சிறுகதை : சாத்துபவர்கள் சாத்தான்கள்! - கடல்புத்திரன் -
[இக்கதையில் ஆசிரியர் கழுகு, தாமரை என்று குறிப்பிடுவது அக்காலகட்டத்தில் இலங்கையில் இயங்கிய தமிழ் அமைப்புகளில் இரண்டை. - பதிவுகள் -]
''அருள், இந்த உக்ரேன் பிரச்சனை...என்ன, ஒன்றுமே விளங்க மாட்டேன் என்கிறதே? '' கட்டடியிலே சபேஷ், கேட்க கூடி இருந்த உமா,யோகி, நாகேஷ்...எல்லார் மூஞ்சியிலும் அறியும் ஆர்வம் சுடர் விட்டது. அருளர் பழைய தொழில்சங்க அமைப்பில் இருந்தவர். அவனுடைய காலத்தில் அவர் ஒன்றாய் ஒரே விடுதலைக்குழுவில் புழங்கியவர் .மற்றவர்களுக்கு தான் புதியவர் . யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்த பிறகு எவரும் தெரிந்தவர் எனக் காட்டிக் கொவள்தில்லை. கழுகால் தடை செய்யப்பட்டு , பல வருசங்கள் ஓடி விட்டன . யாரும் எவரையுமே இப்பவெல்லாம் தெரிந்து கொள்ளவும் முயல்வதில்லை .
அன்று , மானிப்பாய்யில் அவரவர் கிராமத்திற்க்குப் போக தீர்மானமின்றி தேனீர்கடை ஒன்றில் சைக்கிளைச் சாத்தி விட்டு நின்ற போது எதேச்சையாக வந்த குலம் இவர்களை கண்டு விட்டு இறங்கி வர '' அண்ணே இன்னொரு தேனீர் '' என்று அவனை வரவேற்றார்கள் . '' எப்படியடா இருக்கிறீர்கள் ? உயிரோடு உங்களைக் காண்கிறதில் ரொம்ப சந்தோசமடா ,எங்கடா இங்கே? ''எனக் கேட்க ''எங்கட இடத்தை ஒருக்கா எட்டிப் பார்த்து விட்டு வருவோமா என நினைக்கிற போது நீ வருகிறாய்'' என்று உமா கூறினான் . '' டேய் ,கடைசி வரையில் போகாதீங்கடா , பொறுப்பாளர்களைத் தான் அவங்கள் பிடிக்கிறாங்கள் . ''என்று எச்சரித்தான் . பக்கத்திலே தான் திரிந்த நிலம் , உயிர் கிராமம் இருக்கிறது . 'போக முடியவில்லை என்ற மனவருத்தம் ' உள்ளே வெகுவாக அரித்தது . '' உனக்கொன்றும் பிரச்சனை இல்லையா குலம் ? ''என்று சபேஷன் கேட்டான் . '' நான் கல்யாணம் கட்டியவன் . சங்க வேலைகளை அப்பையே நிறுத்தி விட்டோம் . குழுவைச் சேர்ந்தவனில்லை , தொழில்ச்சங்கம் வேற என்பது அவங்களுக்கு தெரியும் . தப்பித்திருக்கிறேன் '' என்றவன் இரண்டொரு மாதங்களிலே முடிந்து போனான் .கிராமத்துத் தோழர்கள் ,'இவர்கள் கொழும்புக்கு எப்பவோ போய் வெளிநாடும் போய் விட்டார்கள் ' என்றே பதிலளித்து வருகிறார்கள் . சாடைமாடையாய் தெரிந்திருந்தாலும் மூச்சு விடுவதில்லை .ஒருமுறை பயணித்த பஸ் வயலில் இறங்கிய போது சபேஷன் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்க்கு இழை பிடித்ததுடன் ,குலத்தின் அபாயக்குரல் நினைவில் வர 'தலைவாறலையும் கொஞ்சம் மாற்றி , உடையையும் மாற்றி விட்டிருந்தான் . முன்பெல்லாம் யூனிபோர்ம் போல ஒரே சாரத்துடன் திரிந்தவன் . தாடியும் , சாரமுமே அவன் அடையாளங்கள் .கல்யாணமாகிய பின் முதலில் செய்தது தாடியை வழித்தது தான் .மாறிய முகம் .மீசையை நரைக்கும் வரையில் காத்திருந்து இப்பத்தான் எடுத்திருக்கிறான் . தெரிந்தவர் கூட மட்டுக்கட்டுவது சிரமம் தான் .











