்கள் உடைக்க மாட்டோம்.ஆனால் எங்களுக்குத் தெரிந்ததாக இருக்கக் கூடாது,காட்டிக் கொள்ளக் கூடாது" "என்றார்கள்.
ஜேம்ஸும், குகனும் பின் பக்கம் அரைவாசியாக திறந்த (பிக்கப்) வாகனத்தில்,இரண்டு,மூன்று தடவைகள் வடிவமைக்கப்பட்ட மரக்குத்திகளை,பலகைகளை ஏற்றி,ஏற்றி வந்து பிரகலாதன் பார்க்கில் ,கார்ப் பார்க்கிங் பகுதியில் விரைவாக பறித்து விட்டு பறந்தார்கள்.உதவி மட்டும் தான் மாட்டிக் கொண்டு அல்லல்பட எல்லாம் தயாராகவில்லை.கிழவர்கள் அவற்றைக் காவிக் கொண்டு போவதைப் பார்த்து இரக்கப்பட்டு,சீன கிழவர் பட்டாளமும் உதவிக்கு வந்தது.நடக்கிற இரண்டொரு இளைஞர்களிற்கும் ,சிரிப்பு பொத்திக் கொண்டு வர "என்ன நடக்கிறது?"என தில்லையிடம் கேட்க,அவர் ,ஏதோ சொல்ல ஒன்றும் விளங்கவில்லை, ஆனால்,உதவிக்கரம் கொடுத்தார்கள்.
மச்சுப்படிகள் வைக்கிற இடத்திற்கு அரைமணியில் எல்லா பொருட்களும் சென்று விட்டன சதாவும்.,சுரே ஸும்,பொன்னரும் ...மற்றவர்கள் எடுத்து,எடுத்துக் கொடுக்க மளமளவென மச்சுவைப்… பொறுத்தினார்கள்.நட்டு,கிட்டு என எந்த இரும்பு பொறுத்துச் சாமான்களும் உபயோகிக்கவில்லை.மரச் சுத்தியலும் , மரக்குற்றிகளும்,பலகைகளும் ,சிறு சிறு மர உருளை போன்ற நட்டுகளும் தான்.சுரே ஸுக்கு சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. சதா ,பொன்னருக்கு எப்படி வைத்து இறக்கிறது என்பதை கராஜ்ஜிலே வைத்து வகுப்பு எடுத்திருந்தார்.
பொன்னர் தன்னைப்பற்றி பெரிதாய்ச் சொல்லவதில்லை.அவர் ஒருவேளை பொறியியலாளராக கூட வேலை பார்த்தவராக …இருக்கலாம். மர்மமாக இருக்கட்டும். கற்பனையிலாவது ....அந்த வேலையை பார்த்ததாக இருக்கட்டுமே. ஆசைகளையும் …இனம்,மதம்,மொழி.. இப்படி ஏதாவது ஒரு வில்லங்கம் வந்து அவற்றையும் கூட அகதியாக வெளியில் விரட்டிக் கொண்டே கிடக்கின்றது அல்லவா.
வேற இடத்திலிருந்து பஸ்ஸிலே வந்து இறங்கி அந்த பார்க்கிலே கூட்டாளியானவர்.அவர் மனைவிக் கிழவியும் அவரோடு வந்து கொண்டிருந்தவர் தான்.அண்மைக் காலத்தில் மழை ஈரத்தில் சிவகாமி சறுக்கி ...நிலத்தில் தொப்பென இருந்து விட்ட மாதிரி விழுந்து விட்ட பிறகு ,அவளும் ஸ்ரைக் பண்ணுகிறாள்.
வேற, பார்க்கிற்கு போகவும் அவள் பிரியப் படுறாளில்லை. சினேகிதிகளை இழப்பது.. ஒரு.பொருட்டில்லையா? பொம்பிள்ளைகள்,என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியவே முடியாது.அவருக்கு இந்த பார்க்கை விட்டுப் பிரிய மனம் வரவில்லை.
”உங்களுக்கென்ன விழுந்தால் தட்டிப் போட்டு எழும்பி நடப்பீர்கள்.எங்களால் அது முடியாது."என விதண்டா வாதம் நடத்தி மோல்வழியே யோக செய்யிற குழுவோட போய்ச் சேர்ந்து விட்டாள்.".அதற்காக அந்த காறோட்டமில்லாத இடத்திற்குப் போய் கிழம்களோடு டான்ஸ் ஆட அவர் பிரியப்படவில்லை .
தொடர்ந்தும் இங்கேயே வருகிறார். அவர்க்கு இவர்களின் நட்பு பிடித்து விட்டது தான் ... முக்கியக் காரணம். பிரச்சனைகள் எங்கே தான் இல்லை? வெல்லப்பட வேண் டியவை. முடிவுகளையும் நிதானமாக எடுக்கப் பழககிறதும் முக்கியம் .
“அவர் ,பிராக்குப் பார்த்து நடந்திருபார், விழுந்திருக்கிறார். நாம் பார்த்து நடந்தால் ஏன் விழப் போறோம்? வாருமன்"என தம் தேவியை கடைசி முறை யாகக் கேட்டுப் பார்த்தார். " உமக்கு எங்களிலே எப்பவும் இளக்காரம் தான். நாம் விழுந்தால் விழுந்த மாதிரி தெரியிறதில்லை ,நீர் விழுவீரே தானே ,அப்ப நாம் கேலி செய்கிறோம்” பெட்டைக் கோழியாகச் சீறுகிறாள்.
முதலில், இந்த பயத்தைக் களைய வேண்டும் அவருக்கு நீச்சல் தெரியும்.இவளுக்குத் தெரியாது. அவர் மரதன் ஓடியிருக்கிறார்.இவள் ஓட்டம்,கீட்டம் எதிலும் பங்கு பற்றி இருக்கவில்லை.சம உரிமைப் பேசி பிரயோசனமில்லை,சம ரீதியில் ஓட வைத்தாலன்றி இவர்களின் பயங்களும் போகாது.அதற்கு. எங்க கையிலே அரசாங்கம் வர வேண்டும். பவர் கையிலே இருக்க வேண்டும்.
பெடியள் போராடுவதும் மெத்தச் சரி தான். 13ம் திருத்தச் சட்டம் வந்தும், அமுலுக்கு விடுறார்களில்லையே. கணக்கு வாத்தியரான இந்தியா சரியாய் ,கையில் வைத்திருக்கிற கம்பை பயன்படுத்துறதில்லை. அடியாத மாடு படியாது தான் இல்லை, இலங்கை யானையும் கூடத் தான்.
