எதிர்வினை: 'மஹாகவியும் கட்டற்ற தேடலும்' என்ற தலைப்பில் 'பதிவுகள்' இணைய இதழில் ஜோதி குமார் எழுதிய நீள்கட்டுரைக்கான எதிர்வினை – - உடையப்பன் அன்பரசு லெனின் -
- பதிவுகளுக்குப் படைப்புகள் அனுப்புவோருக்கான அறிவிப்பில் 'ஆனால் ஒரு விடயத்தை ஆக்க பூர்வமாகவும் குறிப்பிடலாம். எதிர்மறையாகவும் குறிப்பிடலாம். விடயமொன்றினை ஆக்க பூர்வமாகக் கூறுவதுதான் பதிவுகளின் நிலைப்பாடு. படைப்பாளிகளே! உங்கள் எழுத்தின் நியாயத்தை தீவிரத்தை உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் மேலெழுந்து மூடி மறைத்து விட விட்டு விடாதீர்கள். உணர்ச்சிகளை நீக்கி உங்கள் கருத்துகளைத் தர்க்க ரீதியாகப் பதிவு செய்யுங்கள். அதுவே வரவேற்கப் படக் கூடியது.'என்று கூறியிருக்கின்றோம். அத்துடன் 'பதிவுகளிற்கு வரும் ஆக்கங்களை மூலக் கருத்துச் சிதையாத வண்ணம் திருத்துவதற்கு ஆசிரியருக்குப் பூரண அதிகாரமுண்டு. அது ஆசிரியரின் உரிமை. ஆனால் அதனை விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பும் பொழுது 'வெளியிடுவதானால் திருத்தாமல் மட்டுமே வெளியிடவும்' எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். இதன் மூலம் பல தவறுகளை நீக்கி விட முடியும்' என்றும் கூறியிருக்கின்றோம். பதிவுகளுக்குப் படைப்புகள், எதிர்வினைகள் அனுப்புவோர் அவற்றில் தனிப்பட்ட தாக்குதல்களைச் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கொப்ப ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவி பற்றிய கட்டுரைக்கான உடையப்பன் அன்பரசு லெனினின் எதிர்வினையில் சில சொற்பதங்களைக்கொண்ட சொற்றொடர்களைத் தவிர்த்திருக்கின்றோம். ஆனால் அவர் கூறியிருக்கும் கருத்துகளுக்கு ஊறு விளைவிக்காத வகையில் அவை தவிர்க்கப்பட்டுள்ளன. - பதிவுகள் -
பகுதி - 1
ஜோதிகுமார் எழுதிய கட்டுரையை 'ஆய்வு' என்று தலைப்பிட்டு, 'பதிவுகள்' வெளியிட்டதும் அதற்கு பதில் எழுதுவதும் நம் காலச் சூழலின் அவலங்கள். பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் 1984இல் எழுதிய அறிமுகக் குறிப்பிற்கு, மாக்சிம் கார்க்கியின் முழுத் தொகுப்பின் 8ஆம் ,9ஆம் பகுதிகளையும் , லெனின் கலை இலக்கியம் பற்றி எழுதிய நூலையும், Van Gogh, A.J.Abdul Kalam ஆகியோர் எழுதிய நூல்களையும் இன்ன பிறவற்றையும் வாசித்து பதில் எழுத இவருக்கு 37 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. அல்லது, பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தொகுத்த 'மஹாகவியியல்' தொகுப்பை வாசித்து, அருட்டுணர்வு கொண்டு, அங்கே கண்டடைந்த மு.பொ.வின் விமர்சனங்களை விளங்காமல் உருவி (மு.பொ. பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய விமர்சனங்களைப் பிரசாந்தனின் தொகுப்பில் காணுமளவிற்கான வாசிப்புப் பலவீனத்துடன்), அதை முதலாய் வைத்து மஹாகவி பற்றித் தானும் பேசலாம் என்று இவர் காட்டியிருக்கும் அறிவீனத்திலிருந்து இவரே மீள வேண்டும். தனது வாசிப்புப் பலவீனத்தையும் மு.பொ. கருத்தைத் தனது கருத்தாக்கி இன்னொரு முலாம் தடவிக் காட்டும் வித்தையையும் ஆங்கில நூல்களைப் பிழையாக அர்த்தம் கொள்ளும் தவறினையும் வெளிச்சமாக்கியுள்ளார்.


