6
தம்மை பதவியில் இருந்து நீக்கியதில் அமெரிக்கா நேரடியாக சம்பந்தப்பட்டு இருந்தது என்று இம்ரான் கான் பகிரங்கமாக தெரிவித்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவரது அமைச்சர்களில் ஒருவர் (Mifta Ismail) ஏற்கனவே இம்ரான்கான், பெப்ரவரியில் அறிவித்திருந்த மக்களுக்கான உதவி பொதியை உடனடியாக வாபஸ் பெற்றுவிட்டு IMFஇன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு அது பிரயோகிக்கும் ஓர் பொறிமுறையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஓர் கோரிக்கையின் பின்னணியிலேயே இம்ரானின் பதவிபறிப்பு நிகழ்ந்தேறியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் (22.04.2022). பாகிஸ்தானின் இம்ரான் கானுக்கு முந்தைய அரசு, 25 கோடி டொலரை, துண்டு விழும் தொகையாக அறிவித்திருந்தது. அது பின்னர், 1.3 ட்ரில்லியன் பாகிஸ்தான்-ரூபாயாக வளர்ச்சி கண்டிருந்தது என்பது அறிந்த ஒன்றே. IMFஇன் கோரிக்கைகளில் ஒன்று, 21 ரூபாயாக இருந்த பெற்றோலின் விலையை, பாகிஸ்தான், உடனடியாக 134 ரூபாவாக மாற்றியமைக்க வேண்டும் என்பதனையும் உள்ளடக்கும்.
எண்ணெய் தொடர்பில், இலங்கை போன்றே பாகிஸ்தானும் சலுகைகளை தன் மக்களுக்கு அளித்து வந்த காலம், அந்த காலம். கூடவே, பாகிஸ்தானின் கடன் முறி உள்ளடங்கலான, வெளிக்கடன் 130,192 மில்லியன் டொலர்களாகும். (அதாவது 130.2 பில்லியன்களாகும்) - இதில் 30 கோடி டொலர் சீனக்கடன் 30மூ எனவும் கூறப்படுகின்றது.
அதாவது, 2006 இல், வெறும் 37.2 பில்லியன் டொலராக இருந்த பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன், இன்று மேற்படி 130.2 பில்லியன் டொலராக பரிணமித்துள்ளது என்பதும், இதில் IMFஇன் திட்டமிடுதல் எந்தளவுக்கு பங்கு வகிக்கின்றது என்பதும் எழக்கூடிய கேள்விகளில் ஒன்றாகும். ஏனெனில் இதுவரையில், பாகிஸ்தான், IMFஇடம் 22 முறையில் கடன் வாங்கிய சரித்திரத்தை கொண்டுள்ளது, என்பதுவே இங்கே முக்கியமானதாகின்றது. சுருக்கமாக கூறினால், இம்ரான்கானின் பதவி பறிப்பு என்ற ஓர் நிகழ்வின் பின்னணியில், பாகிஸ்தான் என்ற ஓர் நாட்டை வீழ்த்தும் பொருளாதார பொறி, அந்நாட்டின் அரசியலையும் தீர்மானிக்கும் வலுவான காரணியாகின்றதா என்ற கேள்வி, சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் முன்னோக்கி நகர்வதாயுள்ளது.