உக்ரைன் ஏன் மேற்குலகத்தின் தவறு? -
உக்ரைன் , ரஷ்ய மோதல் பற்றிய கருத்துகள் சில! - நந்திவர்மன் -
சோவியத் குடியரசைத் துண்டுகளாக்கியதில் வெற்றி பெற்றன மேற்கு நாடுகள். அதுவும் போதாதென்று அவற்றையெல்லாம் தம் கூடாரத்துக்குள் இழுத்துக்கொண்டு, ரஷ்யாவை மேலும் பவீனப்படுத்தி, உலக அரசியலில் ஓரங்கட்ட முயற்சி செய்ததன் விளைவுதான் உக்ரைனை நேட்டோவுக்குள் கொண்டு வரும் முயற்சி. அது இன்னும் ரஷ்யாவைப் பலவீனப்படுத்தும். அதன் தேசிய நலன்களுக்கும் எதிரானது; ஆபத்தானது. உக்ரைன் மட்டும் தான் ஒருபோதும் நேட்டோவுடன் இணையப்போவதில்லையென்று அறிக்கை விட்டிருந்தால் இந்தப்போர் தவிர்க்கப்பட்டிருக்கும். தான் ருஷ்யாவுக்கு மிக அருகிலிருப்பதால், ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்களுடன் தான் பின்னிப்பிணைந்திருக்கின்றேன் என்பதை உணர்ந்து தனது பூகோள அரசியலை அது நடத்தியிருந்தால் இப்போர் தவிர்க்கப்பட்டிருக்கும். அதே சமயம் போர்கள் அவை எக்காரணங்களால் நடந்தாலும் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே. அது மிகவும் துயரமானது.
மெல்பனில் Dare to Differ நூல் வெளியீட்டு அரங்கு!
அவுஸ்திரேலியாவில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும் சமூகப்பணியாளரும், தமிழ் அமைப்புகளில் அங்கம் வகித்திருப்பவருமான சபாரத்தினம் சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதியிருக்கும் Dare to Differ நூலின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 26 ஆம் திகதி ( 26-02-2022 ) சனிக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Glen Waverley Community Centre மண்டபத்தில் ( 692-724 , Waverley Road, Glen Waverley 3150 ) நடைபெறும்.
திருமதி பிருந்தா கோபாலனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் நூல்வெளியீட்டு அரங்கை, திருமதி பாக்கியம் அம்பிகைபாகர், திரு. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி தொடக்கிவைப்பர்.
அவுஸ்திரேலிய பூர்வகுடி மக்களை நினைவுகூர்ந்தவாறு, இலங்கை உட்பட உலகெங்கும் போரினால் மறைந்தவர்களுக்கும் கொவிட் பெருந்தொற்றினால் இறந்தவர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.
எழுத்தாளர் திரு. முருகபூபதி, வழக்கறிஞர் திரு. ஜே பிள்ளை ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து, எழுத்தாளர் சட்டத்தரணி ‘பாடும் மீன் ‘ சு. ஶ்ரீகந்தராசா, கலாநிதி ஆனந்த ஜெயசேகரம், திரு. ஜூட் பிரகாஷ், ஆகியோர் நூல் நயப்புரை நிகழ்த்துவர். நூலாசிரியர் திரு. சபாரத்தினம் சுந்தரமூர்த்தி ஏற்புரை நிகழ்த்துவார். இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்பர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
குரு அரவிந்தனின் காதலர் தினக் கதைகள்!
1. என் காதலி ஒரு கண்ணகி
நயாகரா நீர் வீழ்ச்சியின் நீர்த் துளிகள் காற்றோடு கலந்து எங்கள் உடம்பைக் குளிரூட்ட, ‘மிஸ்ற் ஒவ்த மெயிட்டில்’ வானவில்லின் வர்ண ஜாலங்கள் என்னை ஒரு கணம் திகைக்க வைத்தன. இவ்வளவு அருகில், மிக அருகில் வானவில்லை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. அற்புதம்! இல்லை அதிசயம்! மாலை நேரத்து வெயிலில் நீர்த் துளிகள் பொன்மயமாக, சொர்க்க வாசலில் நுளைவது போல படகு மெல்ல மெல்ல ஆடி அசைந்தது. இயற்கையின் அதிசயத்தில் என்னை மறந்து என்னை அறியாமலே எழுந்து நின்று கண்களை மூடி, இரண்டு கைகளையும் முன்னே நீட்டி, ‘ஆகா..!’ என்று மெய்மறந்தேன்.
