உ. வே.சா என்றால் - உழைப்பு , வேகம் ,சாதனை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கள் தமிழ் மொழி யின் ஏற்றத்தைப்  பறைசாற்ற இலங்கியங்கள் குவிந்திருக்கின்றன என்று - மேடை களில்    முழங்குகிறோம். கருத் துக்களாய் கட்டுரைகளை வரைந்து குவி க்கின்றோம். பல்கலைக்கழகங்களில் பலவித  ஆராய்ச்சிகள் செய்து நூல்களாய் வெளியிடுகின்றோம். இப்படி யெல்லாம் நாங்கள் செய்வதற்கு ஆதாரமாய்  ஆணிவேராய் இருப் பவரை நினைத் துப் பார்க்க வேண்டாமா ? ஆம் .... கட்டாயம் நினைத்துப் பார்க்கவே  வேண்டும். அந்தப் பேராளு மைதான் உ.வே.சா என்னும் தமிழ் த் தாத்தா டாக்டர்  மகாமகோபாத்தியாய சாமிநாத ஐயர் அவர்கள் ஆவார்.

  உ.வே.சா என்னும் மூன்று எழுத்து தமிழ் வரலாற்றில் பதிந்து விட்ட மந்திரச் சொல்லாகும். தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்வார்க்கு ஆதார சுருதியாய் அமையும் மூல மந்திரம்  ஆகும். இம்மந்திரத்தை மறந்தால் எங்கள் தமிழன்னை கண்ணீர் வடிப்பாள். எங்கள் தமிழன்னை எங்களைத் தனது பிள்ளைகளென்றே எண்ணமாட்டாள்.

அந்த மந்திரச் சொல்லை மறப்பார் தமிழர் என்னும் நிலையில் இருக்கவே மாட்டார்கள். அப்படி அந்த மூன்றெழு த்து மந்திரம் பெற்ற முக்கியத்துவம்தான் என்ன? அந்த மந்திரமாய் விளங்கும் டாக்டர் சாமிநாத ஐயர் என்னதான் செய்துவிட்டார் ? அவர் மறைந்து விட்டார் என்று சொல்லுகிறார். ஆனால் அவருக்கு மறைவேயில்லை. அவரென் றுமே வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பது தான் நிதர்சனமாகும். மறைந்தவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் புதிராக இருக்கிறதா ? இன்று நாம் படிக்கின்ற பழந்தமிழ் இலக்கியங்களில் அவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். ஒவ்வொரு பழந்தமிழ் இலக்கியங்களையும் தொட்டு வாசிக்கும் வேளை தமிழ்த் தாத்தாவும் உயிர்ப்புடன்தான் உலவுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா !

   ஆங்கிலம் இவ்வுலக வாழ்வுக்கு பயனளிக்கும். வடமொழி அவ்வுலக வாழ்வுக்கு பயனளிக்கும் என்று உ.வே. சா அவர்களிடம் எடுத்துச் சொன்னால் ;   அவர் " இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் எனது அன்னைத் தமிழே பயனை அளிக்கும் " என்று துணிந்து சொல்லும் வகையில் இருந்திருக்கிறார் என்பது மனமிருத்த வேண்டிய கருத் தெனலாம். அந்த அளவுக்கு அன்னைத் தமிழினை அகமதில் சிம்மாசன த்தில் அமரச்செய்திருந்தார் எனலாம்.

   உ.வே. சா அவர்களின் காலப்பகுதியில் ஆங்கிலம் சிம்மாசனத்தில் இருந்தது. ஆங்கிலத்தையே அனைவரும் ஏற்றினார்கள், போற்றினார்கள். அந்தணராய் பிறந்தாலும் வடமொழியினைப் பெரிதாக எண்ணாமல் வாடாத தமிழினையே வரவேற்று நின்றார்கள். இப்படி அக்காலத்தில் திகழ்ந்தமையால்தான் அவரை வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்று சொல்லவேண்டி இருக்கிறது.ஆங்கிலத்தைப் படித்து பெரிய பதவிகளில் அமர்ந்திட அவர் ஆசை கொண்டார் இல்லை. அந்தணருக்கு உரிய வடமொழியிலே பாண்டித்தியம் பெற்று சிறந்த சிவாச்சாரிய ராய், வேத விற்பன்னராய் விளங்கிட விரும்பினார் இல்லை. ஆனால் தாயின் மொழியை,  தாய்மண்ணின் மொழி யை தனது மூச்சாயும் , பேச்சாயும், தொண்டாயும், அதனையே வாழ்வும் ஆக்கிக் கொண்டார் என்பதனால்த்தான் அவர் இன்னுமே எம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்கிறேன்.

