1. 'அலைகடலும் தூங்கையிலே அகக்கடல்தான் பொங்குவதேன்'

பொன்னியின் செல்வனில் வரும் இப்பாடல் இலட்சக்கணக்கான பொன்னியின் செல்வன் வாசகர்களைக் கவர்ந்த பாடல். ஆனால் இதனை இயக்குநர் மணிரத்தினம் 'பொன்னியின் செல்வன் 1'இல் பாவிக்கத்தவறி விட்டார். இன்னும் நான் இத்திரைப்படத்தைப் பார்க்கவில்லை. பார்த்த என் தங்கையொருத்தியின் கூற்றுப்படி படத்தில் இப்பாடலில்லை. மிகவும் அரியதொரு சந்தர்ப்பத்தை இவ்விடயத்தில் தவற விட்டதாகவே நான் கருதுகின்றேன். எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் புனைவதிலும் வல்லவர்கள். அது மட்டுமல்ல இருவருமே தம் நாவல்களில் வரும் பாத்திரங்களுக்கேற்பக் கவிதைகள் எழுதி, தம் நாவல்களில் இணைப்பதில் வல்லவர்கள். கல்கி தன் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஓடக்காரப்பெண் பூங்குழலியின் உணர்வுகளை மையமாக வைத்துக் கவிதையொன்று எழுதியிருப்பார். அந்தக் கவிதை ஒரு முறை வாசித்தாலும் வாசிப்பவர் நெஞ்சினை விட்டு அகலாத தன்மை மிக்கது.

'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?' என்னும் அவரது கவிதையானது ஓடக்காரப்பெண் பூங்குழலியின் சோகம் ததும்பிய நிலையினைத்தெரிவிப்பது. பொன்னியின் செல்வன் நாவலில் வரும் அந்தக்கட்டத்தினையும், அந்தக்கவிதை வரிகளையும் என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. ஒரு படைப்பானது இது போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிச்சிறந்து விளங்குகின்றது.

அந்தப்பாடலும், அது பற்றி நாவலில் வரும் கல்கியின் வர்ணனையையும் இங்கு, தற்போது நீங்கள் வாசிக்கலாம். அது கீழே:

- "பூங்குழலிு படகில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு பாடினாள். அவளுடைய கானத்தைக் கேட்பதற்காகவே கடலும் அலை அடங்கி ஓய்ந்திருந்தது போலும்! அதற்காகவே காற்றும் வீசி அடிக்காமல் மெள்ள மெள்ளத் தவழ்ந்து வந்தது போலும்! தூரத்தில் தெரிந்த காட்டு மரங்களும் இலை அசையாமல் நின்று அவளுடைய கானத்தைக் கவனமாகக் கேட்டன போலும்! வானமும், பூமியும் அந்தக் கானத்தைக் கேட்டு மதிமயங்கி அசைவற்று நின்றன போலும்! கதிரவன் கூட அந்தக் கானத்தை முன்னிட்டே மூலைக் கடலை அடைந்து முழுகி மறையாமல் தயங்கி நிற்கின்றான் போலும்.

தேனில் குழைத்து, வானில் மிதந்து வந்த அப்பாடலைச் சற்றுச் செவி கொடுத்துச் கேட்கலாம்.

"அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
காட்டினில் வாழ் பறவைகளும்
கூடுகளைத் தேடினவே!
வேட்டுவரும் வில்லியரும்
வீடு நோக்கி ஏகுவரே
வானகமும் நானிலமும்
மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி
மனத்தில் புயல் அடிப்பதுமேன்?
வாரிதியும் அடங்கி நிற்கும்
மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே
காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?"