இவளும் எனக்கு பணியிறாளில்லை. முடிவெடுத்தால்… முடியாது தான்.அப்ப நீர் மோலுக்குப் போய் வாரும்.நான் ...அங்கே போய் வாரேன்"என சரணாகதிக்கு வருகிறார்.
விழுந்தும் கன காலமில்லை. சொல்லி வைச்ச மாதிரி எல்லார்ர பாரியாரும் வாரது நின்றதாலே ரோசம் பொத்திக் கொண்டு வர, இப்படி ஒரு காரியம் நடக்கிறதைப் பற்றி தில்லை அவர்க்குத் தெரிவித்தார்.
"தம்பி , உமக்குத் தெரியுமா? அதைப் பாரும்.நிலத்தில் கிண்டினால் தோண்டினால், ஏதாவது தாட்டால் 5000 டொலர்கள் அபராதம் என்ற அறிவிப்புப் பலகையைக் காட்ட"நாங்கள் எதையுமே கிண்டப் போவதில்லையே கட்டையை வைத்து அடித்து இறக்கத் தானே போறோம்".என்ற அவருடைய அசட்டு ப் பதிலை நினைக்க சிரிப்பும் வருகிறது.
“ நாங்கள் கிழவர்கள்.எங்களை இவர்கள் பிடித்து சிறையில் போடேலுமோ அதையும் பார்க்கலாம். இவர் அடுத்த முறையும்,மேயராக வருவாரா? “
பொன்னருக்கு சிரிப்பு பொத்திக் கொண்டு வந்தது. இவர் வாக்கு போட்டுத் தான் மேயர்கள் வருகிறார்களா? அவர்க்கு அவருடைய யூத வாக்குகளே நிறையக் கிடக்கின்றன. இந்த மேயர் தான் அதிக வயதானவர். இரக்கக் குணத்தால் வேண்டுமானால் மன்னிச்சு விடலாம்.
நான் ஈழத்தில் தான் விடுதலைக்குப் போராடிச் சிறைக்குப் போகவில்லை.இங்கையாவது போய் தான் பார்ப்போமே, என்று நினைக்கிறார்.அவர்க்கு இவர்களிடை யே ஒரு விசயம் மட்டும் நல்லாய் பிடித்து விட்டிருந்தது.மனைவிமாருக்காக வசந்த மாளிகை கட்டுவது போல மச்சுப் படிகளைக் கட்டுறது தான்.
எம் நாட்டை, சிங்கள நாடு பறித்து விட்டது துயரமாகவே இருக்கிறது.
காலனியாட்சியாளர்கள் சுதந்திரம் வழங்கி விட்டுப் வெளியேறிய பிறகே,பாளி மொழியைப் பேசிக் கொண்ட குழு ஒன்று அங்குள்ள பல்வேறு மக்களைச் சேர்த்துக் கொண்டு,பாளியில் விருத்தியான சிங்கள மொழியையை பேச வைத்து,சிங்களவர்களாக பெரும்பான்மைக் கணக்கைக் காட்டுறது மோசம் அடைந்தது, அடிப்படையிலேயே சிங்களவர் என்பவர் தாம் யார் ? 'சிங்கல 'பாளிச் சொல்'(வடமொழியில்)கறுவா என்பதெனச் சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில் “சினமன்”. சில எழுத்துகள் அவர்கள் வாய்யில் நுழையாது. சினமன்,சிங்கல கிட்ட, கிட்டவே வருகின்றன. இலங்கையில் கறுவாப் பயிர்ச் செய்கை செய்த ஒரு குழுவினரே,இன்று சிங்களப் பெரும்பான்மை என இயம்பப் படுகின்றனர்.
திரும்பத் திரும்ப கலிங்க அகதிகளே நினைவுக்கு வந்து தொலைக்கிறார்கள்.அவர்கள்,இவர்களுடன் சேர்ந்து விஸ்பரூபமெடுத்த வரலாறே இன்றைய சிங்களவர்கள். அறுந்த அசோகன் அந்தப் போரை நடத்தாமல் விட்டிரு ருந்தால்...மேற் கொண்டு பல போர்கள் வரலாற்றில் இடம் பெற்றே இருக்காது போல தோன்றுகின்றது.
ஏதாவது பழைய வரலாற்று தொல் அடையாளங்கள்,குறிப்புக்கள் எங்கையாவது கண்ணில் பட்டு விடுமா என குழப்பன் காய்ச்சலிலும் இருக்கிறது.தென்பட்டால், உடனடியாக அழித்து விட்டு தான் மறுவேலை பார்க்கிறது .
சிங்களவர்களில் படிப்பறிவுடைய தலைவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் கட்டளையின்படியே யாழ்ப்பாண நூலகம் எரிக்கப் பட்டிருக்கிறது.அங்கிருந்த பழைய சுவடிகளைப் பற்றி யாரோ சிலர் பயங்கரமாக அவர் காதில் திரித்துப் போட்டிருக்க வேண்டும்.உடனே தன்னைப் போல துவேசமிக்கவர்களை அனுப்பி வரலாற்றிலே ஒரு மாபெரும் தவறைச் செய்திருக்கிறார். இவரைப் போன்றவர்களே தொடர்ந்தும் அங்காலப் பக்கம் இருந்து கொண்டே இருக்கப் போறார்கள்.
இவர், புத்தரைப் பின்பற்றுறது என்று சொல்லுறது எல்லாம் புலுடா !, நானும் ஒரு சிங்களவர் என நிலைநாட்டுவதற்கான ஒரு பிரச்சாரம் மட்டுமே. இவருடைய பூட்டர் கூட ஒரு தமிழர் எனச் சொல்லக் கேள்வி. கிருஸ்தவ மதத்தில் வேறு இருந்த குடும்பம் .
பொன்னருக்கு மட்டும் தோன்றி என்ன ஆகப் போகிறது?, தோன்றுவருக்கு அல்லவா தோன்ற வேண்டும்! நெருப்பு மூச்சே அவரிடமிருந்து வெளிப்படுகிறது.
அந்த சிங்களக் காவலர்களிற்கே பயப்படாதவர்கள்.இங்க வந்தா பயப்படுவார்கள்? உள்ளுக்க வீரம் சிறிது உ தறத் தான் செய்கிறது.மனைவிக்கு முன்னால் எப்பவுமே துணிச்சலானவர், அந்த பிம்பம் குலைந்து விடக் கூடாதே.
தில்லையின் அரைகுறைப் பதி லும்...இவரை சிந்திக்க தான் வைக்கிறது .”இந்த அறிவிப்புப் பலகைகள் எல்லாமே சுதேச மக்களை இலக்காக வைத்து தான் நடப்படுகின்றன.இந்த பார்க்கின் பழையப் பேரைத் தேடிப் பாரும்.அழகான ஒரு சுதேச பெயர் பெயராக கிடக்கும். நான் தற்போதையப் பெயரைக் குறை கூறவில்லை.பிரகலாதனுக்கு ‘சலூட்’ அடிக்கத் தான் வேணும்.”
