மீள்பிரசுரம்: யாழ் - மாணவர்களுக்கு சார்பாக தொடரும் சிங்கள சகோதரர்களின் போராட்டங்கள் யாழ் - மாணவர்களுக்கு சார்பாக தொடரும் சிங்கள சகோதரர்களின் போராட்டங்கள்
- சனிக்கிழமை 01, டிசம்பர் 2012 - இலங்கை அரச படைகளின் அடவாடித்தனங்களும், மாணவர் தலைவர்களை கைது செய்வதும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் நடைபெறுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் விடுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாகக் கூறியே இம்மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். மேலும், யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பாவிதங்களை அடுத்து, மாணவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த வகுப்பு பகிஷ்கரிப்பைக் காலவரையறையின்றித் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.