அந்த இளமங்கையின் உள்ளத்தில் அப்படி என்ன சோகம் குடி கொண்டிருக்குமோ, தெரியாது! அவளுடைய தீங்குரலில் அப்படி என்ன இன்ப வேதனை கலந்திருக்குமோ, தெரியாது! அல்லது அப்பாடலில் சொற்களோடு ஒருவேளை கண்ணீரைக் கலந்துதான் பாடலை அமைத்துவிட்டார்களோ, அதுவும் நாம் அறியோம். ஆனால் அந்தப் பாடலை அவள் பாடுவதைக் கேட்கும் போது நமக்கு நெஞ்சம் விம்மி வெடித்து விடுவது போன்ற உணர்ச்சி ஏனோ உண்டாகிறது." -


அண்மையில் வானதி பதிப்பக வெளிவந்த 'கல்கி பாடல்கள்' நூல் அவரது பாடல்கள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 'கல்கி பாடல்கள்' நூலில் கவிதையின் முழு வரிகளுமுள்ளன. ஆனால் கல்கி பொன்னியின் செல்வன் நாவலில் அவர் பாடலின் சில வரிகளையே அவ்வப்போது பாவித்திருப்பதாக நினைவு. அந் நூலிலுள்ள பாடலின் முழு வரிகளும் கீழே:

"அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?

காட்டினில் வாழ் பறவைகளும்
கூடுகளைத் தேடினவே.
வேட்டுவரும் வில்லியரும்
வீடு நோக்கி ஏகுவரே.

வானகமும் நானிலமும்
மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி
மனத்தில் புயல் அடிப்பதுமேன்?

வாரிதியும் அடங்கி நிற்கும்
மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே
காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?

அலை கடல் கொந்தளிக்கையிலே
அகக் கடல்தான் களிப்பது மேன்?
நிலமகளும் துடிக்கையிலே
நெஞ்சக்ந் தான் துள்ளுவதேன்.

இடிஇடித்து எண் திசையும்
வெடி படும் இவ் வேளையிலே
நடனக் கலை வல்லவர்போல்
நாட்டியந்தான் ஆடுவதேன்."

'மீரா' திரைப்படத்தில் எம்.எஸ்.சுப்புலக்சுமி பாடுவதாக வரும் புகழ் பெற்ற பாடல் 'காற்றினிலே வரும் கீதம்'. இதனை எழுதியவர் கல்கி. ஆனால் திரைப்படத்தில் அவரது பெயர் இடம் பெற்றிருக்கவில்லை.


முகநூல் எதிர்வினைகள்

Arun Chellappah
எமக்கும் அந்த வரிகள் பிடிக்கும்

Devaki Sivananth
My favourite song is the original song in the book.

Firoza Hussain
அருமையான பாடல்.தயாரிப்பாளர் அதனைத் தன் படத்தில் சேர்த்திருக்கலாம்.இருட்டடிப்புச் செய்வதில் என்ன இலாபமோ?

Giritharan Navaratnam
Firoza Hussain இப்பொழுதுதான் இத்திரைப்படத்துக்குத் திரைக்கதை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகனின் நேர்காணல் கேட்டேன். யு டியூப்பிலுள்ளது. அதன்படி மணிரத்தினத்துக்குப் பூங்குழலியின் மீது பெரும் ஈர்ப்பு உள்ள விடயத்தை அறிய முடிகின்றது. இரண்டாவது பாகத்தில் பூங்குழலியின் பங்கு பெரிதாக இருக்குமென்பதை அறிய முடிகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Firoza Hussain
Giritharan Navaratnam அப்படியா?அப்படியானால் தயாரிப்பாளரின் விருப்புதான் முக்கியம் தவிர,நாவலின் கருப்பொருள் முக்கியமல்லவே?

Satheeshvaran Parakiramasingam
இப் பாடலை இணைத்து இருக்கலாம்

Kumaravelu Ganesan
நல்லதோர் பதிவு. இது பற்றி கடந்த மாதம் நான் எழுதிய பதிவையும் பார்க்கவும்.
https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10228532466393991

Yoga Valavan Thiya
Perfectly said!

Khani Vumathi
என் வசம் இருக்கும் கல்கி அவர்களின் பாடல்கள் நூலில்

Khani Vumathi
 'காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம் கல்லுங் கனியும் கீதம்! பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொலி கொஞ்சிடும் கீதம் காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோஹன கீதம் நெஞ்சினிலே! நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி நினை வழிக்கும் கீதம் (காற்றினிலே) சுனை வண்டுடன் சோலைக் குயிலும் மனம் குவிந்திடவும் வான வெளிதனில் தாரா கணங்கள் தயங்கி நின்றிடவும் ஆ யென் சொல்வேன்! மாயப்பிள்ளை வேய்ங்குழல் பொழி கீதம் (காற்றினிலே) கல்கி பாடல்கள் 37'

Murugesu Kanagalingam
Khani Vumathi இதுவும் அருமையான கீதம்.எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தேனிசைக்குரலில் நம்மை மயக்கிய கீதம்!
        