  ஆனந்த வருடம் ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்து ஐந்தில் அவர் இம்மண்ணில் கால் பதிக்கின்றார். ஆனந்த வருடத்தில் பிறந்த காரணத்தால்த்தான்  உ.வே.சா அவர்கள் அருந்தமிழினை ஆனந்தமாய் பருகி நின்றாரோ என்று எண்ணிடத் தோன்றுகிறது.

  '  கொடிது கொடிது இளமையில் வறுமை ' என்பது மூதாட்டி மொழிந்த மொழி. இஃது முற்றிலும் உண்மையே. வளரும் பருவத்தில் வறுமை வாட்டினால் வளரும் நிலை என்னாகும் ? உ.வே. சா அவர்களின் இளமையும் வறு மையில் கிடந்து உழன்றது  என்பதை அறிகிறோம். தந்தையின் பிரசங்க வருமானத்தில்த்தான் அவரின் வாழ்க் கைப் பயணம் தொடரும் நிலை காணப்பட்டது. வருமானம் இல்லா நிலையில் அவரும் கூடவே தந்தையுடன் இளம் பராயத்திலே பிரசங்கம் செய்யும் பணியில் ஈடுபடுகிறார். வறுமை தாண்டவ மாடினாலும் தனது மகனை நன்கு கற்றிடச் செய்திடல் வேண்டு என்னும் எண்ணத்தை மட்டும் அவரின் தந்தை விட்டு விடவில்லை. கற்றவர் முன்னிலையில் தனது பிள்ளை வந்து நிற்க வேண்டும் என்று தந்தையார் ஆசைப்பட்டார். அதனால் பல நல்ல வல்ல குருமாரைத் தனது பிள்ளைக்குத் துணையாக்கிக் கொடுத்தார்.படிப்பதிலே நாட்டம் மிக்க பிள்ளையாய் உ.வே.சா விளங்கியமையால் தந்தையின் எண்ணம் மிகவும் சிறப்பாய் ஈடேறியது எனலாம்.

   பல ஆசிரியர்கள் உ.வே.சா வாழ்க்கையில் ஒளி ஊட்டினார்கள். பேரொளியாய் வந்தமைந்தார் மீனாட்சி சுந்தர ம்பிள்ளை அவர்கள் எனலாம். மீனாட்சி சுந்தரம்பிள்ளை உ.வே.சா வாழ்க்கையில் உரமாய், வரமாய், அவரின் உயர்வின் உறுதுணையாய் வந்து அமைந்தார் எனலாம். உ.வே.சா என்னும் ஆளுமையினை வெளியுலகுக்குக்கு குறிப்பாக தமிழுலகுக்கு கொடுத்த பெருமை மீனாட்சி சுந்தரம்பிள்ளை என்னும் பேராசானுக்கே உரியது என் பதை எவருமே மறுத்துப் பேசிட இயலாது எனலாம்.' எரிவிளக்காயினும் தூண்டு கோல் வேண்டும் ' என்பார். உ.வே.சா எரிவிளக்கு ! அவரின் ஆசிரியர் நல்லதோர் தூண்டு கோல் ! என்ன பொருத்தம்! இதைத்தான் வரப் பிர சாதம் என்பர் ! " தாரமும் குருவும் தலை விதிப்படி " என்பார்கள். நல்ல விதியால் உ. வே. சா அவர்களுக்கு குரு வும் வாய்த்தது. தாரமும் வாய்த்தது.