தமிழ் இலக்கிய மரபில் நூல் விமர்சனம் என்பது ஒரு தனித்துவமான அறிவுச் செயல்பாடாகக் கருதப்படுகிறது. அது வெறும் தனிநபரின் விருப்பு–வெறுப்புகளை வெளிப்படுத்தும் முயற்சியாக அல்ல; வாசக சமூகத்தை வழிநடத்தும் பொறுப்புள்ள பணியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு நூலைப் பற்றி சொல்லப்படுகின்ற கருத்துகள், அந்த நூலின் மதிப்பை மட்டுமல்லாது, இலக்கியச் சூழலையும் சமூகச் சிந்தனையையும் நேரடியாகப் பாதிக்கக்கூடியவை என்பதால், விமர்சனத்திற்கு தெளிவான வரையறைகளும் ஒழுங்குகளும் தேவைப்படுகின்றன.
23-24 வயதே நிரம்பியிருக்கக்கூடிய இவ்விளைஞனின், சாதியம் பற்றிய உணர்வும், பெண்களின் அடிமைத்தனம் பற்றிய எண்ணமும், இதைவிட மேலாக எலும்பும் தோலுமாய் அன்று தோற்றமளித்திருக்கக்கூடிய தன் மக்கள் பொறுத்த சிந்தனையும், நாடு காலனித்துவ ஆங்கிலேயரிடம் இப்படி அடிமைப்பட்டு போயிருக்கின்றதே என்ற ஆதங்கமும் மேலோங்கி வீசுவதாய் இருந்தது. ஆனால், இவற்றை விட, தம் இன்னுயிரை தியாகம் செய்து வெஞ்சிறையினுள்ளும் தம்மை இருத்திக் கொள்ள துடிக்கும் தன்னிகரற்ற சிங்கங்களையும் அவன் தன் வாழ்நாளில் தரிசிக்க வேண்டி வருகின்றது. இருப்பினும் இவ்விளைஞனின் உணர்வலைகளுக்கு கடிவாளம் போட்ட இரு பெரும் அலைகளும் அன்று வீசாமல் இல்லை.
ஏற்கனவே போதிய பராமரிப்பற்ற நிலையில் இருந்த யாழ் மந்திரிமனைக் கட்டடம் அண்மைக்காலப் பெருமழையினால் மேலும் சிதைவுகளுக்கு உள்ளாகியுள்ளது.. அதன் நிலையினை வெளிப்படுத்தும் காட்சிகள் இவை. மந்திரிமனைக்கு இந்நிலை ஏற்படாமல் தடுத்திருக்கும் வல்லமை எமக்கிருந்தது. ஆனால் அதனை நாம் செய்யவில்லை. இது வருந்தத்தக்கது.

பெரும்பாலும் பத்து வயதளவில் பள்ளியில் படிப்பவர்களுக்கு பள்ளிப் புத்தகங்களல்லாத வாசிப்புக்கு ஈர்ப்பு ஏற்படுமென்று எண்ணுகிறேன். அந்த வயதளவில்தான் அது எனக்கும் ஏற்பட்டது.
பதினெட்டாம் திருப்பூர் குறும்பட விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை தாராபுரம் சாலை சேவ்அலுவலக அரங்கில் சுசீலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சமூக ஆய்வாளர் வியாகுல மேரி அவர்கள் விருதுகளை வழங்கினார். அவர் உரையாற்றும் போது இப்படி குறிப்பிட்டார் :





தலைப்பிற்கேற்ப கடலும்,கடல் சார் நிலமும் - கடற்கரையுமாய் - மங்கிய மாலையில்,மஞ்சள் நிறப் பின்னணியில், மங்கலகரமான அட்டைப் படத்துடன் ரஞ்ஜனி சுப்ரமணியத்தின் 'நெய்தல் நடை' எனும் அவரின் முதற் படைப்பான இச் சிறுகதைத் தொகுப்புப் பற்றிய எனது பார்வையை மகிழ்வுடன் இங்கு பதிவு செய்ய விழைகின்றேன்.


தமிழர் கண்ட நகர்வில் தொடங்கி புலம் பெயர் வாழ்வின் புதிய தேவைகள் வரை எட்டுத் தலைப்புக்களில், நூற்றியொன்பது பக்ககங்களில் புலம் பெயர் தமிழர்களின் உணர்வுகளையும் , அவர்தம் வாழ்க்கையையும் மிகச்சிறப்பாக உணர்வுபூர்வமாக நூலாசிரியர் இந்நூலில் சித்திரித்துக் காட்டியுள்ளார் .

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