மறுகணம் படகு போட்ட ஆட்டத்தில், நான் தடுமாற எனக்கு முன்னால் நின்ற அவளும் தடுமாறி என் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தாள். கண்ணை மூடிக் கற்பனையில் இருந்த நான் என்ன நடந்தது என்று அறியாமலே, விழுந்திடுவேனோ என்ற பயத்தில் கைக்குள் அகப்பட்ட அவளை இறுக அணைத்துக் கொண்டேன். வெண்மேகப் பொதியோ? அந்த இதமான சுகத்தில் ஒருகணம் என்னை மறந்தேன். ‘ஸ்ருப்பிட்..!’ என்றாள் தன்னை விடுவித்துக் கொண்டு.
சற்றும் எதிர்பாராத வார்த்தை, தானே வந்து என் கைக்குள் விழுந்து விட்டு என்னைத் திட்டினாள்;. யாரென்றே தெரியாமல் கட்டி அணைத்தது என் தப்புத்தான், சமாளித்துக் கொண்டு,‘சொறி’ என்றேன், கோபத்திலும் அவள் ஆழகாய் இருந்தாள். கத்தும் குயிலோ இல்லை எழில் தோற்றத்தில் மயிலோ?
13வது திருத்தம்! (கட்டுரை தொடர்ச்சி) - யோ.திருக்குமரன் -
அண்மித்த நிகழ்வுகள்:
பகுதி 1
அண்மையில், இலங்கையில் காணப்பட்ட நகர்வுகள் முழு தமிழ் உலகத்தையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்த கூடியவைதான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஒன்று, வடக்கே, 13வது திருத்தம் வேண்டாம் என கோரி, போராடிய நிகழ்வு. மற்றது இலங்கையானது இந்தியாவுடன் நெருக்கம் பூணும் நோக்குடன் தனது நகர்வுகளை ஆரம்பித்த நிகழ்வு. இவ்வகையில், இதனுடன் தொடர்புபட்ட, பேராசிரியர் கணேசலிங்கனின், மிக அண்மித்த கட்டுரை ஒன்றின் தலைப்பானது, இவ்வாறு அமைந்திருந்தது:
“இந்தியாவுடன், இலங்கையின் நெருக்கமான உறவுக்கான அணுகுமுறைகள், 13ஐ நீக்குவதற்கான உத்திகளா?” (தினக்குரல்--06.02.2022).
மேற்படி தலையங்கம் எழுப்பக்கூடிய பிரதானமான கேள்விகள் இரண்டே இரண்டுத்தான்:
i. ஒன்று: மேற்படி ‘அணுகுமுறைகள்’ என்பன யாவை?
ii. இரண்டாவது: அவ்அணுகுமுறைகள், 13ஐ நீக்குவதற்கான, ‘உத்திகளாக’ செயற்படுகின்றனவா, என்பனவையே அவை.
மேற்படி இரண்டு கேள்விகளும், ஒன்றை ஒன்று சார்ந்தது அல்லது ஒன்றில் ஒன்று தங்கியிருப்பது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதாவது, கிழக்கு முனைய ஒப்பந்தம் போல், 13ஐயும் ஒருதலைபட்சமாக கிழித்தெறியப்பட முடியாது போனால், நிச்சயம் அது இந்திய ஒத்தாசையுடனேயே ஆற்றப்பட வேண்டிய கருமமாகும். எனவேத்தான் 13ஐ நீக்க வேண்டும் எனில் முதலில், இவ் ‘அணுகுமுறைகள்’ மேற்கொள்ளப்பட வேண்டியது என்பது தவிர்க்கமுடியாத நடைமுறை ஆகின்றது. இதனால்தான், ரணில் விக்கிரமசிங்க, ஆச்சரியப்பட்டது போல கடனுதவியை நாட, உலக வங்கியை அணுகாமல், இலங்கையானது, ஏன் இந்தியாவை நாடுகின்றது என்ற கேள்வி, இன்று, என்றைக்கு விடவும் மிக முக்கியமானதாகின்றது. இதனையே வேறு வார்த்தைகளில் கூறிவதென்றால், கடனுதவியை இந்தியாவிடம் இருந்து கோருவதன் நோக்கம் இரண்டாகலாம்:
அரசியல் ஆய்வு: மோடிக்கான கடிதம், 13ம் திருத்தம், இலங்கை-இந்திய ஊடகங்களின் நிலைப்பாடுகள். - யோ.திருக்குமரன் -
1
