அகதிமுகாமின் குழந்தை அல் சைமா அக்ரம் சைடம்! - வ.ந.கிரிதரன் -
அல் சைமா அக்ரம் சைடம்!
அகதிமுகாமின் குழந்தை இவள்.
அதியுயர் புள்ளிகளை உயர் வகுப்பில்
அடைந்த அறிவுக் கொழுந்து!
எத்தனை கனவுகளுடன்
எத்தனை திட்டங்களுடன்
இருந்திருப்பாள்?
அல் சைமா அக்ரம் சைடம்!
அகதிமுகாமின் குழந்தை இவள்.
அதியுயர் புள்ளிகளை உயர் வகுப்பில்
அடைந்த அறிவுக் கொழுந்து!
எத்தனை கனவுகளுடன்
எத்தனை திட்டங்களுடன்
இருந்திருப்பாள்?
- அண்மையில் டொரெண்டோ வந்திருந்த எழுத்தாளர் ஜெயமோகன், தன் டொரோண்டோ அனுபவங்களைத் தனது வலைப்பதிவில் 'ஓர் அமெரிக்கக் கனவு' என்னும் கட்டுரையில் பதிவு செய்திருந்தார். அதனை ஒரு தகவலுக்காக இங்கு பதிவு செய்கின்றோம். -
டொரெண்டோவில் இரு நிகழ்வுகள். ராஜன் சோமசுந்தரம், ஆஸ்டின் சௌந்தர், ராதா ,பழனிஜோதி மகேஸ்வரி ,வெங்கடப்பிரசாத் என நண்பர்கள் வந்து ஒரு வாடகைப் பங்களாவை எடுத்து அங்கே தங்கியிருந்தோம். மிக வசதியான அழகிய பங்களா. முத்துலிங்கமும் முரளியும் முன்னரே சென்று அது வசதியானதா என்று உறுதிசெய்துகொண்டனர் என்று அறிந்தேன். முத்துலிங்கம் மிக இளமையிலேயே உயர்நிர்வாகியாக ஆகி, அப்படியே பணியாற்றி உச்சநிலைகளில் இருந்து ஓய்வுபெற்றவர். மிகச்சிறந்த நிர்வாகி. (ஆனால் ஒரு சாதாரண ஊழியனாக வாழ்ந்த எனக்கு அவரை அப்படிப் பார்க்கையில் ஒரு நடுக்கம். நல்லவேளை நான் இவர் கீழே வேலைபார்க்கவில்லை என நினைத்துக்கொண்டேன்)
ஒருமுறை நின்று நிதானித்து விட்டு
பயணத்தை தொடருங்கள்,
தூரம் சென்றபின்
துயரப்படாமல் இருப்பதற்கு.
ஆழம் சென்றபின்
அழிந்து விடாமல் பார்பதற்கு.
நித்திரை நீண்டு விட்டால்
நீ இங்கு இல்லை.
அப்பன் பெயரை
சுமந்த அதிகாரம் முடிந்தது.
உன் பிள்ளையும்
சில காலம் உன் பெயரைச்
சுமந்து உருக்குலைந்து போவான்.
வாழ்க்கை கணக்குக்கு
சில வேளை வரவும் புரியாது.
செலவும் புரியாது.
நதியோடு கலந்துவிடு.
நாணத்தை விட்டுவிடு.
விதியோடு உறவு என்ற
விபரீதம் கடந்துவிடு.
கதியை மாற்றிவிடு.
காலத்தை கடந்துவிடு.
சதியோடு போராடி.
சாம்பலாய் ஆகாதே.
மதி கொண்டு
எழுந்துவிடு.
மமதையுடன் வாழ்ந்துவிடு.
- பதிவுகள் இணைய இதழில் 2003இல் எழுத்தாளர் பா.ரவி (சுவிஸ்) எழுதிய புதிய மாதவியின் 'ஹேராம்'கவிதைத்தொகுப்ப்பு பற்றிய விரிவான திறனாய்வு. 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஆவணப்படுத்தும்பொருட்டு மீள்பிரசுரமாகின்றது. -
பதிவுகள் ஜூலை 2003 இதழ் 43 -மாத இதழ்
என் கவிதையின் முகமே
என் சொந்த முகம்
என் கவிதையின் முகவரியே
என் முகவரி
முகவரி தொலைந்த
மனிதர்களுக்காகவே
என் கவிதை
பிறந்தது
கவிதாயினி புதியமாதவியின் முகவரியைத் தேடி வர நேர்ந்தபோது ஹே ராம் கவிதைத் தோப்பை வந்தடைந்தேன். முகவரி தொலைந்த மனிதர்களுக்காகவே கவிதைகள் முகம்காட்டுகின்றன. ஒடுக்கப்படும் சக்திகளின் குரலாக, உணர்வுகளின் நுனி கரையும் மென்முனைகளாக, நட்புபற்றிய மேலான மதிப்பீடாக, இயற்கையோடு மனிதமொழியில் பேசுபவளாக வரும் புதியமாதவி இந்தத் தோப்பில் -அதாவது கவிதைத் தொகுப்பில்- உலாவருகிறாள். ஆனால்,
எதற்காக எழுதவந்தேன்
தெரியவில்லை -தமிழ்
என்னால்தான் வாழுமென்றும்
சொல்லவில்லை.
