Canada Day
Canada Day (French: Fête du Canada) is the national day of Canada, a federal statutory holiday celebrating the anniversary of the July 1, 1867, enactment of the British North America Act, 1867 (today called the Constitution Act, 1867), which united three colonies into a single country called Canada within the British Empire. Originally called Dominion Day (French: Le Jour de la Confédération), the holiday was renamed in 1982, the year the Canada Act was passed. Canada Day observances take place throughout Canada as well as among Canadians internationally.
Commemoration
Frequently referred to as "Canada's birthday", particularly in the popular press, the occasion marks the joining of the British North American colonies of Nova Scotia, New Brunswick, and the Province of Canada into a federation of four provinces (the Province of Canada being divided, in the process, into Ontario and Quebec) on July 1, 1867. Canada became a kingdom in its own right on that date, but the British parliament and Cabinet kept limited rights of political control over the new country that were shed by stages over the years until the last vestiges were surrendered in 1982, when the Constitution Act patriated the Canadian constitution.

சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கையின் யாப்பில் கொண்டுவரப்படவுள்ள உச்தேச 13 ஆவது சட்டதிருத்தம் - இன்று சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பரவல் மூலம் வழங்கப்பட்டுள்ள ஒரே சலுகை - இந்த வாக்குறுதி மீறல்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. ஒருவிதத்தில் இந்த மீறல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க வாக்குறுதி மீறல் அரசியல் தீர்வு தொடர்பானது. சிறீலங்கா அரசு பல ஆண்டுகளாக அதிகாரப் பரவலாக்கல் முறைமையின் கீழ் அதிகாரம் சிறீலங்காவில் வாழும் எல்லா மக்களுக்கும் இடையில் ஒப்புரவான முறையில் பகிர்ந்தளிக்கப்படும் என வாக்களித்திருந்தது. அய்க்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகம் அவர்களோடு சேர்ந்து சனாதிபதி இராசபக்சே போர் முடிந்த மே 2009 இல் விடுத்த கூட்டறிக்கையில் அரசியல் தீர்வு தொடர்பாகப் பல உறுதிமொழிகளை வழங்கி இருந்தார். அதில் "13 ஆவது சட்ட திருத்தம் நடைமுறைப் படுத்தப்படும்" என்பது ஒன்றாகும்.
[இன்று ஜூன் 15, 2013 அன்று மாரடைப்பால் மரணமான இயக்குநர் மணிவண்ணன் கீற்று இணையத்தளத்துக்கு வழங்கியிருந்த இந்த நேர்காணலை அவரது நினைவாக மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் ] இயக்குநர், நடிகர் என பொதுவெளியில் அறியப்படும் மணிவண்ணன், மார்க்ஸிய-பெரியாரிய சிந்ததைனைகளின் மீது; தீவிரப் பற்றாளர் மேலும் தேர்ந்த வாசிப்பனுபவம் உள்ளவர். மார்க்ஸியத்தின் மீதும் பெரியாரியத்தின் மீதும் அவர் கொண்டுள்ள பிடிப்பு நம்மை வியக்க வைக்கக் கூடியது. ஈழ ஆதரவு, தமிழ்த்தேசிய சிந்தனைகளின் ஊடாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் தமிழ்த்தேசிய அமைப்புகள் மீது விமர்சனங்கள் இருந்தால் சற்றும் தயங்காமல் கருத்துச் சொல்லக்கூடியவர். தமிழ்த்தேசிய அமைப்புகள் மார்க்ஸிய-பெரியாரிய அடிப்படையிலேயே இயங்க வேண்டும், இயங்கவும் முடியும் என்று உரத்துச் சொல்பவர்; இடதுசாரிகளின் ஒற்றுமையை சளைக்காமல் வலியுறுத்துபவர்; சினமாத் துறையினர் மத்தியில் வாசிப்பை ஒரு இயக்கமாகவே எடுத்துச் செல்பவர். இயக்குநர், நடிகர், ஓவியர், பாடகர், களப்பணியாளர் என்று பன்முகங்களை கொண்டிருந்தாலும் அவரிடம் எளிமையானது அவரது தோழமை.மணிவண்ணன் அவர்களை நேர்காணல் செய்ய நம்மை உந்தித் தள்ளியது அவரது வாசிப்பும் வாசக அனுபவமும்தான். அவருடைய சமகால இயக்கப்பணிகள் குறித்தோ, சினிமாத்துறை சார்ந்தோ இந்நேர்காணலில் விரிவாக பதிவு செய்யவில்லை. நம்முடைய நோக்கம் அது மட்டுமன்று. அவரது வாசிப்பு அனுபவங்களை புதிய புத்தகம் பேசுது வாசகர்களுக்கு அறியச் செய்வதன் வழியாக வாசகப் பரப்பு ஒரு சிறிய அளவிலேனும் விரிவடையும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் அவ்வளவுதான். - சிராஜுதீன் -