Murugesu Kanagalingam
அருமையான பதிவு. நானும் பொ.செல்வனைப் படித்தபோது அக்கவிதையில் மனம் லயித்திருந்தேன். அப்பாடல் கண்டிப்பாக இனிய இசையோடு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏனோ விட்டு விட்டார்கள்....

Anthonymuthu Sinnapitchai
There is a possibility to include in part 2
 
Giritharan Navaratnam
Anthonymuthu Sinnapitchai இப்பொழுதுதான் இத்திரைப்படத்துக்குத் திரைக்கதை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகனின் நேர்காணல் கேட்டேன். யு டியூப்பிலுள்ளது. அதன்படி மணிரத்தினத்துக்குப் பூங்குழலியின் மீது பெரும் ஈர்ப்பு உள்ள விடயத்தை அறிய முடிகின்றது. இரண்டாவது பாகத்தில் பூங்குழலியின் பங்கு பெரிதாக இருக்குமென்பதை அறிய முடிகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.  

Anthonymuthu Sinnapitchai
Giritharan Navaratnam நடக்கலாம். நடக்கும் என்று எதிர் பார்ப்போம்

Sayanthan Kathir
பாதிப்பில் இந்தப் பாடலை உருவாக்கியிருக்கலாம்

Giritharan Navaratnam
Sayanthan Kathir இப்பாடல் அதற்காக உருவாக்கியுள்ளார்கள். நாவலை வாசித்தவர்கள் நெஞ்சங்களில் கல்கியின் பாடல் ஆழமாகப் பதிந்திருக்கும். அப்பாடல் பல உணர்வுகளை ஏற்படுத்தும். நாவலை வாசிக்காமல் பார்ப்பவர்களுக்கு இவ்வித எண்ண ஓட்டமிருக்காது. ஆனால் படம் பார்த்த பலருக்கும் படம் நன்கு பிடித்துள்ளதையும் காண முடிகின்றது. இப்பாடலும் நல்ல பாடல். கேட்டதிலிருந்து அடிக்கடி நினைவில் வந்து வந்து போய்க்கொண்டேயிருக்கின்றது.

S. Krishna Veni
படத்தில் முக்கியமான காட்சிகள் இல்லை, குந்தவை வந்தியதேவன் முதல் சந்திப்பு இல்லை,, பூங்குழலி சந்திப்பு இல்லை பாடல்கள் இல்லை பலதும் இல்லை,,, ஒரே போரை தான் எடுத்து இருக்கிறார்கள்,, கவிவர்ணனைகள் எதுவும் இல்லை.

Giritharan Navaratnam
S. Krishna Veni //குந்தவை வந்தியதேவன் முதல் சந்திப்பு இல்லை,, // அதுவும் நாவலின் முக்கியதொரு நிகழ்வு. குடந்தை சோதிடர் குந்தவையின் எதிர்காலக் கணவனைப்பற்றிக் கூறுகையில் கூரையிலிருந்தும் வந்து குதிப்பான் என்று கூறுகையில் வந்தியத்தேவன் வந்து குதிப்பான். குந்தவை அவனது வருகையையும் ,சோதிடரின் கூற்றினையும் எண்ணிப் புன்னகைப்பாள். நினைவில் நிற்குமாறு கல்கி எழுதியிருப்பார். தவிர்க்கப்பட்டிருக்கக்கூடாத இன்னுமொரு காட்சி.

Raja Ratnam
Saw the film and completely agree with you, I'm quite disappointed to see that his musical.punch is not shown up well in the film, I wonder this might appear in PS2, but over all the film has done justice to the huge volumetric epic story,

Raja Ratnam
Always, even in any western stories, it is very difficult to accommodate the whole story, the writer's imagination and then our different imagination. I saw thillanaa mohanambal, after reading two volumes of Koththamankalam Suppu's original, I was quite disappointed with the film, still it was very successful Movie, in fact I believe people who have not read the 5volume Novel PS, would love this film

Selvaranjany Subramaniam
https://www.facebook.com/1550670023/posts/10228302582980301/
இதைப் பார்த்தீர்களா?