.....
தமிழ் இனத்திற்காய் எழுதுகின்றேன்
இதுவே என் எல்லை.
என்று அக் கவிதையை முடிக்கிறார். கவிதைகளோ அவர் புலம்பும் எல்லைக்கும் அப்பால் சிறகசைத்துப் பறந்து திரிகின்றன. அதனால் அவை வலிமையும் பெற்றுவிடுகின்றன.
ஹே...ராம் என்ற கவிதை மனிதநேயம்கொண்ட ஒவ்வொரு மனிதனையையும் உசுப்பிவிடக் கூடிய வீச்சுக் கொண்டது.
'நான் கே.எஸ்.பேசறேன்' என்ற தலைப்பிட்ட நூலில் இடம்பெற்றுள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் கவித்துவ வரிகள். என்னுடைய எளிய தமிழாக்கம்:
இந்த நொடியை வாழ்ந்துவிடலாம் வாருங்கள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் -
அடர்செறிவான ஒரு மணி நேர வாழ்வு
பெயரற்றதொரு யுகத்திற்கு ஈடானது
‘எதற்காக அழிவற்ற வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும்?
தொலைதூர நட்சத்திரங்களுக்காக
அன்புடை அல்லிமலர்களை இழக்கவேண்டும்?
அமரத்துவத்திற்காகப் பசியோடலைதல் வாழ்வை
அதிவறண்டதாக வீணடித்துவிடும்
அதனால் ஒரு நொடியின்
அர்த்தத்தை களவாடிவிட முடியும்
நொடியில் நீடுவாழ்வோம்
நிரந்தரம் தன்னைத்தான் கவனித்துக்கொள்ளட்டும்.
வாழ்வையும் அதன் பொருளையும்
எல்லா நேரமும் அலசிக்கொண்டேயிருப்பதில்
வீணாகிவிடவேண்டாம்.
வாழ்க்கை அற்புதமானது; விரயம்செய்வதற்கானதல்ல
அட, வாழ்ந்துவிடலாம் வாருங்கள்
நம் கைவசமுள்ள நொடியை மதிப்பார்ந்ததாக்குவோம்
நாளை வெகுதொலைவிலிருக்கிறது
கடந்தகாலம் இறந்துவிட்டது.
நிகழ்காலமும்கூட
நில்லாதோடிக்கொண்டேயிருக்கிறது.
நமக்கிருப்பது இந்தவொரு நொடி மட்டுமே
அதை
வாழ்ந்துவிடலாம் வாருங்கள்!
திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் சுப்ரபாரதிமணியன் அறக்கட்டளை சொற்பொழிவு பிரமிள் கவிதைகள் குறித்து “கணத்தில் மொக்கவிழும் காலாதீதம்“ என்ற தலைப்பில் -இயக்குனர் தங்கம் அவர்கள் வழங்கினார் அக்டோபர் மாதத்தில் 0
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் இயக்குனர் தங்கம் அவர்களின் வேங்கை சாமி என்ற திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டது . இந்தக்குறிப்புகள் விடுதலை படத்தின் டைட்டிலிலும் இடம்பெறுகின்றன. வெற்றிமாறனின் விடுதலை 1 , விடுதலை 2 ஆகிய இரண்டு பாகங்களைக் கொண்ட படங்களிலும் இயக்குனர் தங்கம் பணிபுரிந்து இருக்கிறார் .
பாலு மகேந்திரா அவரிடம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர் .அவர் இயக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட கதைநேரம் தொடரில் பெரும் பங்கு வைத்தவர் ... பல திரைக்கதைகளை உருவாக்கியவர் ..இறைவன் என்பது வரம் என்ற இவருடைய கதையை இப்போது அமீர் அவர்கள் திரைப்படமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். புதிய திரைப்படம் ஒன்று இயக்குகிற வேலையில் தங்கம் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார் ....தொடர்ந்து இலக்கியவாசிப்பிலும் அக்கறையும் கொண்டவர்.
link here | Zoom Meeting ID: 918 584 6813 |No Passcode
-பதிவுகள் இணைய இதழில் 2009இல் வெளியான கட்டுரையிது. 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஆவணப்படுத்தும் பொருட்டு மீள்பிரசுரமாகின்றது. -
1.
