கலாநிதி பாரதி ஹரிசங்கரைப் 'பதிவுகள்' வாசகர்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள். இவரது மொழிபெயர்ப்புப் படைப்புகள் பல (கவிதை, சிறுகதை)  'பதிவுக'ளில் பிரசுரமாகியுள்ளன. இவர் கனடாவுக்குக் 'கனடியக் கற்கைநெறி'க்கான 'சாஸ்திரி அறக்கட்டளைப்' புலமைப் பரிசில் பெற்று 2007இல் விஜயம் செய்திருந்தபோது 'டொராண்டோ'வுக்கும் வந்திருந்தார். அப்பொழுது இவரைக் குறுகிய நேரம் எழுத்தாளர்கள் தேவகாந்தன், டானியல் ஜீவா ஆகியோருடன் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அது பற்றிப் 'பதிவுக'ளிலும் குறிப்பொன்று வெளியாகியிருந்தது. கலாநிதி பாரதி ஹரிசங்கர் அவர்கள் கோயமுத்தூர் அவினாசிலிங்கம் பெண்கள் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பதவியேற்றுள்ள செய்தியினை அண்மையில் அறிந்தோம். மகிழ்ந்தோம். அவரைப் பதிவுகள் சார்பில் வாழ்த்துகின்றோம்.

பதிவுகளில் வெளிவந்த கலாநிதி திருமதி பாரதி ஹரிசங்கரரின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் சில:

என் காதல்
ஊட்ஜரூ நுநுக்கல் (Oodjeroo Noonuccal)
தமிழாக்கம்: டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்

என்னை அடைவதா? இல்லையில்லை
மற்றவருக்குப் புரிந்த காதலை என்னால் தரமுடியாது.
ஏனெனில் நான் ஒரு இலட்சியத்தை மணந்துள்ளேன்.
மற்றதையெல்லாம் நான் துறக்க வேண்டும்.
நீ என்னை - என் உடல், ஆன்மா, மனம்
அனைத்தும் உனதாகக் கொள்கிறாய்.
என் முதல் அன்பு என் மக்களுக்கே.
அதன் பின். மனித குலத்திற்கு.

ஒரு பிரஜையாக என் தனித்துவத்தை
நான் இழந்து விட்டேன்.
அர்ப்பணிக்கப்பட்டது என் வாழ்க்கை.
ஒருவனால் கொள்ளவும் தனதாக்கவுமுடியாது.

பழைய இன வேற்றுமை என்னைச் சூழந்து கொள்கிறது.
வெறுப்பும் இகழ்ச்சியும் தாக்குகின்றன.
தோல்வியில்லாமல் சண்டையிட நான்
சுதந்திரமாக வேண்டும். நான் பலமடைய வேண்டும்.

சரி செய்ய பழைய தப்புகளுண்டு.
மனிதனின் குரோதத்தை சகிக்க வேண்டும்.
நீண்ட பாதை. தனிமையான பாதை.
ஆனால் இலக்கோ நிச்சயமானது.


வேடன்
ஆர்ச்சி வெல்லர் [Archie Weller]
தமிழாக்கம்: டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்

தனது இரத்தத்தால் பச்சைப் புல்லை சிவப்பாக்கிய
கங்காருவிற்காக ஒரு பாடல் பாடுகிறேன்.
அஸ்தமிக்கும் சூரியனுக்கெதிரில் கருப்பாக
கடைசி சோக நாட்டியம் டியவனுக்காக
பாடுகிறேன். ஏனெனில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இன்றிரவு வேடனின் வயிறு நிறையும்.
வானத்தை நோக்கி எம்பும் தீப்பொறிப்போல
என் குழந்தைகளின் சிரிப்பொலி கேட்கும்.
சிறகசைக்கும் பற்வைகள் போல
குன்றுகள் மீது ஓடும் மழை
நீரோடை போல மகிழ்ச்சியாக
என் தமையனின் கண்ணீரில் நானிருக்கிறேன்.
ஐயோ! தமையனே!
விரிந்த பரந்த நிலத்தில் நடை பயில
தனிமையான வலிமையான மலைகள்
இந்நாட்டை  ஆளுகின்றன.


தலைப்பிள்ளைகள்
ஜாக் டேவிச் [Jack Davis]
தமிழாக்கம் டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்

என் தலைப்பிள்ளைகள் எங்கே! பெருமூச்சுடன் கேட்டது அந்தப் பழுப்பு பூமி. வெகு நாட்களுக்கு முன் என் கருப்பையிலிருந்து அவர்கள்

வந்தனர். என் தூசிலிருந்து உருவாக்கப்பட்டனர்- ஏன்? ஏன் அவர்கள் அழுகிறார்கள்? அந்த ஆன்மாக்களின் ஒலிகள் ஏன் மயங்கிக் கிடக்கின்றன?