பிரகலாதன் என்ற நீச்சல் தெரிந்த தமிழ் ஈழச் சிறுவன் ஒருவன் இந்த பார்க்கில் ஓடுகிற நீரோடையில் வெள்ளமாக பெருக்கெடுத்தோடிய சமயத்தில், நண்பனோடு நடந்து வந்த போது,சிறுவர்கள் தானே,வேடிக்கை பார்க்கவும் கூட வந்திருக்கலாம்,நண்பன் சறுக்கி விழுந்து விட,யோசித்து நேரத்தைக் கடத்தாமல் துணிச்சலுடன் பாய்ந்து நண்பனைக் கரைக்குத் தள்ளினான்.பார்க்கில் நின்ற ஓரிருவர் ஓடி வந்து கரையில் இழுத்து போட்டு அவனைக் காப்பாற்றி விட்டார்கள்.பிரகலாதனால் கரையில் ஏற முடியவில்லை .குளிரில் விரைத்துப் நீரோடு இழுத்துச் செல்லப்பட்டு விட்டான்.
இறந்து போன அவனுக்கு விருதும் வழங்கப் பட்டு,பார்க்கிற்கும் அவனுடைய பெயரையே நகரசபையும் சூட்டி கெளரவித்திருக்கிறது.பார்க்கில்,வருசாவருசம் நகரசபை உறுப்பினருடன் பலரும் கூட நின்று அந்த நாள் நினைவு கூரப் படுகிறது ..நம் கிழவர் குழுவும் அதில் பங்கு பற்றுறவர்கள்.
ஆனால்,சிறிலங்காவில், தமிழ்ப் பிரதேசங்களின் தமிழ்ப் பெயர்களையே சிதைத்து சிங்களத்தில் மாற் றி வைப்பது பெரும் சூழ்ச்சி..அதில் சிங்கள மணம் ஓரேயடியாய் அடிக்கிறது, குமட்டுறது. இங்கேயும், பல்கலாச்சாரம் என்றாலும்...பண்பு விழுந்துப் போய் கிடக்கிறதும் தெரிகிறது தான் .
நமக்கேன் வம்பு? ஜனநாயகம் அதன் பாட்டிலே வாழட்டுமே என தனக்குள் நினைத்துக் கொள்கிறார்.எவருக்குமே வெளியில் ஒரு வடிவம் வேண்டியே கிடக்கிறது.சிங்களவர்களில் அந்த வீதம் சற்று கூடிப் போச்சுது . நாமும் அரசியல் காரணமாக அந்த லென்ஸால்லே அங்கே உள்ள அனைவரையும் பார்க்கிறோம்
என்ன செய்வது நாமும் பலவீனமானவர்கள் தானே. இங்கே, சுதேச மக்களின் உரிமை மறுப்புகளிற்கு மேலே நின்று நாமும் விழாக்கள் நடத்தி வாழவில்லையா? வாழ்றோமே.அங்கே சிறைகளில் தமிழர் போல,இங்கத்தைக் பல்கலாச்சாரச் சலுகைகளிற்கு நாமும் விலை போய், இங்கத்தைச் சிறைகளில் அடைக்கப்பட்ட சுதேசிகளைப் பற்றி எந்தவித அக்கறையற்றும் இருக்கிறோமே. அதே போல மற்றச் சிங்களவர்களும் தமிழர்களையும் மறந்து விட்டிருக்கிறார்கள் அகதிகளிடமும் கூட நீங்கள் கனக்க கேள்விகளைக் கேட்காதீர்கள்.அவர்களிற்கும் சரி வர பதில்கள் சொல்ல வராது
பட்டி மன்றங்களைப் போல நட த்துவதிலும் எந்த வித அர்த்தமுமில்லை தான்.காந்தியை,புத்தரைப் போல அடிப்படைகளையே மாற்ற முயலுங்கள். அவற்றிற்காகவே குரல் கொடுங்கள்.அதில் தான் அர்த்தம் நிரம்ப இருக்கின்றன.
அவர் வருகிற போது சப்வேய்யில் சிறு ரயிலுக்காகக் சிறிது நேரம் காத்து நின்றார்.அதிலே ,"நுழைவுச் சீட்டைப் பெறாமல் ஏறினால்...,அந்த குற்றத்திற்காக 450 டொலர்கள் அபராதம்"என்ற அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.வீடற்ற ஒரு பேர்வழி"எங்களை இலக்காக வைத்து தான் அறிவுப்புச் செய்கிறார்கள் என்று "இங்கத்தைய செந்தமிழிலே ஏசிக் கொண்டிருந்தான்.அட ஆமா,இல்லையா? பிடிக்க வருகிற அதிகாரிகளுடன் வார நகரக் காவலர்கள், இவர்களையல்லவா பிடித்து சிறையில் போடுகிறார்கள்.
எல்லா நாட்டுச் சட்டங்களும் அப்படித் தானே இருக்கின்றன.உண்மையிலே யார் தான் நீதிபதி? நீதவானா,இல்லை வீடற்றவனா?.வீடற்றவன், தெளிவாய் இருக்கிறானே.
எத்தனை முட்டாள்த் தனமாக சட்டங்கள் இயற்றப்படுகின்றன.எல்லா நாட்டிலேயும் கிடக்கிற பெரிய பலம்."எனக்கு இயற்ற மட்டுமே தெரியுமே தவிர.அவற்றை மாற்றவேத் தெரியாது". என்ற திமிரு. ஆனால்,உண்மையில் அது பலவீனம் தானே, அதை, உணர, அரசும் கூட இவர்களைப் போல தொண்டுக் கிழவர்களாக, ஆக வேண்டுமோ ?
அவருடைய மனதிலே, மனைவி பாக்கியம், இன்னம் ஓடிப் பாடுற காதலியாய்த் தான் வீற்றிருக்கிறாள்..இப்படியே நினைத்துக் கொண்டு வந்தால் என்னால் சாமியாராக முடியவே முடியாது...எனச் சிரித்துக் கொண்டே சிந்திப்பதை நிறுத்தினார்.தன் முன்னால் நிற்கிற கிழவர்களிற்கும் மனைவிமார் அதே மாதிரியான நிலையில் இருப்பதால் தானே இளைஞர்களாய் மாறி ,முதுகு, நாரி நோக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.வலிகளைத் தாங்கிறதிலும் ஒரு சுகம் கிடக்கிறது தான்.