தினக்குரலின் பொங்கல் வெள்ளி இதழ் (14.01.2022) தனது தலைப்பு செய்தியாக, (கொட்டை எழுத்துக்களில்) பின்வரும் செய்தியை தீட்டியிருந்தது: “மோடிக்கான கடிதம் முற்றாக மாற்றம்” கடிதம் இறுதியாக்கப்பட்டு, தினங்கள் கழிந்த நிலையில், மேற்படி ‘கொட்டை எழுத்தை’, ‘தலைப்பு செய்தியாக’ வாசிக்கும் வாசகனில், மேற்படி செய்தி பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும். ஆனால், இதனைவிட அடுத்த அடியே, செய்தியாளரின் மரண அடி கொடுக்கும் அவாவினை பேசுவதாய் இருந்தது: “இதனை செய்தது தமிழரசு கட்சியே – சுமந்திரன்”
கிட்டத்தட்ட, மூன்று பத்திகளாக (Columns) ஓடிய, 71 வரிகொண்ட, மேற்படி செய்தியில், சுமந்திரனால் ஆற்றப்பட்டதாக கூறப்படும் கூற்றை, முழுமையாக வாசித்து பார்த்தால், இக்கூற்றின் 71 வரிகளில், கடைசி ஆறே ஆறு வரிகள் மாத்திரமே இக்கடித தயாரிப்பில் தமிழரசு கட்சி இடைநடுவே ஈடுபட தொடங்கியது என்பதும், இடைநடுவே ஏற்பட்ட அத்தகைய பங்களிப்பை தொடர்ந்து, கடித அமைப்பின் நோக்கம் - அதன் கோரிக்கை – அதன் தலையங்கம் - இவை மாற்றம் கண்டன என்பனவும், மேற்படி செய்தியில் சுமந்திரன் ஆற்றிய கூற்று கூறப்பட்டிருந்தது.
அதாவது, இந்நீண்ட அறிக்கையின் கடைசி மூன்றே மூன்று வரிகளில் மாத்திரமே தமிழரசு கட்சி, அறிக்கையில், இடைநடுவே செய்த, நோக்கம்-கோரிக்கை–தலையங்கம் வெளிப்படுத்தப்பட்டு இருந்தன. தமிழரசு கட்சி போன்ற கட்சியானது இடைநடுவே சேர்ந்த பின், - இம்மாற்றங்கள், எதிர்ப்பார்க்கக்கூடிய ஒன்றே. இது ஒரு புறம் இருக்க, இதன் மிகுதி பகுதியான, 65 வரிகளும் பின்வரும் விடயங்களை விஸ்தாரமாக விவாதித்தன.
வாசிப்பு அனுபவம் : முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை! இலங்கைத் தலைநகரின் கதையை கூறும் நூல் ! - ஜோதிமணி சிவலிங்கம் -
அவுஸ்திரேலியாவில் முப்பது வருடங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஈழத்து இலக்கிய உலகில் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்.
மல்லிகை ஜீவா அவர்களால் அரை நூற்றாண்டுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இலக்கியவாதி, ஊடகவியலாளர். சிறுகதை, நாவல் முதலான துறைகளில் இலங்கையில் இரண்டு தடவை தேசிய சாகித்திய விருதுகள் பெற்றவர்.
இதுவரையில் 25 நூல்களை எழுதியிருக்கும் முருகபூபதியின் மற்றும் ஒரு வரவுதான் நடந்தாய் வாழி களனி கங்கை.
இதனை கொழும்பில் குமரன் புத்தக இல்லம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
கிழக்கிலங்கையில் திரு. பூபாலரத்தினம் சீவகன் அவர்கள் வெளியிட்டு வரும் அரங்கம் வார இதழில் வெளியானதே நடந்தாய் வாழி களனி கங்கை தொடர். தற்போது நூலுருப்பெற்றுள்து.
கணத்திற்குக் கணம் மாறிக்கொண்டிருக்கும் இப்பூவுலகில் இந் நூலானது கடந்து போன காலங்களையும், அக்காலத்தில் நடந்த சம்பவங்களையும் எமது கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது.
அத்துடன் இந்நூலில் இடம்பெற்றுள்ள பல நிகழ்வுகள் நம்மை எமது முந்திய காலத்திற்கும் அழைத்துச் செல்கிறது. உதாரணத்திற்கு வீரகேசரி, லேக் ஹவுஸ் (Lake house) , ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முதலான செய்தி ஊடகங்கள் சார்ந்தனவற்றின் வரலாறுகளாகும்.
பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கைத் தலைநகரில் நடந்த பல சம்பவங்களையும் இந்நூல் நினைவுபடுத்துகின்றது. களனி கங்கையின் ஆரம்பப் பெயர் கல்யாணி என்பதையும் நாளடைவில் அது களனி என மாற்றம் அடைந்ததையும் நூலாசிரியர் கூறியுள்ளார். அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த குதிரைப் பந்தயம், சூதாட்டம் பற்றியும் கூறியபோதுதான் அக்காலத்தைய கசினோ பற்றிய வரலாறு புரிந்தது.
இதே காலகட்டத்தில் குதிரைப் பந்தயத்திடலிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் களனி பாலத்தின் ஊடாக எடுத்துச்செல்லப்பட்ட செய்தியும், பின்னர், அதே சம்பவம் சிங்களத் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள செய்தியையும் இந்நூல் ஆதாரங்களுடன் கூறுகிறது.
இதிலிருந்து இலங்கையின் இன்றைய பாதாள உலகக் கோஷ்டி பற்றியும் விளங்கிக் கொள்ள முடிந்தது. இவற்றால் நாட்டில் இன்றுவரையில் காலத்திற்குக் காலம் தோன்றும் அதிர்வலைகளையும் உணரக் கூடியதாக உள்ளது.
ஒவ்வொரு சம்பவங்கள் பற்றி எழுதத் தொடங்கும் போதும் அக்காலத்தில் பிரசித்தி பெற்ற மிகச் சிறந்த சினிமாப் பாடல் வரிகளுடனும் முருகபூபதி ஆரம்பித்திருப்பது "பீட்சா" மீது தூவும் பாலாடைக்கட்டி (Cheese) போன்று சுவையளிக்கின்றது.
அஹிம்சையின் அவதாரங்களான கௌதமபுத்தர் வந்த இடம், மகாத்மா காந்தியின் அஸ்தி கரைத்த இடம் முதலானவற்றையும் காண்பித்து, அதே இடத்திலேயே இலங்கையின் இன்றைய நேற்றைய அரசியல்வாதிகளின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாத அரசியல் பக்குவத்தினால் இம்சை அரசியலும் நிகழ்ந்துள்ளது என்ற பார்வையிலும் களனி நதி தீரத்தின் கதையை நகர்த்திக் கொண்டு செல்கின்றார்.
அக்கால அரசியல் வாதியான S.W.R.D. பண்டாரநாயக்கா பற்றிய பதிவும் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்கா, பிரதமராகவிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றைய நாளில் நாம் 10 அல்லது 11 வயதுப் பராயத்தில் இருந்திருப்போம்.
பாடசாலை முடிந்து திரும்பும் போது வானொலியில் செய்தி கேட்டு நாம் பயந்த காலங்களும் இது பற்றிய தகவல்களை வாசித்தபோது கண்முன்னே தோன்றுகின்றது.
பண்டாரநாயக்காவின் மறைவின் பின்னர் அவர் மனைவி பதவியேற்றார். அதன்பின் அவர்கள் மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா பதவிக்கு வந்தார். இவ்விதமாக இவர்கள் பிறந்து வளர்ந்த வரலாறுகள் பற்றி எமது எழுத்தாளர் முருகபூபதி அழகாகச் சித்தரித்துள்ளார்.
எமக்கு அன்று இலவசக் கல்வியை அறிமுகம் செய்த கன்னங்கராவைத் தவிர வேறு சிங்களத் தலைவர்கள் எவரும் எமது நினைவுக்கு வருவதில்லை. ஆனால், இன்றைய அன்றைய அத்தனை அரசியல்வாதிகளையும் இப்பதிவில் முருகபூபதி எம்முன்னே நிறுத்தியுள்ளார்.
பனை ஓலைச்சுவடியில் எழுத்தாணியால் எமது முன்னோர்கள் எழுதியதிலிருந்து அதன் பின்னர் அறிமுகமான பலரக பேனாக்கள் முதல், நாம் பாவிக்கும் Ball point pen வரை எழுதுகோல்களின் காலத்தையும் விளக்கமாகக் கூறியிருக்கின்றார். இது எமது இளம் சந்ததியினருக்கு சுவாரஸ்யமாயிருக்கும்.
போர்க்கால நெருக்கடிகளின் பல உண்மைச் சம்பவங்களை முருகபூபதி எழுதி நினைவூட்டியிருப்பதிலிருந்து எத்தனை விடயங்களை நாம் தொலைத்து விட்டோம் என நினைக்கத்.தோன்றுகிறது.
