லண்டனில் தமிழ் மக்களின் சதுரங்கச் சுற்றுப் போட்டி! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
அரசர்களின் விளையாட்டு எனக் கருதப்படும் சதுரங்கம் chess) இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டுக்குத் தமிழில் ஆனைக்குப்பு என்ற பெயரும் உண்டு. மதியூகமும், தந்திரமும் முக்கியமானதாகக் கருதப்படும் இவ்விளையாட்டானது தற்காலங்களில் பாடசாலைப் பாடவிதானத்திலும் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் பூராகவுமுள்ள பல மில்லியக்கணக்கான மக்களால் வீடுகளில், பூங்காக்களில், கழகங்களில், இணையத்தளங்களில் விளையாடுவதோடு, கணனிகளிலும் போட்டித் தொடர்களாகவும் விளையாடப்பட்டு வருகின்றது.
இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, ஒரு கலையாகவும், அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. சில சமயங்களில் ஒரு போர் விளையாட்டாகவும், ‘மூளை சார்ந்த போர்க்’கலையாகவும் பார்க்கப்படுவதுண்டு. இப்படி 1500 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இந்தச் சதுரங்க விளையாட்டானது பல ஈடுபாடுள்ள சென் சதுரங்க ஆர்வலர்களை உருவாக்கியது எனலாம். அந்தகைய சிறப்புகளைக் கொண்ட சதுரங்க விளையாட்டை ‘உலகத் தமிழர் சதுரங்க பேரவை’ யின் (WTCF) ஏற்பாட்டால் மிக அண்மையில் முதற் தடவையாக லண்டன் அல்பேட்டன் கொமியூனிற்றிப் பாடசாலை மண்டபத்தில் இப்போட்டி அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.