6
இன்றுதான் எழுத்தாளர் கோவி மணிசேகரன் நவம்பர் 18, 2021 அன்று தனது தொண்ணூற்று ஆறாவது வயதில் முதுமை காரணமாக மறைந்த செய்தியினை அறிந்துகொண்டேன். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி. தமிழ் இலக்கிய உலகில் கோவி மணிசேகரனுக்கும் முக்கியமானதோர் இடமுண்டு. சமூக, சரித்திர நாவல்கள் பல எழுதித் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்தவர். திரைப்படத்துறையிலும் அவரது நாவல்கள் , யாகசாலை, தென்னங்கீற்று ஆகியவை வெளியாகியுள்ளன. அவற்றுக்கு அவரே திரைக்கதை, வசனமெழுதி இயக்கியுள்ளார். அதற்கு முன் அவர் இயக்குநர் கே.பாலச்சந்தரின் கீழ் உதவி இயக்குநராக இரண்டாண்டு காலம் பணிபுரிந்துமுள்ளார். பாலச்சந்தரின் 'அரங்கேற்றம்' திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பொதுவாகத் திரைப்படங்களில் உதவி இயக்குநர் என்று தனியாக ஆரம்பத்தில் போடுவதில்லை. ஆனால் பாலச்சந்தர் அப்படத்தின் ஆரம்பத்தில் உதவி இயக்குநர் கோவி மணிசேகரன் என்று தனியாகத் தன் பெயரைப் பதிவு செய்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்திருக்கின்றார். வாசித்திருக்கின்றேன். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீதத்தில் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அக்காள் காட்டிய வீடியோ காட்சி, என்னை அதிரவைத்த காரணம், அதிலே அவளின் மகன் தனது இரண்டு கக்கத்திலும் கைத்தடியை வைத்தபடி மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தான்.
வவுனியா ஆஸ்பத்திரிக்குச் செல்வதற்கிருந்த சுமார் பத்து கிமீ தூரத்தை ஓட்டோவில் கடந்துகொண்டிருந்த பொழுதில், கழிந்துசென்ற மூன்றாண்டுகளாய் தான் அனுபவித்திராத சுதந்திர வெளியின் பரவசத்தில் திளைத்திருந்தாள் சங்கவி. நிலத்தில் ஊர்வதுபோலன்றி, வானத்தில் அப்போது வட்டமிட்டுக்கொண்டிருந்த அந்த ஒற்றை வல்லூறாக, சிறகடித்து மிதப்பதாய் உணர்ந்துகொண்டிருந்தாள். அவள் கண்கள் அவ்வப்போது மூடி, வேகமாக முகத்திலும் மார்பிலும் மோதிக்கொண்டிருந்த காற்றின் சுகிப்பை மிக நிதானமாகவும் ஆழமாகவும் அவள் செய்துகொண்டிருப்பதைக் காட்டின.
என்னை தனது எழுத்துகளால் ஆட்கொண்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். தனது குறுகிய வாழ்வில் அவரால் எவ்விதம் இவ்விதம் சிந்திக்க முடிந்தது? செயற்பட முடிந்தது? எழுத முடிந்தது ? என்று நான் அடிக்கடி வியந்துகொள்வதுண்டு. தனது குறுகிய வாழ்வில் கவிதை, கட்டுரை, புனைகதை என்று அவர் ஆற்றிய இலக்கியப் பங்களிப்பு போற்றுதற்குரியது. அந்நியராதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டின் விடுதலைக்காக, வாழ்ந்த மண்ணில் நிலவிய தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் போன்ற சமூகச் சீரழிவுகளுகெதிராக, சுற்றியிருக்கும் இயற்கைக்காக, வாழும் சக உயிர்களுக்காக அவரது எழுத்துகள் குரலெழுப்பின. பல்வகைப்பட்ட மானுடரின் உணர்வுகளையும் அவரது கவிதைகள் வெளிப்படுத்தின. தான் வாழ்ந்த காலத்தை மீறிய அவரது சிந்தனையை , அவற்றில் காணப்படும் தெளிவினை அவரது எழுத்துகள் வெளிப்படுத்தின. அத்துடன் சிந்திப்பதுடன் நின்று விடாமல் அதற்கேற்ப நிஜ வாழ்விலும் செயற்பட்டவரும் கூட. இவ்விதமாகப் பல்வேறு விடயங்களைப்பற்றிச் சிந்தித்த அவரது சிந்தனை மானுட இருப்பு பற்றியும் சிந்தித்தது. இருப்பு பற்றிய சிந்தனைகள் கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்புமொன்று. அக்கேள்விகளெல்லாம் அவருக்கும் ஏற்பட்டன. அக்கேள்விகளுக்கான விடைகளையும் அவர் தர்க்கரீதியாகச் சிந்தித்தார். அச்சிந்தனைப்போராட்டங்களை வெளிப்படுத்தும் அவரது முக்கியமான கவிதையாக 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்னும் கவிதையைக் குறிப்பிடலாம்.



ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியெனக் கருதப்படுபவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஈடுபட்டு ஆழமாகத் தன் தடத்தினைப் பதித்தவரிவர். இவர் எழுதிய ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. இந்த 'மனக்கண்' நாவல் பற்றிய எனது விமர்சனக் குறிப்புகளே இவை. எனக்குத் தெரிந்த வரையில் அ.ந.க.வின் 'மனக்கண்' நாவல் பற்றி வெளிவந்த விரிவான, முதலாவதான, விமர்சனக் கட்டுரை இதுவாகத்தானிருக்கும். அந்த வகையில் இக்கட்டுரைக்கொரு முக்கியத்துவமுண்டு. இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று: நமது விமர்சகர்களுக்கு நூலாக வெளிவந்த நூல்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதிப்பழக்கம். இன்னுமொரு காரணம் பெரும்பாலான விமர்சகர்களுக்குத் தேடுதல் மிகவும் குறைவு. தமக்கு அனுப்பி வைக்கப்படும் நூல்களுக்கு மட்டுமே அவர்களது கவனம் திரும்பும். அவ்விதம் கிடைக்கும் நூல்களைத் தம் புலமையினை வெளிப்படுத்துவதற்குத் தொட்டுக்கொள்ளப்படும் ஊறுகாயைப்போல் பாவித்துக்க்கொள்வார்கள். மிகச்சிலர்தாம் நூலாக வெளிவராத பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கும் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.இவர்களை உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். [ தனது இறுதிக்காலத்தில் இவர் மலையகத்தமிழர்களை மையமாக வைத்து கழனி வெள்ளம் என்றொரு நாவலினை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், அது 1983 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறியப்படுகிறது]. 'மனக்கண்' ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்து இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர்களின் ஆதரவினைப் பெற்றதொரு நாவல். இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று அ.ந.க நாவலில் வரும் பாத்திரங்களுகிடையிலான உரையாடல்களில் பேச்சுத்தமிழைக் கையாளுவதற்குப் பதில் , பல்வேறு பகுதிகளிலுமிருந்து வாசிக்கும் அனைவருக்கும் புரியவேண்டுமென்பதற்காகச் 'சரளமான ஒரு செந்தமிழ் நடையினைப்' பாவித்திருப்பதுதான்.
கோவிட் எனும் ஒரு நுண்கிருமியின் தாக்கத்தோடு ஆரம்பித்து அதே நுண்கிருமியின் தாக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நுண்கிருமி கொடுத்த நோய்த்தாக்கத்திலிருந்து தப்பும் வழிகளில் மனதைச் செலுத்துவதிலேயே இவ்வகிலத்தின் பல நாடுகளின் முழுமுயற்சியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளையில் வேறு பல நிகழ்வுகள் ஆரவாரமின்றியே நடந்தேறி விட்டிருக்கின்றன. உலக அரசியலை எடுத்துக் கொள்வோம், மிகுந்த அமர்க்களத்துடனும், ஆரவாரத்துடனும் அமெரிக்க முன்னாள் ஐனாதிபதி ட்ரம்ப் அவர்கள் தனது தேர்தல் தோல்வியை ஏற்றுப் பதவி துறக்கச் செய்யப்பட்டு, புதிய ஐனாதிபதியாக பைடன் அவர்கள் பலத்த எதிர்பார்ப்புகளோடு பதவியலமர்ந்தது 2021ம் ஆண்டின் ஆரம்பத்திலே. இவரின் மீதான எதிர்பார்ப்புகள் அமேரிக்க நாட்டு மக்களிடையே மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும் இருந்தது என்பதே உண்மை. இன்று அந்த எதிர்பார்ப்புகள் எந்நிலையிலுள்ளன என்பது ஒரு கேள்விக்குறியே!