Giritharan Navaratnam
Selvaranjany Subramaniam நன்றி. இப்பொழுதுதான் பார்க்கின்றேன்.

Suniljoghee Gopal
அரிய தகவல்கள் ஐயா... நன்றி....

Visvanathan Kandeepan
நான் நினைத்தேன் அந்தப் பாட்டு இருக்கும் என. அட போங்க. இதுக்குதான் இளைய ராஜா வேணும் என்கிறது . கடல் மீன்கள் பாட்டு இப்பவும் மனத்தில். அருமையான வாய்ப்பு. AR ரஹ்மான் தவற விட்டு விட்டார். ஒரு வேளை அடுத்த பகுதியில் இருக்குமோ.

Giritharan Navaratnam
Visvanathan Kandeepan //ஒரு வேளை அடுத்த பகுதியில் இருக்குமோ.// இருக்கக் கூடும். பார்ப்போம்.

Sivananthy Ganesarayan
அருமையான பதிவு. அலைகடல் பாடலும் பூங்குழலியும் மறக்கமுடியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் அலைகடல் பாடலை கேட்கிறேன். அழகான ஓசையுடன் கூடிய பாடல்.


2.  குடந்தை சோதிடர் வீட்டில் நடந்த குந்தவைக்கும் வந்தியத்தேவனுக்குமிடையிலான முதல் சந்திப்பு!

பொன்னியின் செல்வன் நாவலின் வாசகர்கள் மறக்க முடியாத நாவலின் நிகழ்வுகளிலொன்று குடந்தை சோதிடர் வீட்டில் நிகழ்வும் அவர்களுக்கிடையிலான முதற் சந்திப்பு. முதலாவது பாகத்தின் அத்தியாயம் பதினொன்றான 'திடும் பிரவேச'த்தில் இடம் பெற்றுள்ள நிகழ்வு.

குடந்தை சோதிடர் குந்தவையின் எதிர்காலக் கணவனைப்பற்றிக் கூறுகையில் கூரையிலிருந்தும் வந்து குதிப்பான் என்று கூறுகையில் வந்தியத்தேவன் வந்து குதிப்பான். குந்தவை அவனது வருகையையும் ,சோதிடரின் கூற்றினையும் எண்ணிப் புன்னகைப்பாள். நினைவில் நிற்குமாறு கல்கி எழுதியிருப்பார்.

நண்பர்களே, இவ்விதமான அரிய வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டுவது பொன்னியின் செல்வன் வாசகர்களின் கோணத்திலிருந்து  முக்கியமானது. ஏனென்றால் நாவலின் இது போன்ற சுவையான நிகழ்வுகள்  பல காரணமாகத்தான் நாவல் இலட்சக்கணக்கான வாசகர்களை இன்றுவரை ஈர்த்து வருகின்றது.

இக்காட்சியைக் கல்கி விபரிக்கும் வரிகளைக் கீழே தருகின்றேன். வாசித்துப்பாருங்கள். ஏன் இச்சந்திப்பு முக்கியமானது என்பதை உணர்வீர்கள். வாசித்த என் பதின்ம வயதுகளிலிருந்து இன்று வரை பசுமையாக நினைவில் நிற்குன் நாவலின் காட்சிகளிலொன்று.

“ஜோசியரே! எனக்கு என்னவெல்லாமோ சொன்னீர்கள்; அக்காவுக்கு ஒன்றுமே சொல்லவில்லையே?” என்று வானதி கூறினாள்.

“அம்மா! இளையபிராட்டிக்கு எல்லாம் சொல்லியிருக்கிறேன் புதிதாக என்ன சொல்ல வேண்டும்?”

“அக்காவை மணந்து கொள்ளப் போகும் வீராதி வீரர்”

“அசகாய சூரர்” என்று குந்தவை குறுக்கிட்டுச் சொன்னாள்.

“சந்தேகம் என்ன?..மகா பராக்கிரமசாலியான இராஜகுமாரர்…”

“முப்பத்திரண்டு சாமுத்ரிகா லட்சணமும் பொருந்தியவர்; புத்தியில் பிரகஸ்பதி; வித்தையில் சரஸ்வதி, அழகிலே மன்மதன்; ஆற்றலில் அர்ஜுனன்!”