இன்று முருகையனின் நினைவுப்பகிர்தலிற்காய் வந்திருக்கும் உங்களில் சிலர், முருகையனோடு நெருங்கிப் பழகியவர்களாக இருக்கக்கூடும். இன்னும் சிலர் அவரது வெளிவந்த படைப்புக்களை வாசித்து நெருக்கம் கொண்டவர்களாக இருக்கக்கூடும். எனக்கு எப்படி முருகையன் முதலில் அறிமுகமானார் என காலப் பாதையில் பின்னோக்கி நகரும்போது, சிறுவயதுகளில் படித்த பாடப்புத்தகங்களின் மூலமாக அறிமுகமாயிருப்பார் போலத்தான் தோன்றுகின்றது. ஈழத்தில் படித்த காலத்தில் பாடக்குழு உறுப்பினர்களின் பெயரில் முருகையனின் பெயர் நீண்டகாலமாய் இருந்து வந்திருக்கின்றது. அப்போது அறிமுகமாகிய முருகையன், இப்போது எனக்கு தெரிகின்ற பன்முகத் திறமை கொண்டதொரு படைப்பாளியாக அறிமுகமாயிருக்கவில்லை என்பதும் உண்மை.
பின்னாட்களில் வாசித்த 'பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்' தொகுப்பின் மூலமாக முருகையன் எனக்குள் ஒரு கவிஞராக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார். எங்களுக்கென்று ஒரு நீண்ட கவிதைப் பராம்பரியம் இருந்து வந்திருக்கின்றது. மஹாகவி, நீலாவாணன், முருகையன், பசுபதி என்று தொடர்கின்ற வளமான மரபு எங்களுக்கு இருக்கின்றது. முருகையன் கவிஞராக மட்டுமில்லாது, நாடக ஆசிரியராக, கட்டுரையாசிரியராக,மொழிபெயர்ப்பாளராக எனப் பன்முகத்தனமையுடையவராக இருந்திருக்கின்றார். இவையெல்லாவற்றையும் விட, இன்று முருகையனின் மறைவை ஒட்டி எழுதப்படுகின்ற அஞ்சலிக்குறிப்புக்களைப் பார்க்கும்போது, முருகையன் ஓர் அற்புதமான மனிதராக வாழ்ந்திருக்கின்றார் போலத்தான் தெரிகிறது.
பட்டங்களோடும் பட்டோபங்களோடும் பலர் வாழ்ந்தாலும், அவர்களில் பலரால் நிலத்தில் காலூன்ற முடிவதில்லை; சக மனிதர்களை நேசிக்கத் தெரிவதில்லை. அந்தவகையில் பார்க்கும்போது, இவ்வாறானவர்களுக்கு எதிர்மாறாக, முருகையனும், ஏஜே கனகரட்னவும் வாழ்ந்து முடித்துவிட்டுப் போயிருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் தமது திறமைகளின் வெளிச்சத்தில் திளைக்காது, சக மனிதர்களை நேசித்துக்கொண்டு, சாதாரணமாய் வாழ்ந்த அருமையான மனிதர்கள். ஆதி மதங்களும், அண்மைக் காலத்து மார்க்சிசமும் போதித்ததும் சக மனிதர்களை உன்னைப் போல நேசி என்பதைத்தான். மதத்தையும் மார்க்சையும் வைத்து எத்தனையோ போலித்தனங்களும் பித்தலாட்டங்களும் நிகழ்ந்துகொண்டிருக்க, முருகையனும், ஏஜேவும் தங்களது வாழ்வின் மூலம், முக்கியமான ஒரு விடயத்தை சப்தமின்றி எங்களுக்கு உணர்த்திவிட்டுப் போயிருக்கின்றார்கள்.
பதிவுகளில் அன்று! பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102
நான் சபிக்கிறேன்
உன்னை
உன் எழுத்துக்களை
உன் கலாச்சாரத்தை
உன் வேஷத்தை.. ( நாம்தேவ் தசள் - கோல்ப்பிதா கவிதைகளிருந்து)
மராட்டிய மாநிலத்தில் ஒரு புதிய அலை இதுவரை எழுதப்பட்டிருந்த இலக்கியத்தின் பக்கங்களைப் புரட்டி, இதுவரை நிறுவப்பட்டிருந்த சமூகத்தின் அடையாளங்களை வீசி எறிந்து ஒரு கோட்டோவியத்தை வரைந்தது. 1960களில் ஏற்பட்ட சிறுபத்திரிகைகளின் வளர்ச்சி, மும்பையில் தொழில்மயம், அந்தத் தொழில்மயத்தில் எழுந்த புதிய தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்கங்கள், அதுசார்ந்த மார்க்சிய சிந்தனைகள் இந்தப் பின்புலத்தில் 1972ல் தலித் பைந்தர் அமைப்பு .. என்று தொடர் அலையாக எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். அந்தக் குரலைப் பதிவு செய்திருக்கும் தலித் இலக்கியங்கள். அதிலும் குறிப்பாக 1980களில் தலித் எழுத்தாளர்களின் 'தன் வரலாற்று'ப் பாணியிலான தலித் வரலாறு மார்க்சிய சிந்தனைகளையும் சேர்த்தே புரட்டிப் போட்டது.
