ஜனவரி 27: ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத இன அழிப்பு பேரழிவு ஞாபகார்த்த நாள்!

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -இன்று (ஜனவரி 27) யூத நாடான இஸ்ரேலிய தலைநகரமான ஜெருசலம் நகரில் நடக்கும் 'ஹிட்லரின் யூத இனஅழிப்பு' ஞாபகார்த்தநாள் தினத்தில் பிரித்தானிய பட்டத்து இளவரசர் சார்ள்ஸ் உட்பட பல உலகத் தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். இன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன் 27.1.1945ம் ஆண்டு சோவியத் யூனியப் படையினர் போலந்து நாட்டிலுள்ள ஆஷ்விட்ஷ் என்ற இடத்தில் ஜேர்மனியரால் நடத்தப்பட்ட கொலைக்கூடத்தையடைந்து அங்கிருந்த யூதக் கைதிகளைக் காப்பாற்றிய நாளை நினைவு கூரும் முகமாக இந்த ஒன்று கூடல் நடக்கிறது.

கடந்த நூற்றாண்டு மனித இனம் வெட்கப்படவேண்டிய விதத்தில் ஜேர்மனியில் ஹிட்லர் நடத்திய கொடுமைகள் அளப்பரியவை.அந்த கால கட்டத்தில் ஹிட்லரைப் போலவே பல கொடுமையான பாஸிஸ்ட் தவைர்களாக ஸ்பெயினில் பிராங்கோவும் இத்தாலியில் பெனிட்டோ முசொலினியும்,ஜப்பானில் சக்கரவர்த்தி ஹிறோஹிட்டோவும் ஆட்சி செய்து பல அநியாயங்களை நடத்தினார்கள்.

பெரிய குடும்பத்திற் பிறக்காத, பட்டப் படிப்புக்கள் படிக்காத ஆனால் மக்களைத் தூண்டும் இனவெறிப் பேச்சால் பெரும்பாலான மக்களை உணர்ச்சி வசப்படுத்தி பல கோடி மக்களைக் கொலை செய்து,அதன் எதிரொலியாகத் தனது தாய் நாட்டையே எதிரிகள் புகுந்து துவம்சம் செய்ய,அடோல்ப் ஹிட்லரின் பாஸிஸக் கொள்கை வழிவகுத்ததை,இன்று மக்கள் நினைவு கூருகிறார்கள்.

ஹிட்லர் தனது கொள்கையான,ஜேர்மனியில் 'ஆரிய வம்சத்தை'உயர்த்துவதற்காக மற்றவர்களை மனித மற்ற முறையில் வேட்டையாடி அழித்தான்.

20.4.1889ல் ஜேர்மனிய ஆதிக்கத்திலிருந்த ஆஸ்டிரியாவிலுள்ள ப்ரானாவு என்ற இடத்தில் ஹிட்லர்,அலோய்ஸ் ஹிட்லா என்பவரின் இரண்டாவது மனைவி,கிலாரா போல்ஸி என்ற தம்பதிகளின் மகனாகப் பிறந்தான்.இவனுடைய தகப்பனுக்குத் தகப்பன் பெயர் தெரியாது. பெரிய பணக்கார வீட்டில் வேலைக்காரியாயிருந்த பெண்ணுக்குப் பிறந்த ஹிட்லரின் தந்தை ஒரு யூதனாக இருக்கலாம் என்ற தகவல்களுமுண்டு.

ஹிட்லர் இளவயதில் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.தனது தந்தையின் ஆசைப்படி அவனால் படிக்க முடியாதிருந்தது. ஹிட்லருக்கு ஓவியனாக வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. அலொய்ஸ் ஹிட்லரின் முதல் மனைவியின் மகன் குற்றச் செயல்களால் சிறை சென்றபோது, இரண்டாவது மனைவியின் மகனான அடோல்ப் ஹிட்லர் என்றாலும் நன்றாகப் படிக்கவேண்டும் என்ற ஆசையை ஹிட்லர் நிறைவேற்றவில்லை. ஹிட்லர் வித்தியாசமானவன்.ஹிட்லருக்குப் புத்திசாலிப்; பெண்களைப் பிடிக்காது.தன்னைவிட அரசியல் தெரிந்தவர்களைப் பிடிக்காது.

ஜேர்மனிக்கும், பிரான்ஸ்,இங்கிலாந்து,அமெரிக்கா சேர்ந்த நாடுகளுக்கும் நடந்த முதலாம் உலகப் போரில் அவன் ஜேர்மனிய சிப்பாயாகவிருந்து இங்கிலாந்து போட்ட குண்டில் கண்ணில் பெரிய தாக்கத்தைக் கண்டான்.