இராவணன் காலம் முதல் இராஜபக்க்ஷ காலம் வரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்த பலரும் இந்தியாவிலிருந்து சமாதானத் தூதுவர்களாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நசூக்காகச் சொல்லிச்செல்கிறார்.
இன்று கோத்தபாய இராஜபக்க்ஷ காலமும் ஒரு சிறந்த நடுநிலையான தீர்வை முன்வைக்க முடியாது முனகிக் கொண்டிருப்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்த சேர்.பொன்னம்பலம் அருணாசலம் எனும் பெரியாரின் சகோதரர் சேர். பொன். இராமநாதன் ஆவார். இவர் இங்கிலாந்தில் கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் பரிஸ்டர் பட்டம் பெற்றவர். இங்கிலாந்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பக்கிங்காம் மாளிகையில் இவருக்கு “சேர்" பட்டம் வழங்கினார். இப்படிப்பட்டவர்கள் தமிழ் அறிஞர்களாக , அரசியல்வாதிகளாக இருந்தாலும் இவர்கள் கோயில்களின் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும், இவர்கள் எவராலும் தமிழினத்திற்கு ஒரு சரியான தீர்வை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதையும் இந்நூலின் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
மற்றுமோர் பிரசித்தமானவர்தான் ஜுனியஸ்ட் ரிச்சர்ட் ஜெயவர்த்தனா ஆவார். இவர் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் பிறந்தவர். இவரும் பிறப்பால் ஒரு கத்தோலிக்கர். சொலமன் டயஸ் (S.W.R.D) பண்டாரநாயக்கவும் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவும் கத்தோலிக்க மதப்பின்னணி உடையவர்கள். இவர்கள் பற்றிய தகவல்கள் இதில் நிறைய எழுதப்பட்டுள்ளன.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மற்ற அரசியல்வாதிகள் போன்று பிரதமர் பதவியில் இருந்து ஜனாதிபதியானாலும் வாரிசு அரசியலுக்குத் துணை போகவில்லை என்ற செய்தியையும் நூலாசிரியர் தெரிவித்துள்ளார். இப்படிப் பல சுவாரஸ்யமான தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டே இந்நூலை அழகுற வைத்துள்ளார் நமது எழுத்தாளர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப இலங்கை அரசியல் சமூக பொருளாதார மாற்றங்கள், உற்பத்தி ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் என இலங்கை வரலாறு, குறிப்பாக தலைநகரத்தின் வரலாறு இந்நூலில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
கல்வி கற்கும் மாணவர்கட்கு விளங்கும் வகையில் எளிமையாக அவர் எழுதியிருப்பது மிகவும் சிறப்பானது.
அக்கால அரசியல்வாதிகள் , கலைஞர்கள் பற்றியும் பல பெரிய நிறுவனங்கள், வீதிகளின் பெயர்கள் என கொழும்பு வாழ்க்கையில் நாம் சந்தித்தவைகளையும் இழந்தவற்றை சுட்டிக் காட்டியுள்ளார்.
அக்காலத்தில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றிய பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன் போன்றவர் களை பற்றியும் சிங்களப்பட உருவாக்கமும் அதன் பின்னர் காலப்போக்கில் தமிழ்ப்பட உருவாக்கம் பற்றியும் இந்நூலில் திறம்பட விபரிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலிருந்து இலங்கை வந்த ஒளிப்படக் கலைஞரும் ராஜா ஸ்ரூடியோவை கொழும்பில் உருவாக்கியவருமான ராஜப்பனைப் பற்றியும் அவர் மனைவி கௌரீஸ்வரி ராஜப்பனைப் பற்றியும் இந்நூல் கூறத் தவற வில்லை.
எனது மகள் ஆர்த்தி, திருமதி. கௌரீஸ்வரி ராஜப்பனிடம்தான் சங்கீதம் கற்றாள். அவரது வீட்டில் நுழைந்தால் அங்கு தென்படும் வீணையும் அவர் குளித்து முடிந்த தலையும் பெரிய நெற்றிப்பொட்டும் எனக்கு நினைவுக்கு வந்தன. எனது பழைய பசுமையான நினைவுகளுக்கும் இந்நூல் விருந்தளித்தது.
அது மட்டுமல்ல, திருமதி . ரோஸி. சேனநாயக்க அழகுராணியான செய்தியும் பின்னர் அவர் அரசியல்வாதியாக வலம் வருவதும் போன்ற விறுவிறுப்பான செய்திகளுக்கும் இந்நூலில் பஞ்சமில்லை.
