கவிஞர் சுகாதாகுமாரி ஒரு சமூக, அரசியல் & சூழலியற் செயற்பாட்டாளர்! - சுப்ரபாரதிமணியன் -
- சுகாதாகுமாரி (22 சனவரி 1934 – 23 திசம்பர் 2020) கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். கவிஞர். சமூக, அரசியல் & சூழலிலற் செயற்பாட்டாளர். பெண்ணிய இயக்கம், அமைதி பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம், சூழலியல் போன்ற சமுக இயக்கங்களில் பணியாற்றியவர். இவர் கேரள மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராகவிருந்தவர். -
கேரளா அமைதி பள்ளத்தாக்கு 2022 கேரளா அமைதி பள்ளத்தாக்கு - கொரோனா காலத்திற்கு பின்னால் நவம்பர் இறுதியில் இந்த முறை போயிருந்தபோது .அந்த மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியிலும் சூட்டின் தன்மை அதிகமாக வெப்பநிலை அதிகமாக மாறி இருப்பதைச் சொன்னார்கள். உலகம் முழுக்க வெப்பம் அதிகமாகிக் கொண்டிருப்பது. குளோபல் வார்மிங் என்பதற்கு அமைதி பள்ளத்தாக்கும். இலக்காயி இருக்கிறது அதன் காரணமாக ஒரு சதுர கிலோமீட்டரில் 2000க்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் வாழக்கூடிய அந்த பகுதியில் சில மாறுபாடுகள் தென்படுகின்றன.
கேரளா அமைதி பள்ளத்தாக்கு பகுதியை சுற்றி பார்க்க நபர் ஒன்றுக்கு ரூபாய் 750 ரூபாய் வசூலிக்கிறார்கள் இப்போது. 300 ஏக்கர் பரப்பிலான விரிந்த அடர்ந்த காட்டுப்பகுதி .அபூர்வமான மரங்கள் செடி கொடிகள் பறவைகள் மிருகங்கள் இவற்றைக் காண வாய்ப்பு கிட்டும் போது இந்த தொகை பெரிதல்ல தான் .ஆனால் கேரளாவைச் சார்ந்த நிறைய பேர் தென்பட்டார்கள். தமிழகத்தினரைக் காண முடிவதில்லை அதிகம் . தமிழகத்திலிருந்து அதிக தூரம் இல்லை. கோவை, ஆன்கட்டி, அட்டப்பாடி.... அவ்வளவுதான்
கேரளா அட்டப்பாடி பகுதிகளில் உலக கால்பந்தாட்டம் போட்டியை ஒட்டி கேரளா ரசிகர்கள் வெவ்வேறு அணிகளாக, விசிறிகளாக, பிரிந்து தங்களுடைய ஆர்வத்தை காட்டியிருக்கும் பதாகைகள் . இதுபோல் தமிழகத்தில் சில சமயங்களில் காண முடிகிறது . ஆனால் உலக கோப்பை கிரிக்கெட்..உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின் போது கேரள ரசிகர்கள் காட்டும் ஆர்வம் அவர் அபரிமிதமாக இருக்கிறது. இதை அவர்களுடைய படைப்புகளில் கூட சாதாரணமாக காணலாம். உதாரணத்திற்கு சுடானி பிரம் நைஜீரியா போன்ற படங்கள் கூட அமைந்துள்ளன. இது போன்ற நிறைய படங்கள் படைப்புகள்.
அமைதிப் பள்ளத்தாக்கில் அணையொன்றை 197இல் நிறுவுவதற்கு எதிராகத் தோன்றிய மக்கள் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக இருந்தவர் கவிஞர் சுகாதாகுமாரி.