உலக யுத்தத்தில், ஜேர்மனி தோற்றபோது, ஜேர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்த பிரான்ஸ் உட்படப்பல நாடுகள தங்களைப் போருக்கிழுத்த குற்றத்திற்கான நட்ட ஈடாக ஜேர்மனி பெருந்தொகையைக் கட்டவேண்டும் என்று வற்புறத்தியதால் போரில் தோல்வி கண்டு பெருமிழப்பைக் கண்ட ஜேர்மனியின் பொருளாதாரம் பல காரணங்களால் சிதைந்தது.மக்கள் மிகவும் துயர்பட்டார்கள். பல விதமான போராட்டங்கள் 1920ம் ஆண்டு கால கட்டத்தில் வெடித்தன.ஜேர்மனியின் துயரநிலைக்குப் பெரும் பல துறைகளிலும் பணம் படைக்கும் முதலாளிகளான யூதர்கள்தான்காரணம் என்று ஹிட்லர் பிரசாரம் செய்தான்.

ஹிட்லர் பெரும்பாலான அரசிற் தலைவர்கள் மாதிரி மக்களைக் கவரும் விதத்தில் பேசுவான். அதை அவனுக்குச் சொல்லிக் கொடுத்த 'எறிக்' என்பவன் ஒரு யூதன் (அவனையும் ஹிட்லர் கொலை செய்தான்).

ஒரு நாடு மிகவும் சிக்கலான நிலைக்குள் தள்ளப்படும்போது,அந்த நாட்டின் சிக்கல்களுக்கு யாரையோ குற்றம் சாட்டுவது வலதுசாரிகளின் பாரம்பரியக் கொள்கைகளில் ஒன்றாகும். நாட்டுப் பற்றுள்ளவர்களாகக் காட்டிக் கொண்ட ஹிட்லர் போன்றோர் நாஷனல் அரசியல் கட்சியைத் (நாஷ்சி) தொடங்கி,யூதர்களுக்கெதிராக மக்களிடம் செய்த பிரசாரத்தால்,ஜேர்மன் மக்கள் தங்களைவிட பொருளாதாரத்தில் உயர்நிலையிலிருந்த யூதர்களை வெறுத்தார்கள்.

ஹிட்லர் தனது பிடிக்காதவர்களையும்,இடதுசாரி போன்றவர்களைக் கொலை செய்தான் இதனால் நாஷனல் அரசியல் கட்சி தடைசெய்யப்பட்டு,ஹிட்லர் சிறை சென்றான். சிறையிலிருக்கும்போது (1923-24) 'எனது போர்' -என்ற புத்தகத்தை எழுதினான். சிறையால் வெளிவந்ததும்,அவனின் பிரசாரத்தால் அவனின் கட்சிக்கு,3 விகிதமாகவிருந்து வாக்குகள் 18 விகிதத்தில் உயர்ந்தது.1932ம் தேர்தலில் வொன் ஹின்டன்போர்க் என்பவர் ஜேர்மனின் தலைவரானார்.அந்த அரசில் ஹிட்லர் சான்சிலர் பதவியைப் பெற்றான்.அவனது வசிகரமான பேச்சால் அரச நிர்வாகத்திலிருந்த பெரிய தலைகளைத் தன் வசப் படுத்தினான். அவனின் திட்டத்தால்,1933ல் யூதர்களின் உடமைகள் அவர்களிடமிருந்து பறிக்கப் பட்டு தேசியமயமாக்கப்பட்டது. 1934ம் ஜேர்மன் தலைவர் ஆண்டில் வொன்டன்பேர்க் இறந்ததும் ஹிட்லரின் ஆளுமை கூடியது. ஹிட்லரை எதிர்ப்பவர்களை அவனுடைய ஆதரவாளர்கள் தொலைத்துக் கட்டினார்கள்.

