நெடுங்கதை: சமத்துவம் தேடும் சமாதானப் புறா (1) - தமிழகத்து நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ். -
1
என் தங்கை கலையரசிக்கு திருமணமான கையோடு , அவளும் கணவரும் கனடாவுக்கு குடிவந்து விட்டார்கள். அவர்களது வீட்டின் மூன்றடுக்கு மாளிகையின் மொட்டை மாடியில், வெற்றுத் தரையில், அகலக் கால்பரப்பி, ஆகாயத்தைப் பார்த்தபடி, மல்லாந்த நிலையில் படுத்திருக்கின்றேன். காற்றின் தாலாட்டால் கண்கள் சுழலக், கடந்துபோன நினைவுகளின் தாலாட்டால் நெஞ்சம் சுழன்றது.
சுமணாவதி கண்டியிலே சிங்களப் பள்ளிக்கூடம் ஒன்றில், வரலாறு (சரித்திர) பாடம் கற்பிக்கும் ஆசிரியை. நானோ தமிழகத்தில் திருநெல்வேலியில் வரலாறு பாடம் கற்பிக்கும் ஆசிரியன். முகம் பார்த்துப் பேசும் அலைபேசியோ, அல்லது சாதாரண அலைபேசியோ புழக்கத்துக்கு வராதிருந்த காலம் அது. முன்பின் அறிமுகமில்லா உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களுடன் தொடர்புகொண்டு, உள்ளப்பரிமாற்றம் செய்கின்ற கருவியாக, “பென் பிரெண்ட்” என ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற “பேனா நண்பர்” தொடர்புக் கலாச்சாரம் அன்றய நடைமுறையில் அமோகமாக இருந்தது. தொடர்புகொள்ள விரும்புபவர்கள், தமது பெயர்,விலாசம் மற்றும் படிப்பு, தொழில் போன்ற இதர சூழல்பற்றிய விபரக் குறிப்புக்களை பத்திரிகை, சஞ்சிகை போன்ற ஊடகங்களின்மூலம் தெரியப்படுத்துவார்கள். அவற்றில் தமக்குப் பிடித்தமான விபரங்கள் கொண்ட நபரை, மற்றய நபர் தொடர்புகொண்டு தனது பேனா நண்பராக ஆக்கிக்கொள்வார். இந்த வகையில்தான் வரலாற்றுப்பாட ஆசிரியர்கள் என்னும் முறையில், என் முகவரிக்கு முதன்முதலில் கடிதம் அனுப்பினாள் சுமணாவதி.எழுத்துக்கள் எல்லாமே முத்துமுத்தாக இருந்தன. சொற்குற்றம் ஏதுமில்லாமல் இத்தனை அழகாக தமிழில் , ஒரு சிங்களப் பெண்ணால் எப்படி எழுத முடிகிறது? ஒருவேளை, தமிழ் நண்பர்கள் யார்மூலமாவது எழுதுவிக்கின்றாளோ என்ற சந்தேகம் உள்ளிட, இருப்புக்கொள்ள முடியாமல் கடிதத்தில் கேட்டேவிட்டேன். பத்தாம் வகுப்புக்கான தமிழ்பாட பரீட்சையில் திறமையான பெறுபேறு பெற்ற சான்றிதழைப் போட்டோ எடுத்து, தனது குடும்பப் போட்டோவையும் சேர்த்து தபாலில் அனுப்பியிருந்தாள்.
நடுவிலே நாற்காலியில் அப்பா அமரதுங்க, பின்னால் அண்ணி கீதா, அவரது கையில் ஐந்து வயதுக் குழந்தையாக ராகுல, அடுத்து அண்ணன் நிசங்க மல்ல, அடுத்து சுமணாவதி. அப்பாவின் நெஞ்சோடு அணத்தபடி அம்மாவின் படம்.பெயர் : மெனிக்கா. இதிலே, அண்ணன் நிசங்கமல்ல, கனடாவில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிகின்றான். அப்பா கண்டியிலே பில்டிங் கன்ராக்டராக இருக்கின்றார். தவிர, தங்களின் வீட்டிலுள்ள தொலைபேசியின் எண்ணையும் குறிப்பிட்டு, தன்னோடு தமிழிலே பேசும்படி எழுதியிருந்தாள்.
எங்கள் வீட்டிலும் தொலைபேசி வசதி இருந்ததனால், தொலைபேசிச் செயலகத்தில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து, அப்போதெல்லாம் அரைமணி நேரமல்ல…. ஆறுமணி நேரம் காத்துக்கிடந்துகூட பேசினேன்…. பேசினோம். அதனை ட்ரங் கால் என்பார்கள். ஐயம் தீர்ந்தது. அது சுமணாவதிதான். எங்களைப்பற்றிய விபரங்களுடன் எங்கள் குடும்ப போட்டோவையும் அனுப்பினேன். பிறந்த காலத்திலிருந்து, கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்புவரை தாங்கள் கொழும்பில் குடியிருந்ததாகவும், தங்களுக்குப் பக்கத்து வீட்டுக் குடும்பம், தமிழகத்து கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுடன் நெருங்கிப் பழகியதால், தானும், அண்ணனும் தமிழில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்துகொண்டதாகவும், தெரிவித்தாள்.


இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினை தீவிரம் பெற்ற 1980களில் , இலங்கை தமிழ்ச் சூழலின் கல்வி, அரசியல், சமூகம், இலக்கியத் தளங்களில் முன்னணியில் இருந்த ஆளுமைகளிலொருவராக மு. நித்தியானந்தன் இருந்தார். அந்தப் பெயர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக அப்போது இருந்தது. அன்றைய சூழலில் இந்த பல்தளங்களில் நடந்த பல முக்கிய பணிகளுக்கு நேரடியாகவும் , பகுதியாகவும் அவரது பங்களிப்பும் உழைப்பும் தலையீடும் இருந்து வந்திருக்கின்றன. அன்றைய சமகாலத்து முக்கிய ஆளுமைகளுடனும் அரசியல், சமூக, கலை இலக்கியப் போக்குகளுடனும் உறவும் உரையாடலும் செயற்பாடும் அவருக்கு இருந்திருக்கிறது. இந்த பெரும் ஆளுமை உருவாக்கம் அறிவாலும், தொடர்ச்சியான வாசிப்பாலும் தேடலாலும் , செயற்பாடுகளாலுமே சாத்தியமாகியது. அத்தகைய முக்கிய இருப்பு , இப்போதைய அவரது எழுபத்தைந்தாவது அகவை வரையும் தொடர்வது எல்லோருக்கும் வாய்த்துவிடும் பெறு அல்ல.

இன்னும், மூன்று–நான்கு மாதங்களில், நாட்டின் காங்கிரஸானது, அமெரிக்காவின் கடன் பெறும் வரையறையை உயர்த்தவில்லை என்றால், அதாவது எமது நாடான இலங்கையைப் போல், காசடித்தும் - இறை வரிகளை விற்று தீர்த்தும் அல்லது, இன்னும் இது போன்ற பல வழிகளில், மக்களை அடமானம் வைத்து கடன்களைப் பெற்று வாழ்க்கை ஜீவிதத்தை ஓட்டி செல்ல, வழி செய்து தரும் வகையில் -காங்கிரஸானது கடன் பெறும் தனது வரையறையை உயர்த்தவில்லை என்றால்;–அமெரிக்காவானது, தனது, வங்துரோத்து நிலையை உலகு அறிய பிரகடனம் செய்வதை தவிர வேறு வழி இல்லை என அமெரிக்கத் திறைசேரியை சார்ந்த, யெலன் அம்மையார், அண்மையில் கூறிவிட்டார்.

நாவல் பல்வேறு தரப்பாராலும் விரும்பி வாசிக்கப்படும் ஒரு இலக்கிய வடிவமாகும். கதைகளிலும், வரலாறுகளிலும் விருப்பம் கொள்ளுகின்ற உணர்ச்சியுள்ள மனித மனமானது நாவல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல எனலாம். நாவல்கள் தனி மனிதச் சிக்கல்களையும், சமுதாயச் சிக்கல்களையும் எடுத்துக் காட்டும் கதைக்களங்களையும், கற்பனையான உரை நடைகளையும் கொண்டிருக்கும். நாவல்கள் முதலாம் நிலை அனுபவங்களாகவும், இரண்டாம், மூன்றாம்நிலை அனுபவங்களாகவும் அல்லது இவைகளுடன் கற்பனைகள் கலக்கப்பட்டதாகவும் காணப்படலாம். நாவலை சரியாக வரைவிலக்கணப்படுத்த முடியாது என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
இந்தியாவின் மிகச் சிறந்த ஆறுகளில் ஒன்று காவிரி. இந்துக்கள் இதைப் புண்ணிய நதியாகக் கருதி வழிபாடுகள் செய்கின்றனர்.காவிரி ஆறு பற்றி பட்டினப்பாலை, புறநானூறு, பொருநராற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம்,போன்ற பல நூல்களிலும் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன. கம்பர் காவிரி நாட்டினர். வளமான இயற்கையை எங்குக் கண்டாலும், பொன்னி ஆற்றையும், பொன்னான சோழநாட்டையும் ஒப்பிட்டு மகிழ்வார். கம்பர் காலத்திலும் காவிரிஆறு, கங்கை ஆற்றுக்கு ஒப்பானது என்று மக்கள் கருதி வந்தனர்.கம்பரும் கங்கையை நினைவு கூறும்போதெல்லாம் காவிரியையும் நினைவு கூருகின்றார். அவ்விடங்களில் சிலவற்றை ஆராய்வோம்.
இதுவரை இங்கு நீங்கள் வாசித்தவற்றிலிருந்து ஓரளவுக்கு என்னைப்பற்றி , என் ஆளுமையைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் அது ஓரளவுக்குப் போதுமானது. ஏனென்றால் நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனின் வாழ்க்கை அனுபவங்களை விபரிக்கக்கூடும். அப்போது இவனைப்பற்றி இன்னும் நன்கு புரிவதற்கு இதுவரை விபரித்த விபரிப்புகள் நிச்சயம் உதவுமென்றும் நிச்சயமாக நம்புகின்றேன்.