தலித் எழுதாளர் தயாப்வாரின் "பலுட்டா " -சமூக உரிமை (1978) லஷ்மண் மானேயின் " யுபரா"- அந்நியன் (1980) லஷ்மண் கெய்க்க்வாட்டின் "யுசல்ய -அற்பத்திருடன் (1987) பெண் தலித் எழுத்தாளர் பேபி காம்ப்ளேயின் 'ஜின் அமுச்" (இப்படியாக எங்கள் வாழ்க்கை) இவை அனைத்தும் தலித் தன் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடத்தக்கன. இக்காலக்கட்டத்தில் வெளிவந்த சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி" வெளிவந்தவுடன் மிகவும் பேசப்பட்ட ஒரு பதிவு. அக்கர்மஷி என்றால் ஜாதிபிரஷ்டம் செய்யப்பட்டவன் - THE OUTCASTE என்று பொருள். ஜாதிகளால் விலக்கிவைக்கப்பட்டவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
காசாவில், இஸ்ரேலிய குண்டுத்தாக்குதலில் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட 32 வயதான பலஸ்தீனியப் பெண் கவி ஹெபா ஹமல் அபு நாடா ( Heba Kamal Abu Nada)
என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது.
நண்பர்கள்
சின்னச் சின்ன
சவப்பெட்டிகளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏவுகணைகளைவிட
வேகமாகப் பறந்திறக்கிற அவர்களை
என்னால்
மீட்க முடியவில்லை.
காக்க முடியவில்லை.
எனக்கு அழ முடியவில்லை.
எனக்கு
என்ன செய்வதென்றும் தெரியவில்லை.
- நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் உரையாற்றும் காட்சி -
இன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஏற்பாட்டில் மார்க்கம் மாநகரசபைக் கூடத்தில் நடைபெற்ற எழுத்தாளர் ஜெயமோகனின் உரையினைக் கேட்பதற்காக எழுத்தாளர் தேவகாந்தன் மற்றும் கடல்புத்திரனுடன் சென்றிருந்தேன். நிகழ்வில் கலை, இலக்கிய மற்றும் அரசியல் ஆளுமைகளைக் காண முடிந்தது. குறிப்பாக எழுத்தாளர் மொன்ரியால் மைக்கல், எழுத்தாளர் 'காலம்' செல்வம், எழுத்தாளர் க.நவம், 'அசை' சிவதாசன், எழுத்தாளர் ஊடகவியலாளருமான கனடா மூர்த்தி, எழுத்தாளர் டி.செ. தமிழன், எழுத்தாளர் குரு அரவிந்தன், எழுத்தாளர் அ.முத்துலிங்கம், எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், 'விளம்பரம்' மகேந்திரன், 'தமிழர் தகவல்' திருச்செல்வம், எழுத்தாளர் மனுவல் ஜேசுதாசன், 'உதயன்' லோகேந்திரலிங்கம் என்று பலரைக் காண முடிந்தது.
1. என் பலஸ்தீனியப் பாலகனே!
ஒற்றைப் பாலகன்...
அர்த்தமில்லாத ரவைகள் துளைத்து,
அரவணைப்பே இல்லாது சரிந்த,
தன் தாயின் உடலைக் காண்கையில்...
உத்தம போராளியாகிறான்!
அவனை உலகம்
'தீவிரவாதி' என்றே தீர்த்துக்கட்டுகிறது!
அந்தப் பாலகனுக்கு...
"நீ தீவிரவாதி ஆகுக!" என்றே
என் ஆசியைப் பொழிவேன்!
ஆதிப் போர்க் கடவுளின் வடிவாய்
அவன் உருக்கொள்ளட்டும்!
ஆயிரம் காளியாய் அவன் உரு
அணி வகுக்கட்டும்!
பலஸ்தீனியப் பாலகனின்....
எதிர்முகம் வெற்றிகொள்ள
எனது நேர்த்திகள் இன்னும் அதிகமாகட்டும்!
அது அவனது மனதை
உக்கிரமாக்கி எழவைக்கும்!
அவனைச்
சமர்க்கள நாயகன் ஆக்கும்!