அவரிற்கு வயசானாலே வருகிற , சிறிய நோ ஒன்று ,வலக்கால் சின்னி விரலுக்கு கூட்டாளியான அடுத்த விரலுக்குக் கீழே தொடங்கி இருக்கிறது.இனிமேல் வோக்கர்,கம்பு எல்லாம் தேவைப்படுமோ?என்ற பயமும் மூளையைக் கிளர்றது. இந்த நோ,அடுத்த மாசம் முழங்காலிற்குக் கீழே உள்ள ஆடுதசையிற்கு நகர்ந்தும் கூட விடலாம்.
பாலச்சந்தரின் இரு கோடு தியறியைத் தான் முதலில் முயல்வார்.காலில் நொந்தாலும் கூட விறுக்,விறுகென நடப்பதை நிறுத்தவே மாட்டார். சிலவேளை, காலில் இன்னொரு நோ எழுந்து ,இந்த நோவை சிறிதாக்கிப் போடும்.சிலவேளை ,சமமாக்கி குறைத்தும் விடலாம்.
இன்ன இடத்தில் தான் ‘நோ’ என வைத்தியம் செய்யிறதும் முட்டாள் தனம் என அனுபவத்தில் உணர்கிறார் உடம்பில் ‘நோ நகர்றதும் என்பதும் உண்மை தான்.
இவருக்கு முதல் வைத்தியர் இவர் தான்.ஒரு மாசம்,இரண்டு மாசம் என பரிசோதனைக் காலத்தை நீடித்துக் கொண்டேயிருப்பார்."இந்த மனிசருக்கு சரியான விசர் "என பாக்கியத்திடம் திட்டு வாங்காத நாளில்லை.ஆனால், பிடிவாதக் கட்டை. அவரின் பொறுமை எல்லாம் பாக்கியத்திடம் ஏது ?
தில்லை ,அவருக்கு இன்னொரு வைத்திய முறையையும் விளக்கி இருந்தான். அது யோகா." எதுவும் புதுப், புதுப் பிரச்சனைகள் வர,வர, வர …தலை , வெடிக்கிறது போல இடித்து சுனாமி போல தலையில் அலைகள் கொந்தளிக்கத் தொடங்கி விடுகிறது பார் . அந்த நேரம்,தரையிலே,ஒரு அரை மணி நேரம்,பத்மாசனம் போட்டுக் கொண்டு இருந்து ,கையிலே குட்டி ரபர் பந்தை,இதை சொப்பர் றக்மார்டிலே வாங்கலாம்,வைத்து,நசித்துக் கொண்டு இருந்துட்டு எழும்பு.தலையிலே சீராக அலைகள் ஓடுவதைப் பார்ப்பாய்.எதையுமே கடக்கும் மட்டும் தான் பதற்றமும் ,கூடைப் பயமும் பிடித்து ஆட்டுகின்றன.கடந்த பிறகு, எல்லாமே பழங் கஞ்சி.
இப்ப,இலங்கைப் போரை ப் பார் எத்தனைப் பேர் பேசுகிறார்கள். மறந்து போற காலம் .இது தான் சாட்டு என போர்க்குற்றவாளிகளும் தப்பி விடலாம் என நம்புகிறாரில்லையா?,அதைப் போலத் தான் "என்கிறார். எப்படியோ,,இந்த அரை மணி நேரத் தியானம் எமக்கேற்படுற பதற்றத்தை கொஞ்சம் குறைத்து விடுகிறது தான்.
தம்பியர், என்னை விட வலு அனுபவஸ்தராகி கிடக்கிறார் "அடிப்படையில், நமக்கு எதையும் தாங்கும் மனசு வேணும், என்கிறார். நாம் தாங்கக் கூடியவர் தாம்.தாங்கிக் கொண்டு நிதானமாக சிந்தியும்'என்கிறார்.அவசரப்புத்திக்காரனாக இருந்தாலும் எனக்கு குருஜியாகவும் வருகிறார்.
விடுதலைக்காக போராடிய இளைஞர்களும் மச்சுபடி கட்டுறது போன்ற ஒரு சுகத்தை அதிலும் அனுபவித்திருப்பார்களோ ? பெடியள்களில் மீது… அவருக்கு என்றுமில்லாத ஒரு பட்சாபமும் முதல் தடவையாய் எழுகிறது. கூடவே சிந்தனையும் எங்கேயோ பறக்கின்றது.
சிறிமா , சமூக சேவைகளிலும்,செயற்பாட்டிலும் இனச்சார்ப்பற்று அக்கறை கொண்டிருந்தவர் என்ற விதத்தில் நல்லவர். அந்த அம்மையா ரும், உடனடியாக மாறி கொடூரமானவராக மாறி இருப்பார் என்பதை அவரால் அன்றும் இன்றும் நம்ப தயராகவில்லை. எதிர்பாராமல் அரச தலைவரான அவருக்கு போதிய அரசியல் அறிவு இல்லாமல் பூஜ்யமாக கிடந்தது உண்மை .சூழ இருந்த இனச்சார்பான அரசியல்வாதிகள் ,அச்சூழலில் எதிர்மறையான பல காரியங்களைச் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
,மலையகத் தமிழர் சம்பந்தமான அநீதியான ஒப்பந்தம் கை எழுத்தானது, ,கல்வி மந்திரி,கிழக்கு மகாண முஸ்லிம் இளைஞர்களை பட்டதாரிகளாக்கும் ஆசையில் கல்வியில் மொழிவாரியானத் தரப்படுத்தலைக் கொண்டு வந்து சட்டமூலமாக்கி விட்டது,இச்சட்டம் மூலமாக சிங்கள மாணவர்கள் பெருவாரியாக பட்டதாரிகளாக கதவைத் திறந்து விட்டிருந்தாலும் கூட,அச்சமயம் ஆளும் அரசியலிருந்தவர்கள் அதை உவப்போடு வரவேற்றிருக்கவில்லை.
படித்த வேலையற்ற சிங்கள பட்டதாரி இளைஞர்கள் தான் ஆட்சியை கவிழ்க்க புரட்சியில் இறங்கியவர்கள்.கிட்டத்தட்ட சிவப்புக் கோட்டையேக் கடந்து விட்ட நிலையில்,சிங்களத் தரப்பு முதலில் பாகிஸ்தானிடம் தான் உதவிக் கோரினார்கள் எனச் சொல்லப்படுகிறது.இந்தியாவுடன் ஒப்பிடுகையில்...இது இலங்கைப் போ ன்ற சிறிய நாடு.அமெரிக்காவின் கரம் நீண்டு, அதற்கூடாக நீள வேண்டும்.