மொட்டெ அக்கா வீட்டின் முன்ஜன்னலை உடைத்தபோது முகத்தில் அறைந்த, குடலைப் பிரட்டும் பிணநாற்றம் செள்ளியைப் பீடித்திருந்தது. அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு முற்றத்தின் மூலையில் முழங்காலிட்டு வாந்தியெடுத்த நினைவு அவளின் தலைக்கேறியிருந்தது. வாயை அகலத்திறந்து, நாக்கை நீட்டி நீட்டி, காற்றை இழுத்து இழுத்து மேற்கொண்ட பகீரத முயற்சிக்கெல்லாம் சிக்காது, பிரட்டலாக அடிவயிற்றிலேயே நின்றெரிந்த அந்த நாளைவிட இந்தநாள் அதிகக் கனத்தது.



மாதுயர்ப்படு முஸ்லிம் 
நீங்கள் என்றவது உங்கள் மாணவப்பருவத்தில் வகுப்பிற்கு முன் முழுங்காலில் நின்றிருக்கிறீர்களா? அதுதான் முட்டுக்கால் போடுவது என்பார்களே.


'நாம் விரும்புகின்றவையும் திட்டமிடுபவையும் எப்போதும் நடந்து விடுவதில்லை .விரும்பாதவையும் எதிர்பாராதவையும் நடந்து விடுகின்றன ' . யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அம்மையாரின் 'தாலி' சிறுகதைத் தொகுப்பில் படைப்பாளியின் உரை இவ்வாறுதான் ஆரம்பிக்கின்றது. தத்துவார்த்தமான வசனங்கள் மட்டுமல்ல, சிறுகதைத் தொகுப்பின் பெரும்பாலான கதைகளின் அடிநாதமாகவும் இதுவே அமைந்துள்ளது.



"பெண் அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட வரலாறு உண்டு. ஆனால் முழுமையாக அவள் மீளவில்லை. பெண்கள் வெளித்தோற்றத்தில் உயர்வு பெற்றதாக தெரிகிறது. பதவி உயர்வு பெற்றது, குடும்பத்தில் சில பொறுப்புகளை அடைந்தது, சமூகத்தில் சில நிலைகளை அடைவது வேறு வகையில் தோற்றம் கொள்கின்றன, ஆனால் பெண் அப்படியெல்லாம் பெரிதாக மாறுதலுக்குள் உட்படவில்லை குடும்பமே பெண்ணை மீட்டெடுக்க வேண்டு,ம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு பதிலடிதான் பெண்கள் எழுத்து பெரியார் ஒவ்வொரு பெண்களும் இருக்கிறார் என்பதைத் தான் பெண்களிம் மறுமலர்ர்சி நடவடிக்கைகள் சொல்கின்றன. எதற்காக எழுத வேண்டும் என்றால் குடும்பத்தின் தளைகளில் இருந்து பெண்ணை விடுவிப்பதற்கும் அதை தீர்வை தன் அனுபவங்களில் மூலம் செல்வதற்கும் பெண்ணே எழுத வேண்டிருக்கிறது" என்று எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சக்தி விருது 2023 விழாவில் விருதைப் பெற்றுக் கொண்டு பேசும்போது தெரிவித்தார். விருது பெற்ற பிற எழுத்தாளர்கள் தங்களின் எழுத்து அனுபவங்களை விரிவாக எடுத்துரைத்தனர். 
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