“இளையபிராட்டிக்கு ஏற்ற அந்த ஸுகுமாரரான இராஜகுமாரர் எங்கிருந்து எப்போது வருவார்?..”

“வருகிறார், தாயே! வருகிறார்! கட்டாயம் வரப்போகிறார் அதி சீக்கிரத்திலேயே வருவார்.”

“எப்படி வருவார்? குதிரை மேல் வருவாரா? ரதத்தில் ஏறி வருவாரா? யானை மேல் வருவாரா? கால் நடையாக வருவாரா? அல்லது நேரே ஆகாசத்திலிருந்து கூரையைப் பொத்துக் கொண்டு வந்து குதிப்பாரா!” என்று குந்தவைதேவி கேலியாகக் கேட்டாள்.

“அக்கா! குதிரை காலடிச் சத்தம் கேட்கிறது!” என்று வானதி சிறிது பரபரப்புடன் சொன்னாள்.

“ஒருவருக்கும் கேளாதது உனக்கு மாத்திரம் அதிசயமாய்க் கேட்கும்!”

“இல்லை, வேடிக்கைக்குக் சொல்லவில்லை இதோ கேளுங்கள்!”

உண்மையாகவே அப்போது வீதியில் குதிரை ஒன்று விரைந்து வரும் காலடிச் சத்தம் கேட்டது.

“கேட்டால் என்னடி? குடந்தைப் பட்டணத்தின் வீதிகளில் குதிரை போகாமலா இருக்கும்?” என்றாள் குந்தவை.

“இல்லை; இங்கே வருகிறது மாதிரி தோன்றியது!”

“உனக்கு ஏதாவது விசித்திரமாகத் தோன்றும் எழுந்திரு, போகலாம்!”

இச்சமயத்தில் அந்த வீட்டின் வாசலில் ஏதோ குழப்பமான சப்தம் கேட்டது; குரல் ஒலிகளும் கேட்டன.

“இதுதானே ஜோசியர் வீடு?”

“ஆமாம்; நீ யார்?”

“ஜோசியர் இருக்கிறாரா?”

“உள்ளே போகக் கூடாது?”

“அப்படித்தான் போவேன்!”

“விடமாட்டேன்”

“ஜோசியரைப் பார்க்க வேண்டும்”

“அப்புறம் வா”

“அப்புறம் வர முடியாது; எனக்கு மிக்க அவசரம்!”

“அடே! அடே! நில்! நில்!”

“சற்று! விலகிப்போ! தடுத்தாயோ கொன்றுவிடுவேன்…”

“ஐயா! ஐயா! வேண்டாம்! உள்ளே போக வேண்டாம்!”

இத்தகைய குழப்பமான கூச்சல் நெருங்கி நெருங்கிக் கேட்டது; படார் என்று வாசற் கதவு திறந்தது. அவ்வளவு பிரமாதமான தடபுடலுடன் ஒரு வாலிபன் உள்ளே திடும்பிரவேசமாக வந்தான். அவனைப் பின்னாலிருந்து தோள்களைப் பிடித்து இழுக்க ஒருவன் முயன்று கொண்டிருந்தான். வாலிபன் திமிறிக் கொண்டு வாசற்படியைக் கடந்து உள்ளே வந்தான். வந்த வாலிபன் யார் என்று வாசகர்கள் ஊகித்திருப்பார்கள் நமது வீரன் வந்தியத்தேவன் தான்!. வீட்டுக்குள்ளே இருந்த மூன்று பேருடைய கண்களும் ஏக காலத்தில் அவ்வீரனைப் பார்த்தன.

வந்தியத்தேவனும் உள்ளிருந்தவர்களைப் பார்த்தான். இல்லை; உள்ளேயிருந்தவர்களில் ஒருவரைத் தான் பார்த்தான். அதுகூட இல்லை; குந்தவை தேவியை அவன் முழுமையாகப் பார்க்கவில்லை.அவளுடைய பொன் முகத்தை மட்டுமே பார்த்தான். முகத்தையாவது முழுமையும் பார்த்தானோ என்றால், அதுவும் இல்லை! வியப்பினால் சிறிது விரிந்திருந்த அவளுடைய பவளச் செவ்வாயின் இதழ்களைப் பார்த்தான்; கம்பீரமும் வியப்பும் குறும்புச் சிரிப்பும் ததும்பியிருந்த அவளுடைய அகன்ற கண்களைப் பார்த்தான். கண்ணிமைகளையும் கரிய புருவங்களையும் பார்த்தான்; குங்குமச் சிவப்பான குழிந்த கன்னங்களைப் பார்த்தான். சங்கையொத்த வழுவழுப்பான கழுத்தைப் பார்த்தான். இவ்வளவையும் ஒரே சமயத்தில் தனி தனியாகப் பார்த்தான். தனித்தனியாக அவை அவன் மனத்தில் பதிந்தன.