ஹிட்லருக்கு,இடதுசாரிகளையோ அல்லது முதலாளித்துவவாதிகளையோ பிடிக்காது. ஜேர்மனியை அதிபெரும் நாடாக்க எவரையும் கொலை செய்து, தனது நோக்கையடையப் பிரமாண்டமான 'ஜேர்மன் தேசிய' உணர்வலையை உண்டாக்கினான். பணபலமுள்ள யூ+தர்களை வளைத்துப் பிடித்தான். பல யூத வேறு நாடுகளுக்குத் தப்பி ஓடினர்.அமெரிக்கா அந்தக் கால கட்டத்தில் பொருளாதார ரீதியாகத் திணறிக் கொண்டிருந்தது. ஹிட்லர் அமெரிக்கா, மனிதமற்ற யூதர்களாலும் 'மனிதரல்லாத'கறுப்பு மக்களாலும் சிதைவதாக நினைத்தான். ஜேர்மனியிலிருந்து அமெரிக்கா சென்ற யூதர்களின் பிரமாண்டமான பொருளாதார,ஊடக சக்தியால் தனக்கு அழிவு வரும் என்று அவன் நினைக்கவில்லை.

ஐரோப்பாவின் 22 நாடுகளிலுமுள்ள 9 கோடி யூதர்களையம் வளைத்துப் பிடித்துக் கொலை செய்து அழிக்கத் திட்டமிட்டான். 'ஆரிய வம்சத்தை' ஐரோப்பாவின் மேன்மையான ஆளும் வர்க்கமாக்கக் கனவு கண்டான். அத்துடன் பிரித்தானியாவை அழித்து இங்கிலாந்தை விட பிரமாண்டமான சாம்ராச்சியத்தை,ஐரோப்பா,ஆசியா,ஆபிரிக்காவில் உண்டாக்கக் கனவு கண்டான்.

1939ம் ஆண்டு போலாந்தைப் படையெடுத்து நான்கு மாதத்தில் வென்றான். 75.000 பொது மக்கள் அங்கு கொல்லப் பட்டார்கள் அதைத் தொடர்ந்து நோர்வேய் நாட்டை 4 கிழமைகளில் வென்றான்.ஹொலந்தை 4 நாளிலும், பெல்ஜியத்தை 3 கிழமைகளிலும் பிரான்ஸை 6 கிழமையிலும் வென்றான்.

1941ம் ஆண்டு லண்டனில் குண்டு மழைபொழிந்து துவம்சம் செய்தான்.கிட்டத்தட்ட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஹிட்லரின் பிடிக்குள் வந்தன.

தனக்குப் பிடிக்காதவர்களையும் யூதர்களை;யும் கொலை செய்யப் பல முறைகளைப் பாவித்தான்.

இவனது கொடுமைகளைத் தாங்காத வொன் ஸ்ரவன்போர்க் என்ற ஜேர்மன் போர்த்;தளபதி ஹிட்லரைக் கொலைசெய்ய அவனின் மேசைக்கடியில் குண்டு வைத்து அந்தக் குண்டு வெடித்தபோது ஹிட்லர் தப்பி விட்டான். அந்தத் தளபதியையும்,தனக்கு எதிரானவர்கள் என்ற சந்தேகப்பட்டவர்கள்; 4900 பேரையும்; தனது கைகளாற் கொலை செய்தான்.

ஹிட்லரின் கொடுமையால்:

ஜேர்மன் இடதுசாரிகள் 60.000 நாட்டை விட்டோடினார்கள். புல்லாயிரக் கணக்கான தொழிற்சங்கவாதிகள் சிறைபிடிக்கப் பட்டார்கள்,அவனைக் கேள்வி கேட்ட ஜேர்மன் மக்கள் 150.00 சிறை பிடிக்கப் பட்டார்கள்.அத்துடன்,5 கோடி ஜிப்சிகள், ஐரோப்பாவின் பலபகுதிகளிலுமிருந்து கொலை செய்யப் பட்டார்கள்.

யூதர்களைக் கொல்ல பல முறைகள் முன்னெடுக்கப் பட்டன. வைத்திய பரிசோதனை செய்யப் பட்டுப் பலர் கொலை செய்யப்பட்டார்கள். அதிகப்படி வேலைவாங்கி கொலை செய்யப்பட்டார்கள். பட்டினி போட்டுக் கொலை செய்யப் பட்டார்கள். அந்த முறைகளால் கோடிக்கணக்;கானவர்களை விரைவாகக் கொலை செய்ய முடியாதபடியால் போலந்து ஆஷ்விட்ச் போன்ற இடங்கள் போல் பல இடங்களில் நச்சுவாயின்மூலம் அதிவிரைவான கொலைத் திட்டத்தை அமுல் படுத்தனார்கள். ஆஷ்விட்சில் மட்டும் ஒரு கோடி யூதர்களும் வேறு பல விதங்களில் ஒட்டு மொத்தமாக 6 கோடி யூதர்களும் கொலை செய்யப் பட்டதாக அறிக்கைகள் சொல்கின்றன.

