' கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: மற்றும் சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.' ('Women in leadership: Achieving an equal future in a covid-19 world') - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
- - சர்வதேச மகளிர் தினத்தையொட்டி (மார்ச் 8) திண்டுக்கல் காந்திக்ராம் பெண்கள் இன்ஸ்டியூட் மாணவிகளுக்கு 8.3.2021ல் ஆற்றிய சொற்பொழிவின் சாரலிலான விளக்கமான கட்டுரை. -
முன்னுரை:
'Women in leadership: Achieving an equal future in a covid-19 world' கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.' என்ற தலைப்பு எனது கட்டுரையின்; பொருளாக எடுக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் அகில உலக மாதர் தினவிழா பங்குனி எட்டாம் திகதி தொடங்குகிறது.இவ்வருட மாதர் தினவைபவங்கள்,'கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.' இந்தக் கருத்துப் பொருள் சார்ந்த தலைப்பை ஐக்கிய நாடுகள்நாடுகள் அறிவித்திருக்கிறது. இன்று பொதுவாழ்வு,உத்தியோகத்துறைறை போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் பெண்களும், இனி,எதிர்வரும் காலத்தில் உலகின் பல பணிகளிலும் தங்களைப் பிணைத்துக் கொண்டு சாதனை படைக்கவிருக்கும்; இளம் பெண் தலைமுறையினரும், ஆண்களுக்குச் சமமானமுறையில் பல துறைகளிலு'சமத்துவம்' பெறபேண்டும் என்று.ஐ.நா.சபை அழுத்திச் சொல்கிறது. மிகவும் கொடுமையான கோவிட-19 கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள்,ஒட்டுமொத்த உலகின், பாதுகாப்பு,கல்வி,சுதந்திரம்,பொருளாதார வளர்ச்சி என்பன, சீருடன் வளர ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை இந்தக் கொடிய வைரசு எடுத்துக்காட்டியிருக்கிறது. உலகத்தில் பல்வித வேறுபாடுகளால் மக்கள் தங்களைத் தாங்களே பிரித்துக் கொண்டு, முரண்பட்டுக்கொண்டு பல பிரச்சினைகளையுண்டாக்கிப் பிரிந்து வாழும் அத்தனை மனிதர்களும்,இயற்கையின் பார்வையில் ஒன்றுதான் என்பதை இந்தக் கொடிய கோவிட் 19 வைரஸ்,.சாதி.மத,இன,நிற பேதமின்றித் தாக்கியழித்துக் கொண்டிருப்பதிலிருந்த எங்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.
இந்தக் கட்டுரையில்:
1.அகில உலக மாதர் தின வரலாறு,
2.கோவிட் கால கட்டத்திலும் மனித மேன்மைக்கும் உயர்வுக்கும் பாடுபடுவதாக உலக ஊடகங்களால் அங்கிகரிக்கப்பட்ட பெண் ஆளுமைகள்,
3. முக்கியமாக இந்திய நாட்டைச்சேர்ந்த அல்லது இந்திய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் சாதனையாளர்கள்ஒரு சிலரைப் பற்றிக் பற்றிக் குறிப்பிடுகிறேன்.
4.அத்துடன், இனறைய கால கட்டத்தில் தோற்று நோய் தடுப்பூசியான வக்ஸின் தயாரிப்பில் பெண்கள் சாதனை பற்றிய குறிப்புகள்.
5.கடைசியாக இன்றைய இளம் தலைமுறை தங்களையும் மேம்படுத்தி, தங்களைப் போன்ற ஒடுக்கப் பட்ட,அடக்கப் பட்ட,வசசதியற்ற பெண்களை மேம்படுத்த உதவுவது எதிர்காலம் முன்னேற மிகவும் அத்தியாவசியம் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன்.