இதெல்லாம் சில விநாடி நேரந்தான், உடனே சட்டென்று திரும்பிச் சோதிடருடைய சீடனை நோக்கி, “ஏனப்பா, உள்ளே பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று நீ சொல்லக் கூடாது? சொல்லியிருந்தால் நான் இப்படி வந்திருப்பேனா?” என்று கேட்டுக் கொண்டே சீடனை மறுபக்கம் தள்ளிக் கொண்டு வாசற்படியை மீண்டும் கடந்தான். ஆயினும் வெளியில் போவதற்குள் இன்னும் ஒரு தடவை குந்தவைதேவியைத் திரும்பிப் பார்த்து விட்டுத்தான் போனான்.

“அடே அப்பா! புயல் அடித்து ஓய்ந்தது போல் அல்லவா இருக்கிறது?” என்றாள் குந்தவைப் பிராட்டி.

“இன்னும் ஓய்ந்தபாடில்லை; அதோ கேளுங்கள்!” என்றாள் கொடும்பாளூர் இளவரசி.

வாசலில் இன்னமும் வந்தியத்தேவனுக்கும் சோதிடரின் சீடனுக்கும் தர்க்கம் நடந்து கொண்டிருந்தது.

“ஜோசியரே! இவர் யார்?” என்றாள் குந்தவை.

“தெரியாது, தாயே! யாரோ அசலூர்க்காரர் மாதிரி இருக்கிறது. பெரிய முரட்டுப் பிள்ளையென்று தோன்றுகிறது.”

குந்தவை திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு கலகலவென்று சிரித்தாள்.

“எதற்காக அக்கா சிரிக்கிறீர்கள்?”

“எதற்காகவா? எனக்கு வரப்போகும் மணாளன் குதிரையில் வரப் போகிறானா, யானையில் வரப் போகிறானா, அல்லது கூரை வழியாக வந்து குதிக்கப் போகிறானா என்று பேசிக் கொண்டிருந்தோமே, அதை நினைத்துக் கொண்டு சிரித்தேன்!”

இப்போது வானதிக்கும் சிரிப்புத் தாங்க முடியாமல் வந்தது. இருவருடைய சிரிப்பும் கலந்து அலை அலையாக எழுந்தது. வெளியில் எழுந்த சச்சரவுச் சப்தங்கூட இந்த இரு மங்கையரின் சிரிப்பின் ஒலியில் அடங்கிவிட்டது.
சோதிடர் மௌன சிந்தனையில் ஆழ்ந்தவராய், அரச குமாரிகள் இருவருக்கும் குங்குமம் கொடுத்தார். பெற்றுக் கொண்டு இருவரும் எழுந்தனர்; வீட்டுக்கு வெளியில் சென்றனர். சோதிடரும் கூட வந்தார்.

வீட்டு வாசலில் சிறிது ஒதுங்கி நின்ற வந்தியத்தேவன், பெண்மணிகளைப் பார்த்ததும், “மன்னிக்க வேண்டும்.உள்ளே பெண்கள் இருக்கிறார்கள் என்று இந்தப் புத்திசாலி சொல்லவில்லை. ஆகையினால்தான் அப்படி அவசரமாக வந்து விட்டேன். அதற்காக மன்னிக்க வேண்டும்!” என்று உரத்த குரலில் சொன்னான்.

குந்தவை மலர்ந்த முகத்துடன் குறும்பும் கேலியும் மிடுக்கும் ததும்பிய கண்களினால் வந்தியத்தேவனை ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்தாள். ஒரு வார்த்தையும் மறுமொழி சொல்லவில்லை. வானதியை ஒரு கையினால் பிடித்து இழுத்துக் கொண்டு ரதம் நின்ற ஆலமரத்தடியை நோக்கிச் சென்றாள்.