   முறையான பாடப்புத்தகங்களில் உ.வே. சா படிக்கும் வாய்ப்பு அக்காலத்தில் இருக்கவில்லை.இப்போது இருப்பது போன்று அச்சிட்ட புத்தகங்கள்.குறிப்புப் புத்தகங்கள் என்று எந்தவித வசதிகளுமே இருக்கவில்லை. ஏடுகள்தான் துணை ! மனனம்தான் மாமருந்து ! எழுத்தாணிதான் பெருந்துணை ! ஆனாலும் உ.வே. சா கற்றார். " கற்கக் கசடறக் கற்க - கற்பவை கற்க " என்பதை மனமிருத்தி உறுதியாய் கற்றார். இலக்கியம் கற்றார். இலக்கணம் கற் றார். இசையும் கற்றார். ஆங்கிலத்தை எழுத்தாய் கற்றார். அவரின் ஆசை அருந்தமிழின் பாலே பெருகி நின்றது எனலாம்.

   பழந்தமிழ் இலக்கியங்கள் என்னும் கருவூலங்கள் பல ஏட்டிலே இருந்ததை யாவரும் அறிந்திட வேண்டும் என்னும் ஆவலினால் அவற்றை அச்சிற் பதிப்பிக்க வேண்டும் என்னும் மிகவும் சிறந்த சிந்தனை உ.வே.சாவின் எண்ணத்தில் உதயமானது. ஏட்டில் இருந்தால் நாட்டில் பலரும் அறியும் வாய்ப்பும் வராமல் போய்விடும். நாள டைவில் பொக்கிஷமான இலக்கியங்கள் மறைந்தும் போய் விடக்கூடும் என்னும் என்னும் ஏக்கம் அவரின் உள்ளத்தை உறித்தியபடியே இருந்தது. " தன்னை மறந்தாள் தன்னாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை " என்றபடி ; தனது சொந்தச் சுகத்தை மறந்தார், இளமையை மறந்தார், இன்பத்தை மறந்தார், எண்ண மெல்லாம் பழந்தமிழ் ஏடுகள் பற்றியதாகவே ஆக்கிக் கொண்டார்.

   பிரயாணம் செய்வதற்கு தற்போது போன்று வசதிகள் பல  அக்காலத்தில் இருக்கவில்லை. அத்துடன் உ.வே.சா வசதிகள் வாய்ப்புகள் மிக்கவராயும் இருக்கவுமில்லை. ஆனால் - தான் எடுத்துக்கொண்ட பணியில் என்னதான் இடர் வந்தாலும் அவற்றைத் தாங்கி - தமிழ் ஒன்றே - இலட்சியம் என்று கங்கணம் கட் டிக் கொண்டு வண்டிகள் போகாத பாதையிலெல்லாம் வைராக்கியத்துடன் பயணப்பட்டார். பழந்தமிழ் ஏடுகளைத் தேடி பல மைல்கள் சென் றார். நடந்தார், மாண்டு வண்டியில் பயணப்பட்டார். அவமானப் பட்டார், ஆனாலும் தனது முயற்சியை மட்டும் விட் டாரில்லை.

   ஏடுகள் தேடிப்போகும் பொழுது அவர் பட்ட அல்லல்களையும் , அவர்பட்ட வேதனைகளையும், அவருக்குண்டான அவமானங்களையும் தனது நுலான " என் சரித்திரத்தில் " எழுதிக் குவித்திருக்கிறார். என் சரித்திரம் என்பது தமிழ ருக்கெல்லாம் நல்ல ஒரு பாடப் புத்தகம் எனலாம். படித்துப் பாருங்கள் உ.வே.சா என்னும் மூன்றெழுத்து மந்திரத் தின் உன்னதத்தை உணர்ந்து கொள்ளுவீர்கள்!

  ஏடுகளின் அருமை தெரியாமல் தீயில் இட்டார்கள். ஓடும் நீரில் எறிந்தார்கள்.கறையான் அரித்திடுவதைக் கண்டு கொள்ளாமலே இருந்தார்கள். இவற்றைப் பார்க்கும் நிலையில் உ.வே.சா பதறித் துடித்தார்கள். தமிழ்ச் சொத்து அழிவதை அவரால் தாங்கவே முடியாமல் போய்விட்டதாம் . கிடைத்தவற்றைக் காப்பாற்றி இன்று நாங்கள் படிக் கும் நூல்களாய் எமக்கு அளித்திருக்கிறார்  உ.வே. சா என்றால் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கி றார் என்று சொல்லுவதில் என்ன தவறு இருக்கிறது ?