- பதிவுகள் இணைய இதழின் ஆரம்ப காலத்தில் முரசு அஞ்சல், திஸ்கி எழுத்துருக்களில் வெளியான படைப்புகள் 'பதிவுகள் அன்று' பகுதியில் ஒருங்குறி எழுத்துருவில் ஆவணப்படுத்தப்படும். இக்கட்டுரை அளவெட்டி சிறீஸ்கந்தராஜா பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை. 28.09.2002 அன்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் பேசிய அவரது உரையின் எழுத்து வடிவம். அதனை அவர் பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பியிருந்தார். -
பதிவுகள், அக்டோபர் 2002 இதழ் 34
நான் விமரிசனங்கள் எழுதப்புகுந்த இந்த பதினைந்து வருடங்களில் ஈழ இலக்கியத்தைப்பற்றி தொடர்ந்து மிக கறாரான , அதிகமும் எதிர்மறையான கருத்துக்களைச் சொல்லி வந்திருக்கிறேன். ஆனாலும் என் இலக்கிய நண்பர்களில் ஈழத்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தொடர்ந்து அங்கு வெளியாகும் நூல்கள் தொடர்ந்து என் பார்வைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடுமையான விமரிசனம் தேவை என்று கோரப்பட்டு வரும் நூல்கள் அதிகம் . உலகமெங்கும் உள்ள ஈழ வாசகர்கள் என் ஆக்கங்கள் மீது மிகுந்த கவனம் அளித்து வாசித்தும் வருகிறார்கள். ஒரு முறை என் ஈழநண்பர் ஒருவரிடம் ஈழத்தவர்களுக்கு ஒரு நன்றிக்கடனாக என் விமரிசனங்களை நான் மென்மையாக்கிக் கொள்ளவேண்டுமா என்று கேட்டேன் . அதன் பிறகு உங்கள் குரலுக்கு மதிப்பிருக்காது என்றார் . இக்கூட்டத்துக்கும் சிறிசுக்கந்தராஜா என்னை அழைத்தபோது '' வந்து திட்டிவிட்டு போ'' என்றுதான் சொன்னார் .
சிறீசுவை எனக்கு மாண்டிரியல் நகரில் பழக்கம். தத்துவவாதியான கோமாளியின் சாயல்களை வெளிப்படுத்தும் உற்சாகமான நண்பராக இருந்தார். அவருடனான நாட்கள் எனக்கு மிகுந்த பசுமையான நினைவுகளாக உள்ளன. இந்நூல் அப்பசுமை நினைவுகளை மீட்பதாக இருந்தது. 1962 ல் வெளிவந்த வ. அ .இராசரத்தினம் அவர்களின் 'தோணி' என்ற சிறுகதையை இங்கு நினைவு கூர விரும்புகிறேன். எழுபதுகள் வரை ஈழ எழுத்தின் மிகப்பெரும்பாலான இடத்தை நிரப்பியிருந்த முற்போக்கு கதைகளின் மிகச்சிறந்த மாதிரிக் கதை அது. ஈழத்து தீவுப்பகுதியின் ஒரு குக்கிராமத்தில் நடக்கிறது கதை. பத்துபதினைந்து குடிசைகளும், வகிடுபோல அவற்றை இணைத்துச் செல்லும் பாதைகளும், உள்வாங்கிய கடலாலான ஆறும் உள்ள ஊர். மீனவச்சிறுவனின் இளமைப்பருவத்தை மிகுந்த உயிர்ப்புடன் சொல்கிறது . தன் தந்தையைப்போல வெள்ளைப்பாயை விரித்து கடலுக்கு அப்பால் சென்று மாய உலகத்து செல்வங்களை அடைந்து விடவேண்டுமென கனவு காண்கிறான். முருக்குத்தடியில் ஓட்டைபோட்டு அவனும் தோணி செய்து தன் தந்தையை போலவே கடலில் செல்ல யத்தனிக்கிறான். அதை கண்ட தந்தை அவனையும் கடலுக்கு கொண்டு செல்கிறார். அவனுடைய முதல் வேட்டையே வெற்றிகரமாக அமைகிறது. அந்தமீனை விற்று தன் தாயாருக்கும் தனக்கும் என்ன வாங்கலாம் என்ற கனவுடன் கரை திரும்பும்போது தெரிகிறது படகு அவன் தந்தைக்கு சொந்தமானதல்ல என்று. மொத்தமீனையும் படகு சொந்தக்காரனுக்கு அளித்துவிடவேண்டுமென்று .
கனடாவில் இயங்கிவரும் கலைமன்றத்தின் 19 வது பட்டமளிப்பு விழா அக்ரோபர் மாதம் 1 ஆம் திகதி 2023 ஆண்டு காலை 10 மணியளவில் ஆரம்பித்து ரொறன்ரோவில் உள்ள யோர்க்வூட் நூலகக் கலையரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது. கோவிட் பெரும்தொற்றுக் காரணமாகக் கலைமன்றத்தின் பட்டமளிப்பு நிகழ்வு கடந்த சில வருடங்கள் நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத் தக்கது. மீண்டும் இம்மாதம் நடந்த இந்த நிகழ்வுக்குக் கனடா தமிழர் தகவல் இதழ் முதன்மை ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்.