நண்பரும் எழுத்தாளருமான அ. கணபதிப்பிள்ளை அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்தது கனடிய தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். தாய்வீடு பத்திரிகையில் இவர் எழுதிய அரசியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் பலராலும் விரும்பி வாசிக்கப்பட்டன. தாய்வீடு ஒன்று கூடல்களில் மட்டுமல்ல, மற்றும் இலக்கிய நிகழ்வுகளிலும் சந்தித்து இலக்கியம், அரசியல் சார்ந்து அனேகமாக உரையாடுவோம். இலங்கையின் வடபகுதியில் உள்ள நெடுந்தீவைச் சேர்ந்த இவர் மிகவும் அமைதியானவர் மட்டுமல்ல, எல்லோரோடும் பண்பாகவும்,அன்பாகவும் பழகக்கூடியவர். முன்பு கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர்.
- இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவரான அறிஞர் என்னும் அடைமொழியுடன் 'அறிஞர் அ.ந.கந்தசாமி' என்றழைக்கப்பட்ட எழுத்தாளர் அ.ந.கந்தசாமி மானுட வாழ்க்கைக்கு வெற்றியைத்தரக்கூடிய நல்லதோர் உளவியல் நூலொன்றையும் எழுதியுள்ளார். தமிழகத்தில் பாரி நிலையத்தால் , எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் உதவியுடன் வெளியிடப்பட்ட நூல். இத்துறையில் வெளியான மிகச்சிறந்த நூல்களிலொன்று. அறுபதுகளிலேயே அ.ந.க இவ்வகையான நூலொன்றை எழுதியிருப்பது வியப்பினைத் தருகின்றது. கூடவே அவரது பரந்த வாசிப்பையும் வெளிப்படுத்துகின்றது. அவரது மறைவின்போது அவரது இறுதி மரியாதை நிகழ்வில் , அவரது தலைமாட்டில் இந்நூல் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது. 'வெற்றியின் இரகசியங்கள்' பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. - பதிவுகள்.காம் -
நம் தீவு நாட்டில் தான் ‘ தீ ‘க் குளிப்புகள் நடக்கிறதென்றால் போற புலம் பெயர் நாடுகளிலுமா இடம் பெற வேண்டும் ? இந்த பூமிப்பந்திற்கு என்ன தான் வந்து விட்டது . தாமாக ஈடுபட்டாலும் சரி , மற்றவர்கள் வலுவால் தூக்கி எறியப்பட்டாலும் சரி அது மனிதத்திற்கு அவமானமான செயல் தான் . மனிதம் செத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு சமிக்ஞை . மிருக நிலையிலிருந்து தேவ நிலைக்கு வைக்கிற வைக்கப்படுற ( கால் ) அடிகள் சறுக்குண்டு பின்னோக்கி விழுவது போன்ற ஒரு விபத்து . மனிதம் தின்று வாழ்கிறவர்கள் அதிகமாகிப் போனதனால் அதில் ஒரு அங்கமாகி தலைவராகி , இவை நிகழ்வதற்கு தார்மீக ஆதரவையும் , கூடுதலாக படையினரின் ஈனச் செயல்களையும் அனுமதித்து விடுகிறார்கள் . பழையபடி அரசநாயகத்தில் நழுவி விழுந்து தலைவர்களாகத் ( அரசர்களாக ) தான் போட்டி நடை பெறுகின்றது . இன்று , நம்நாடு போர்க் குற்றங்கள் மலிந்த ஒரு ஈன நாடாக காட்சி அளிக்கின்றது . பெயர் கெடுக்கப்பட்டு விட்டிருக்கிறது . படைப்பிரிவுகளைக் கலைத்து மீள புதுதாக ஏற்படுத்த வேண்டிய தேவை கிடக்கிறது . குற்ற விசாரணைகளைச் செய்ய வேண்டிய பணியை சமூக நீதிமன்றங்களிடம் தள்ளி விட வேண்டும் . அப்ப தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் . ஆளுக்காள் அபிப்பிராயம் சொல்லகிற அழுகிய நிலை வேண்டாம் . அரசியல் அத்திவாரம் சரியில்லை . அதைச் சீர்ப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது . ஆனால், நம்நாடு , சீராகி மூச்சு விடுமா? , விடவே நூறு ஆண்டுகள் செல்லும் போல இருக்கிறது .



டிசம்பர் 24 எம்ஜிஆரின் நினைவு தினம். எம்ஜிஆர் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை அவற்றில் இடம் பெறும் ஆரோக்கியமான கருத்துகள் உள்ளடங்கியுள்ள பாடல்கள்தாம். நல்ல கருத்துகளைக் கூறும் அப்பாடல்கள் வாழ்க்கைக்கு மிகவும் உதவும் தன்மை மிக்கவை. வழிகாட்டுபவை.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