அவர்கள் சிரிப்பொலியைக் கேட்க என் காதுகளைத் தீட்டிக்கொள்கிறேன். நான் கொடுத்த நீதிகளும் கதைகளும் எங்கே?
என் இளைய பிறப்புக்களே! என்னவாயிற்று சொல்லுங்கள்?
குகைகளில் அவர்களது ஆவிகளே வாழ்கின்றன.

மெளனம். - நீங்கள் பதில் சொல்லக் கூசுகின்றீர்கள்.
முகத்திலறைந்த அறை போல ஒரு கேள்வி உள்ளது.
என் கறுத்த பெருமைமிக்க இனம் – மடிந்து புறக்கணிக்கப்பட்டு இறந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது அங்கே பதிலும் இருக்கிறது.

[ஆஸ்திரேலிய பூர்வீகக் கவிஞர்கள் மூவரின் கவிதைகளைப் 'பதிவுகள்' இதழிற்காகத் தமிழாக்கம் செய்து தந்திருக்கின்றார் டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்.]

பதிவுகள்: யூன் 2007 இதழ் 90 -மாத இதழ்

கனடா நாட்டு பழங்குடியின கவிதைகள்!
- தமிழ் மொழியாக்கம்: முனைவர் வை பாரதி ஹரிசங்கர்
(இணைப் பேராசிரியர், ஆங்கிலத்துறை தொலைதூரக் கல்வி நிறுவனம் சென்னை பல்கலைக்கழகம், சென்னை, இந்தியா) -

1

Someone
R.Z. Nobis
யாரோவொருவர்
- நோபிஸ் -

என்னை சுற்றிலும் பார்க்கும் போது
இதயம் கனக்கிறது
என் மக்களுக்கும் எனக்கும்
என்ன நடக்கிறது?
எண்ணங்கள் வெளிப்பட்டு மெதுவாக
தலைக்கேறுவதை உணர்கிறேன்
துயரம், குழப்பம்
இறந்துவிட்டவரைப்பற்றிய
தொலைந்துவிட்ட உணர்வுகள் --

என்னை பற்றிய கேள்விகள் --
நம் அனைவருக்கும் என்னவாயிற்று?
ஒரு காலத்தில் தலை நிமிர்ந்து நின்றோமே
நமக்கு கவலையில்லையா?
“எனக்கு அக்கறை உண்டு“ வருகிறது ஒரு குரல்
என் எண்ணங்களின் ஆழத்திலிருந்து
“நான் என்றென்றும் கரிசனப்படுவேன்
நான் இறக்கும் மட்டும் கூட
நான் ஒருவன் மட்டுமே
அக்கறையுள்ளவனா? சொல்லுங்கள்!
நான் தனியல்ல என்று தயவுசெய்து
யாராவது சொல்லுங்களேன்.“


2

Sunset at Portage (from the bus depot)
- George Kenny -

போர்டேஜில் ஓர் அஸ்தமனம்
( பேருந்து நிலையத்திலிருந்து)
- ஜார்ஜ் கென்னி

வின்னிபெக்கின் சூரியன் இறக்கிறது
கடைசியாக

மான்ட்ரியல் வங்கியின்

அந்த நீல சின்னத்தில்

பளிச்சிடும் பாஸ்பரஸ் நியான் விளக்குகள்
மனிதனின் படைப்பு

மிஞ்சுகிறது

கடவுளின் தொழிற்நுட்பத்தை.

3

They Say We Do Not Show Our Feelings
Chief Dan George

நாம் நமது உணர்வுகளை வெளிக்காட்டுவதில்லை
என அவர்கள் கூறுகின்றனர்
பழங்குடியினத் தலைவர் டான் ஜார்ஜ்

நாம் நமது உணர்வுகளை வெளிக்காட்டுவதில்லை
என அவர்கள் கூறுகின்றனர்
இது அவ்வாறல்ல
எல்லாம் அகத்தினுள்
இதயம் உணர்வுகளின் வளமையைத் துடிக்கின்றது

முகம் பேசுவதோ
கடந்து செல்லும் வருடங்களின் மொழியைத்தான்

4

Creation
- Lee Maracle -

படைப்பு
- லீ மாரகிள் -

எனக்கு ஒன்றும் தெரியாது
அண்ட இரகசியங்களைப்பற்றி
அதைவிட குறைவாக
படைப்பைப்பற்றி

எனக்கு தெரியும்
கால வெளியில் பின்னோக்கி
சென்றால்
மேன்மேலும் பாட்டிகள்

முன்னோக்கி சென்றால்
மேன்மேலும் பேரக்குழந்தைகள்
நான் இரு சாரார்க்கும்
கடமைப்பட்டுள்ளேன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள் ஏப்ரில் 2009 இதழ் 112


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்