எம் மொழி அழிந்து விட்டால், எம்மினமும் அழிந்து விடும் என்பது யாவரும் அறிந்ததே! புலம்பெயர்ந்த மண்ணில் எமது மொழி நிலைத்திருக்க வேண்டுமானால், எமது பண்பாடு கலாச்சாரமும் இந்த மண்ணில் நிலைத்திருக்க வேண்டும். எமக்கான அடையாளங்களை நாம் காப்பாற்றாவிட்டால், புகுந்த மண்ணில் முகவரி அற்றவர்களாக ஆக்கப்பட்டு விடுவோம். எனவேதான் இதைச் சிந்தனையில் கொண்டு, ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையினரை உருவாக்குவதில் கனடா கலைமன்றம் முன்னின்று செயற்பட்டு வருகின்றது.
முனைவர் பட்ட ஆய்வாளர் - பொ. அபிராமி, தமிழாய்வுத்துறை, காவேரி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா. (பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றது) - நெறியாளர் - முனைவர் ச. இராமலட்சுமி, துணை முதல்வர் மற்றும் துறைத் தலைவர், தமிழாய்வுத்துறை, காவேரி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா (பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றது)
ஆய்வுச் சுருக்கம்
சங்க இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் கொண்டவைகளாகும். வீரமுடன் இணைந்த மன்னராட்சி முறையின் சிறப்பினைப் பற்றி கூறுகின்றன. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கின்ற பண்பானது அனைத்து மக்களிடமும் விளங்கியது. அதில் மன்னராகப் போற்றப்பட்டவரின் கடமைகள் மனிதநேயத்தன்மையுடன் காட்டப்பட்ட தன்மையினைப் பற்றி அறியலாம். மனிதர்களின் குறைகளைப் போக்கி விட்டு மனிதனது பெருமையையும் உரிமையையும் நிலைநாட்டுவது மனிதநேயப் பண்பாகும். மன்னர்களின் ஆட்சியின் சிறப்பினால் மாதம் மும்மாரி பொழிந்து நாட்டினைச் செழிப்பாக வாழ வைத்த செய்தியினையும் அறிந்து கொள்ள முடிகின்றது. மன்னர்களின் மனித நேயப் பண்பு செல்வத்தைத் தனக்கென சேர்த்து வைக்காமல் பிறருக்குக் கொடுக்கும் ஈகை பண்போடு விளங்கியத் தன்மை கூறப்படுகின்றது. போரின் போதும் அனைவரையும் காப்பாற்றியமை மனிதநேயம் மிக்க செயலாகப் போற்றப்படுகின்றது.
கலைச்சொற்கள்: வீரம், மனிதநேயம், மன்னர்கள், ஈகை, போர்
முன்னுரை
இலக்கியங்கள் காதல், வீரம், கொடை, மனிதம் போன்றவற்றில் சிறந்து விளங்கி இருக்கின்றன. புலவர்களின் நுண்ணறிவும், ஆழ்ந்த சிந்தனையும் சேர்ந்து மனிதத் தன்மையின் அடையாளமாக விளங்கக் கூடிய ஒன்றான மனிதநேயம் என்பதனை அனைவருக்கும் அறிவுறுத்தியது. ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிர் வரை மனிதனால் பாதுகாக்கப் படுகின்ற அனைத்தும் மனிதநேயத்தின் அடிப்படையாகத் திகழ்கிறது. மனிதன் என்ற சொல்லானது மனிதம் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. மனதில் பலவகையான எண்ணங்கள் தோன்றினாலும் நல்ல எண்ணங்களே மனிதனைச் சிறந்தவனாகக் காட்டுகிறது. இத்தகைய சிறப்புப் பெற்ற மனிதத்தன்மையினை வெளிப்படுத்துவது மனிதமாகும். மனிதனை மனிதன் மதித்து அன்பு செய்வதையே முக்கிய நோக்கமாகக் கருதுகின்றது. மனிதனது குற்றங்களைப் போக்கி மனிதனது பெருமையையும் உரிமையையும் நிலைநாட்டுவதே மனிதமாகும். வறுமை இல்லாத வாழ்வினை மக்களுக்கு அளிக்க விரும்பினர். நாட்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிரம்பி நாடு செழிப்புற இருக்க வேண்டும் என்பதனையே தங்களுடைய கொள்கையாகக் கொண்டு மன்னர்கள் வாழ்ந்தார்கள். மாதம் மும்மாரி மழை பொழிந்து நாட்டினை வளப்படுத்தியது. மனிதத்தன்மையை உணர்ந்த மன்னர்கள் மக்களுக்கு முன்னுதாராணமாக விளங்கினார்கள். இதனால் மனிதநேயம் சங்க இலக்கியத்தில் சிறந்த செல்வாக்குடன் விளங்கியது என்பதனைக் காணலாம்.
