Channel 4 News: Rajapakse speech halted over Tamil protest fears
[Tuesday 5 June 20128:08 pm] A meeting in the City of London, due to have been addressed on Wednesday morning by the president of Sri Lanka, has been cancelled, owing to concerns over policing amid the threat of large demonstrations by Tamil rights groups. But Mahinda Rajapakse – whose presidency has been tainted by persistent allegations of war crimes committed by Sri Lankan armed forces – will still attend a lunch for the Queen, hosted by the Commonwealth secretary general at Marlborough House on Pall Mall. The president was first to have given the keynote speech at a special Diamond Jubilee meeting of the Commonwealth Economic Forum, at 10am. On its website, the event’s organisers, the Commonwealth Business Council, simply states that “After careful consideration, the morning sessions of the Forum… will not take place.” It had pre-sold tickets to the event at £795 +VAT each. Channel 4 News was unable to obtain a response from the CBC. A spokesman for Scotland Yard told Channel 4 News that while it had agreed to guarantee the president’s security, the CBC had “decided it was not in their interest to stage the event” due to excessive policing requirements and the likely disruption to business in the City of London.

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் , உலகத் தமிழர் பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள் ஆகியோர் , இவ்விடயம் தொடர்பில் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர். ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் உலகத் தமிழர் பேரவையினதும் பிரதிநிதிகள் கடந்த 13, 14 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்க்கோ நகரில் ஒன்றுகூடி, பல விடயங்களை விரிவாக ஆராய்ந்ததோடு சில உடன்பாடுகளையும் எட்டியுள்ளனர் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(குறிப்பு: கௌதம சித்தார்த்தன், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்து தரச் சொல்லிக் கேட்டிருந்தார். பல பேருடைய கருத்துக்களும் திரட்டி தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கொண்டு வரப் போவதாகவும், ஆனால் அது என்ன காரணத்தினாலோ நூலாக வடிவம் பெறவில்லை எனது கட்டுரை இதோ) பட்டி வீரன் பட்டியில் வசிக்கும் 99 வயதான எனது பாட்டனாரான நா. தில்லைக் கோவிந்தன் 2005 இல் சந்தித்த போது மணல் திருட்டு ,மணல் கொள்ளை என மணல் பிரச்சனையாகத் தொடங்கிய காலகட்டம் அப்போது அவர் காமராஜர் காலகட்டத்தில் வைகை அணைகட்டிய போது நடந்த விசயங்களை நினைவு படுத்திப் பேசும் போது, இன்றைய நடைமுறைச் சிக்கல்களையும் இன்று தண்ணீர் மணல் , விவசாயம் என்று எல்லாவற்றிலும் பற்றாக்குறைகளும் எனக்கு உனக்கு என்று சண்டைகளும் வருவதைக் குறித்துச் சொல்லி “ ”அணையைக் கட்டினார்கள் அடிவயிற்றில் அடித்தார்கள்” என் தலைப்பிட்டு எழுதிய கட்டுரையை என்னிடம் தந்தார். அது அப்போது இணைய இதழ்களில் வெளி வந்தது. அதில் சொல்லிய ஒரு வரி இன்று என் நினைவுக்கு வருகின்றது.
மே 19, 2009 அன்று கொழும்பில் இருந்தேன். வீட்டிற்கு வெளியே ஒரே ஆரவாரமாக இருந்தது. போரின் முடிவையும் பிரபாகரனின் மரணத்தையும் சிங்கள மக்கள் அமோகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். போரின்போது தமிழ் மக்கள் பட்ட அவலங்கள் குறித்தோ பேரழிவு குறித்தோ அவர்களில் மிகப் பெரும்பாலானோர்க்கு எவ்விதமான அக்கறையும் இருக்கவில்லை. அன்று முழுவதும் வீட்டைவிட்டு வெளியேறவில்லை. நிச்சயமின்மையும் புது வகையான பீதியும் இலங்கையைச் சூழ்ந்துகொள்கிற புதிய காலகட்டம் ஒன்றுக்குள் நாங்கள் நுழைவதான உணர்வு எனக்கு ஏற்பட்டது. வழமையாக ராவய இதழுக்கு எழுதும் பத்திக்கென அன்று நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘மே, 19’ என்பதாகும். அந்தக் கட்டுரையில் மிகவும் தெளிவாக நான் குறிப்பிட்டிருந்ததை இந்தக் கணம் நினைவுகொள்வது மிகவும் பொருத்தமானது எனக் கருதுகிறேன். “போர் முடிந்துவிட்டிருக்கலாம்; ஆனால் தமிழ் மக்களின் போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை.” அந்தப் பத்தியின் இறுதிப் பகுதியில் மூன்று விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன்.
மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள் குறிப்பிட்ட அரசியல், கருத்தியல் களங்களிலேயே பிரயோகிக்கப்படுவதால் அந்தக் களங்கள் விமர் சனத்திற்குள்ளாக்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகள் பற்றிய உண்மைகளைக் கூறும் முழுமையான எடுத்துரைப்பு ஒன்று எட்டப்பட வேண்டும். இந்த வன்கொடுமைகள் பற்றிய எடுத்துரைப்புகளை நோக்கினால், எவ்வாறு உண்மைகள் நோக்கப்படுகின்றன என்பதையும், நீதி, புனரமைப்பு (justice and recovery) பற்றிய எதிர்பார்ப்புகள் எவ்வாறு அமைகின்றன என்பதையும் சித்தாந்தம்தான் முடிவுசெய்கிறது என்பதை இந்தக் கட்டுரை நிறுவ முற்படுகிறது. இந்தப் பணியைச் சந்தேகக் கண்ணோடு அணுகுவது அரசியல் சிந்தனையில் மிகச் சரியான எடுத்துரைப்பு வெளிப்படவும் நீதிக்கும் புனரமைப்புக்குமான விசாலமான முன்னெடுப்புகளை அடையாளங்காட்டவும் உதவும்.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எஸ்.சபாலிங்கத்துக்கு முக்கியமானதொரு பங்குண்டு. ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆரம்பத்தில் தன்னைப் பிணைத்துக்கொண்டவர் இவர். எழுபதுகளின் ஆரம்பத்தில் கட்டுபெத்தை பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவனாகவிருந்த சமயம் பொன்னுத்துரை சத்தியசீலன் போன்றவர்களுடன் இணைந்து தமிழ் மாணவர் பேரவை அமைப்பு உருவாகக் காரணமானவர்களிலொருவர். விடுதலைப் புலிகளின் அமைப்பு உருவான காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனுடன் நெருங்கிப் பழகியவர்களிலொருவர். இவற்றின் காரணமாக இலங்கைக் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைகளுக்குப் புகழ்பெற்று விளங்கிய இலங்கைப் புலனாய்வுத்துறையினரின் 4ஆம் மாடியில் வைத்து விசாரிக்கப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாகியவர். பின்னர் அரசியல் அகதியாகப் புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வந்த சமயத்திலும் பதிப்புத் துறை, இலக்கிய அமர்வுகளை நடாத்துவதிலும் தன் கவனத்தைத் திருப்பினார். தனது ஆசியான் பதிப்பகம் மூலம் ஈழத்துக் கவிஞர்களான வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன், அருந்ததி, செல்வம், சோலைக்கிளி ஆகியோரின் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். கோவிந்தனின் 'புதியதோர் உலகம்', 'யாழ்ப்பாண வைபவமாலை', 'புத்தளம் முஸ்லீம் மக்கள் வரலாறு', 'எமர்ஜென்சி 58' மற்றும் தராகியின் 'Eluding Peace' ஆகிய நூல்களை வெளியிட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நடைபெற்றுவரும் இலக்கியச் சந்திப்புக்களின் ஆரம்பகர்த்தாக்களிலொருவராகவும் இவர் கருதப்படுகின்றார்.
- மே 8, 2012 - தோழர், அமைச்சர் இராதாகிறிஷ்ணா (றோய்) படையாட்சி அவர்களின் மறைவை அறிந்து நாம் கடும் அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைந்துள்ளோம். அன்னார், மனித மேம்பாட்டுச் செயல்வீரனக விளங்கியதோடு வறியோருக்கும் மிக ஒடுக்கப்பட்டோருக்கும் உதவும் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அன்னாரின் மறைவானது அவரது குடும்பத்தினருக்கும் அவரது மக்களுக்கும் உலகளாவிய மட்டத்தில் அவரின் தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, கருணையுள்ளம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டோருக்கும் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும். குடியரசுத் தலைவர் சூமா அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தது போன்று, “படையாட்சி அளவிடமுடியாத அற்பணிப்பையும் ஆளுமையையும் பெற்ற ஒருவர். சிறப்புமிக்க ஆபிரிக்காவையும் உலகத்தையும் உருவாக்கும் தன் குறிக்கோளுக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் புறப்பட்ட பயணத்தில் அவர் தன் தலைவிதியையும் சாவினையும் சந்திக்க நேர்ந்தது மிகவும் கவலை அளிக்கின்றது.”
நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்?

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