சீனாவிடமும் அழைப்பு சென்றது.ஆனால்,சீனா அப்பவும் வல்லரசு தான்,பொருளாதாரத்தில் உச்சியிற்கு சென்றிருக்கவில்லை.ஒரு எல்லை வரையிலே அதனால் கை கொடுக்க முடிந்தது.பஞ்சத்திலிருந்து மீள்வதற்கான உதவிகள் ,ஆலோசனைகள்...மரவள்ளிச் செய்கைகள்,கடலட்டைகள் பிடிக்கத் தொடங்கியதிலிருந்து ,அவற்றை நல்ல விலையில் வாங்கியது வரை...,ஏன் முதன் முதலாய் சீனத் தயாரிப்பான லான்ட் மாஸ்ரர் என்ற பல்வேறு தொழில்களைப் புரியிற சிரிய வோட்டர் பம் கணக்கான ,கட்டு மஸ்தான உடற் பயிற்சிக் காரன் ஒருத்தனே தூக்கி பயிற்சி செய்யக் கூடிய அதிசய மெசின் இலங்கையில் வந்திறங்கியதும் அப்ப தானே.
இருந்தும் புரட்சியில் இறங்கிய குழுவில், சீன மார்க்சியம் பேசியது,கியூபாப் புரட்சியைப் பேசியது...என ஏகப்பட்டக் குழப்பம். இருந்தாலும் நாடுகள்,நாடுகளிற்குத் தான் உதவுமே தவிர ,மற்றவையிற்கில்லை.
இலங்கைப்படையினர்,நிறையச் சிங்கள பட்டதாரிகளை கொன்றுக் குவித்திருந்தார்கள்.இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போல்,அன்று தலை இல்லா முண்டங்கள் களனியாறு தொட்டு எங்கும் அவர்கள் கிடந்தனர். அந்த நிலையில் எப்படி மேலும் , மேலும் சிங்களப் பட்டதாரிகள் வேண்டும் என விருப்புவார்கள்?அவர்கள் நகரப்புரம்,கிராமப் புற எழுச்சியுறுமே என்கிறீர்களா?கிராமப் புறங்களே புரட்சியின் கோட்டைகளாக அந்நாளில் திகழ்ந்தன. அதனால்,ஒரு கிராமத்தையே முற்றாக அழித்தார்கள் என்றும் சொல்லப் படுகிறது.
அப்ப, "மொழிவாரியான தரப்படுத்தல்"என்ற வார்த்தை வலு அலங்காரமாக இருக்கின்றதே.முஸ்லிம் அமைச்சர் பலே கில்லாடி.சட்டமூலமாக்க அலங்காரங்கள் தேவை. எனவே பயன்படுத்திக் கொண்டார்.
காரணம் இலங்கை ,சிங்களச் சிறிலங்காவாகத் தான் இயங்கிறது.முஸ்லிம் தமிழர்கள் இல்லையா?இல்லை என்பது தான் சிறிலங்காவின் பதில், ,கொள்கை.முஸ்லிம்களும் அவ்வாறே தான் அரசியலில் செருகி நிற்கிறார்கள்.இலங்கையின் சனத்தொகை என கூறப்படும் போது,ஈழத் தமிழர்..15 வீதமானவர்கள்,முஸ்லிம்கள் 8 வீதமானவர்கள்,மலையத் தமிழர் 2 வீதம்...எனவே தொடரச் சொல்லப்படுகிறது.மொழிவாரியில் மூவருக்கும் தாய் மொழி தமிழாகத் தானே இருக்கின்றன.பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட தமிழரையும் சேர்த்தால் 40 வீதமானவர்கள் ஈழத் தமிழர்கள்.மூன்றில் ஒரு வீதத்தினர் தமிழர்.
சிங்களவர்களில், மூன்றில் இரண்டிலும், சேர்க்கப்பட்ட சாதிச் சிங்களவர்களும் மணமுடித்ததால் சிங்களவராகிய பல்வேறுப் பட்ட பகுதியினரும் உள்ளடக்கப் பட்டிருக்கிறார்கள். குருநாகல் பகுதியில் கஜூப் பெண்களைப் பார்த்திருக்கீர்களா..?கஜூப் பெண்களையே தெரியாதென்கிறீர்களா?கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ,சிங்களவர்களைக் காட்ட ஒரு பாட்டு வருமே அதில் சிறிது காட்டிருப்பார்கள்.
ஒரு தடவை, பொன்னர் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப் பட்ட அலுமினியப் பானைகள் விற்பனைக்காக மட்டக்களப்பு,குருநாகல்,மலையகம்..என பல்வேறு இடங்களிற்கு லொரியில் எடுத்துச் சென்ற போது,அச்சமயம்,லொரி ஓட்டுனர்,விற்பனையாளருடன் உதவிக்கு சென்ற ஒருத்தராக சென்றிருக்கிறார் .
விற்பனையாளர் என்றால் .... பொன்னரின் வயசுடைய,நண்பனே இருந்தான்."லண்டனில் தமிழர்கள் ஒன்று பட்டார்கள்.."என்ற சீர்காழியின் பாட்டுகளுடனே ஓட்டுனர் வண்டியைச் செலுத்துவார்.சீர்காழியின் குரல் ஒருத்தரையுமே தூங்க விடாது.இருந்தாலும் ஒட்டுனருக்கு பக்கத்திலே ஒருத்தரா வது தூங்காதிருந்து அலட்டிக் கொண்டு போக வேண்டும். மற்றவர்,பின்னால் போய் தூங்குவார்.
அப்படி கண்டி வீதியா,நுவரேலியா வீதியா..அல்லது இரண்டும் ஒன்றா தெரியாது..குருநாகல் பகுதியில் வீதியில் கஜூ விற்றுக் கொண்டிருந்த பெண்களைப் பார்த்தார்.கேரளத்திலிருந்த பெண்கள் வான் வழியாக பறந்து வந்து இங்கே இறங்கி விட்டிருந்தது போல இருந்தார்கள்.
இப்ப,இணையத்தில் ஒரு கட்டுரையை அவர் வாசிக்கிற போதே,கண்டி மன்னனின் படையில் கேரளத்தைச் சேர்ந்த சேரர்கள் படை வீரர்களாக இருந்தார்கள்.மன்னராட்சி நலிவுற்று வீழ்ச்சி பெற,அச்சேர வீரர்கள் யாருமே தற்போது மலையகத்தவர்களின் பிரஜாவுரிமை பறிக்கப் பட்டது போல ,பறிக்கப்பட்டு நாடு திரும்பவில்லை. முழுமை என்று சொல்ல இது ஒன்றும் கணிதப் பாடமில்லையே.ஒரு சிலர் திரும்பி இருக்கிறார்கள் தான்.கேரளத்தில் உள்ள 'ஈழவர்'என்ற சாதியினர் இவர்களாகக் கூட இருக்கலாம். அந்த ,சிங்களப் பெண்களை மணமுடித்த சேர வீரர்களின் தொடர்ச்சியாக அந்த கஜூப் பெண்கள் கூட இருக்கலாம். ஆய்வுகள் சிரமமானவை.அவை தரும் முடிவுகள் ஆச்சரியமூட்டுபவை.
