அஞ்சலிக்குறிப்பு: கமலி பிரேம்ஜி ஞானசுந்தரன் மறைந்தார! முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து பிரதிகளை தட்டச்சுசெய்து வழங்கியவர் பற்றிய நினைவுகள்! - முருகபூபதி -

உலகில் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும், அஞ்சலிக் குறிப்பு எழுதும் எனது வேலைக்கு மாத்திரம் ஓய்வு கிட்டாது போலிருக்கிறது. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவுக்கு கடந்த ஜூன் 01 ஆம் திகதி மெல்பனிலிருந்து புறப்படும்போதே எனக்கு நன்கு தெரிந்த இரண்டு அன்பர்கள் இறந்துவிட்டனர். கனடா வந்து சேர்ந்தபின்னர் மற்றும் ஒரு சகோதரி திருமதி புஸ்பா சிவபாலன் மெல்பனில் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. புஸ்பா எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர். கலை, இலக்கிய ஆர்வலர். எமது எழுத்தாளர் விழாக்களிலும் இலக்கிய சந்திப்புகளிலும் பங்கேற்பவர்.
"நன்றாகத்தானே இருந்தார் ! அவருக்கு என்ன நடந்தது..?" என நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, கொழும்பிலிருந்து நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங் தொடர்புகொண்டு, எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவிருந்த எமது அருமை நண்பர் ( அமரர் ) பிரேம்ஜி ஞானசுந்தரனின் அன்புத்துணைவியார் கமலி அக்கா கனடாவில் மறைந்துவிட்டார் என்ற செய்தியைச் சொன்னார்.
அடுத்தடுத்து துயரமான செய்திகளே வந்துகொண்டிருந்தன.
கனடாவில் நான் முற்கூட்டியே தயாரித்திருந்த நிகழ்ச்சி நிரலையும் சிறிது மாற்ற நேர்ந்தது. மெல்பனிலிருந்து புறப்படும்போது கமலி அக்காவையும் பார்க்கவேண்டும் என்ற தீர்மானத்திலிருந்தேன். அதற்காக நாளும் குறித்தேன். ஆனால், அவரை அதே முகப்பொலிவுடன் மரணக்கோலத்தில்தான் பார்க்க முடிந்தது. என்னுடன் வீரகேசரியில் முன்னர் பணியாற்றிய நண்பர் தவநேசனையும் எங்கள் நீர்கொழும்பூர் நண்பர் ராஜாவையும் அழைத்துக்கொண்டு கமலி அக்காவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரைந்தேன். அங்கே அவரின் இரண்டு புதல்விகளும் என்னைக் கண்டு பேராச்சரியம் அடைந்தனர்.


ஒரு வைத்தியருடன் நோயாளர் கொண்டுள்ள அன்புறவு என்பது எல்லா வைத்தியர்களாலும் இலகுவில் பெறக்கூடியதல்ல. முதலில் டாக்டராக சந்திக்க வரும் நோயாளர் நீண்ட காலத்தின் பின்னும் உறவாக நினைத்து 'அந்த முகத்தை ஒருக்கா பாத்திட்டு போவம்' என்ற உணர்வுடன் சந்திக்க வருவதும், தமது நோய்நிலை மறந்து மகிழ்வதும், டாக்டர். எம். கே. முருகானந்தன் அவர்களின் மருத்துவ அனுபவங்களில் உன்னதமான ஒரு பகுதி. பெருமை கொள்ளலாம். அவர் எழுதிய நூலின் தலைப்பு மட்டுமே 'டாக்டரின் தொணதொணப்பு'. மற்றப்படி நோயாளரின் மனதில் அவர் பற்றிய நினைவுகள் அருமருந்து.

