- கண்டி ஃபோறம் விடுத்துள்ள அறிக்கை" பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனிதமும் இல்லை -
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் (21.04.2019) கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய நாட்டின் பலபகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர விடுதிகளையும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட, சுமார் 350 அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று 500 பேரை மோசமான காயங்களுக்கு உட்படுத்திய, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை கண்டி ஃபோறம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
இப்பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் துரதிஷ்டவசமாக இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறிய தீவிரவாத மதக்குழுவினர் என அடையாளம் காணப்பட்டதை அறிந்து நாம் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். இஸ்லாத்தில் பயங்கர வாதத்துக்கு இடமில்லை என்பதை நாம் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். இஸ்லாம் சாந்திக்கும் சமாதானத்துக்குமான ஒரு மார்க்கமாகும். யாரேனும் ஒருவர் ஒரு மனிதரைக் கொன்றால் அது முழு மனிதர்களையும் கொன்றதற்குச் சமமானது என்றும், யாரேனும் ஒருவர் ஒரு. மனித உயிரைக் காப்பாற்றினால் அது முழு மனிதர்களையும் காப்பாற்றியதற்குச் சமமானது என்றும் குர்ஆன் அழுத்தமாகக் கூறுகின்றது (5:32). இதுதான் இஸ்லாம். பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனித சமுதாயத்தில் இடமும் இல்லை. இந்தக் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதக் குழுவினர் இஸ்லாத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்றும், தங்கள் கருத்தியலிலும் செயற்பாடுகளிலும் அவர்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவர்கள் என்றும் நாம் வெளிப்படையாகக் கூற விரும்புகிறோம். இன்று பத்திரிகைகளில் தெரிவிக்கப்படும் செய்திகளின் அடிப்படையில் இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் என அழைக்கப்படும் ஒரு சர்வதேசப் பயங்கரவாதக் குழுவின் கையாட்களாகச் செயற்பட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது. இப்பயங்கரவாதக் குழு மேலைத்தேய ஏகாதிபத்தியவாதிகளால் மத்தியகிழக்கில் மேற்கொள்ளப் பட்ட அழிவுச் செயற்பாடுகளின் ஒரு உபவிளைவாகும். அவர்களுடைய கருத்தியலும் செயற்பாடுகளும் இஸ்லாத்துக்கு எதிரானவைகளேயாகும்.
இப்பயங்கரவாதப் பேரழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எங்களது இதயம் நிறைந்த இரங்கலையும் அநுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிரான எந்தக் குற்றச்சாட்டுகளும் இதுவரை இருந்ததில்லை. இந்த நாட்டில் இதுகாலவரை இவ்விரு சமூகங்களுக்கும் இடையே எந்தவித மோதல்களோ முரண்பாடுகளோ இருந்ததில்லை. இந்த நிலையில்தான் முஸ்லிம்களுடன் அடையாளப்படுத்தப்படுகின்ற ஒரு பயங்கரவாதக் குழு அவர்கள் மீது பைத்தியகாரத் தனமாக ஒரு பேரழிவைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அத்தோடு முழு முஸ்லிம் சமூகத்தையும் ஒரு பேரழிவுச் சூழ்நிலைக்குள்ளும் தள்ளிவிட்டிருக்கிறது. இத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தங்கள் அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிப்பதோடு, அவர்கள் தங்கள் வாழ்வை மீளக் கட்டி எழுப்புவதற்கும் தங்கள் மன வடுவை ஆற்றுவதற்கும் சாத்தியமான எல்லா வழிகளிலும் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டுமென்று முஸ்லிம் சமூகத்தை நாம் வேண்டுகிறோம்.
குற்றவாழிகளுக்கும் அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்களுக்கும் எதிராக அவசியமான உறுதியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தையும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளையும் நாம் வேண்டிக்கொள்கிறோம். அதேவேளை, கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம்தின் கீழ் நடந்ததாகக் கூறப்படும், நிலைமையை இன்னும் மோசப்படுத்தக்கூடிய, ஆதாரமற்ற சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்படும் காரணமற்ற கைதுகளைத் தவிர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துமாறும் நாம் அரசாங்கத்தை வேண்டிக்கொள்கிறோம்.