I
கீழே காணக்கிட்டும், மூன்று அவதானிப்புகள், ஓரளவில், வரலாற்று முக்கியத்துவம் கொண்டன. ‘வீரசேகரியின்’ பத்தி எழுத்தாளர் ‘கபில்’ பின்வருமாறு தெரிவித்திருந்தார்:
“அண்மை காலத்தில் தமிழ் தேசிய அரசியலின் செல்நெறி குறித்து, தமிழ் மக்கள் ஆழமான அதிருப்திகளையும் வெறுப்பையும் கொண்டிருந்தனர்…. தமிழ் கட்சிகள் தங்களுக்கிடையில் முட்டிக் கொண்டு வெளியிட்ட கருத்துக்களால், தமிழ் மக்கள் சோர்வடைந்து இருக்கின்றார்கள்….” (வீரகேசரி : 08.10.2023)
இவ் அவதானிப்புக்கு சமதையாக, அரவிந்தன் எனும் போராளி, இரு கிழமைகளுக்கு முன்பு தனது நீண்ட பேட்டி ஒன்றினை வழங்கும் போது குறிப்பிட்டிருந்தார் : “நாம் முட்டாள் சமூகமாக வழிநடத்தப்பட்டு கொண்டிருக்கின்றோம் - முட்டாள் தனமாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்”. (YouTube பேட்டி :- 30.09.2023)
“தற்சமயம் , தமிழ் மக்களுக்கு தலைமை இல்லை. கூட்டு தலைமைதாணும் கிடையாது. மேய்ப்பவரற்ற மந்தைகள் போலிருக்கின்றார்கள்”. (திபாகரன்: 15.10.2023:தமிழ்வின்)
மேற்படி மூன்று கூற்றுக்களிலும், மூவரதும் வேதனைகள் பிண்ணிப்படர்வதாக உள்ளது வெளிப்படை.
இவ் அவதானிப்புகளுக்கு தளம் அமைப்பது போல், பின்வரும் இரு செய்திகள் அண்மையில் வெளியாகி இருந்தன.
‘தினக்குரலின்’ தலைப்பு செய்தி பின்வருமாறு குறித்தது: “09 பேர் கொண்ட விசேட நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு வரைபில், 13வது திருத்தச் சட்டம் உள்ளடக்கப்பட வில்லை” (ஞாயிறு தினக்குரல் : 15.10.2023)
கவிஞர் நகுலனைப் பற்றிய ஆவணப்படம் - நினைவுப் பாதையில் மஞ்சள் பூனை (Yellow Cat in Memory Lane)| ஆவணப்பட இயக்குநர்: திரு. T.பாண்டியராஜு (T Pandiaraju) - https://www.youtube.com/watch?v=jcgsqOd1ZJY
கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய ஆவணப்படம் - கிணற்றில் விழுந்த நிலவு - கவிஞர் வைதீஸ்வரன் ஆவணப்படம் ; இயக்குநர் : திரு ‘நிழல்’ திருநாவுக்கரசு; தயாரிப்பு: குவிகம் இலக்கிய வாசல் - https://www.youtube.com/watch?v=5ThsZDRFJEs&t=2484s
ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படம் எந்த வகையில் அவசியமா கிறது? முக்கியத்துவம் பெறுகிறது? ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தின் நோக்க மும் இலக்கும் என்னவாக இருக்கும்? என்னவாக இருக்க வேண்டும்? அப்படி திட்டவட்டமான முன்முடிவுகள் இருப்பது இயல்பா? இருக்கவேண் டியது அவசியமா?
ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தில் அவர் வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேசுவது சரியா? அவரு டைய படைப்பைப் பற்றி அதிகம் பேச வேண் டுமா? அல்லது இரண்டும் ஒன்றை யொன்று எப்படி supplement செய்கிறது, complement செய்கிறது என்பதற்கு சம அளவில் முக்கியத்துவம் தந்து உருவாக்கப்பட வேண்டுமா?
ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தில் படைப்பாளி தன் வாழ்க்கை, படைப்பு சார்ந்து அதிகம் பேச வேண்டுமா? அல்லது அவரையறிந்த மற்றவர் கள் அவை குறித்து அதிகம் பேச வேண்டுமா?
அறுபதுகள், எழுபதுகளில் இலங்கையில் புகழ்பெற்று விளங்கிய தமிழ் இசைக்குழுக்களில் இணைந்து பாடிப்புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவர் ஸ்ரனி சிவானந்தன். இலங்கைப் புகையிரதக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபடியே தன் இசைப்பயணத்தையும் தொடர்ந்தவர் இவர். இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனப் புகழ் ராமதாஸின் 'கோமாளிகள்' திரைப்பட வெற்றியைத்தொடர்து வெளியான 'ஏமாளிகள்' திரைப்படத்தில் ‘வா இந்தப் பக்கம்’ என்னும் பாடலைப் பாடியவர் இவர். 'இலங்கை இந்தியக் கூட்டுத்தாபன'தயாரிப்பான 'நெஞ்சுக்கு நீதி'யிலும் பாடியிருக்கின்றார். இந்தியத் தமிழ்க் கதாநாயகன் ஒருவனுக்காக (நடிகர் ஶ்ரீகாந்த்) முதலில் குரல் கொடுத்த இலங்கைத் தமிழ்ப் பாடகர் இவரே. வேறு யாரும் பாடியிருக்கின்றார்களா என்பது தெரியவில்லை.