“குடந்தை நகரத்துப் பெண்களுக்கு மரியாதையே தெரியாது போலிருக்கிறது. ஏதடா ஒரு மனிதன் வலிய வந்து பேசுகிறானே என்பதற்காகவாவது திரும்பிப் பார்த்து ஒரு வார்த்தை பதில் சொல்லக் கூடாதோ?” என்று வந்தியத்தேவன் இரைந்து கூறியது அவர்கள் காதில் விழுந்தது."


முகநூல் எதிர்வினைகள்

Arun Chellappah
காதல் என்ற பயணத்தில் அந்த "முதற் சந்திப்பு" வாழ் நாள் முழுவதும் இன்ப ராகம் இசைத்தபடி இருக்குமாம்;; மணியண்ணை கவனித்துத்தான் இருக்கணும்;;
 
Arunthathy Gunaseelan
வாவ்....! அருமையான இடத்தை சுட்டிக்காட்டினீர்கள்

Jeevan Prasad
Giritharan Navaratnam
மணிரத்தினம் பாணியில் பொன்னியின் செல்வனை உருவாக்கியுள்ள விதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள பகுதியை படமாக்கினால் பழைய அரச காலத்து சினிமா (மனோகரா/ வீர பாண்டிய கட்ட பொம்மன்) போல ஆக வாய்ப்பு உண்டு. குறைந்த வசனங்களோடு அத்தனையையும் பார்வையாளர்கள் உணர திரைக்கதையாக்குவது கடினம். மணிரத்தினம் குறைந்த வசனங்களோடு படத்தை நகர்த்தி செல்பவர். ஆனால் நீங்கள் பகிர்ந்துள்ள பகுதிக்கு நன்றி! அசத்தல் பகுதிதான்.
   
Giritharan Navaratnam
Jeevan Prasad //மணிரத்தினம் குறைந்த வசனங்களோடு படத்தை நகர்த்தி செல்பவர்.// மேற்படி காட்சியையும் வசனத்தைக் குறைத்து , முகபாவங்களூடு சிறப்பாக எடுத்திருக்கலாமே.

Kumaravelu Ganesan
அதை கல்கி வர்ணித்தது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். எதிர்காலத்தில் நடக்கப்போவதை மிக பூடகமாக சொல்லிவிடுவார்.

Varatharajan Mariampillai
நாவல் ஓர் ஊடகம்; திரைப்படம் வேறு ஊடகம். ஆரம்பத்தில் வந்த திரைப்படங்கள் மேடை நாடகத்தை அதே வசனங்களுடன் அப்படியே காட்டியவை. இன்று வீடியோக் கடை நடத்துபவர்கள் படம் பிடித்துத் தருவது போல. திரைப்படம் என்பது மிகவும் வித்தியாசமான ஊடகமானது பேக்கன், குரோசேவாவின் வருகையின் பின்னர்தான். அவர்கள் கமராவால் பேசிக்காட்டினார்கள். நாவல்கள் தீப்பெட்டி போல. திரைப்படங்கள் அதுவும் இக்காலத் திரைப்படங்கள் லைற்றர் போல. அவற்றுள் உள்ள அழகாக வெட்டப்பட்ட குச்சுகள், குமிழியாக.மினுமினுப்பான மருந்து முனை, பெட்டி, இரண்டு பக்கமும் மருந்து என்பவற்றை லைற்றரில் எதிர்பார்க்க முடியாது. இது கூட அவற்றை ஒப்பிடுவதற்குப் பொருத்தமான உதாரணங்கள் அல்ல.

Giritharan Navaratnam
Varatharajan Mariampillai //நாவல் ஓர் ஊடகம்; திரைப்படம் வேறு ஊடகம் ஆரம்பத்தில் வந்த திரைப்படங்கள் மேடை நாடகத்தை அதே வசனங்களுடன் அப்படியே காட்டியவை.// மேற்படி காட்சியையும் வசனங்களைக் குறைத்து , காதல் மிகுந்த பார்வைகள், நடிப்பு மூலம் சிறப்பாக எடுத்திருக்க முடியும். கமரா சிறப்பாக பேசியிருக்க முடியும்.  