தமிழரசுக்கட்சியின் தொடக்குநரும் தமிழ்மக்களின் தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடந்த இந்த விழாவுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துகொண்டதுடன் பிரதம விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா. அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) மா.நடராசா, அம்பாறை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன், திருமலை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்போது சித்திவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூசை இடம்பெற்றதுடன் தந்தை செல்வாவின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சேயோன் நிகழ்த்தினனார். அதனைத் தொடர்ந்து தலைமையுரையினை கி.துரைராஜசிங்கம் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து மா.அ. சுமந்திரன், பா.உறுப்பினர் தந்தை செல்வா நினைவுப் பேருரை ஆற்றினார். அதன் முழு வடிவம் கீழே கொடுக்ப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் தேர்தல் 1955 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டு வரையில் 13 ஆவது பொதுத்தேர்தல் 5.5.2013 ஆம் நாள் நடைபெறுகிறது. 31.8.1957 ஆம் நாள் மூன்று இனங்களுக்கு ஆங்கிலேயர் வழங்கிய சுதந்திரம் மூன்று சமத்துவத்துடன் வாழவும் நாட்டின் செல்வச் செழிப்பை மூவினங்களும்அனுபவிக்கவேண்டிய நிலையில் அம்னோவின் ஆதிக்கப்போக்கால் அன்று தொடங்கி இன்றுவரை மலாய்க்காரர்களின் செல்வாக்கு மேலோங்கியிருக்கிறது. நாட்டின் செல்வத்தை மலாய்க்காரர்கள் மட்டுமே அனுபவிக்கும் வகையில் இருபத்திரண்டு ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக குறுகிய பார்வையோடு தவறான ஆட்சி புரிந்தவர் மகாதீர்.மலேசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் மகாதீரை மன்னிக்க மாட்டார்கள். இவர் நாட்டைச் சுரண்டியது போதாதென்று,மகன் கெடாமாநிலத்துக்கு மந்திரி புசாராக வருவதற்கு கடுமையாக உழைக்கிறார்.தந்தை செய்ததைத்தானே மகன் முக்கிரிசும் செய்யப்போகிறார். நாட்டுச் சொத்துக்களை மகாதீர் குடும்பம் மட்டுமே எடுத்துக் கொண்டால் எப்படி? இது அநியாயம் இல்லையா? மலேசிய மக்கள் அனைவரும் முட்டாள்களா?
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராக தமிழர் தரப்பு காட்டுகிற எதிர்ப்பைப் பற்றிக் கிஞ்சித்தும் சிங்கள - பவுத்த பேரினவாத அரசு மனதில் கொள்ளாது மேலும் மேலும் சிங்களக் குடியேற்றத்தைத் துரிதகெதியில் முடுக்கி வருகிறது. முன்னைய காலத்தில் சிங்களக் குடியேற்றம் காதும் காதும் வைத்தாற் போல் ஓசைப்படாமல் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் சிங்களக் குடியேற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று அது தலை கீழ் மாற்றம் பெற்றுள்ளது. இன்று சிங்கள - பவுத்த பேரினவாத அரசு பகிரங்கமாக அறிவித்துவிட்டு தமிழர்களுக்குச் சொந்தமான நிலத்தில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றி வருகிறது. கேட்டால் அவர்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள் என்று சொல்கிறது. இரண்டு நாள்களுக்கு முன் செய்தி ஏடுகளில் வெளிவந்த செய்தியின் படி வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்ற அரசு முடிவு செய்து அதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுகிறதாம். வரும் யூன் மாதத்திற்கு முன்னர் வடக்கில் 18 ஆயிரம் சிங்கள குடும்பங்களைக் குடியேற்றத் திட்டம்! என்ற தலைப்பிட்டு வெளிவந்திருக்கும் அந்தச் செய்தியின் படி வட மாகாணத்தில் எதிர்வரும் யூன் மாதத்திற்கு முன்னர் 18 ஆயிரம் தென்பகுதி சிங்களக் குடும்பங்களை குடியமர்த்தவும் அவர்களுக்கு பிரத்தியேகமாக நிரந்தர வீடுகளையும் காணிகளையும் வழங்கவும் சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பான சிறப்புக் கலந்துரையால் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
கனடாவில் ரொரொன்டோ நகரில் தேடகம் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட “(சமரசம் செய்யாத) ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” என்ற என்.சண்முகதாசன் அவர்களால் எழுதப்பட்ட நூல் அறிமுக விமர்சனக் கூட்டத்தில் கருத்துக்கூற என்னையும் அழைத்தமைக்கு தேடகத்திற்கும் சேனாவிற்கும் கோணேசுக்கும் நன்றிகள்.. இப் பதிவை மூன்று பிரிவுகளில் முன்வைக்கின்றேன்… முதலாவது இக் கட்சியினுடனான எனது உறவும் அனுபவமும் இரண்டாவது தத்துவமும் கோட்பாடும் மூன்றாவது நடைமுறை வேலைத்திட்டம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









