தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) ஊடக அறிக்கை!
செப்தெம்பர் 15, 2013 / ஊடக அறிக்கை
தேர்தல் முடிவு தமிழ்மக்கள் அபிவிருத்தி அல்ல தங்கள் மண்ணில் தன்மானத்தோடு வாழ்வதையே விரும்புகிறார்கள் என்பதை மகிந்த இராஜபக்சேக்கும் உலகத்துக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்!
வட மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாகப் பல நொண்டிச் சாட்டுக்கள் சொல்லி இழுத்தடித்து வந்த வட மாகாண சபைத் தேர்தலை வேறு வழியின்றி மகிந்த இராஜபக்சே நடத்துகிறார். இதன் மூலம் தான் சனநாயகத்தை நடைமுறைப் படுத்துவதாகச் சொன்னாலும் அனைத்துலகச் சமூகத்தின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே இத்தேர்தல் நடைபெறுகிறது என்பது யாவரும் அறிந்ததே. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13 ஆம் திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு தற்போதுள்ள அதிகாரப் பகிர்வு மிகச் சொற்பமாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை தமிழர்களது கையில் எடுக்கவேண்டியது அவசியமாகும். அதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) இத் தேர்தலில் போட்டியிடுகிறது. 13 ஆவது சட்ட திருத்தம் இனச் சிக்கலுக்கு தீர்வாக அமையமாட்டாது என்பதில் ததேகூ தெளிவாக இருக்கிறது.