வி.சந்திரகுமாரின் (தம்பா) சிறுவர் நவீனம் 'கொரில்லா அரக்கன்' - வ.ந.கிரிதரன் -

குழந்தை இலக்கியம் அல்லது சிறுவர் இலக்கியமென்பது குழந்தைகளின் நல்லதோர் எதிர்காலத்துக்கு முக்கியமானதொரு படிக்கட்டு. வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுவர் இலக்கியத்துக்குப் பக்கங்கள் ஒதுக்கும் பத்திரிகை, சஞ்சிகைகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்கினை ஆற்றி வருகின்றன.
சுதந்திரன், தினகரன், வீரகேசரி , ஈழநாடு (பழைய) ஆகியவற்றில் வெளியான சிறுவர் பக்கங்கள் முக்கியமானவை. எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய பக்கங்கள் அவை. சிரித்திர்ன கண்மணி என்னும் சிறுவர் சஞ்சிகையினை வெளியிட்டது. அழகான ஓவியங்களுடன், குழந்தைகளைக் கவரும் ஆக்கங்களுடன் வெளியான அச்சஞ்சிகை சில இதழ்களே வெளிவந்தது. கண்மணி நின்ற பின்னர் கண்மணி என்னும் பெயரில் சிரித்திரனில் சிறுவர் பக்கங்கள் வெளிவந்தன. இலங்கைத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அவ்வப்போது சிறுவர் சஞ்சிகைகள் வெளிவந்தாலும் அவை நிலைத்து நிற்பதில்லை என்பது துரதிருஷ்ட்டமானது. எழுத்தாளர் கணபதி சர்வானந்தாவும் அண்மையில் அறிந்திரன் என்னும் நல்லதொரு சிறுவர் சஞ்சிகையினை வெளியிட்டார்.அதுவும் நிலைத்து நிற்கவில்லை. மீண்டும் அதனைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றார். இம்முறை அவர் வெற்றியடைய அனைவரும் உதவ வேண்டும்.


உலக சிறுவர் புத்தக தினம் (International Children´s Book Day) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், எழுத்தாளரும், கவிஞருமான ர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சனின் பிறந்த நாளே உலக சிறுவர் நூல் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒலி எந்த உயிரினத்தையும் ஒரு கணம் திசைதிரும்ப வைக்கும். தொட்டிலில் அழும் குழந்தை, திடீரென ஒரு வேற்று ஒலியைக் கேட்டதும், தன் அழுகையைச் சட்டென நிறுத்திவிடுகிறது. எங்கோ ஒரு மூலையில் தானியங்களைக் கொறித்துக்கொண்டிருக்கும் ஒரு முயல்க்குட்டி சற்றே தொலைவில் ஏதோ ஒரு சத்தம் கேட்டதும் அது கொறிப்பதை நிறுத்தித் தன் காதுகளை மேலே உயர்த்திச் சு10ழ்நிலையை அவதானிக்கிறது. உலகிலுள்ள உயிர் வர்க்கங்கள் யாவுமே ஒலி அலைகளையும் ஒலிக் குறிப்புகளையும் வைத்தே தம்மையும் தம் இனத்தையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்கின்றன.
இச்செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைப் பற்றி இக்கட்டுரை பேசுகிறது. ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்களின் வாசிப்பும், வாசிப்புத்திறனும் குறைந்திருப்பதாக அண்மையில் இலங்கையில் யூனிசேப் (UNICEF) நிறுவனம் செய்த ஆய்வொன்று தெரிவித்திருந்தது. இதையடுத்து ஸ்டெம் கல்வி தன்னார்வத் தொண்டு நிறுவனம் இதன் அடிப்படையில் புதிதாக இளம் மாணவர்களுக்காக ஒரு வாசிப்புத் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது. 