சங்கிலியன் என்ற நாடக எழுத்துரு மகுடபங்கம் தொகுப்பில் உள்ளது. ஈழத் தமிழ் மன்னன் பற்றிய நாடகம். பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் சங்கிலியன் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் இதனை எழுதியுள்ளார். ஏற்கனவே தமிழ்ச்சூழலில் இது தொடர்பான பல நாடக நூல்கள் வந்திருக்கின்றன. மாதகல் புலவர் சூசைப்பிள்ளையின் ‘சங்கிலியன் நாட்டுக் கூத்து’, பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ‘சங்கிலியன் நாடகம்’, காரை ந. சுந்தரம்பிள்ளையின் ‘சங்கிலியம்’, வித்துவான் கந்தையாவின் ‘சங்கிலியன் நாடகம்’, மு. அருட்பிரகாசத்தின் ‘மாவீரன் சங்கிலியன' ஆகியன எழுதப்பட்டுள்ளன. ஈழத்து அரசியல் வரலாற்றிலும் சங்கிலியன் அரசனுக்கு முக்கியத்துவம் உண்டு.


நான் கனடாவில் வானொலி நிகழ்ச்சிகள் கேட்பது குறைவு. இணையத்திலேயே என் முக்கியமான தேடல்கள், எழுத்துப்பணி இருப்பதால் எனக்கு இவற்றில் நிகழ்வுகளைக் கேட்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. மேலும் பதின்மப் பருவத்தில் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் நிகழ்ச்சிகளைப் பல திறமை மிகு ஒலிபரப்பாளர்கள், வானொலிக் கலைஞர்களூடாகக் கேட்டு மகிழ்ந்த எனக்கு அவர்களைப்போன்ற பன்மிகு துறைகளில் ஆளுமை மிக்க, புலமை மிக்கவர்களை இங்கு என்னால் எளிதாக இனங்காண முடியவில்லை என்பதும் ஒரு காரணம். இருந்தாலும் இரவு வேளைகளில் 9 மணிக்குப் பிறகு வாகனத்தில் பயணிக்கும் சந்தர்ப்பங்களில் கனடிய பல்லினக் கலாச்சார வானொலியான CMR 101.3 வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதுண்டு. தொடர்ச்சியாக அல்ல. இதனால் செந்தில்நாதன், பாலா, தர்சினி உதயராஜா போன்றவர்களின் குரல்கள் எனக்கு அறிமுகமாகின.
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதினைத் தனது 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்னும் தொகுப்புகளுக்காகப் பெற 'டொரோண்டோ' வந்திருந்தார் எழுத்தாளர் சிவசங்கரி.



டைனஸோக்கள் இப்போது உயிரோடு இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் வரலாறு தெரிந்தவர்கள் அந்த டைனஸோக்கள் உயிர் பெற்று வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையாவது செய்து பார்த்திருப்பார்கள். அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் நவீன தொழில் நுட்ப உதவியுடன் அப்படி ஒரு உலகத்தை இப்போது உருவாக்கியிருக்கிறார்கள். சென்ற வாரம் டைனஸோ பற்றிக் கனடாவில் நடந்ததொரு காட்சிக்குச் சென்று பார்த்ததை இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
எங்கம்மா, திருநெல்வேலிக்கு வந்து, இந்த வீட்டை வாங்கிறப்போ எனக்கு பத்து வயசு. ஒத்தப்புள்ள நானு. அப்பா ஏவகூடவோ போயி ரெண்டு வருஷமாச்சு.

எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தால் 2001இல் ஸ்தாபிக்கப்பட்ட 'தமிழ் இலக்கியத் தோட்டம்' கனடிய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளை. 9 இயக்குநர்களையும், இரு போசகர்களையும் உள்ளடக்கிய இவ்வமைப்பின் தற்போதைய தலைவராக எழுத்தாளரும், சட்டத்தரணியுமான மனுவல் ஜேசுதாசனிருக்கின்றார். காரியதரிசியாக எழுத்தாளர் அ.முத்துலிங்கமும், பொருளாளராக எழுத்தாளர் என்.கே.மகாலிங்கமும் இருக்கின்றனர்.