Varatharajan Mariampillai
Giritharan Navaratnam இவர் பல மொழிகளுக்கு டபிங் செய்து விற்கும் பணியையும் கவனிக்கவேண்டியவாராகிறார். அதற்கேற்ற shots கள்தான் பெரும்பாலும் உள்ளன. ராஜராஜசோழன் போன்றவை தமிழ் ரசிகர்களை நோக்காகக் கொண்டு எடுக்கப்பட்டவை‌ கல்கியின் நாவலைத் தழுவியது மட்டுமே- ஆரம்பத்தில் காட்டப்படுகிறது.   

Giritharan Navaratnam
"குந்தவை மலர்ந்த முகத்துடன் குறும்பும் கேலியும் மிடுக்கும் ததும்பிய கண்களினால் வந்தியத்தேவனை ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்தாள். ஒரு வார்த்தையும் மறுமொழி சொல்லவில்லை. வானதியை ஒரு கையினால் பிடித்து இழுத்துக் கொண்டு ரதம் நின்ற ஆலமரத்தடியை நோக்கிச் சென்றாள்." இதனைச் சிறப்பாகக் காட்சியாக அமைத்திருக்கலாம். கமரா புகுந்து விளையாடியிருக்கலாம்.

Varatharajan Mariampillai
Giritharan Navaratnam மணிரத்னம் இவற்றை அழகாகச் செய்யும் வல்லமை படைத்தவர். கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு reccee வேலைக்கு வந்தபோது நான் பணியாற்றிய மகாராஜா நிறுவனம் தான் அவருக்குரிய உதவிகளைச் செய்தது. அதனால், அவருடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. யாழ் சுப்பிரமணியம் பூங்கா பழைய கச்சேரி மெயின்வீதி இடை வீதிகள் நூலகம் எனப் பல படங்களை மட்டும் பெற்றுச் சென்றார். அங்கு போகாமலே அவற்றை சாபு சிறில் மூலம் படத்தில் இணைத்தார். அவர் ஒரு பெருங்கடல். நீங்கள் சொல்பவை எல்லாம் அவருக்குப் புரிந்தவை என்பது எனது எண்ணம். ஒரு திரைக்கதையை அமைக்கும் போது நேரடியாக கதை சொல்லியின் கதையை அப்படியே எழுதுவதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். சிலவேளை முன்னுக்குப் பின் காட்சிகள் மாற்றப்படவேண்டிய அவசியம் திரைக்கதை எழுதும்போது வரும். தொலைக்காட்சிப் பயிற்சி நிலையத்தில் எமக்கு ஒரு கதையை ஆகப் பத்து நிமிடம் - தந்து அதனைத் திரைக்கதையாக மாற்றச் சொன்னார்கள். எனது நினைவுக்கு ஐந்து குழு.‌ஐந்து படம் செய்தோம். ஐந்தும் வெவ்வேறு வகையான குறைபாடுகளைக் கொண்டிருந்தன.ஆனால் வித்தியாசமாகவிருந்தன. உங்களுடன் விவாதிப்பதற்காக இதனைக் குறிப்பிடவில்லை. எனது அனுபவத்தைப் பகிர்ந்தேன்.

Varatharajan Mariampillai
இன்னுமொன்று கதை ஆலோசனைக் குழுவையும் பொறுத்து உள்ளதே..?

Varatharajan Mariampillai நன்றி உங்கள் கருத்துகளுக்கு. இங்கு நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்கின்றோம். கருத்துப் பரிமாற்றம் ஆரோக்கியமானது. உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டீர்கள். அவை முக்கியமானவை.

Nadarajah Kamalaharan
அருமை. ..அருமை... இயக்குனர் மணிரத்தினத்துக்கு முதல் நன்றி. அப்புறம் உங்களுக்கு. அந்த மனிதர் இந்த சரித்திர புனைவு நாவலை படமாக்கத் தொடங்கிய பின்தானே இதுபோன்ற நல்ல பதிவுகளையும் வரலாற்றாசிரியர்கள் பேசும் வீடியோக்களையும் நல்லதும் அல்லதுமான விமர்சனங்களையும் விசனங்களையும் படிக்கவும் கேட்கவும் முடிகிறது.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
 
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here