இந்த மண்ணிலிருந்து பயங்கரவாதத்தையும் இன மத வெறுப்பையும் இல்லாதொழிப்பதற்கும், பரஸ்பர புரிந்துணர்வையும், இனங்களுக்கும் மதங்களுக்குமிடையே நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கும், தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கும், இலங்கைக்கான பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும், பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைமைப் பீடங்களுக்கும், சிவில் சமூக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் நாம் வேண்டுகோள்விடுக்கிறோம்.
கண்டி ஃபோறம் உறுப்பினர்கள்
பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் எம். ஏ. எம். சித்தீக்
பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ், பேராசிரியர் எம். ஐ . மவ்ஜூத்
கலாநிதி ஏ. எஸ். எம். நௌஃபல், கலாநிதி ஏ. எல். எம். மஹறுஃப்
கலாநிதி எம். இசற். எம். நஃபீல் , எம். எம். நியாஸ், ஏ. ஜே. எம். முபாறக்
யு. எம். ஃபாசில், ஜே. எம். நிவாஸ்
(163, எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க மாவத்த, கண்டி)
25.04.2019
Terrorists have No Religion and No Humanity! Statement Released by the Kandy Forum!
The Kandy Forum vehemently condemn the barbarous terrorist attacks simultaneously carried out across the country, in Colombo, Negombo and Batticaloa targeting at churches and tourist hotels that killed nearly 350 and seriously wounded 500 innocent people on Eater Sunday (21.04.2019).
We are shocked and surprised to know that the culprits belong to a fringe group of religious extremism unfortunately identified with the Muslim community in Sri Lanka. We wish to state that terrorism has no place in Islam, by definition Islam is a religion of peace. The Qur’an categorically says that “ if any one slew a person it would be as if he slew the whole people and if any one saved a life it would be as if he saved the life of the whole people” (5:32). This is the spirit of Islam. Terrorists have no religion and have no place in humanity. We would like to openly state that this barbarous terrorist group is not Islamic but anti-Islamic in their ideology and actions and as it is reported in the press, they might have acted as stooges of an international terrorist group known as ISIS which is a byproduct of the destructive activities of the Western Imperialists in the Middle East during the recent past. It is also an anti-Islamic in its ideology and actions.
We wholeheartedly express our heartfelt condolence and sympathy to the victims and their families. Sri Lankan Muslims never had any grievances against the Christian community and never had an experience of conflict and confrontation with them in this country. It is in this context a terrorist group, unfortunately identified as Muslim, madly unleashed tremendous disasters on them, pushing the whole Muslim community into the disastrous situation.
We appeal to the Muslim community to extend our sympathy and help in all the possible ways to the families of the victims to rebuild their life and heal their psychological trauma.
We also urge the Government and the law enforcing authorities to take necessary and strong legal actions against the culprits and the perpetrators behind them, and also appeal to the Government to avoid indiscriminate arrest on suspicion as it was allegedly done in the past especially under the PTA , which believed to contribute to worsen the situation.
We also appeal to all the political parties, Buddhist, Hindu, Christian and Islamic religious leaderships, civil society organization and the general public to work jointly to eradicate terrorism, religious and ethnic hatred and to promote mutual understanding, religious and ethnic harmony, reconciliation and nation building and for a bright future of Sri Lanka.
Members of Kandy Forum
Prof. M A Nuhman, Prof. M A M Sitheeque
Prof. M S M Anes, Prof. M I Mowjood
Dr. A S M Nawfal, Dr. A L M Mahroof
Dr. M Z M Nafeel, Mr. M M Niyaz, Mr. A J M Mubarak
Mr. U M Fazil, Mr. J M Niwas
(163, S W R D Bandaranayeka Mawatha, Kandy)
25.04.2019