எழுத்தாளர் மதிவதனி பத்மநாதன் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகின்றார். மதுரையில் பிறந்து, இலங்கையில் வளர்ந்து தற்போது சுவிட்சர்லாந்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். பேராதனைப் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டதாரியான இவர் வாணமதி , மதிவதனி ஆகிய பெயர்களில் இலக்கிய உலகில் அறியப்பட்டவர். கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் சிறுவர் இலக்கியமென இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்துபட்டது.
கவிஞர் சாரணாகையூம் (இயற்பெயர் ஜனாப் என்.எஸ்.ஏ.கையூம்) பதுளையைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குழந்தைகள் இலக்கியமென்றால் சோமசுந்தரப்புலவர், வேந்தனார் இவர்களுடன் என் நினைவுக்கு வரும் அடுத்தவர் இவர். என் மாணவப் பருவத்தில் ஈழநாடு மாணவர் மலரில் வெளியாகிய இவரது குழந்தைக் கவிதைகளைப் படித்து இன்புற்றதுண்டு/. இலங்கையில் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றில் இவரது கவிதைகளும் இடம் பெற்றிருக்கும். 
கவிஞர் வேந்தனாரின் குழந்தைப்பாடல்கள் மிகவும் முக்கியமானவை. அவரது குழந்தைப்பாடல்கள் தமிழ்க்குழந்தைகளுக்கு இன்பத்தைத்தருபவை. மிகவும் புகழ்பெற்ற 'காலைதூக்கிக் கண்ணில் ஒற்றி' என்னும் பாடலை எழுதியவர் கவிஞர் வேந்தனாரே. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவை அறிந்த அளவுக்கு நம் குழந்தைகள் கவிஞர் வேந்தனாரின் குழந்தைக் கவிதைகளை அறிந்திருக்கின்றார்களா என்றால் இல்லையென்றே கூற வேண்டும். அவரது 'காலைதூக்கிக் கண்ணில் ஒற்றி' மட்டுமே அதிகமாக அறிந்திருப்பார்கள். ஆனால் கவிஞர் வேந்தனார் பல குழந்தைப்பாடல்களை எழுதியுள்ளார். இலங்கையில் வெளியான ஈழநாடு, சுதந்திரன் போன்ற பத்திரிகைகளில் அவரது குழந்தைக் கவிதைகள் பல வெளியாகியுள்ளன. மூன்று தொகுதிகளாக அவரது குழந்தைப்பாடற் தொகுப்புகள் நூலுருப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 'பதிவுகள்' இணைய இதழின் சிறுவர் பக்கம் பகுதியில் அவரது குழந்தைப்பாடல்கள் அவரது குழந்தைப்பாடற் தொகுப்புகளிலிருந்து தொடர்ந்து வெளியாகும். அவரது குழந்தைப்பாடல்களைத் தமிழுலகு அறியவேண்டியது அவசியம். அதற்காகவே இம்முயற்சி. உங்கள் குழந்தைகளுக்கு அவரது குழந்தைக் கவிதைகளை அறிமுகம் செய்யுங்கள். - ஆசிரியர், பதிவுகள் -


கனடா தமிழர்களின் வரலாறு இந்த மண்ணில் சுமார் 40 வருடங்களாக இருக்கின்றது. தமிழர்கள் ஏனைய துறைகளில் காட்டும் ஆர்வத்தைச் சிறுவர் தமிழ் இலக்கியத்தில் தற்போது காட்டவில்லை என்பதே எனது சொந்தக் கருத்தாகும். இன்றும் அந்தக் குறை சரிவர நிவர்த்தி செய்யப்படவில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர ஏனையோருக்கு இதில் அதிக ஆர்வம் இல்லாமல் போனது மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் தமிழ் கற்பதில் அடுத்த தலைமுறையினருக்கும் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. தமிழ் சமூகம் மட்டுமல்ல, தமிழ் பெற்றோர், தமிழ் ஆசிரியர், பிள்ளைகளுக்கும் இந்தப் பின்னடைவில் முக்கிய பங்குண்டு. ஊரிலே தமிழ் சூழலில் வளர்ந்ததால் எங்களுக்குத் தமிழ் மொழி கற்பதில் எந்தக் குறையும் இருக்கவில்லை. புலம் பெயர்ந்த மண்ணில் தமிழ் மொழி தானாக வளரப் போவதில்லை என்பதை நாம் அறிவோம். ஆனாலும் கடந்த 40 வருடங்களாக இந்த மண்ணில் தமிழ் மொழி நிலைத்து நிற்க வேண்டும் என்பதில் தன்னார்வத் தொண்டர்களாகத் தமிழ் கற்பித்தவர்களையும், அதற்கு நிதி உதவி வழங்கியதன் மூலம் மிகவும் ஆர்வத்தோடு ஈடுபட்டவர்களையும், தமிழ் சிறுவர் இலக்கிய நிகழ்வுகளை தங்கள் ஊடகங்களில் பதிவு செய்து ஆக்கமும் ஊக்கமும் தந்தவர்களையும் நாம் கட்டாயம் பாராட்டியே தீரவேண்டும். இன்றும் கனடாவில் தொடர்ந்தும் தமிழ் நிலைத்து நிற்பதற்கு இவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதையும் வருங்காலத் தலை முறையினர் நினைவில் கொள்ள வேண்டும்.
- பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்': இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப் பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: 





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









