லண்டன் (கனடா) துயர் - வ.ந.கிரிதரன் -
ஜூன் 6 கனடா வரலாற்றில் துயர் நிறைந்த ஒரு நாளாக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. அமைதியான ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரில் , மாலை நேர உலாவுக்காக வீதியில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் குடும்பமொன்றின் நான்கு உறுப்பினர்களை முஸ்லிம் இனத்தின் மீது வெறுப்புணர்வு மிக்க இருபது வயது இளைஞன் ஒருவன் தனது 'பிக் அப் ட்ரக்'கால் மோதிக்கொலை செய்துள்ளான். அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுவன் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அக்குடும்பத்தினர் 14 வருடங்களுக்கு முன்னர் நல்வாழ்வுக்காகப் பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள். இப்படுகொலைச் சம்பவத்தில் மரணமானவர்கள் விபரங்கள் வருமாறு: ஜும்னா அஃப்சால் (Yumna Afzaal, 15), மடிகா சல்மான் (Madiha Salman, 44), தலாட் அஃப்சால் (Talat Afzaal, 74) & சல்மான் அஃப்சால் (Salman Afzaal, 46). படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஃபயெஸ் ( Fayez, 9).