சமீபத்தில் இலங்கை சென்றிருந்தபோது, நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங்குடன் அவரது காரில் கொழும்பில் சிலரை பார்க்கச் சென்றிருந்தேன்.
சில வீதிகளில் போக்குவரத்து நெரிசல் இருந்தது. அவ்வாறு நெரிசல் உருவாகும் இடங்களில் தரிக்கும் வாகனங்களைச் சுற்றி பிச்சைக்காரர்கள் மொய்ப்பதை அவதானித்தேன்.
நண்பர் காரின் கண்ணாடி யன்னலை மூடிக்கொண்டு ஒரு செய்தியைச் சொன்னார்.
“பூபதி அண்ணன்… இங்கே பிச்சைக்காரர்களுக்கு நூறு ரூபாவுக்கு மேல்தான் கொடுக்கவேண்டியிருக்கிறது. ஒரு நாள் ஒரு வயது முதிர்ந்த பெண் பிச்சைக்காரிக்கு இருபது ரூபா நாணயத்தாளை கொடுத்தேன். அந்தப்பெண், அதனை சுருட்டி எனது முகத்திற்கே விட்டெறிந்து, கெட்ட வார்த்தையினால் திட்டிக்கொண்டு சென்றாள். “
தெகிவளையில் ஒரு கப் பால்தேநீர் ( சீனியில்லாமல் ) நூறுரூபாவுக்கு வாங்கி அருந்தினேன்.
‘பாடும்மீன்‘ என்ற சொற்பதம் ஓர் அடையாளம். தண்ணீரில் மீன் அழுதால், அதன் கண்ணீரை யார் அறிவார்? எனக்கேட்பார்கள்! அதுபோன்று மீன்பாடுமா..? எனவும் கேட்பார்கள்! மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து முழுமதி நாட்களில் செவிமடுத்தால், கீழே ஒடும் வாவியிலிருந்து எழும் ஓசையை கேட்கமுடியும். அதனை ஒலிப்பதிவுசெய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். அருட்தந்தை லோங் அடிகளார் அந்த ஒலியை பதிவுசெய்து இலங்கை வானொலியில் ஒலிபரப்பினார்.
பாடும்மீன் என்ற பெயரில் இதழ்கள், விளையாட்டுக்கழகங்கள், சமூக அமைப்புகள் இருக்கும் அதேசமயம், அந்தப்பெயரையே முதல் எழுத்துக்களாக்கி இயங்கிவருபவர்தான் ' பாடும் மீன்' சு. ஶ்ரீகந்தராசா.
1991 ஆம் ஆண்டு ஒருநாள் எனது மெல்பன் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. கதவைத்திறந்தேன்.
நண்பர் தமிழரசன், தன்னோடு அழைத்து வந்திருந்தவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். “ இவர்தான் பாடும் மீன் ஶ்ரீகந்தராசா “ என்றார்.
முன்னர் கேள்விப்பட்ட பெயராக இருந்தது. அன்றைய கலந்துரையாடலில் இவரிடம் உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் நிரம்பியிருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
ஈழத்து இனமுரண்பாடுகளினால் தங்கள் வாழ்வை புலம்பெயர்நாடுகளில் களம் அமைத்துக்கொண்ட எழுத்தாளர்களுள் திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கமும் அவர்களும் ஒருவர்.அலைக்கழிக்கும் வாழ்வியற்சூழலுக்குள் தன்னை நிலைநிறுத்தி நேர்கொண்ட உறுதியுடன் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கைக்குள் நின்றுகொண்டே நிதானமாக சாதித்த பெண்ணாக நம்முன் வாழ்ந்தவர்.
ஈழத்து யாழ்ப்பாணம் கரவெட்டி எனும் அழகிய கிராமத்தில் பிறந்திருந்தாலும்(04/05/1941) தன் கல்வி, தொழில், ஆய்வு நிமித்தம் மட்டக்களப்பு, கொழும்பு, சென்னை என நகர்ந்து இங்கிலாந்தில் (ஈஸ்ட்ஹாம்) பதியம் இட்டுக்கொண்டார். ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்து பேராதனைப்பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனது இளங்கலைமாணி (சிறப்பு), முதுகலைமாணி பட்டங்களைப் (சமஸ்கிருதம், தொல்லியல், இந்துகலாச்சாரம்) பெற்றார்.அதே சமயம் உதவி விரிவுரையாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை (1966- 1968)பிரதான பாடமாக கற்பித்தார்.பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகம் (இந்து பண்பாடு- 1969 1979), களனி பல்கலைக்கழகம்(தொல்லியற்றுறை- 1976- 1979)விரிவுரையாளராகவும், பகுதிநேர விரிவுரையாளராகவும் கடமைபுரிந்துள்ளார்.