மொத்தத்தில், நடந்தாய் வாழி களனி கங்கை மூலம் நேரத்தை சிறகு கட்டிப் பறக்கச் செய்திருக்கின்றார் நமது மதிப்புக்குரிய எழுத்தாளர் திரு. முருகபூபதி அவர்கள்.
இலங்கைத் தலைநகரின் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்கள் பற்றிய பல அரிய தகவல்களுடன் சுருங்கக் கூறி எளிதாக விளங்க வைக்கும் இந்த நூல் வாசகர்களுக்கு மாத்திரமன்றி மாணவர்களுக்கும் பயனுள்ளது.
தற்போது, இந்த நூல் கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது
நடந்தாய் வாழி களனிகங்கை - Kindle link
2021 ஒரு பார்வை! - சக்தி சக்திதாசன், இலண்டன் -
கோவிட் எனும் ஒரு நுண்கிருமியின் தாக்கத்தோடு ஆரம்பித்து அதே நுண்கிருமியின் தாக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நுண்கிருமி கொடுத்த நோய்த்தாக்கத்திலிருந்து தப்பும் வழிகளில் மனதைச் செலுத்துவதிலேயே இவ்வகிலத்தின் பல நாடுகளின் முழுமுயற்சியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளையில் வேறு பல நிகழ்வுகள் ஆரவாரமின்றியே நடந்தேறி விட்டிருக்கின்றன. உலக அரசியலை எடுத்துக் கொள்வோம், மிகுந்த அமர்க்களத்துடனும், ஆரவாரத்துடனும் அமெரிக்க முன்னாள் ஐனாதிபதி ட்ரம்ப் அவர்கள் தனது தேர்தல் தோல்வியை ஏற்றுப் பதவி துறக்கச் செய்யப்பட்டு, புதிய ஐனாதிபதியாக பைடன் அவர்கள் பலத்த எதிர்பார்ப்புகளோடு பதவியலமர்ந்தது 2021ம் ஆண்டின் ஆரம்பத்திலே. இவரின் மீதான எதிர்பார்ப்புகள் அமேரிக்க நாட்டு மக்களிடையே மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும் இருந்தது என்பதே உண்மை. இன்று அந்த எதிர்பார்ப்புகள் எந்நிலையிலுள்ளன என்பது ஒரு கேள்விக்குறியே!
முன்னாள் ஐனாதிபதி ட்ரம்ப் அவர்கள் மீதிருந்த மாபெரும் குற்றச்சாட்டு, அவரின் உலகை நோக்கிய பார்வையாகும். அமேரிக்கா அமேரிக்கர்களுக்கு மட்டும் எனும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்ததே அதற்குக் காரணம் என்றார்கள் அனுபவமிகுந்த அரசியல் அவதானிகள். அத்தோடு ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள் உலக சமாதானத்துக்கு குந்தகம் விளைவிப்பவை எனும் கருத்தும் வலிமையாக நிலவி வந்தது. ஆனால் இன்று மாற்று எதிர்பார்ப்புகளோடு ஐனாதிபதியான பைடன் அவர்களின் செயற்பாடுகள் அக்கருத்துகளில் எத்தகைய மாற்றங்களை விளைவித்திருக்கின்றது என்பதும் கேள்விக்குறியே! விடையை 2022 நல்குமா? என்பதற்குக் காலம்தான் விடை பகர வேண்டும். சரி இனி ஐக்கிய இராச்சியத்தின் நிலையைப் பார்ப்போமா?
2020ம் ஆன்டு டிசம்பர் 31ம் திகதியோடு பிரெக்ஸிட் எனும் கத்தி கொண்டு ஐக்கிய இராச்சியத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான 40 வருட உறவென்னும் தொடர்பை முற்றாக அறுத்தது ஐக்கிய இராச்சியம். இருப்பினும் இதன் முக்கியத்துவம் கோவிட் எனும் நுண்கிருமியின் முக்கியத்துவத்தினுள் புதைந்து போயிற்று என்பதே உண்மையாயிற்று. வழமையாக இந்நிகழ்வினை அறுத்து உருத்துப் புரட்டி எடுக்கும் ஊடகங்கள் தமது முழுக்கவனத்தையும் இதன்பால் திருப்ப முடியாமல் போனதுக்கு பிரதமர் பொரிஸ் ஜான்சன் கோவிட்டுக்கு நன்றி சொல்லியிருப்பாரோ?