பிரித்தானியாவுக்கு இந்தியா என்றொரு பெரிய நாடு இருப்பதுபோல் ஜேர்மனிக்கும் ஒரு பிரமாண்டமான நாடு தேவை என்று நினைத்த ஹிட்லர்,1941ல் சோவியட் யூனியனுக்குப் படையெடுத்தான்.ஒரு கிழமையில் ஹிட்லரின் படையால் 150.000 சோவியத் சிப்பாய்கள் இறந்தார்கள்,காயம்பட்டார்கள பலர்;.அக்டோபர் மாதம். 3 கோடி சோவியத் சிப்பாய்கள் போர்க்கைதிகளாயினர்.உக்ரேயினில்,100.000 பொது மக்கள் பட்டினியால் இறந்தார்கள். சோவியத் யூனியன் பல இழப்புக்களைக் கண்டாலும் நீண்டகாலம் ஜேர்மனுடன் போராடி, பல்லாயிரம் மக்களையும், போராளிகளையும் இழந்தாலும்,ஜேர்மனியைப் பின்வாங்கப் பண்ணியது.

ஜேர்மனியின் கொடுமை தாங்காத பிரித்தானியா,அமெரிக்கா ஹிட்லரை அழிக்கத் திட்டம் போட்டன.அத்துடன் ஹிட்லரால் பலகோடி மக்களையிழந்த் சோவியத் யூனியன் 1944ல் ஜேர்மனியில் போர் தொடுத்தது. சோவியத் யூனியனின் படைகள் 27.1.45ல் ஆஷ்விட்ச் வதைமுகாமை வளைத்துப் பிடித்து அங்கிருந்த யூதர்களை விடுவித்தது.

30.4.45ல் ஹிட்லர் தனது காதலியுடன் தற்கொலை செய்த கொண்டான்.

ஏப்ரல் மாதம் பேர்லினில் சோவியத் யூனியன் தனது சிவப்புக் கொடியை ஏற்றியது.

ஹிட்லரின் கொடுமை மாதிரிக் கொடுமைகளை இன்றும் பல நாடுகளில் பல தலைவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.தங்கள் ஆளுமையை நிலை நாட்ட, நாட்டுப்பற்று, மதவெறி,நிறவெறி, இனவெறியைத் தங்கள் ஆளுமை ஆயதமாகப் பாவித்து, தங்கள் நாட்டுப்; பொது மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். ஒரே நாட்டில் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் ஒன்றாய் வாழ்ந்த பல் விதமான மக்களைத் தங்கள் வக்கிரமான பேச்சால் தூண்டிவிட்டு வன்முறையை முனனெடுக்கிறார்கள், மக்களைப்; பிரித்து தங்கள் அரசியல் இலாபத்தைப் பெருக்குகிறார்கள்.

ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் 700.000 மியான்மார் நாட்டின் கொடுமையான அரசிலைமைப்பால் நாடற்றவர்களாக்கப் பட்டிருக்கிறார்கள்.ஹிட்லர் யூதர்களுக்கு உண்டாக்கிய முகாம்கள் மாதிரி சீனாவிலும் முஸ்லிம் மக்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இன்று தங்கள் இனத்தின் கொடுமையான அனுபவத்தை ஞாபகம் கொள்ளும் இஸ்ரேல் நாட்டின் கொடுமையால் பாலஸ்தீன மக்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாகப் பல நாடுகளில் பல முகாம்களில் அகதிகளாக இருக்கிறார்கள்.

பல நாடுகளில் 'தேசிய உணர்வு' அரசியல்வாதிகளால் தங்கள் சுயஇலாபத்திற்குத் தூண்டப்படுவதுபோல்,அமெரிக்காவில் 'தேசிய உணர்வு' தூண்டப்பட்டு அங்கு அகதிகளாக வரும் 2வயதுக் குழந்தையும் தாயிடமிருந்து பிரிக்கப் படுகிறது.

ஹிட்லரின் கொடுமையின் வக்கிரத்தால் நடந்தவை வெறும் சரித்திரக் குறிப்புகளாக மட்டும் நினைவு கூரப்படாமல்,அப்படி ஒரு கொடுமை இனியும் நடக்கக் கூடாது என்று நாங்கள் பல விதத்திலும் செயல்படவேண்டியது மனித உரிமைவரிகளின் இன்றியமையாத கடமைகளில் ஒன்றாக இருக்கவேண்டும் என்பது முக்கியமாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்