பொன்னருடைய ஆச்சி சொல்றது போல"எட,தம்பி,சுத்திச் சுத்திப் பார்த்தா...கொல்லையிலே வந்து அள்ளுகிற சுப்பனும் கூட எங்க சொந்தக்காரனாகத் தான் இருப்பானடா" என்பார். உண்மை போலவே இருக்கின்றது.
ஒரு காலத்தில் சிங்கள அரசர்களை கதிகலங்க வைத்த பாண்டியர்களை ஒரு சிங்கள அரசன் வெற்றி கொண்ட பிறகு ,அதிலே சிறை பிடிக்கப்பட்ட பாண்டிய வீரர்களை ஒதுக்குப்புறமாக குடியிருக்க வைத்து ,கெளரவக் குறைவாக அவமானப்படுத்தி, நடத்தி சமூகத்தில் குறைவாக கருதப்பட்ட வேலைகளை அவர்களைக் கொண்டு செய்வித்தான்...என்றும் இதே இணைய வழியில் தான் இன்னொரு தகவலையும் அறிகிறான்..அவர்கள் தான் ‘பள்ளர்கள்’ என பெயர் மறுவி அடிமைக் குடிமைச் சாதியினராகினர் என்கின்றனர்.யாழ்ப்பாணத்திலுள்ள இச்சாதியினர் அங்கே இருப்பவர்கள் ஏற்படுத்தியவர்கள் இல்லை.சிங்களவர்கள் ஏற்படுத்தியவர்கள் என்கிறார்கள்.
எல்லாச் சமூகங்களிலுமே நல்லவர்கள்,கெட்டவர்களென இரு பிரிவினர் இருந்து தான் தொலைக்கிறார்கள்.அதற்காக எல்லாரும் அவர்களே, …என்றில்லை தான் .கிளறப் போக...இப்படியே வருகின்றன.
அது சரி, 'ஆச்சி'என்ற சொல்லும் ,ஐயா என்ற சொல்லும் தமிழ்ச் சொல்லே,இல்லை சிங்களச் சொல்...என்ற சர்ச்சை யும் கூட இருக்கிறது. அவை திராவிடச் சொற்களாக இருக்கலாம்.திராவிட மொழியை பெரும்பாலும் கொண்டதாக தமிழ் மொழியும்,கிளையான மொழியாக சிங்களமும் இருந்தால்...அச்சொற்கள் இரண்டு மொழியினதும் தானே.ஆனால், இச்சொற்களை அதிகமாக பயன்படுத்துறவர்கள் சிங்களவர் தான்.தமிழர் இல்லை.
அருமையாக பொன்னர் வீட்டிலே அம்மம்மாவை “ஆச்சி” என்று கூப்புடுகிறார்கள். அவரும் கூப்பிடுகிறார் சில வீடுகளில் ,அப்பாம்மாவையும் ஆச்சி என்றே கூப்பிடுற பொது வழக்கு இருக்கின்றது . பொன்னர்ர ஆச்சி,தன் புருசனை, அதாவது பொன்னரின் தாத்தாவை "ஐய்யா"என்றே கூப்பிட்டார்.ஏன் கூப்பிட்டார்?என்று தெரியாது. பொன்னரின் அம்மா வும் ,அவருடைய அப்பாவை “ஐய்யா” என்றே கூப்பிட்டார். பிள்ளைகள் கூப்பிடுறதுக்காக ,சொல்லிக் கொடுக்க... கூப்பிடுறதும் இருக்கிறது தான் .
பொன்னரின் வவுனியா நண்பரும் ,அவருடைய அப்பாவை ஐய்யா என்றே கூப்பிடுறான்.அங்கே சிங்களத் தொடர்பு அதிகம் என்றதால் இல்லை.யாழ்ப்பாணத்திலிருக்கிற அவருடைய சகோதர் வீடுகளிலும் அப்பாவை ஐய்யா என்றே கூப்புடுகிறார்கள்.நண்பனோட கூட சென்ற போது கேட்ட ஆச்சரியம்.
சிங்களத்திற்கும் ,மளையாளத்திற்கும் இடையில் நீண்ட காலமாகவே இருந்த, சிலவேளை தொல்காலத்திலிருந்தே பல தெரியாத தொடர்புகள் இருந்திருக்கலாம் .படை வீரர்களாக இருந்த ஆண்கள் சிங்களப் பெண்களை மணமுடிப்பது இலகுவாக இருக்க மொழியிலும் இலகுத் தன்மை இருந்தல் வேண்டும். சிங்களமும்,மலையாளமும் திராவிட மொழியிலிருந்து பலவித நெருக்கமானத் தன்மைகளைக் கொண்ட…பிறந்த கிளை மொழியினர் என சில வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.எங்கை, எங்கையோ தொடர்புகள் கிடக்கின்றன .இரண்டின் எழுத்துகளும் வட்ட வடிவ எழுத்துகளாகவும் வேறு இருக்கின்றன. முற்பாண்டியர் காலத்திலும் திராவிட (தமிழ்)எழுத்துக்களும் வட்டெழுத்தாகவே இருந்திருக்கின்றன.
பொன்னர் 'சேர'என்றச் சொலே கரவ,கராவ..என திரிந்த சிங்கள சாதியினர் ஆயினர் …என இன்னொரு கட்டுரையிலும் வாசித்திருக்கிறார். ஜே.வி.பி.இன் வாக்குகள் பெரும்பாலும் இப்பிரிவிலே இருக்கின்றன'என்கிறார்கள்.வீரம் துள்ளி விளையாடுகிறது.அந்த வயதில் அவர்களைப் பார்த்த போது அவருக்கே அழியாத கோலம் திரைப்படத்தில் வார பெடியளுக்கு ஏற்படுற மயக்கம் ஏற்பட்டது . என்றால் பார்த்துக் கொள்ளுங்களன்.
அத்தனை அழகாக இருந்தார்கள். அந்த இளம் பெண்களிற்கு என்ன வயசிருக்கும்?,அவரால் மட்டுக்கட்ட முடியவில்லை."அந்தப் பெண்கள் நெருப்புடா.யாரும் தணக எல்லாம் போக முடியாது"என நண்பன் சொல்லிச் சிரித்தான்.கஜூ வாங்கிக் கொண்டார்கள்.கேரளத்தின் அச்சு அசலான முழுஅச்சுகள்.