எழுத்தாளர் என்.சரவணன் அவர்கள் ஜூன் மாத 'தாய்வீடு' பத்திரிகையில் யாழ் நூலக எரிப்புப் பற்றி ஒரு கட்டுரை 'யாழ் நூலக எரிப்பில் ரணில் விக்கிரமசிங்க' என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். அதில் அவர் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது மே 31 ,1981 என்றே உறுதியாக எழுதியுள்ளார். ஆய்வாளரான அவரது இந்த முடிவு ஆச்சரியமளிக்கிறது.
எனது புத்தக அடுக்குகளில் இருந்து அமரர் கல்கி எழுதிய 'இலங்கைப் பயணக் கதை' நூல் எனது கண்ணில் பட்டது. இதனை நான் ஒரு தற்செயலான நிகழ்வாகக் கருதவில்லை. இன்று தமிழகத்தில் இருந்தும் மேற்குலக நாடுகளில் இருந்தும் புற்றீசல்கள் போல் இலங்கை நோக்கி படையெடுத்து பலரும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் 'இலங்கைப் பயணக் கதைகள் ' குறித்து நானும் ஏதாவது எழுத்தவேண்டும் என்ற சமிக்ஞையாகவே புரிந்து கொண்டேன். இது பற்றி எழுத வேண்டுமாயின் இதயம் பேசுகிறது மணியன் எழுதிய 'இலங்கை பயணக் கட்டுரை ' நூலும் மிக அவசியமானதாக எனக்குப் பட்டது. பல மணி நேரப் பிரயத்தனங்களின் பின் கேட்பாரற்றுக் கிடந்த அந்த நூலையும் என் கையில் எடுத்துக் கொண்டேன்.

எதிர்பார்க்கப்பட்டாற்போல், 149 குடியரசு கட்சியினரும் (Republicans) 165 ஜனநாயக கட்சியினரும், இணைந்து, ஒருமித்தாற் போல், அமெரிக்க காங்கிரசில் வாக்களித்து, அமெரிக்கா உலகில் பெறக்கூடிய, “கடன் எல்லையை”, 31.4 ட்ரில்லியன் டாலருக்கும் மேலே பெறலாம், என்று உயர்த்தி உள்ளனர். இப்படி உயர்த்தி விட்டதால், இனி தமது ராணுவத்துக்கு, அல்லது நடந்து கொண்டிருக்கும் ஓர் உக்ரைன்-ரஷ்ய போரில், உக்ரைனுக்கு, “உதவி” என்ற பெயரில் தான் வழங்குவதாய் கூறிக்கொண்டிருக்கும் நிதியை தொடர்ந்து வழங்குவதில் எந்த ஒரு தடங்கலும் ஏற்படப்போவதில்லை என்பது தெளிவு.
முனிவர்கள் உலக இன்பங்களைத் துறந்து, பற்றற்று இருப்பர்.. ஐம்புலன்களை அடக்கி காடுகளில் தங்கி தவம் செய்பவர். சடைமுடி வைத்திருப்பர். காவி உடை அணிந்திருப்பர். கையில் கமண்டலம் வைத்திருப்பர்.வேள்விகள் புரிவர். தாம் செய்த தவத்தில், ஆற்றல் பல பெற்றனர். அவர்கள் சொல்லும் சொல்லுக்கு சக்தி உண்டு. கோபத்தினால் சாபமிட்டால் அது பலிக்கும் என்றாலும், தவத்தின் பலன் குறைந்துவிடும் என்பதால், பிறர் செய்யும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்வர். இருப்பினும் சில முனிவர்கள், சில நேரங்களில் சாபமிடுவர்.கம்பராமாயணத்தில் முனிவர்களின் சாபச் சொல் பலிக்கும் என்பது குறித்து ஆராய்வோம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