   சிலப்பதிகாரமா சிறப்பதிகாரமா என்று மயங்கி நின்றவர்கள் மத்தியில் - சிலப்பதிகாரத்தை கொண்டுவந்தவர் உ.வே. சா அவர்கள். அவரில்லா விட்டால் சிலப்பதிகாரத்தை நாங்கள் அறிந்திருக்கவே முடியாமல் போயிருக்கும். அகநாநூற்றுக்கும் புறநாநூற்கும் என்னதான் வேறுபாடு என்பதையே தெரியாமல் போயிருக்கும்.மணிமேகலை மண்ணுக்குள் மறைந்திருக்கும். சங்கத்தமிழ் , தங்கத்தமிழ்,  என்று மேடைகளில் முழங்கவும், கட்டுரைகளில் வெழுத்துக் கட்டவும், கருத்தரங்குகள் பட்டிமன்றங்கள் வைத்துக் கருத்துக்கள் கூறவும் உற்றதுணை உ.வே,சா அவர்கள்தான் என்பதை அனைவருமே அகமிருத்துதல் அவசியமாகும். இவரின் தேடுதல் இல்லா நிலையில் தமிழின் இலக்கியம் என்பது வரண்ட பாலையாய் இருந்திருக்கும். இன்று வண்ணப் பூங்காவாய் மிளிர்கிறது என்றால் அதற்குப் பின்னால் இருப்பவர் உ.வே. சா என்னும் ஆளுமையே என்பதை மறுத்திடல் முடியுமா?

   ஏடுகளைப் பரிசோதித்து சரியான விபரங்களுக்காக பல நாட்கள் அலைந்து திருந்து - அவற்று விளக்கங்கள் எழுதி , அடிக் குறிப்புகள் எழுதி, நூற்குறிப்பு எழுதி, யாவரும் நன்கு விளங்கும் வகையிலேயே பதிப்பினை மேற் கொண்டார்.இவரை ஏடுகாத்த ஏந்தல் எனலாம் , ஏட்டினை எழுத்துருவில் அச்சுவாகனம் ஏற்றிய அருந்திறலோன் எனலாம், குறிப்புகள் வரைந்து குறைகளைந்த குணாளன் என்று கூடச் சொல்லலாம் அல்லவா !

   ஐம்பது ஆண்டுகாலம் ஏடுகள் தேடி அவற்றைப் பரிசோதித்து அவர் பதிப்பித்த நூல்களின் எண்ணிக்கை நூறா கும்.    சீவக சிந்தாமணி, மணி மேகலை, சிலப்பதிகாரம், புறநாநூறு, திருமுரு காற்றுப்படை, பத்துப் பாட்டு, பொரு  நராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ் சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக் கோவை நூல்கள், 2 இரட்டை மணி மாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலங்கள் 4 என்று நூறு நூல்களை 1878 இல் தொட ங்கி 1942 வரை பதிப்பித்து பதிப்புத்துறையில் சாதனை படைத்து உ.வே.சா அவர்கள் தமிழுலகில் நிற்கிறார் என் பதை மனமிருத்துதல் அவசியமேமாகும்.

   பதிப்புத்துறையில் கால்பதித்த உ.வே.சா அவர்கள் படைப்புத் துறையிலும் கால்பதித்து நின்றார் என்பதற்கு அவரால் படைக்கப்பட்ட நுல்களே சான்றாக விளங்குகின்றன. மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம், பழயதும் புதியதும், கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி, என் சரிதம், மணிமேகலை கதைச் சுருக்கம், உதயணன் கதைச் சுருக்கம், சிலப்பதிகாரக் கதைச் சுருக்கம் , திருக்குறளும் திருவள்ளுவரும், மதியார்ச்சுன மான்மியம், புத்தர் சரித் திரம், தியாகராசச் செட்டியார் சரித்திரம், நல்லுரைக் கோவை , சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் , என்னும் கட்டுரை நூல்களுடன் ; கயர்கண் மாலை,தமிழ்ப்பா மஞ்சரி ஆகிய கவிதை நூல் களையும் ஆக்கி அளித்திருக் கிறார்கள்.

  தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காக இவரை நாடி பல கெளரவங்களும் பட்டங்களும் வந்து சேர்ந்தன. சென்னைப் பல்கலைக்கழகத்தினால் முதன் முதலாக தமிழில் மதிப்புறு முனைவர் அதாவது டாக்டர் பட்டம் பெற்றவர் என் னும் பெருமையினை உ.வே. சா அவர்களே பெறுகிறார்கள்.ஆங்கில அரசும் இவரை வியந்து ' மகாமகோபாத்தி யாய ' என்னும் கெளரவத்தை வழங்கியது. சங்கராச்சாரியார் சுவாமிகள் இவருக்கு தட்சினாத்திய கலாநிதி என் னும் பட்டத்தை வழங்கி ஆசிவழங்கினார்.பாரததருமா மகா மண்டலத்தார் திராவிட வித்யபூஷணம் என்று பட் டம் வழங்கிப் பாராட்டியது. பதிப்புத்துறையில் இமயமாய் இருந்ததால் ' பதிப்புத்துறை வேந்தர் ' என்று கெளரவிக் கப்பட்டார். எழுத்துலச் சித்தர் கல்கியால் ' தமிழ்த்தாத்தா ' என்றும், பரதியால் ' குடந்தை நகர் கலைஞர் ' என்றும் கெளரவிக்கப்பட்டார். தமிழ்த்தாத்தா என்னும் பெயர் உ.வே.சாவினை அடையாளப்படுத்தும் நல்ல பெயயராய் வல்ல பெயராய் அமைந்து விட்டது எனலாம்.இவரின் மகத்தான பணியினை மதித்து இந்திய அரசாங்கமே இவ ருக்கு 2006 ஆம் ஆண்டில் தபால் தலை வெளியிட்டு கெளரவித்தது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

  தமிழ் ஆசிரியராய்.  தமிழ்ப்பேராசிரியராய், கல்லூரி முதல்வராய் எல்லாம் இவர் கடமை ஆற்றியிருக்கிறார்.இவர் பணியாற்றிய மாநிலக் கல்லூரியில் இவருக்குச் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி இவர் பிறந்த உத்தம தானபுரத்தில் இவரை நினைவு கூரும் முகமாக உ.வே. சா நினைவு இல்லமும் அமைக்கப் பட்டிருக் கிறது.நூல்களையே உயிரென்று எண்ணியே வாழ்ந்தமையால் 1942 இல் இவரின் பெயரால் அதாவது உ.வே.சா நூல்நிலையம் சென்னை பெசண்ட் நகரில் தொடக்கப்பட்டது.

   3000 க்கு மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளைச் சேகரித்து , கையெழுத்து ஏடுகளையும் சேகரித்து எமக்கு நூலாக்கிக் கொடுத்த இந்த  மேதை உத்தம தானபுரம் வேங்கட சுப்பையர் சாமிநாத ஐயர் ஆவார். இவரை உ.வே.சா என்று மூன்றெழுத்து மத்திரமாய் தமிழர்கள் உச்சரித்துப் ஏற்றிப் போற்றி நிற்கிறார்கள்.மண்ணில் பிறப்பதால் மண்ணும் பயனுற வேண்டும். மக்களும் பயனுற வேண்டும். அப்படிப் பிறப்பவர்களைத்தான் யாவரும் அகத்தில் அமர்த்திக் கொண்டாடி வருவார்கள். அப்படிக் கொண்டாடிப் பெருமைப்படும் வகையில் யாரெல்லாம் இருந்தார்களோ அவர் கள் எல்லாம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் என்றே கருதப்படுவார்கள். அப்படி வையத்துள் வாழ் வாங்கு வாழ்ந்தவர்கள் மறைந்தாலும் அவர்கள் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்று சொல்லுவதிலும் எந்தத் தவறுமே இல்லை. அந்தவகையில் எங்கள் தமிழ்த்தாத்தா உ.வே.சாசாமிநாத ஐயர் அவர்களும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பது பொருத்தமாய் இருகிறது அல்லவா !

     " தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை "

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com