முக நூலில் கேட்டுப் பாருங்கள்.உங்களுக்கும் புரியும். புரட்சியில் ஈடுபட்டவர்கள் இவர்களின் வாரிசுகள்.வீரத்திற்குப் பேர் போன குலம் சேரர் குலம் எனவே தான் நிறைய வீரம் இருந்திருக்கிறது. நிறைய இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள்.புரட்சிற்கு ஆட்கள் சேர்வதற்குப் புதிதாக பட்டதாரிகள் பெருகுவதை விரும்புற மனநிலையிலா ஆளும்அரசு இருந்தது.
செட்டிப் பகுதியினர் தமிழிலும் இருக்கிறார்கள்.சிங்களவர்களிலும் இருக்கிறார்கள்.கொழும்புச் செட்டியினரும் முஸ்லிம்களைப் போல தம்மையும் ஒரு தனித்த பிரிவாக மதிக்கச் சொல்லி நிற்கிறவர்கள்.
சிங்களம் ,பாளியின் கிளை என்பது சிங்களவர்களின் முடிவு.இந்திய மராட்டி மொழியும் பாளியின் ஒரு கிளை.இருவரின் இலக்கணங்களிலும் ஒற்றுமைகள் இருக்கின்றனவா?தமிழ் மொழியுடன் தான் சிங்கள இலக்கணம் அதிகமாக ஒத்து போகின்றது.மராட்டியிலே என்றால். நம்ம ரஜனியும்"அட ,நம்ம யாலுவா"என தாராளமாகவே வியக்ககலாம் .
சாதாரணச் சிங்களவர்களும் ஆய்வுகளில் இறங்காத வரையில் இனத் துவேசமும் கோலோச்சிக் கொண்டே இருக்கப் போகிறது.
அது சரி, இந்த முஸ்லிம்களின் மொழி தான் என்ன?மொழி வாரியில் எப்படி ...வருவார்கள். "அரபு மொழி "என்று விட்டிருக்கிறார்கள்.எப்படியோ தமிழ் மொழிக்கு வெளியில் இருக்கிற மொழியினர் என முஸ்லிகளும் தரப்படுத்தலால் ஆதாயம் பெற்றிருக்கிறார்கள். அதில் உருவான பட்டதாரி இளைஞர்கள் தான் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஏற்படுத்தியவர்கள்.
சிங்களச் சிறிலங்காவிற்கு தமிழர்கள் எப்பவுமே பயங்கரவாதிகள். ஆனால் ,உள்ள எல்லா விதப்போர்க் குற்றங்களைச் செய்த… ஜனநாயக பிரகிருதிகள் அவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
இங்கே, உண்மையில் யார் தான் பயங்கரவாதிகள்? அந்த வீடற்றவனின் கேள்வீயே அவருள்ளும் விஸ்பரூபம் எடுக்கிறது.
"அப்பு என்ன தூக்கமோ ?"கையிலே சுரேஸ் கொடுத்த மர ஆணியை பொறுத்திலே வைத்து இறுக்காமல் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதற்குளே பகவத்கீதைக் கணக்கிலே யோசனை ஓடி விட்டதே,சுயநினைவுக்கு வந்து வைத்து இறுக்கினார். தமிழ்ப் பத்திரிக்கை நிருபரான சுரேஸின் மகன் குமார்,கேட்டறிந்தவற்றை வைத்து விளக்கமான கட்டுரை ஒன்றை எழுதுகிறான்.இவர்கள் வேலையைக் குழப்பாமல் ...நாளை தான் நகரத்து பத்திரிகைகளிற்கு தெரிவிக்க இருக்கிறான்.அந்த பத்திரிக்கை நிருபர் ஒருவர் அவன் நண்பராக இருக்கிறார்.
இவர்கள் வேலையில் பங்கு பற்றா விட்டாலும் கோப்பிக் கடையிருந்து ,சீனி குறைத்த கோப்பிகளை வாங்கி வந்து கொடுக்கிறான். சிறிது ஆறி விட்டு வேலையில் முழ்கி விடுகிறார்கள். சதா,பிரேமன்,சுரேஸ்,பொன்னர்,தில்லை...என ஐந்து பேர்கள் மட்டும் தான்.சீனக் குழு பொருட்களை பறித்ததோடு அகன்று விட்டிருந்தது.பிரேமனின் மகன் ஜேம்ஸும் நிற்கவில்லை.குமார் மட்டுமே நின்றிருந்தான்.சுமார் மேலும் இரண்டு மணி எடுக்க அழகான மச்சுப்படிக் கட்டமைப்பு உருப் பெற்று விட்டிருந்தது.ஏறி இறங்கிப் பார்த்த பிரேமன்,ஆட்டிப் பார்த்து.. "அசையாது"என்றார் பெருமித்துடன்.சுரேஸ்,மச்சு தொடங்கிற நிலப்பகுதியில் ,கட்டிடப் பொருட்கள் கடையிலிருந்து வாங்கி வந்த பைகளை திறந்து சிறிய கிரவல்கற்களைக் கொட்டி மரக்கட்டையால் மொங்கான் இட்டு சமப்படுத்தினான்.வாத்தியார் பிரேமன் தான்.நடந்து பார்த்து,கை விரலை மேலே காட்டி 'வெற்றி'என அடையாளம் காட்டினார்.
அடுத்த நாள்,குமாரின் நண்பர் ,ஆச்சரியப்பட்டு தொலைக்காட்சிப் பிரிவையும் கூட்டி வந்து...அன்றைய நாள்ச் செய்தியாக ஓரேயடியாய் அமர்களப்படுத்தி விட்டார்.நகரத்து தச்சுவேலைக் குழு ஒன்று வந்துப் பார்த்து "திறமாக அமைத்திருக்கிறார்கள்"என பாராட்டுப் பத்திரம் வாசித்தது.
வந்தவர்கள் எல்லாரு மே ஏறி ,இறங்கி பலவித மாதிரிகளில்...படங்களும் கூடஎடுத்து இணையத் தளங்களிலும் ஏற்றி விட்டார்கள்.நகரக்காவலர் ஒருத்தரும் வந்து கிழவர்களிற்கு பிரச்சனைக் கொடுக்கவில்லை."கட்டுவதற்கு முதல் அனுமதி எடுத்திருக்க வேண்டும்"என்று மட்டும் கூறி ,ஈடுபட்டவர்களின் பெயர்களை மட்டும் குறித்துக் கொண்டு, மேயரிடம் ....கைத் தொலைபேசி ஊடாகக் "என்ன செய்யலாம்"எனக் கேட்டார்கள்.
மேயர்,தொழில் நிபுணக் குழுவிடம் இப்படி ஒரு பிரச்சனை இருந்ததா?என ஆராயும்படிக் கூறினார். அவர்கள் பழைய கோப்புகளைக்(ஃபைல்கள்) கிளறியதில் மேயர் பீற்றர் காலத்தில்...இருந்த ஒரு கோப்பை கண்டெடுத்தார்கள்.இரண்டு பேர்களிற்கு முதல் இருந்த மேயர்.மச்சுப்படி அமைக்க வாக்குறுதிக் கொடுத்து ,செலவுகள் எல்லாம் மதிப்பிட்டு,அறுபது ஆயிரம் ரூபா முடியும் எனவும் மதிப்பீடும் எடுக்கப்பட்டிருக்கின்றது.
"அப்ப,ஏன் செய்யப்படவில்லை?"அடுத்த முறை, அவர் மேயராகவில்லை.எனவே முக்கியமற்ற ஒரு கோப்பாக ...கழிக்கப்பட்டிருக்கின்றது. அந்த தொழில் நிபுணக் குழுவை சென்றுப் பார்த்து ஆராய்ந்து அறிக்கை கொடுக்கும்படி அனுப்பினார்.மச்சுப்படிகள்,கலை நுட்பமாகவே அமைக்கப் பட்டிருந்ததை உள்ளூரப் பாராட்டினாலும், சென்ற குழு முதல் வேலையாக மண் பரிசோதனையை நடத்தியது.பாதுகாப்புக் குறைப்பாடுகள் கிடந்தன.ஏற்கனவே உள்ள திட்டப்படியே அமைக்கிறது தான் பாதுகாப்பானது.தற்போதைய விலை உயர்வின்படி பத்தாயிரமளவில் கூடுதலாகச் செலவாகும் என்ற அறிக்கையை அக்குழு மேயரிடம் கையளித்தது.
இரண்டு,மூன்று நாட்கள் மக்களின் பார்வைக்கு அந்த மச்சுப்படிகள் அப்படியேக் கிடந்தன.
நகரசபையைக் அவசரமாகக் கூட்டிய மேயர்,திட்டதிற்குப் பணத்தை ஒதுக்க அனுமதிப் பெற்று, “ஒரு மாத காலத்தில் இந்த இடத்தில் கொங்கிறீட்டான மச்சுப்படிகள் முறையாக அமைத்துக் கொடுக்கப்படும்"என அறிவித்தார்.
இலங்கையைப் போன்ற நகரசபைகள்,மாகாணவரசுகளாக இங்கே இருக்கின்றன ?
மளமளவென வேலைகள் தொடங்கப்பட்டு விட்டன . அங்கே போல பார்வைக்கு பணத்தை ஒதுக்கி விட்டு,கட்டவிடாது தடைப்படுத்தி கொண்டு,நாம் பணத்தை ஒதுக்கினாலும் தமிழர்கள் கட்டுறார்களில்லை,என்பதால் சிங்களப் பகுதியின் ஒரு திட்டதிற்கு பயன்படுத்த ...மாற்றி விட்டோம்"என அரசியல் செய்து,நல்லிணக்கமாக வருகிற தமிழ்க்கட்சிகளிலும் குழப்பைத்தை ஏற்படுத்தி,ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் தந்திரம் எல்லாம் இங்கே வேகுவதில்லை.
வாக்குறுதி அளித்தால்...வாக்குறுதி தான் !
சில கால தாமதங்கள் ஏற்படலாம்,ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றியே வைக்கிறார்கள். ஒதுக்கிய பணம் வேற, வேற ...இடங்களிற்கெல்லாம் பயணப்படலாம்.ஆனாலும் நிறைவேறும். இங்கே எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும் என்ற நிலமை.நிற,மற்றும் மனிதவுரிமைப் பிரச்சனைகள் இங்கும் இருக்கின்றன தாம்.ஆனால்,அவற்றை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள். அதிலே கள்ளம் குறைவு.
அங்க போல , ஆளும் கட்சி பொய்மான்களைக் காட்ட,எதிர்க் கட்சியான இன்னொரு சிங்களக் கட்சி,’ தமிழருக்காக’… நியாயம் பேசுவதும் நடிப்பதும்,பிறகு, இவர்கள் ஆளும் கதிரையில் ஏற,… இதே வட்டம் திரும்ப நடப்பதும்,அடிமைப்பட்ட தமிழர் தரப்பு ஒற்றுமையை கை விட்டு விட்டு வேலிச் சண்டைகளில் ஈடுபடுவதும் என இடம்பெறும் அவலங்களை இங்கே அதிகமாகக் காண முடிவதில்லை.
மேயர் அறிவித்த ,அடுத்த நாள் , பார்க்கில் ,குப்பைகள் எடுக்கும் வாகனத்தில் இவர்கள் கட்டிய வசந்த மாளிகையை ,வேலையாட்கள் உடைத்து ஏற்றுறதை உள்ளமுடைய இவர்களோடு சேர சீனக் குழு ,உட்பட ,வெளியில் தெரியாத சிலரும் பார்த்துக் கொண்டு சோகமாக நின்றார்கள். நகரத்தில், கண்ணீரை வரவழைக்கும் அக்காட்சியை அனைவரும் பார்க்க தொலைக்காட்சிப் பெட்டிகளும் காட்டிக் கொண்டிருந்தன.
ஏற்றிக் கொண்டிருந்த ஒரு தொழிலாளிக்கு இரக்கம் பிறந்திருக்க வேண்டும்.அவர்களிடம் வந்து "கவலையை விடுங்கள்.உங்களால் தான் ,நாளை இங்கே புதிசாய் கட்டப் போறார்கள்."என கூறினான்.அவர்களிற்கும் ஒரு உண்மை புரியவே செய்கிறது.இவர்கள் என்ன தான் தாஜ்மகாலைக் கட்டினாலும், இவர்களை நம்பி ஒரு பாரியார் கூட வலது காலை எடுத்து வைக்கப் போவதில்லை.
ஆணுக்கும்,பெண்ணுக்கும் புரிதல் என்பது...வெளிநாட்டவர்களை விட ,ஆசியரிடம் அந்த மாதிரி … ? கிடக்கிறது.
.இன்னும் ஒரு மாதத்தில் புது மச்சுப்படிகள் எழுந்த பிறகு, அவர்களின் பாரியார்கள் நிச்சியமாக வரவேப் போகிறார்கள். எதையுமே முறையானவர்களே கட்ட வேண்டும்.
என்ன செய்வது? , இவளவயளுக்கும் அக்கரைகள் தானே பச்சையாகக் தெரிகின்றன !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.